மன்மத பெல்ட் - வயாக்ரா ஏன்? எங்கே தவறு?
>> Sunday, January 14, 2007
மன்மத பெல்ட் - இடுப்பில் கட்டினால் இன்பம் நூறு வகை.
''எப்படியெப்படியெல்லாம் ஏமாத்தி பில் போடுறாங்கய்யா?'' என்று ஒரு படத்தில் புலம்புவார் நடிகர் வடிவேலு.
இப்போது புதிதாக ஒரு வசீகர மோசடிதான் மன்மத பெல்ட். இடுப்பில் இதக் கட்டிக்கொண்டால் இன்பத்துக்குக் குறையே இருக்காது என்று ஏமாந்து ஆயிரக்கணக்கில் அழுதுவிட்டு அசந்து போய் கிடக்கிறார்கள் பலர்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன அவ்வளவு லேசில் மூச்சு விடுவார்களா? 'திருடனுக்குத் தேள் கொட்டிய, கதையாக யாரும் இதுபற்றி வாய்திறக்கவே மறுத்தார்கள்.
ஆனால், மன்மத பெல்ட் கும்பல் பற்றி அறிந்து வைத்திருந்த பன்னீர் செல்வம் என்பவர், நம்மிடம் அது பற்றிப் பேச முன்வந்தார். மன்மத பெல்ட் பற்றிக் கேட்டபோ, ''இதை நான் வெளியே சொல்வதன் மூலம் இன்னும் நிறையப்பேர் அந்த மோசடிக் கும்பலிடம் ஏமாறுவது தவிர்க்கப்படுமே'' என்ற பொ அக்கறையோடு பேசத் தொடங்கினார்.
அவர் சொன்ன ஒரு ஃபிளாஸ்ஷ்பேக் இதோ... ''சில மாதங்களுக்கு முன் நானும், வங்கி அதிகாரி ஒருவரும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருமங்கலம் பஸ்ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளி, இளநீர் குடிக்கக் நிறுத்தினோம். காரில் இருந்தபடியே நாங்கள் இளநீர் வாங்கிக் குடித்தபோது, அங்கே ரொம்ப டீஸன்டாக உடையணிந்த நான்குபேர் இளநீர் குடிச்சிட்டிருந்தாங்க.
திடீர்னு அவங்க என்னப் பார்த்து, 'சார்! கீழே மூன்று நூறு ரூபாய் நோட்டு விழுந்து கிடக்கிறது. இது உங்களோடதா?' என்றார்கள். 'பணம் என்னுடயது இல்ல' என்றேன். 'அப்ப உங்க பணமா?' என்று பேங்க் அதிகாரியைக் கேட்டனர். அவரும் மறுத்தார்.
உடனே அவர்கள் இளநீர்க்காரரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து, 'யாராவது வந்து பணத்தைத் தேடினா அவங்ககிட்டே கொடுங்க. இல்லே போலீஸில் கொடுத்திருங்க' என்றனர்.
அந்தச் சத்திய சந்தர்களின் அணுகுமுறை என்னப் பிரமிக்க வத்தது. மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் தங்களைப் பற்றி அளந்து விட்டார்கள். சந்தடிசாக்கில் என மொபல் நம்பரை வாங்கிக் கொண்டார்கள். 'நாங்க என்ன பிஸினஸ் பண்றோம்னு நீங்க கேட்கவே இல்லயே?' என்று எனக்கு வாய்த்தூண்டில் போட்டார்கள்.
அப்போ அவர்கள் எடுத்துவிட்டதுதான் மன்மத பெல்ட். 'வெளிநாட்டில் இருந்து மூலிகை அடைக்கப்பட்ட மன்மத பெல்டi;ட வாங்கி இங்கே விற்கிறோம். அறுபதுவயக்காரர் ஒருவர், இதக் கட்டிக்கொண்டால் இருபது வயதுக்குரிய இளமை வந்து விடும். அப்புறமென்ன... வகைவகையான இன்பம்தான்!
இந்த மன்மத பெல்ட்டுக்கு ஏகக் கிராக்கி. சப்ளை செய்ய முடியாத அளவுக்கு ஏக டிமாண்ட். வட மாநிலங்களில் எங்கள் மன்மத பெல்டi;டக் கட்டாத அரசியல்வாதிகளை, விரல்விட்டே எண்ணி விடலாம். இதன் விலை இரண்டு லட்சம் தான். இதை விற்றுக் கொடுத்தால் உங்களுக்குக் கூட கணிசமான கமிஸன் தருவோம்!' என்றனர்.
ஆனாலும் மன்மத பெல்டi;ட இவர்கள் பலரிடம் அமோகமாக விற்றிருக்கிறார்கள். இவர்கள் விட்ட புரூடாவை நம்பி பல வி.ஐ.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் இந்த பெல்டi;ட வாங்கி ஏமாந்திருக்கிறார்கள். பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் கூட ஏமாந்தவர் லிஸ்ட்டில் உண்டு.
அந்த பெல்ட்டால், பைசா பிரயோஜனம் இலi;ல என்று பலருக்கு வாங்கிய பிறகுதான் தெரிந்திருக்கிற.து சிலருக்கு முன்பை விட நிலமை மோசமாகப் போய், 'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா' நிலமை.
