**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மெகா குரான்

>> Wednesday, January 17, 2007


பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது அளவு எட்டுக்கு எட்டு அடி. எளிதில் தூக்க முடியாது எடை அதிகம். அதனால் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை வருகிறது.

அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது. அந்தப் புத்தகம்... புனித... 'குரான்.' இந்த மெகா குரானை தனது குடும்பத்தினரின் கையால் எழுதச் செய்திருக்கிறார் ராஜா ஷெரீப். வழக்கறிஞர். கோயம்புத்தூர்காரர்.

''அரை அங்குலம் ஒரு அங்குல குரான் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் மிகப் பெரிய குரானை கையால் எழுதினால். என்ன என்ற எண்ணம். எனது எண்ணத்தைக குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். சாதாரண போர்டில் எழுதினால் பிற்காலத்தில் எழுத்துக்கள் அழிந்து போகக்கூடும். அதனால் 'ஸ்பெஷலாக 'சிந்தட்டிக் 'பிளாஸ்டிக்'கை மும்பயிலிருந்து வரவழைத்தேன்.

பேப்பரின் உயரமும் அகலமும் பெரிது. எளிதில் மடங்கிவிடும். எழுத முடியாது. அதனால் நான் பேப்பரைப் பிடித்க்கொள்ள என அம்மா ஹாஜரா எழுவார். அம்மா சோர்ந்து போனால் அப்பா ஹனிபா எழுவார். இப்படி நானும் என குடும்ப உறுப்பினர்களும் மாற்றி மாற்றி எழுவோம்.

இந்தப் பணியை நான் ஆரம்பித்த போது என மனவி கர்ப்பமாக இருந்தாள். அதனால் வேண்டாமென்று சொன்னேன். அவள் கேட்கவில்லை. என மகன் பேப்பரப் பிடித்துக் கொள்ள அவள் உட்கார்ந்தபடி எழுதுவாள்.

ஒவ்வொரு எழுத்தை எழுதும் போதும் அதனை உச்சரித்துக் கொண்டே எழுதுவாள். இதன் மூலம் 'குரான்' வசனங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் செவிகளில் இறங்கும் என்பது அவளது கணிப்பு. அதனால் 'டெலிவரி'க்கு இருபது நாட்களுக்கு முன்பு வரையில் இந்தக் குரானில் அரேபிய எழுத்துக்கள அவள் எழுதி வந்தாள்.

எனது குழந்தை அகில் அகமது பிறந்த பிறகும் குரான் எழுவதை அவள் விடவில்ல. குழந்தைய மடியில் வைத்து ஒருக்களித்தவாறு நின்றுகொண்டு அவன் கையில் 'பிரஷ்ஷக் கொடுத்து எழுதச் செய்வாள். அவளது ஈடுபாடு எனக்கு வியப்பைத் தந்தது!' என்று ஒருவித நெகிழ்ச்சியுடன் சொல்லும் ராஜாஷெரீப்' இந்த மெகா குரான் எழுவதற்குத் தூண்டுகோலாகவும் உதவியாகவும் இருந்த என்னோட இந்து மத நண்பர்கள்தான்!' என்று நன்றியோடு நினைவு கூர்கிறார்.

இந்த மெகா குரானில் மொத்தம் அறுநூற்றுப் பத்து பக்கங்கள். பக்கங்களை எளிதில் புரட்டிப் பார்க்கும்படி 'ஸ்பைரல் பைண்டிங்' செய்திருக்கிறார். எடை இருநூற்று ஐம்பது கிலோ. குரானை வைப்பதற்கென்றே 'ரேகால்' (பலகையால் செய்யப்பட்ட சிறிய மேடை) ஒன்றையும் வைத்திருக்கிறார்.

மெகா குரான் எழுதியது பற்றி ராஜா ஷெரீப்பின் மனவி யாஸ்மின் 'குரானில் இருக்கும் ஒரு எழுத்தை கையால் எழுதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் என்கிறது. புனித குரான். அதனால்தான் நான் கர்ப்பமாக இருக்கும்போதே இந்தக் குரானில் கையால் எழுதினேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்னு சொல்வாங்க. இங்கே எனது கணவர் வெற்றிக்குப் பின்னால் அவரது அம்மா ஹாஜராபீவி இருக்காங்க!'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்.

சரி. இந்தக் குரானை என்ன செய்வதாக உத்தேசம்?

'புனித குரான் அரேபிய மண்ணில் மெக்கா நகரில் இஸ்லாமியர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது என்கிறது வரலாறு. அதனால் தமிழக முஸ்லிம் மக்கள் சார்பில் இந்த மெகா குரானை புனித மெக்கா நகருக்கு இலவசமாகக் கொடுத்துவிடப் போகிறோம்!' உறுதியான குரலில் கோரஸாகச் சொல்கிறார்கள் கணவன் மனவி இருவரும்.

KUMUDAM.

2 comments:

Abdul Nasar January 18, 2007 at 4:03 PM  

Excellent Job. May allah almighty give them good life in this world and hereafter.

Abdul Nasar

Aslam Ahmad January 20, 2007 at 10:07 PM  

உங்கள் சாதனைக்கு எங்கள் பாராட்டுக்கள்.உண்மையில் இதுவல்ல சாதனை!இவ்வளவு பொருட் செலவும்,நேரச் செலவும் செய்து குர்ஆனை பொருளுணர்ந்து கற்பதற்கு உங்கள் குடும்பத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் உங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.மெகா குர்ஆன் மறுமையில் எந்தப்பயனும் பெற்றுத்தராது.ஆய்வு செய்து அரியவை புரியச் சொல்கிறது அல்குர்ஆன். மலைத்து நிற்கச் சொல்லவில்லை. அன்புடன், அஹ்மத்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP