**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

''அடடே! நீங்களா.... சொல்லுங்க சொல்லுங்க...

>> Saturday, January 13, 2007

படித்ததுசுகபோகியாய் வாழும் ஒரு கோடீஸ்வரர் ஞானியிடம் கேட்டார்.''மது மாது மாடமாளிக என சுகத்திலேயே வாழ்ந்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆனந்தம் எனக்குத் தேவையா? அதற்குக் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டுமா? தேவையேயில்லயே!'' என அலட்சியமாய்ப் பேசினார்.

''நான் சொல்லும் ஆனந்தம் உனக்குத்தான் நிச்சயம் தேவை'' என்றார் ஞானி உறுதியான குரலில். ''ஏன்!'' என ஆச்சரியமாய்க் கேட்ட கோடீஸ்வரரிடம்''நீ ஒரு பிச்சக்காரன்'' என்றார் ஞானி.பதிலின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அந்தக் கோடீஸ்வரர் ''என்ன? நான் பிச்சக்காரனா!'' எனக் கேட்டார்.

ஞானி''ஆம். சுகத்தை நீ அனுபவிக்க மதுவிடமும் மாதுவிடமும் பிச்சயெடுக்க வேண்டியிருக்கும். இவையில்லாமல் உன்னால் ஆனந்தமாயிருக்க முடியுமா? சொல்லப்பா...'' எனக் கேட்டதற்கு''முடியாது'' என அவர் தலயசத்தார்.பிச்சக்காரராய் வாழும் கோடீஸ்வரர் நிஜ கோடீஸ்வரராய் மாற முடிவெடுத்தார்.
-------------------
குருவிடம் வந்தான் ஒருவன்.''குருவே வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது'' என்றான்.''ஏன்?'' என்று கேட்டார் குரு.''எங்கும் சண்ட சச்சரவு. மனதில் நிம்மதி இல்ல. சந்தோஷமில்ல. உற்சாகமில்ல. என்ன செய்வது?''குரு அவன ஒரு மாட்டுக் கொட்டடிக்கு அழத்துச் சென்றார். அங்கே ஒரேதுர்நாற்றம். அவன் மூக்கைப் பிடித்துக்கொண்டான்.

''குருவே இந்த இடத்த விட்டு சீக்கிரம் கிளம்பவேண்டும் நாறுகிறது'' என்றான்.அவர்கள் சற்று தொலவு வந்தார்கள். அங்கே அவன் மேல் வாசனத் திரவியங்களப் பூசினார் குரு.''வா இப்போ மாட்டுக் கொட்டகைக்குப் போகலாம்'' என்று மீண்டும் அழத்துச் சென்றார்.''இப்போ நாற்றம் தெரிகிறதா?'' என்று கேட்டார்.அவனுக்குத் தெரியவில்ல. அவன் பூசியிருந்த வாசனத் திரவியங்களால் அந்த இடமே மணமாயிருந்தது.''சந்தோஷமும் உற்சாகமும் இப்படித்தான். நம்மிடம் இல்லயென்றால் மற்றவர்களிடமும் இருக்கா.து

''நீதி: நாம் மாறவில்லயென்றால் சூழ்நிலகள் மாறாது.
--------------------
ட்ரிங்... ட்ரிங்...'''அடடே! நீங்களா.... சொல்லுங்க சொல்லுங்க... நம்மகிட்ட சொல்லிட்டீங்க, கவலயை விடுங்க. ஜமாய்ச்சிடலாம். மூக்கு மேல் விரல் வைக்கிற மாதிரி பிரமாதமா பண்ணிடுவோம்...''எனத் தொலைபேசியை வத்த மறு வினாடி, ''சரியான சாவுகிராக்கி, ஏற்கெனவே தலைக்கு மேல ஆயிரம் வேலையிருக்கு, இதுல இது வேற...''இப்படி மற்றவரிடம் உங்களின் கஷ்டத்தை மறைத்து... நீங்கள் விரும்பாததற்குக் கூட தலையாட்டுபவரா நீங்கள்?