மன்மத பெல்ட் எப்படியிருக்கும்? அதைத் தெரிந்து கொள்ள நமக்கும் ஆவல் பீறிட்ட.து அதைப் பார்த்ததாகக் கூறப்படும் புண்ணியாத்மாக்கள் சிலரப் பார்த்து கேள்விகளால் கிண்டினோம். அவர்கள் மூச்சு விடவே மறுத்தார்கள்.
ஒருவர் மட்டும் சலிப்புடன், ''அந்தக் கருமாந்திரத்தை என்ன சொல்ல? அது சாதாரண பெல்ட் போலத்தான் இருக்குமாம். சரியா சொல்லப் போனால், மூன்று அங்குல அகலத்தில், நாற்பத்தந்து அங்குல நீளத்தில் பாம்புபோல கொஞ்சம் தடிமனாக இருக்கும். உள்ளுக்குள் மூலிகை அடைத்திருப்பதாகச் சொல்வார்கள்.
'இதை பயபக்தியுடன் இடுப்பில் கட்டிக் கொண்டு, இஸ்ட தெய்வத்த வேண்டிக்குங்க. (இது வேறா?) உடனே சுரீர்னு ஒரு சூடு பரவும். அப்ப பெல்ட் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டுன்னு அர்த்தம்'னு விற்பவங்க சொல்றாங்க. சங்கோஜத்டன் வாங்கிய பலர், சங்கடத்தில் இருக்காங்க. இன்னும் கூட மன்மத பெல்ட்டுக்கு மதுரை பகுதியில் அமோக வரவேற்பு இருக்கு!'' என்றார் அவர்.
மன்மத பெல்ட்டின் விலை இரண்டு லட்ச ரூபாய் என்றாலும், அதிகாரி ஒருவர் இருபத்தந்தாயிரம் ரூபாய்க்கு அதை பேரம் பேசி வாங்கியிருக்கிறார். 'எஃபெக்டப் பார்த்து விட்டு மற்றவங்களுக்கும் சொல்லுங்க!' என்று சொல்லியிருக்கிறார்கள் மன்மத பெல்ட் பார்ட்டிகள். வந்தவரைக்கும் லாபம் என்று வெறும் பத்தாயிரத்க்துகுக் கூட இந்த மன்மத பெல்டட விற்றிருக்கிறார்கள்.
கடன் வாங்கி இந்த பெல்ட்டை வாங்கியிருக்கிறார் விவசாயி ஒருவர். 'உடலுறவுக்கு எத்தனை மணிநேரம் முன் இதை இடுப்பில் கட்ட வேண்டும்? நாம் கட்ட வேண்டுமா அல்லது நம் பார்ட்னருக்குக் கட்டி விடலாமா? அதிக நேரம் கட்டியிருந்தால் ஆபத்தில்லயே?' என்று அப்பாவித்தனமாக அவர்களிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். 'பதினந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அவரது தலையில் பெல்டi;டக் கட்டியிருக்கிறது ஃபிராடு கும்பல்.
இந்த ஃபிராடு கும்பல் மதுரையில் தங்கியிருந்து, வாடரக கார்மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டுப்பட்டி கிராமங்களிலும் வேடர்டயாடுகிறார்களாம். காரின் டிரவருக்கு டிப்ஸாக மட்டும் ஆயிரம் ரூபாய வெட்டுவதால் அவர், இந்த லட்சியப்பயணம் பற்றி மூச்சே விடுவதில்ல. பெல்ட் வாங்கி ஏமாந்தவர்களும் புகார் தருவதில்ல. இதனால் டி.வி. மெகாசீரியல் போல இந்த மோசடி நீண்டு வருகிறது.
மோசடிக் கும்பலிடம் மன்மத பெல்ட் தவிர, வேறுசில சமாசாரங்களும் உள்ளன. அதில் ஒன்று, காசு கொட்ட வக்கும் அதிசயக் கலசம். 'கோயில் கோபுரங்களில் இடிமின்னல் தாக்காமல் இருக்க கலசங்களில் வரகு தானியம் அடத்து வத்திருப்பார்களே! அந்தக் கலசம் மீது இடி மின்னல் தாக்கினால் வில உயர்ந்த உலோகமாக மாறிவிடும். அணுகுண்டு அளவுக்கு அதற்கு சக்தி வந்து விடும். வெளிநாடுகளில் அந்தக் கலசங்கள் பல கோடி ரூபாய்க்கு விலை போகும். அதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொட்டும்' என்றும் இந்த கும்பல் அளக்கிறது.
ஏமாந்தவர்களின் தலயில் பல லட்சத்க்கு கோயில் கலசத்தக் கட்டிவிட்டு இந்தக் கும்பல் பறந்துவிடும்.
வைர பிஸினஸூம் இந்தக் கும்பலிடம் உண்டு.
'எங்களிடம் உள்ள வைரத்தை ஓர் அறையில் வைத்து லைட்டுகளை அணத்து விட்டால், நைட்லேம்ப் அளவுக்கு அந்த வைரம் பளிச்சிடும்!' என்றும் அந்த மோசடிக் கும்பல் கதையளந்து' போலி வைரங்கள விற்பண்டு.
'கலசம், வைரம் போன்றவற்றை வெளிநாட்டில் விற்க பேங்க்கில் ஒரு முன் தொகை கட்டணும். அதற்குச் சில கோடி செலவாகும். நீங்களும் எங்களோடு சேருங்கள்' என்று கூறி பணம் கறப்பது இந்தக் கும்பலுக்கு கை வந்த கலை...
'நீங்கள் ஐந்து லட்சம் டெபாசிட் செய்தால் போதும். கலசம், வைரம் விற்ற பிறகு ஒரு 'சி' (கோடி) வரர உங்களுக்கு கமிஸன் கிடக்கும்!' என்றும் இந்தக்கும்பல் கரடி விடுவதுண்டு. இவர்களிடம் ஏமாந்த ஒருவர் இப்போது மதுரை டவுன் ஹால் 'ரோட்டில்' ஒன் 'சி' (ஒரு கோடி) வரப்போகுது' எனச் சொல்லியவாறே பத்தியம் பிடித்து அதலகிறாராம். கந்து வட்டிக்குப் பணம் வாங்கி, இந்த மோசடிக் கும்பலிடம் கொடுத்து ஒருவர் ஏமாந்திருக்கிறார்.
KUMUDAM REPORTER
.--------------------------------------
திருமணமான ஒரே ஆண்டில் வயாக்ரா தேடி அலைகின்றோம்! ஏன்? எங்கே தவறு?
காதல் கெமிஸ்ட்ரிக்கு ஊக்கமும் உரமும் அளிப்பவை காய்கறி கனிகள். எனவே 'காதல் கெமிஸ்ட்ரி' வெற்றிபெற முதலில் காய்கறி கனிகளைக் காதலிப்போம்!
காதல் கெமிஸ்ட்ரியில் நம்மைவிட நம முன்னோர்கள் ரொம்ப ரொம்ப அனுபவசாலிகள். வெறும் காய்கறிகீரை கனிகளைச் சாப்பிட்டே உடம்பை 'கல்' போல் பராமரித்தவர்கள் காதல்_கெமிஸ்ட்ரியிலும் வல்லுநர்களாகவே இருந்துள்ளனர்.
குப்பக்கீரைகளையும் அவலையும் உளுந்தையும் சாப்பிட்டே 27 குழந்தகளைப் பெற்றதாக சான்று பகர்கின்றன. ஆனால் இன்றோ...? திருமணமான ஒரே ஆண்டில் வயாக்ரா தேடி அலைகின்றோம்! ஏன்? எங்கே தவறு?
இன்றயை தலமுறயினரிடயே ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்ட உணவு வகை காய்கறி கீரைகனிகள்.
'காதல் கெமிஸ்ட்ரியின் அரிச்சுவடி முருங்கக்கீரையில் மட்டுமில்லீங்க! முருங்கப்பூ முருங்கைக்காய் முருங்கைப்பிசின் ஆகியவற்றிலும் உள்ளது.
வாரம் 2 நாள் முருங்கைப்பிஞ்சு துவரம்பருப்பு பூண்டு சீரகம் வெந்தயம் மிளகு வெங்காயம் சேர்த்துப் பொரியல் செய்து விதை காய் முழுதும் சக்கையாக மென்று சாறை விழுங்கி சககையத் துப்பி விடவும்.
அதேபோல் முருங்கப்பூவை சேகரித்;து தினசரி 1 ஸ்பூன் எடுத்து இரவு படுக்கும்போது பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம். இதனால் விந்தணுக்கள் பெருகி மகப்பேறு வாய்க்கும்.
முற்றிய முருங்கை மரத்தின் படi;டயில் பிசின் தோன்றும். அதைச் சேகரித்துப் பொடி செய்து 4 ஸ்பூன் எடுத்துப் பாலில் சேர்த்துப் பருக இல்லற சுகம் நிலக்கும் நீடிக்கும்.
இறுதியாக ஓர் எச்சரிக்கை! 50 வயக்கு மேல் முருங்கைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காரணம் முருங்கைக்காய் முருஙi;கக்கீரை வாய்வு கோளாறுகளை சிலசமயம் உண்டாக்கும். அதனைத் தாங்கும் சக்தி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லாமயால ;நெஞ்சு எரிச்சல் வயிறு புரட்டல் உண்டாகக்கூடும். எனவே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முருங்கைக்காய் முருங்கைக் கீரையத் தவிர்ப்பது நல்ல.து
இல்லற இன்பம் நீடிக்க, தினசரி வெங்காயப் பச்சடியை மோரில் கலந்து பகல் உணவில் சேர்க்கலாம்.
வாழைப்பழம் விந்துவை பெருக்கி மூலத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம் குளிர்ச்சியான பழம். உடம்பு உஸ்ணம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்க போகும் முன்பு வாழைப் பழம் ஒன்று சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.
புதுமண தம்பதிகள்- ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பும் சூடேறாமல் இருக்கும்..
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
0 comments:
Post a Comment