புறத் தோற்றம் - இறை நம்பிக்கை
>> Monday, January 15, 2007
ஹார்வர்ட் பல்கலக்கழகத் தலவர் எரிச்சலில் இருந்தார். காரணம் அவர் எதிரே அமர்ந்திருந்த வயதான தம்பதி. பரிதாபமான உடைகளோடு உள்ளே வந்து அமர்ந்த அவர்களை அவருக்குப் பிடிக்கவில்ல.
''உங்களுக்கு என்ன வேணும்? டக்குனு சொல்லுங்க. எனக்கு நேரம் அதிகமில்லை.''
''எங்களோட பையன் உங்க ஹார்வர்ட் பல்கலக்கழகத்துல ஒரு வருஷம் படிச்சான். போன மாசம் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான். அவனுக்கு இந்தப் பல்கலக்கழகம் ரொம்பப் பிடிக்கும். அதனால, அவன் நினவா பல்கலக்கழகத்துல...'' என்று பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, குறுக்கே புகுந்தார் தலைவர்.
''என்ன, சிலை வக்கணும்னு சொல்றீங்களா? அதெல்லாம் முடியாது''
''சிலை இல்லை... ஏதாவது கட்டடம் கட்டிக் கொடுக்கலாம்னு பார்க்கிறோம்''
ஏளனமாய்ச் சிரித்தார் தலைவர்.
''என்ன கட்டடமா? ஒரு கட்டடம் கட்ட எவ்வளவு ஆகும் தெரியுமா? இங்க இருக்கிற கட்டடங்களோட மதிப்பு தெரியுமா? ஒரு கோடி டாலர்கள். உங்களால அதெல்லாம் முடியாது''
இப்படி அவர் சொன்னதும், அந்தத் தம்பதி அவர்களுக்குள் கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொண்டார்கள்.
''என்ன மலைப்பாய் இருக்கிறதா?'' என்று கேட்டார் தலைவர்.
''இல்லை... ஒரு கோடி டாலர்கள்தான் ஆகும் என்றால், என் மகன் பெயரில் ஒரு பல்கலக்கழகமே உருவாக்கலாம்னு நினக்கிறோம்'' என்றார்கள்.
தலைவருக்கு அதிர்ச்சி. அவர்கள் உடையப் பார்த்து, அவர் எடை போட்டு விட்டார். வந்தவர்கள் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான, ஸ்டான்ஃபோர்டு தம்பதியினர். இப்படி உருவானதுதான், இன்று உலகம் முழுவம் பிரசித்திப் பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கைலக்கழகம்.
நீதி: புறத் தோற்றம் எப்போதும் உண்மை சொல்லாது
===========================
இறை நம்பிக்கை மிக்க சிறுவன்
அவன்; இறை நம்பிக்கை மிக்க சிறுவன். வீட்டில் அவனை அப்படித்தான் வளர்த்தார்கள்.அவனுக்கு கால்பந்தாட்டம் என்றால் உயிர். நன்றாக விளயாடுவான். பெரிய கால்பந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்பது அவனது ஆசை.பள்ளி அணிக்கு வீரர்கள தேர்வு செய்யும் போட்டிகள் நடந்கொண்டிருந்தன. இவனும் விளையாடிக் கொண்டிருந்தான்.எதிரணியினர், வேகமாய்ப் பந்தை அடித்துக் கொண்டு வந்தார்கள். இவன் பந்தைத் தடுத்தாக வேண்டும். தடுக்காவிடில், பந்து கோலுக்குள் போய்விடும். இவன் சட்டென்று நின்றான். கைகளைக ஏந்தி இறைவனிடம் வேண்டினான், வேண்டிக்கொண்டே நின்றான். 'இறைவா பந்தைத் தடுத்து நிறுத்து' என்று. இவனுடய அணியினர் எல்லோரும் 'பந்தைத் தடு, தடு' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், இவன் பந்தைத் தடுக்காமல் வேண்டிக் கொண்டே நின்றான்.எதிரணியினர் வேகமாகப் பந்தைத் தட்டிக் கொண்டே போய் கோல் அடித்து விட்டனர்.அப்போதான் அவனுக்குப் புரிந்தது. இறைவனிடம் பிரார்த்தன செய்து கொண்டே பந்தைத் தடுக்க முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம் என்று.
0 comments:
Post a Comment