விருப்பமில்லா வேலகள இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால்... அந்த நிமிடம் அடுத்தவருக்கு சொர்க்கம், உங்களுக்கு நரகம்.உங்களால் இயலாத காரியததை 'இயலாது' என இதயம் திறந்து மற்றவருக்குத் தெரிவிப்பது புத்திசாலிக்கு அழகு.அல்ல, எடுத்துக் கொண்ட வேலையில் விருப்பத்தை அரும்பச் செய்து... உங்களின் புத்தி, சக்தி அனைத்தையும் பிரயோகித்து அச்செயல அருமையாய்ச் செய்வது அழகு. அப்படிச் செய்வதே ஒரு தியானம்தான்.--------------------------------
நோயற்ற நிலை ஆரோக்கியம் அல்ல. ஆரோக்கியம் என்பது, உங்கள் உயிரையும் உணர்வையும் ஜிகுஜிகுவென உற்சாகத்திலிருக்கச் செய்யும் ரம்யமான உணர்வு.என்றைக்கு உங்கள் உடலிலிருந் இந்த ரம்யமான உணர்வு மறைய ஆரம்பித்ததோ, அன்றே ஆரோக்கியம் பறந்து விட்ட.துஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்... நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் நுட்பம்.
-------------------------------
எது நல்லது எனத் தெரியாமல்; ஞானிகளின் நன்னெறிகளை ஒருவர் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது, தன் கழுத்தை தானே நெரிப்பதற்கு சமம்.காரணம்... உங்களுக்கு ''இது நல்லது?'' எனத் தோன்றும் சிறு வட்டத்திற்குள்ளிருந்து மட்டுமே ; ஞானிகளின் நன்னெறிகளை கடைப்பிடிப்பீர்கள். இது தொடர்ந்தால் பித்தனாகத்தான் மாற வேண்டும். ஞானி ஆக முடியாது.எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களச் சேகரித்தால் வரும் தெளிவு மட்டுமே ஆனந்த வாழ்வு தரவல்லது.
-----------------------------------
நீதி: பிள்ளகள் நல்லவர்களாயிருக்க பெற்றோர்கள்தான் வழிகாட்டி.

கண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெரியவர்களுக்கு ஐந்து ரூபாயாகவும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று ரூபாயாகவும் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தன் மகனுடன் ஒருவர் வந்தார். அவர் மகன் ஒல்லியாக, பார்க்க மிகச் சிறியவனாகத் தெரிந்தான்.''இரண்டு பெரியவங்க, டிக்கெட் கொடுங்க?'' என்று, பத்து ரூபாய் தாளை நீட்டினார்.''பையனுக்கு பத்து வயசாயிடுச்சா? பார்த்தா சின்னப் பையனா இருக்கிறானே!'' என்றார், நுழவுச் சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தவர்.''பார்ப்பதற்குத்தான் அப்படித் தெரிகிறான். ஆனால் பத்து வயதாகிவிட்டது'' என்றார், தந்தை.''நீங்கள் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்திருக்கா. மூன்று ரூபாய் டிக்கெட்டிலேயே அவனை உள்ளே அழத்துச் சென்றிருக்கலாம்''.''உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், என் மகனுக்கு நான் இரண்டு ரூபாய் காசுக்காகப் பொய் சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும். இந்த இரண்டு ரூபாய் பொய், அவனை வேறு வழியில் திருப்பி விடும்'' என்றார் தந்தை..
=================
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.'ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்' என்றார் வியாபாரி
====================

அந்த ஊரையே இரண்டு பணக்காரர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். அநியாய வட்டிக்குப் பணம் கொடுத் வஞ்சனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்துததான் ஊரில் சட்டம். மக்களும் அவர்களுக்கு பயந்து நடந்து கொண்டிருந்தார்கள். அந்த இருவருக்கும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் போட்டி.ஒருநாள் இருவருக்குள்ளும் ஒரு வாக்குவாதம். யார் மரணமடந்தால் அஞ்சலி செலுத்த நிறைய கூட்டம் வரும் என்று. அதற்காக ஒரு திட்டம் போட்டார்கள். இருவருமே இறந்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தி பரப்பி அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் அந்தத் திட்டம். திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி பரவியது.இரண்டு பணக்காரர்களும், எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்க்க வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.கூட்டம் சேர்ந்தது. அஞ்சலி செலுத்த அல்ல. கடைவீதிகளில் அவர்கள் இறப்பை சந்தோஷமாக கொண்டாட மக்கள் கூடினர். இதைக் கண்ட பணக்காரர்களுக்கு அதிர்ச்சி. அவர்களுடய பணப் பெருமை அன்றோடு முடிவுக்கு வந்தது.
===================

