அசட்டுத் தத்துவங்கள்
>> Saturday, January 13, 2007
அசட்டுத் தத்துவங்கள்
என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும். ஆனா பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும்.ஆனால்புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால்சாப்ட்வேர்ஆகமுடியாது.
கீ போர்டுலே கீயைப்பார்க்க முடியும்.ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்கமுடியாது.
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டைமட்டும்வாங்க முடியாது.
----------------
அரசியல்வாதிகளின் பொய்
ஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்துவிபத்துகுறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால்நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள்தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’
------------
அப்ப வேலை இல்லையா..?
“அப்பா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை”“
அப்ப நீங்க படிச்சா வேலை இல்லையா..?”
------------
மணப்பெண்ணின் உடை
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லேகவுன் போட்டுருக்கு?''
வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''
அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
-----------------'
வேலிக்கு மேலே தலநீட்டும் என் கிளகள வெட்டும் தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நீளும் என் வேர்கள நீ என்ன செய்வாய்?
--------------------------
'மேல் நாட்டு நாகரீகம் இந்தியாவில் ஊடுருவக் கூடாது என்று சொல்லும் பாஜகவின் பெண் முதல்வர் வசுந்தரா ராஜே பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தாரை கட்டி அணைத்துஉதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார். ஆணோ பெண்ணோ பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது தவறு
'(காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவி)
1 comments:
its realy supperrrrrrrrrrrr
Post a Comment