புகை பிடித்தால் நாய் கடிக்காது
>> Sunday, January 14, 2007
புகை பிடித்தால் நாய் கடிக்காது .
மதுரையிலிருந்து ஒருத்தர் குதிரை வண்டி நெறய சிகரெட்டுகளை ஏத்திக்கிட்டு வந்து அதிரையில் பெட்டிக்கடை வச்சார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால் ஒரு தீப்பெட்டி இலவசங்கற ஆஃபரோட கடை நடத்தினார். பெரும்பாலான கடைகளில் அமுல் டப்பாக்குள்ள சிம்னி விளக்கும் பற்றவைக்க கட் பண்ணிய சிகரெட் அட்டைகளுமோ அல்லது நீண்ட கயிற்றின் நுனியில் கொள்ளி வைத்தோ இருந்ததால், அந்த ஆஃபர் யாரையும் கவரவில்லை.
மதுரைக்காரர் என்னென்னமோ செஞ்சு பார்த்தார் யாரும் சிகரெட் வாங்குவதா இல்லை. தன் வியாபார யுக்தியை மாற்றி மறுநாள் விளம்பரம் செய்தார். கூட்டம் அலை மோதியது விளம்பர வாசகம் இதுதான்:
1) இந்த சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காது.
2) இந்த சிகரெட் பிடிப்பவர் இருக்கும் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.
3) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு பெண் குழந்தையே பிறக்காது.
4) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு முதுமையே வராது.
அவ்வளவுதான் போங்க. வியாபாரம் வெளுத்து வாங்கியது. மதுரைக்காரருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கல்லா பெட்டி நிரம்பி வழிந்தது. இவ்வாறாக மதுரைக்காரரின் சிகரெட் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.
இதை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த, கொஞ்சம் விபரம் அறிந்த ஒருத்தர் மெதுவாக மதுரைக்காரரின் வாயைக் கிளறினார்.
அதிரைக்காரர்: என்ன மதுரைக்காரரே. இப்படி பொய் சொல்லி எங்க ஊரு மக்களை ஏமாற்றலாமா?
மதுரைக்காரர்: என்ன தம்பீ இப்டி சொல்லிப்புட்டிய. நான் உண்மையத்தானே சொல்லி விக்கிறேன்.
அதிரைக்காரர்: உங்க சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காதுங்கறீங்களேஃ
மதுரைக்காரர்: ஆமா. நெசந்தேன். சிகரெட் பிடிச்சா உடல் இளைச்சுடும். நடக்க கஷ்டமா இருக்கும். அதனால கைத்தடி துணையோடுதான் நடக்கனும். கையில கம்பு வச்சிருந்தா நாயி கடிக்காதுதானே?
அதிரைக்காரர்: ஓஹோ. அப்ப திருடன் வரமாட்டாங்கறது பீலாதானே?
மதுரைக்காரர்: நெசமாத்தேன் தம்பி. சிகரெட் அடிச்சா இருமல் வரும். இரவில் தூங்க முடியாது. ஒரே லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பாங்க. திருடன் வரும்போது இருமல் சத்தம் கேட்டா வீட்டுக்காரங்க விழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு வேற தெருவுக்கு போயிடுவாந்தானே?
அதிரைக்காரர்: (மனதுக்குள்: எமகாதகங்கப்பா இந்த மதுரைக்காரங்க!) ஆமா, பெண் பிள்ளை பிறக்காதுங்கிரீங்களே. அது எப்படி?
மதுரைக்காரர்: என்னா தம்பி ஒன்னும் வெளங்காதப் புள்ளையா இருக்கீங்க. சிகரெட் பிடிச்சா சரியா குடும்பம் நடத்த முடியாது. இவங்களுக்கு இல்லறத்தில் எந்தக் குழந்தையுமே பிறக்காது.
அதிரைக்காரர்: ச்சே உங்களைப் போயி தப்பா நெனெச்சுட்டேன். முதுமை வராதுன்னியலே....
மதுரைக்காரர்: ஆமா தம்பி. சிகரெட் பிடிச்சா இளவயதிலேயே கான்சர் வந்து செத்துடுவாங்க. அப்ப எப்ப்டி முதுமை வரும்?
ஆகவே, மக்களே மதுரையிலிருந்து மட்டுமில்லை எந்த ஊரிலிருந்து வந்து சிகரெட் விற்றாலும் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்.
COURTSEY: "ADHIRAI"
0 comments:
Post a Comment