அலுவலக லைபரரியில், பெண்கள் இதழை புரட்டிக் கொண்டிருந்தபோது, சட்டென அப்துலுக்கு 'யோசனை' மின்னியது.பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து, தன்னம்பிக்கையில்லாமல் இருக்கும் மனைவிக்கு, இந்த இதழ்களையெல்லாம். வாங்கிபோட்டால் படித்து 'உலகம்'புரிந்து கொள்வாளே?வாங்கிக் கொண்டு போனான்.''ஆமினா... இதெல்லாம் பெண்களுக்காக வரும் பத்திரிக்கைகள். இதையெல்லாம் நல்லாபடி! சொசைட்டியில, எப்படி இருக்கணுமுன்னு தெரிஞ்சுக்கலாம்..!''நாட்கள் ஓடின.மழைக்கால மாலiநேரத்தில், ஆமினாள் கேட்டாள்.''என்னங்க 'பஜ்ஜி' செய், தரட்டுமா?''''தாயேன்..'' என்றான்.''அப்போ, கிச்சனுக்கு வந்து வாழக்காய், வெங்காயம் இதையெல்லாம் நறுக்கித்தாங்க...''அப்துல் 'அறிவு கண்ணை' திறந்தான்.''ஆணும் பெண்ணும் சமம்தானே? ரெண்டு பேரும் வேலயை பிரிச்சுப்போம். புத்தகத்துல இப்படித்தான் போட்டிருக்கு'' என்றாள்.அப்துலுக்கு 'பூமராங்' தாக்குதல் புரிந்தது.
----------------
திருமணமான பெண்களுக்கு திருமதி. திருமணமான ஆண்களுக்கு? திருதிரு..
----------------------
ஒருநாள் என்னுடய பேத்தி பானுவை, அவள் ஆசைப்பட்டதால் எனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். இரண்டாம் வகுப்பு படிப்பவள் அவள். நான் அசிஸ்டண்ட் டைரக்டர்.வழக்கம் போலவே பிஸியாக டைட் ஷெட்யூல் இருந்தது. பானு எதிரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியம் வீட்டில் நுழைந்ததும், உடைமாற்றிக் களைப்போடு சோபாவில் அமர்ந்தேன். பானுவைக் கேட்டேன்.''என்ன பானு... ஆபீஸ் பாத்தியா? நன்னாவுக்கு எவ்வளோ வேலை... டென்ஷன் பார்த்தியா? வீட்டிலே உன் நன்னி ரொம்ப வேலைன்னு அலுத்துக்கிறாங்களே... நான் கஷ்டப்படறதை நன்னிகிட்டே சொல்லு.''''என்ன நன்னா கஷ்டப்படறே நீ? ஜில்லுன்னு ஏ.சி.யிலே உட்கார்ந்திருக்கே... போன் பேசறே... கையெழுத்து போடறே... வர்றவங்ககிட்டே பேசறே... லிப்ஃட்லே போய்ப் போய் வர்றே! இது கஷ்டமான வேலயா? நன்னி எவ்வளோ கஷ்டப்படறாங்க. வீட்டைப் பெருக்கறாங்க... சமையல் செய்யறாங்க... பாத்திரம் கழுவுறாங்க... துணி துவைக்கறாங்க... கடைக்குப் போய் வர்றாங்க... என்ன, தம்பியை குளிப்பாட்டறங்க... இவ்வளவா நீ கஷ்டப்படறே? சொல்லு?''அதிர்நதுபோனேன். அடுத்த நாளிலிருந்து... பானு கூறியதை நினைக்க நினைக்க... அலுவலக வேலையெல்லாம் மிகச் சுலபமாக இருந்தது எனக்கு.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP