**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா? ஸ்பெஷல் ரிப்போர்ட் !!

>> Thursday, February 28, 2013

இந்தியன் முஜாஹித் இயக்கத்துக்கு தலைவர் இந்திய உளவுத்துறையா? அல்லது ஊடக துறையா?

Indian Mujahideen created by Paid Indian Media - Justice Katju


எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் உடன் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பிடமிருந்து தகவல் வந்ததாக நமது காவல் துறையும், புலனாய்வு அமைப்புகளும், இந்துத்வாக்களும் செய்திகளை கசிய விடுவர். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கியது யார் என்பதை நீதிபதி கட்ஜூ மிக அழகாக விளக்குகிறார். பார்த்து தெளிவு பெறுங்கள்.

இந்தியன் முஜாஹிதீன் மெயிலனுப்பியது, எஸ்.எம்,.எஸ் அனுப்பியது, கடிதம் அனுப்பியது எனக் கூறும் விசாரணை அமைப்பினர் எந்த அலைபேசியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது எந்த ஐ.பி அட்ரஸில் இருந்து மெயில் வந்தது என்பதைக் கண்டுபிடித்து தீவிரவாதிகளைக் கைது செய்யாதது ஏன்?

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கலாம்.


சாதாரண மக்களைக் கொடூரமாக காவுகொள்ளும் இத்தகைய அக்கிரமப் பயங்கரவாதச் செயல்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மனித குலத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அத்தகைய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டுவருவதோடு, எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி அவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை!



feb 21 ஆம் தேதி - ஹைதராபத் தில்சுக் நகரில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுநாளே வழக்கம்போல் போலீஸும் ஊடகங்களும் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை உரத்துச் சொல்லத் துவங்கி விட்டன.

2008 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் வெடிகுண்டு வெடித்ததும் முதன்முதலாக இப்பெயரைப் போலீஸும் ஊடகங்களும் கூறின. இந்தப் பயங்கரவாத(?) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக்குற்றம் சாட்டப்பட்டுப் பதினான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொடுமைப்படுத்தப் பட்டனர்.

அவர்களின் ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் பாதிக்கச் செய்யும் அளவிற்கு "விசாரணைகள்" மேற்கொள்ளப் பட்டு ஊடகங்களின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் அவர்கள் அனைவருமே நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டனர்

இப்போது ஹைதராபாத் தில்சுக் நகர் நிகழ்விலும் எந்த அமைப்பும் இந்தக் குண்டு வெடிப்புக்கு உரிமை கோரா நிலையில், எவ்வித ஆதாரமோ ஆலோசனையோ இன்றி ஸ்டீரியோ டைப்பில் "இந்தியன் முஜாஹிதீன்" எனும் பெயரைச் சொல்லத் துவங்கி விட்டனர்.



கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்ஸல் குருவைத் தூக்கிலேற்றியது போன்றே இதிலும் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த இந்தியன் முஜாஹிதீன் பெயரைச் சொல்கின்றன போலீஸும் ஊடகங்களும் என்பது வெகுஜனங்களுக்குக் கூட தெளிவாகி விட்ட ஒன்று.

அறிவியல் ரீதியில் அமைந்த, முறையான புலனாய்வுக்குப் பின் சான்றுகளின் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை நடத்திச்செல்ல போலீசுக்குப் போதிய நேரமில்லை. எனவே அவசர கோலத்தில் ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரைச் சொல்லி இந்தியாவின் கூட்டு மனசாட்சியைத்(!) திருப்திப் படுத்துகின்றனர்.

அதன் பிறகு வேறு புலனாய்வு ஏஜென்சிகள் வந்து, சிறைப்பட்டவர்கள் குற்றமற்றமறவர்கள் எனக்கண்டுபிடித்துச் சொல்வது வரை ஊடகங்கள் நாளொரு கதையும் பொழுதொரு புனைவுமாகப் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டே இருக்கப் போகின்றன.

இறுதியில் எப்போதும்போல் மற்றொரு பயங்கரவாதத்தாக்குதல் நடைபெறும்வரை, மும்பை பயங்கரவாதத்தாக்குதல் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல்களைப் போன்று பயங்கரவாதத்தின் பின்னணியில் செயல்பட்ட சக்தியினைக் குறித்த நினைவேயில்லாமல் வேறு காரியங்களில் மூழ்கிவிடப்போகின்றனர்!



உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா?



இருப்பின் அதன் தலைவர்கள் யாவர்? அவர்களின் தலைமையகம் எங்குள்ளது? அது என்று முதல் செயல்பட்டு வருகிறது? அது வெறும் ஈமெயிலில் மட்டும் வெளிப்படும் மர்மம் என்ன? அல்லது கடிதம் வருகிறது?இதை யார் அனுப்புகிறார்கள் எங்கிருந்து அனுப்புகிறார்கள் ? ஆந்திரா மாநில பிஜேபி தலைவருக்கு கடிதம் அனுப்பியது யார் ?

பிஜேபி ஏன் இதில் குதியோ குதி குதிக்கிறது?

(குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமோ)இந்தப் பெயரை முதலில் சொன்னவர் யார்? இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த விபரத்தையும் இந்தியப் புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடிக்கவில்லை? (உண்மையில் இவர்கள் உளவுத்துறையா அல்லது காவி துறையா?

குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தியன் முஜாஹிதீன்க்கு தொடர்ப்பு எனக்கூறுவது ஏன் ?

இன்னும் இவை போன்ற விடை தெரியா வினாக்கள் ஏராளம் உள்ளன.



எங்கே இருக்கிறது "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம்..??? அதன் நிர்வாகிகள் யார்...???

பிரதமரை துளைத்தெடுத்த அனைத்து கட்சிகள் குழு...

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!

இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.

- அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும்

- கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும்

- பல ஆண்டுகள் சிறையில கழித்தபின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும்

- பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது

உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு, தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்.

ராம்விலாஸ் பாஸ்வான் :

2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு, வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது? ஒரு நேரத்தை "கெடு"வாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் :

இம்முறை, இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல், நானே - நேரடியாக கவனிக்கிறேன் என்றார்.மேலும், எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான "மெக்கானிசம்" தயாரிக்கப்படும் என்றார்,பிரதமர்.

ராம்கோபால் யாதவ் :

உத்தரபிரதேச அரசு, அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால், இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள், நாளை இவர்களுக்கு "பத்மபூஷன்" விருது கொடுப்பீர்கள், என "நீதிபதிகள் கமென்ட் அடித்து" அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்.

முஹம்மத் அதீப் :

முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது, என்றார்.

மணிசங்கர் அய்யர் :

அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது, குறிப்பிடத்தக்கது

ஏனெனில் இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதச்செயல்களை ஊக்குவிக்கும் லஷ்கர் அமைப்போ, ஜெய்ஷே முஹமது அமைப்போ தங்களது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதோடு அவை பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதையும் வெளிப்படையாகக் காட்டுகின்றன.

சங் பரிவாரங்களும் பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறினார்.

அந்த வகையில் இந்தியன் முஜாஹிதீன் நடத்தும் முகாம்களைக் கண்டுபிடித்துள்ளார்களா?

ஒரு மெயில் அனுப்பியதும் SMS அனுப்பியதும் தான் இந்தியன் முஜாஹித்தீன் இருப்பதற்கான ஆதாரம் என்ற நகைப்புக்குரிய நிலையிலா இந்திய புலனாய்வுத்துறை செயல்படுகிறது?

இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த விபரத்தையும் இந்தியப் புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் இவர்கள் வேலை செய்வது வீணுக்குத்தானா?



அல்லது இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு கூறுவதுபோல், இந்தியன் முஜாஹிதீன் என்பது பணத்துக்காக செய்திகளை உருவாக்கி வெளியிடும் ஊடகங்களின் தயாரிப்பா?

அதுதான் உண்மையெனில், பயங்கரவாதச் சம்பவங்களின் பின்னணியில் அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதியிருப்பதாக அல்லாவா புலனாகிறது!

அதனால்தான், பயங்கரவாதிகள் என அரசே வெளிப்படையாக அறிவிக்கும் சங் பரிவாரங்களின் மீது நடவடிக்கை ஏதும் பாயாமல் இருக்கிறதா?

இந்தியன் முஜாஹிதீன் மெயிலனுப்பியது,எஸ்.எம்,.எஸ் அனுப்பியது ,கடிதம் அனுப்பியது எனக் கூறும் விசாரணை அமைப்பினர் எந்த அலைபேசியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது எந்த ஐ.பி அட்ரஸில் இருந்து மெயில் வந்தது என்பதைக் கண்டுபிடித்து தீவிரவாதிகளைக் கைது செய்யாதது ஏன்?

இந்தியன் முஜாஹிதீனே செய்து இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வசதியாக விசாரணையின் போக்கைத் திசை திருப்பும் வகையில் கருத்துக்களை கூறி வரும் பாஜக தலைவர்களின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் முந்திக்கொண்டு, இது கசாப் மற்றும் அப்ஸல் குரு ஆகியோரின் தூக்குக்குப் பழிவாங்கும் செயல் என்று பீ ஜே பி தலைவர்களுள் ஒருவரான வெங்கைய்யா நாயுடு அறிக்கை விட்டு, புலனாய்வு இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என ரூட்டுப் போட்டுக் கொடுத்தது ஏன்?

முன்னர் சூரத்தில் ப்ளேக் நோய் வந்தபோது பாகிஸ்தானிலிருந்து வந்த எலிதான் சூரத்தின் ப்ளேக் நோய்க்குக் காரணம் என அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்திய அத்வானி இந்தக் குண்டு வெடிப்பு பாகிஸ்தான் சதி எனக் கூறுகிறார்.

மக்கா மஸூதி குண்டு வெடிப்பு மற்றும் ஸம்ஜெளதா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்களைக் கைது செய்த பின் இந்துத்துவ இயக்கங்கள்தாம் அக்குண்டு வெடிப்புகளை நடத்தின என்பது அம்பலப்பட்டது.


சுதந்தரமான எவ்வித முன்முடிவுகளும் இல்லாத விசாரணை மேற்கொள்ளப்பட்டாலே இந்தக் கொடும் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிக்க முடியும். புலனாய்வைத் திசை திருப்பி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கவே அவசரமாக வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகள் உதவும் என்பதை ஆட்சியில் இருந்த இவர்கள் உணர்வார்களா?



இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் கடினமான வேலையில் விழிப்போடும் கவனத்தோடும் ஈடுபடும் - சுதந்திரமான செயல்பாடுகளிலும் சட்டத்தின் மாட்சியிலும் நம்பிக்கை கொண்ட கார்கரே போன்ற-- நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இவ்வழக்கில் புலனாய்வு மேற்கொண்டு உண்மைக்குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விரைந்து வழக்கை விசாரணை செய்து உச்சபட்சத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே சுயமாகச் சிந்திக்கும் மக்களின் அவா!

இது நிறைவேறுமா? அல்லது அப்பாவிகள் சிலர் கைது செய்யப் பட்டு வழக்கு முடிக்கப் பெறுமா? என்பது தான் நம் முன் தொங்கி நிற்கும் முக்கிய கேள்வி.

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர்.

இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ். மிகவும் எச்சரிக்கையுடனே விசாரணை நடந்துவருவதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் குறிவைத்து விசாரணை நடக்கவில்லை என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியிருந்தபோதிலும் அதற்கு மாற்றமாகவே போலீசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சந்திரயான் குட்டாவுக்கு அருகில் உள்ள பந்த்லகுடாவில் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முஹம்மது ரயீசுத்தீன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்தது. இவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீஸ் 6 மாதங்களுக்கும் அதிகமாக கஸ்டடியில் வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னால் அரசு இவருக்கு நிரபாரதி என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி விடுவித்தது. 4 வருடங்களுக்கு முன்னால் திருமணம் முடித்த ரயீஸின் வாழ்க்கை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சீர்குலைந்தது.

விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த வீட்டை விற்று மனைவி, 3 பிஞ்சுக்குழந்தைகள் மற்றும் தனது வயோதிக தாயாருடன் மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பெயரால் இவரை மீண்டும் போலீஸ் வேட்டையாடியுள்ளது. போலீஸ் பிடித்துச் சென்ற பிறகு ரயீஸ் எங்கிருக்கிறார் என்று தகவல் எதுவும் இல்லை. காசிகுடா துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

பல மாதங்கள் போலீஸ் கொடுமைகளுக்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய தனது மகனை போலீஸ் வாழ அனுமதிக்கவில்லை என்று ரயீஸின் தாயார் குல்சும் பீவி கூறுகிறார்.

ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு: இருட்டில் துலாவும் போலீஸ்!

ஹைதராபாத்தில் வியாழக்கிழமை நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸ் இருட்டில் துலாவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போலீஸ் இருளில் தடுமாறுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகிறார்.

ஆறு முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தாம் மீண்டும் இரட்டைக் குண்டுவெடிப்பின் பெயரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்களை நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்திருந்தன.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சங்க்பரிவாருடன் தொடர்புடைய தீவிர ஹிந்துத்துவா அமைப்பு நடத்தியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்தது. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கினையும் என்.ஐ.ஏ வெளிப்படுத்தியுள்ளது.

முஹம்மது ரயீசுத்தீன், முஹம்மது ஷக்கீல், அப்துல் ரஹீம், அஸ்மத், அர்ஷத், அப்துல் கரீம் ஆகியோரை நேற்று போலீஸ் விசாரிக்க கஸ்டடியில் எடுத்துள்ளது. இவர்களில் அர்ஷத் மற்றும் அப்துல் கரீமை விசாரணைக்குப் பிறகு போலீஸ் விடுவித்தது. டாக்டர் இப்ராஹீம் ஜூனைதிடம் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை ஒரு தலைபட்சமாக நடப்பதாக குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. போலீஸ் கஸ்டடியில் எடுத்தவர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறுகிறார்.

குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களைக் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்பதைத்தான் கமிஷனரின் கூற்று சுட்டிக்காட்டுகிறது.

முஸ்லிம் இளைஞர்களை விசாரணை நடத்துவதற்காக அழைத்திருப்பார்கள்.ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்று அனுராக் சர்மா கூறுகிறார். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களை ஏன் மீண்டும் கஸ்டடியில் எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமிஷனர், “கருத்துக் கூறுவதற்கு முன்பு உண்மைகளை ஆராயவேண்டும்” என்று கூறினார்.

2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது. இவர்கள் சித்திரவதைச் செய்யப்பட்டனர். குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர். பின்னர் 26 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து மீதமுள்ளவரை போலீஸ் விடுவித்தது.

பின்னர் இவ்வழக்கில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானபிறகு நீதிமன்றங்கள் முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது. ஆனால், சிறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் கொடுமைகளை அனுபவித்தார்கள்.

தேசிய சிறுபான்மை கமிஷனின் சிபாரிசின் பெயரால் மாநில அரசு பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை ஆந்திர மாநில முதல்வரும் ஒப்புக்கொண்டார். போலீஸின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், தங்களை போலீஸ் சந்தேக கண்ணோடு பார்ப்பதாகவும் முன்பு மக்கா மஸ்ஜித் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிரபராதியான டாக்டர் இப்ராஹீம் ஜுனைத் கூறுகிறார்.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை கஸ்டடியில் எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகிறார் ஆந்திரபிரதேச சிவில் உரிமை கண்காணிப்பு குழுவின் களப்பணியாளர் லத்தீஃப் முஹம்மது. ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்களை குறித்து முடிவுக்கு வருவதற்கு முன்பாக முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்று கத்தோலிக் செக்குலர் ஃபாரம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுக்குறித்து ஃபாரத்தின் பொதுச் செயலாளர் ஜோஸஃப் டயஸ், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவுக்கு மனு அளித்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குள்ளேயே குண்டுவெடிப்பிற்கு காரணம் பாகிஸ்தான் என்றும், இந்தியன் முஜாஹிதீன் என்றும் செய்திகள் பரப்புரைச் செய்யப்பட்டதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

Ref: asiananban. inneram.சேனைத் தமிழ்

மேலும் படிக்க... Read more...

திணிக்கப்படும் அவமரியாதைகளை புறந்தள்ளுவோம்.

>> Wednesday, February 27, 2013

இஸ்லாமிய வழியில் அவமரியாதைகளை& போலிக்குற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும்.

"நமக்குப் புடிச்சமாதிரி மட்டும்தான் மத்தவங்க பேசனும்னு நாம எதிர்பார்க்க முடியுமா என்ன?! “

“எந்த விமர்சனங்களும் சீண்டல்களும் நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனசுக்குள்ளேயே ஒரு கவசத்தை உருவாக்கிக்கணும்... பின்னாளில் அந்த விமர்சனங்களே நம்மை இன்னும் இன்னும் பண்பட்டவங்களா மாற்ற உதவ ஆரம்பிச்சுடும்."

"இருளைத் துரத்தி வெளிச்சத்தை கொண்டுவர முடியாது. வெளிச்சத்தைப் பரப்பிதான் இருளைத் துரத்தனும்.”

"எத்தனை முறை பறந்த விமானமா இருந்தாலும், ஒவ்வொரு 'டேக் ஆப்' க்கு முன்னாலேயும் ஓடித்தானே பறக்கனும்."

“வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத் திக்கிறதிலேதான் வெற்றியின் சூட்சுமம் இருக்கு."- ஃபஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,

பகுதி 1. அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்
பகுதி 2. அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்


பகுதி 3. அவமரியாதையை; போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்


Ref:

Janab Noorul Ameen,http://onameen.blogspot.com/

தமிழ்ப் பூக்கள்

keetru.com

மேலும் படிக்க... Read more...

உண்மை தீவிரவாதிகள் யார் !! (EXCLUSIVE REPORT) இது எத்தனை பேருக்கு தெரியும்..?

இஸ்லாத்தையும் தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம். இது எத்தனை பேருக்கு தெரியும்..?



தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே.

உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது.

அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை.

ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1.அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,

2.FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.

3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்

4.நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,


எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...

ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

என்று கூறுகின்றன.

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!


பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1.1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர் அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2.1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

3.1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

4.1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

5. 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6.1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.

முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!

இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7.1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

8.1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9.முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.

இது எத்தனை பேருக்கு தெரியும்..?

10.1968 ஆகஸ்ட் 11.28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11.1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

12.இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13.அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.

நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

14.1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.

அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

15.நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.

1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16.பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

17.1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

18.1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.

19.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

20.1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

21.1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

A) இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு

B) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு

C) உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

D) மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிரவாத அமைப்பு

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட

A)பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

B) திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

C) அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.

D) ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது.

மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

E. சிவசேனா... சொல்லவே தேவையில்லை.

பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:

"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். 

இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.

சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு LIST ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

F. நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் –

2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. b>(காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்) b>எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக



?60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்

?இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்

?தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...

யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ,

I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ,

மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ,

உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ,

பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ,

L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ,

ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ,

A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..?

இறுதியாக உங்களிடம் சில கேள்விகள் !!

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

1) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

2.சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

4) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

5)கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

6) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

7) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

8)குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

9) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

11)விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

13)மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

14)ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?



2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி

2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது.

23 பேர் பலி. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை.

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!


நன்றி :Dr.ZAHIR NAIK

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)



REFERENCE : http://www.foxnews.com/story/0,2933,161827,00.html

http://satp.org/

http://en.wikipedia.org/wiki/Naxalite

All_Tripura_Tiger_Force

Friedländer, Saul. Nazi Germany and the Jews. New York: HarperCollins,

1997.http://en.wikipedia.org/wiki/World_War_I

http://www.loonwatch.com/2010/01/not-all-terrorists-are-muslims/

http://ta.wikipedia.org/sivasena

http://hinduunity.org/hitlist.html

http://www.naanmuslim.com


நன்றி : NELLAI POPULAR FRONT 1

நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html


மேலும் படிக்க... Read more...

இந்தியாவில் இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள். பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!

>> Tuesday, February 26, 2013

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள் -

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்! அநீதிகள். அநீதிகள்.

கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர்.

தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

"தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''
- கீற்று பிரியா

“நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு இல்லாமல் சமுதாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் தங்குவதற்கு வீடுகளைத் தருவது கூட பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது.

என்னுடைய சொந்த வாழ்வில் நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் நம்பிக்கையான அவர் இரவு 8 மணிக்கு மேல் ஆட்டோ வேண்டுமென்று சொன்னால் வருவதற்கு மறுத்து விடுவார்.

ஏன் என்று கேட்டால், "ஏற்கனவே காவல்துறை சுமத்திய பொய் வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன்.

இரவு நேரத்தில் வண்டி ஓட்டினால் அவர்களால் பெரிய தொந்தரவுகள் ஏற்படும்” என்று கூறி மறுத்து விடுவார்.

ஒருமுறை கிருஷ்ணகிரியில் இருந்து வந்த எங்கள் உறவினரை அழைத்து வருமாறு மிகவும் வற்புறுத்தி இரவு 11 மணிக்கு அவரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்.

உறவினரை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எங்கள் உறவினர் ஆட்டோ டிரைவரை தன்னுடைய நண்பர்தான் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து ஆட்டோவை போக அனுமதிக்குமாறு சொல்கிறார்.

அதற்கு அந்த காவல்துறையினர் தாடி வைத்திருக்கிற இந்த ஆள் உங்களுக்கு எப்படி நண்பராக இருக்க முடியும் என்று ஆரம்பித்து தடித்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

இதனை எங்கள் உறவினர் எங்களுக்கு போன் மூலம் தெரிவித்தவுடன் நாங்களும் அந்தக் காவல்துறையினரிடம் பேசினோம்.

‘அந்த ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் தான் உறவினரை அழைத்து வர அனுப்பினோம்’ என்று சொன்ன பின்பும் சட்டை செய்யாத போலீசார், அந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் உட்கார வைத்த பிறகு தான் அனுப்பினார்கள்.

அடுத்த சம்பவம், டிசம்பர்-6 அன்று காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

மற்றவர்களை சாதாரணமாக சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், முக்காடு போட்ட ஒரு முஸ்லிம் பெண்ணை மட்டும் கடுமையாக சோதனை செய்தனர்.

எந்த அளவிற்கு என்றால் வேலைக்குப் போகிற அப்பெண்ணின் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸை பிரித்து அதில் இருந்த சாதத்தையும் கிளறிப் பார்த்தனர்.

இதில் காவல்துறையினரின் ஏளனப் பேச்சு வேறு.
அந்தப் பெண் அழுது கொண்டே சாப்பாட்டை ஒரு ஓரமாக கொட்டிவிட்டு சென்றார்.

இந்தச் சம்பவமும் மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிய வில்லை.
அவர்கள் எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தனர். அப்போது எங்களோடு வந்த ஒருவர் தன்னுடைய முஸ்லிம் நண்பரைப் பார்த்து உங்களால் தான் இந்தத் தொந்தரவு என்று சொன்னதைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நாங்கள் "கீற்று' இணைய தளத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்தவுடன் எங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் (ஃபீட் பேக்) பெரும் அதிர்ச்சியை அளித்தது.

‘முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

இவர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்குத்தான் கஷ்டம்.

போலீஸ் தொந்தரவு. அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே’ என்பது போன்ற பேச்சுக்கள்!

இது ஏதோ பாமரனின் பேச்சு என்று ஒதுக்கி விட முடியாது.

படித்த இளைய தலைமுறையின் கருத்துத் தான் இது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்கும் பெரும் இன்னல்களை, இடைஞ்சல்களை சந்தித்தோம்.

இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட காரணத்தாலேயே காவல்துறையினர் மிகவும் சிரமத்தைத் தந்தனர்.

இதற்கு முன்னால் மூன்று, நான்கு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அப்போது எல்லாம் காவல் நிலையத்திலே அனுமதி வாங்கித்தான் நடத்தினோம்.

இந்த நிகழ்ச்கிக்காக அனுமதி கேட்ட போது இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் என்னால் அனுமதி தர முடியாது.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டனர்.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கேயும் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை.

தெரிந்த நண்பர்களை வைத்து அதிகாரிகளிடம் பேசிய பின்பும் முதல் நாள் காலை 9 மணிக்கு வரச் சொன்னவர்கள் மாலை 6 மணி வரை காக்க வைத்த பிறகு தான் அனுமதி அளித்தார்கள்.

அதன் பிறகு இங்கே அரங்கத்திற்கு வந்தபோது இங்குள்ள ஊழியர்களிடம் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்தீர்கள்? என்று காவல் துறையினர் விசாரித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பேனரை அரங்கத்தின் முன்னால் காலையில் கட்டி வைத்திருந்தோம்.

கட்டி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே அந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் புதிய பேனர் தயாரித்து இப்போது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கடைசி நிமிடம் வரை நிகழ்ச்சி நடக்குமா என்று பதட்டத்துடனே நடமாட வைத்து விட்டார்கள் காவல் துறையினர்” கவலையுடன் தெரிவித்தார் பிரியா.

“நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் - என்னால் அடி தாங்க முடியவில்லை'' - -ஹாரூண் பாஷா (கோவை)

2006 சட்டமன்றத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன்.

இதற்காக காவல் துறையினர் மதத்துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் போட்டார்கள்.

வழக்கு மன்றத்திலே காவல் துறையின் பொய் வழக்கை முறியடித்தேன்.

அதன் பிறகு என்னுடைய மகனின் பிறந்த நாளன்று நள்ளிரவில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர்.

பிறகு என்னை கைது செய்து அழைத்துப் போன போலீசார் இரவு முழுவதும் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றி கொண்டு சென்றனர்.

அதீக் ரஹ்மானுக்கு நீங்கள் வெடிகுண்டு கொடுத்ததாக அவர் சொல்லியுள்ளார்.

அதற்காக விசாரிக்கிறோம் என்று சொன்னார் கள்.

நான் எதையும் அதீக் ரஹ்மானிடம் கொடுக்கவில்லை.

வேண்டுமானால் அதீக் ரஹ்மானை அழைத்து வந்து நேருக்கு நேர் வைத்துக் கேளுங்கள் என்று சொன்னேன்.

போலீசார் அதீக் ரஹ்மானை நேரில் அழைத்து வந்த போது நான் நேரடியாக அவரிடம், எப்போது நான் வெடிகுண்டுகொடுத்தேன்? ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அதீக் ரஹ்மான், “நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள், என்னால் அடி தாங்க முடியவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே போலீசார் இழுத்துச் சென்று விட்டனர்.

எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த இஸ்லாமிய பிரசுரங்களுடன் மேப் ஒன்றையும் வைத்திருந்த போலீசார் அது பற்றிய விவரங்களைக் கேட்டனர்.

மேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், இது கமிஷனர் ஆபிஸ் மேப்.

வெடிகுண்டு வைப்பதற்காக மேப் வைத்திருந்ததாக ஒத்துக் கொள்.

இல்லாவிட்டால் வீட்டில் நீயும் உன் மனைவியும் மட்டும் இருக்கீறீர்கள்.

நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் உன் மனைவியை சிறைக்கு அனுப்புவோம்.

அதனால் ஒத்துக் கொள் என்று மிரட்டினர்.

72 நாள் சிறை வாசத்திற்குப் பின் வந்த என்னை உறவினர்கள் யாரும் சேர்ப்பதில்லை.

சிறைக்குச் செல்லும்போது தீவிரவாதிகள் என்று பிரசுரித்த பிரபலப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி வெளியே வந்தபோது பிரசுரிக்கவில்லை.

முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்போடு இருக்க வேண்டுமென்றால் பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும்.

சில பேருக்குத்தான் ஜட்டி இருக்கும் - எல்லோரையும் நிர்வாணப்படுத்தித் தான் அடிப்பார்கள்
- தடா அப்துல் ரஹீம்

17 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சொல்லி விட முடியாது.

சேத்துப்பட்டு ஆர். எஸ். எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்தார்கள்.

நீதிமன்றத்தில் 60 நாள் விசாரணையை காவல் துறையினர் கேட்டு வாங்கினார்கள்.

ஒரே அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். பல நாட்கள் இரவு - பகல் எதுவென்றே தெரியவில்லை.

அதிகாரிகளின் முகத்தையும், தோற்றத்தையும் வைத்து யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

சிறையில் இருந்த விடுதலைப் புலிகளில் சிலர் தப்பித்த காரணத்திற்காக ஹெல்மெட் போட்ட காவல்துறையினர் எங்கள் மீது வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள்.

சிறையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எங்களை நிர்வாணப்படுத்தி அடிப்பார்கள்.

அப்போது சிலருக்கு மட்டுமே ஜட்டி போட அனுமதி அளிக்கப்படும்.

நாங்கள் சிறைக்கு எதிராக ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை.

ஆர்எஸ்எஸ் பார்ப்பன சக்திகளின் கொடுமையை எதிர்த்து மட்டும் தான் போராடினோம்.

சிறை வாழ்க்கையின்போது தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை, குடும்பத்தை இழந்த நிலையில் சகோதரர்கள் இருக்கிறார்கள்.

எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை.

புகழேந்தி சங்சரசுப்பு, ப.பா.மோகன், பெலிக்ஸ் போன்ற வழக்கறிஞர்கள் தான் எங்களுக்கு உதவி புரிந்தார்கள்.

7 ஆண்டுகள் கூட நிறைவு பெறாத ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசு, 14 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதில்லை.

எத்தனை செம்மொழி மாநாடுகள் நடைபெற்றாலும், அண்ணா பிறந்த நாள் வந்தாலும் இதே நிலைதான்.

முஸ்லிமல்லாத சகோதரர்கள் எங்கள் குரல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!
- ஆயிஷா - 

என் பெயர் சங்கீதா என்கிற ஆயிஷா சித்தீக்கா.

இப்படி அழைத்தால் யாருக்கும் தெரியாது.

மனித வெடிகுண்டு ஆயிஷா என்பது தான் எனக்கு வழங்கப்பட்ட பட்டம்.


1997-ஆம் ஆண்டு 19 வயது நிறைவு பெற்ற நான், இஸ்லாத்தை - ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு விருப்பமானவரை திருமணம் முடித்தேன்.


குடும்ப எதிர்ப்பின் காரணமாக சென்னைக்கு வந்தேன்.

எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்னுடைய உறவினரை தேடி வந்தவர்கள் எங்களையும் விசாரிப்பதாக சேர்த்து விட்டார்கள்.

நான் கோவைக்கே போகவில்லை.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடுவதாகச் சொன்னார்கள்.


100 கிலோ வெடிகுண்டை கட்டிக் கொண்டு அத்வானியை கொலை செய்யப் போனேனாம்.

என்னுடைய மொத்த எடையே 40 கிலோதான்.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடப்படுவதாக போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலே என்னுடைய படத்தை ஒட்டியிருந்தார்கள்.

ஆனால் கோவை வெடிகுண்டு வழக்கு குற்றப் பத்திரிகையிலே என்னுடைய பெயர் கிடையாது.


இவ்வளவு பிரபலப்படுத்திய காரணத்தால் வெடிகுண்டு வழக்கிலே தேடப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள்.


தனிமைச் சிறையின் கொடுமைகளை என்னுடைய குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மாமியாரிடம் கொடுத்திருந்தேன்.

சிறையை விட்டு வெளியே வந்த போது என்னுடைய குழந்தை என்னிடம் வரவில்லை.

இதை விட பெரிய கொடுமை ஒரு தாய்க்கு என்ன இருக்க முடியும்?
சிறையிலிருந்து ஒரு வாரத்திற்கு 4 கடிதங்கள் என்னுடைய கணவருக்கு எழுதுவேன்.

மூன்றரை வருடத்தில் அவருக்கு கிடைத்த கடிதங்கள் மொத்தம் 17தான்.


நான் பாதிக்கப்படும்போது பத்திரிகைகளுக்கு தீனியாக்கினார்கள்.

என்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பதற்கு பத்திரிகைகள் தான் முழு முதற்காரணம்.


இழந்த சுயமரியாதையை மீட்பதற்காக போராடி வருகிறேன்.

உண்மைக்காகப் போராடுவேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப் போக மாட்டேன்.

வாழ்ந்து காட்டுவேன்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு வாதாடுவதற்காக என் மகனை சட்ட வல்லுநராக்குவேன்.

அப்பாவிகளுக்கு குரல் கொடுங்கள், எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள்.

சமூக ஆர்வலர்கள், மீடியாக்கள் இதனை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

புதன் கிழமை கைது செய்தார்கள்! வெள்ளிக்கிழமை கைது செய்ததாக கோர்ட்டிலே சொன்னார்கள்! - ஜக்கரிய்யா உசேன்.  

நோன்பு மாதத்திலே சஹர் உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது என்னைக் கைது செய்து கண்ணைக் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

புதன்கிழமை கைது செய்தவர்கள், வெள்ளிக்கிழமை வரை அன்-ரெக்கார்டாக வைத்திருந்தார்கள்.

ஆந்திராவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரித்தவர்கள், எங்களுக்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தவுடன் கொடுங்கையூர் பாலத்தினருகே குண்டுகளோடு சென்றபோது பிடித்ததாக வழக்குப் போட்டார்கள்.

காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது! பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!! - 
வழக்கறிஞர் புகழேந்தி  

1996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மன்றத்திலே குணங்குடி ஹனீஃபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

மறுநாள் தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை.

அதனால் அவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கத்திகளை வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தது.

காவல்துறையினர் இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று பத்திரிகையாளர் மன்றத்திலே விசாரிக்காமல் பிரிவு-75 சிட்டி போலீஸ் ஆக்டில் வழக்குப் பதிகிறார்கள்.

இந்த வழக்கை ஒத்துக் கொண்டாலே 150 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் காவல்துறையினர் 12 ஆண்டு காலம் இழுத்தடித்து விடுதலை செய்தார்கள்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலே ரஹீம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கிலே 151 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.

சாட்சிகளில் ஒருவர் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முபாரக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சின்னத் தம்பி தெருவில் இருந்த ஜிகாத் கமிட்டி அலுவலகத்தில் தொடர் வண்டியில் குண்டு வைப்பதற்காக சதி செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள்.

அதற்காக அந்த தெருவில் மூட்டை தூக்கும் இருவரை சாட்சிகளாக போட்டிருந்தார்கள்.

சாட்சி சொன்னவர்கள், ஆகஸ்டு கடைசி வாரம் நாங்கள் அங்கே போனபோது அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் ஆகஸ்டு முதல் வாரம் போன போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அது எப்படி கடைசி வாரம் போனதற்கு பின்னால் முதல் வாரத்திற்கு போக முடியும்?

1999-ஆம் ஆண்டு வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி அதை வைத்ததாக சிலரை கைது செய்தார்கள்.

பேனா விற்கும் 18 வயது ஜலீல், பாவாடை விற்கும் ஹக்கீம், சமோசா விற்கும் ஷேக் ஆகிய பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தினார்கள்.

கோவை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசினார்கள் என்று வழக்குப் போடப்பட்டது.

இந்த வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக உள்ள அமானி சம்பவம் நடக்கும் போது சிறையில் இருந்தார்.

மஹாராஷ்டிராவின் கார்க்கரே, கோவை பாலன், தென்காசி இன்ஸ்பெக்டர் போன்ற நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்.

ஏர்வாடி காசிம் என்பவரை நீதிமன்றம் கண்டிஷன் பெயலில் விடுவிக்கிறது.

பூந்தமல்லியை விட்டு வெளியே போகக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு, அவருக்கு வீடு கொடுத்தவரை காவல்துறை தொல்லை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது.

வழக்குகளை வேகமாக நடத்த வேண்டும்.

வழக்குகளை தேவைக்கு அதிகமான காலம் நீட்டிப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான்.

வழக்குகளை நீட்டிப்பதன் மூலம் சட்டத்தை தவறுதலாக அரசும், காவல் துறையும் பயன்படுத்துகிறது.

பத்திரிகைகள் அதனை பிரச்சாரப்படுத்துகின்றன.

நீதிமன்றமும் உதவுகின்றது.

அநீதிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நின்று தட்டிக் கேட்க வேண்டும்.

இதுபோன்று நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் உண்டு.

மேலும் படிக்க... Read more...

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

>> Monday, February 25, 2013

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது.

பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5 க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர்.

இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ்.


மிகவும் எச்சரிக்கையுடனே விசாரணை நடந்துவருவதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் குறிவைத்து விசாரணை நடக்கவில்லை என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியிருந்தபோதிலும் அதற்கு மாற்றமாகவே போலீசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சந்திரயான் குட்டாவுக்கு அருகில் உள்ள பந்த்லகுடாவில் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முஹம்மது ரயீசுத்தீன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்தது. இவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீஸ் 6 மாதங்களுக்கும் அதிகமாக கஸ்டடியில் வைத்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்னால் அரசு இவருக்கு நிரபாரதி என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி விடுவித்தது.

4 வருடங்களுக்கு முன்னால் திருமணம் முடித்த ரயீஸின் வாழ்க்கை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சீர்குலைந்தது. விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த வீட்டை விற்று மனைவி, 3 பிஞ்சுக்குழந்தைகள் மற்றும் தனது வயோதிக தாயாருடன் மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பெயரால் இவரை மீண்டும் போலீஸ் வேட்டையாடியுள்ளது.

போலீஸ் பிடித்துச் சென்ற பிறகு ரயீஸ் எங்கிருக்கிறார் என்று தகவல் எதுவும் இல்லை.

காசிகுடா துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

பல மாதங்கள் போலீஸ் கொடுமைகளுக்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய தனது மகனை போலீஸ் வாழ அனுமதிக்கவில்லை என்று ரயீஸின் தாயார் குல்சும் பீவி கூறுகிறார். - 25 Feb 2013 ஹைதராபாத்.

-----------
இதுதான் இந்தியா.

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...

விதிமுறை இதுதான், அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு

"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"

"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"

நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

மேலும் படிக்க... Read more...

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா?

நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை.

சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை.

ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன.

இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று.

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா என்ற தலைப்பில் 
சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சி.

சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன.

அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை;

முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை.

அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை.

ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது.

ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர்.

இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே.

'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான்.

காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான்.

இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர்.

இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9821:2010-07-02-10-22-25&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

THANKS TO KEETRU.COM

இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்.

கீற்று இணைய தளத்தின் விடியோவை முழுதுமாக காணுங்கள்.

படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.


குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.

சுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்

 SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

THANKS TO : செல்லையா முத்துசாமி

http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_21.html

THANKS TO : KEETRU.COM

காவி பயங்கரவாதம்.

21 Jan 2013

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில்,

காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.

சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர்

'' இதில் 100 % நான் ஷிண்டேவுடன் உடன்படுகிறேன்.

இதில் ரகசியம் எதுவும் இல்லை.

எல்லாருக்கும் இது தெரிந்து இருந்தாலும் வெளிப் படையாகச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

அதற்காக நான் ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்

 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா? நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?

 2. இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்

 3. ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான “அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்." விடியோக்க‌ள்

 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ

இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதம்

எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.

எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள்.

பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள்.

மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.

ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை.

இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை.

தண்டிக்கப்படவும் இல்லை.

உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய் திறப்பதுமில்லை.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.-

91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது.

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது.

சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும்.

இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன.

ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது.

அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது.

இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

– குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.

குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.

ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை

ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள். - VINAVU.

THANKS TO SOURCE: VINAVU.COM

மேலும் படிக்க... Read more...

மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி!

>> Friday, February 22, 2013

இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.

“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:

அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .

அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி.

அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.

இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .

ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் .

முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார்.

அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .

ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .

இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்காக இதை ஏற்பதில்லை )

சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .

இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது .

இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் ,

ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .

குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே .

2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.

2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது .

ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.

இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் .

ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும். வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் ,

இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.

இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.

இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு. ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை .

இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .

இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை . அனைவரும் முதல் தர குடிமக்களே !

.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது .

இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .

திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .

குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .

இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ? என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.

இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .

பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் .

இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர். இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம்.

முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் .

சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).

10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .

இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.

மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.

என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .

கேள்விக்கிடமான முன்னேற்றம்: இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.

திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .

குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?

உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .

நன்றி : “தி ஹிந்து” நாளிதழ். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 21, 2013, 20:24 THANKS TO: http://www.tntj.net/132923.html

சொடுக்கி : நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! நீதிபதி மார்கண்டேய கட்ஜு !!!படியுங்கள்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய ஆட்சி என்பது என்ன ?

>> Thursday, February 21, 2013

இஸ்லாமிய ஆட்சி என்பது 
மதகுருமார்களுடைய‌ ஆட்சியா? 
மன்னராட்சியா? 
மக்களாட்சியா?

மேலும் படிக்க... Read more...

புலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.

>> Wednesday, February 20, 2013

புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலை.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்

இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல.புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத முஸ்லீம் இன ஒழிப்பு தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலைக்கு எதிரான பதிவே.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் நடுநிலைவாதியா? அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா? எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான்

ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா? இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…! இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?

2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ”சூரியதேவன்” வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயதுச் சிறுவன் புதல்வர் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் படங்கள் காட்டுமிராண்டித்தனமான படுகொலை செய்துள்ளது என்று புலிப் பினாமிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தலைவன் ”சூரியதேவன்” இரண்டு சதாப்த காலமாக ஆடிய பயங்கரவாத தாண்டவத்தில் எத்தனை பிஞ்சுகள் சிதறிப் போயின,

எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர்,

நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது.

”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பயங்கரவாதியின் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

ஏறாவூர் பிச்சிநகர் முஸ்லிம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் நடத்தியஇனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள்.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்.

அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர்.

ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப் பதைக்க சுட்டுகொன்றார்கள்.

 எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கு நிறைய விடைகள் உண்டு இங்கு விடைகளை தவிரித்து சில விபரங்களை பார்ப்போம் .

காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும், ஏறாவூர்  கிராமங்களுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்த சிறுவர்களின் சில படங்கள் :
படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக பார்க்க முடியும்:


அதேபோன்று 116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில்  கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்


ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

எம். ஐ. ஜரூன் -(10 வயது)

எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

எம். கமர்தீன் -(12 வயது)

எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

ஏ. எல். மக்கீன்-(12 வயது)

எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

எம். எஸ். பைசல்-(13 வயது)

எம். பீ ஜவாத்- (13 வயது)

யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

எச். எம். பௌசர்-(14 வயது)

ஏ. ஜௌபர்- (14 வயது)

எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

ஏ. சமீம்- (14 வயது)

எம். இஸ்ஸதீன்- (15 வயது)

எம். எம். எம். பைசல் -(15 வயது)

எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்



ஏ.அப்துல்லாஹ்

THANKS TO SOURCE: http://lankamuslim.org/2012/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/

THANKS TO SOURCE: http://muhasabanet.wordpress.com/2012/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/

சொடுக்கி பகுதி 1 புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. படியுங்கள்

சொடுக்கி  பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம். படியுங்கள்

சொடுக்கி  பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..  படியுங்கள்.
 
*************


மேலும் படிக்க... Read more...

எய்ட்ஸும், இஸ்லாமிய ஒழுக்கமும்

>> Tuesday, February 19, 2013


எய்ட்ஸை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.


*********


மேலும் படிக்க... Read more...

கொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.

>> Friday, February 15, 2013

விஷ்வரூபத்திற்காக கருத்து சுதந்திரத்தை முழங்கிய குஷ்பு. இப்போது முழுங்குவதேன் கருத்து சுதந்திரத்தை ? 

அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம்.


“குஷ்பு இன்னொரு மணியம்மை?- கருணாநிதி பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரை- ஆபீஸுக்கு பாதுகாப்பு!

சென்னை: "குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மணியம்மையார் யார்? தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த்தார். அவரே மணியம்மையார் என அழைக்கப்பட்டார்.

பின்னர் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார். பெரியார்- மணியம்மை திருமணத்தை ஆதரிக்காத பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை' 1949-ம் ஆண்டு தொடங்கினர்.

திமுக தொடங்கும்போது பல மூத்த திமுக தலைவர்களில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையாரே திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் திராவிடர் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அண்மையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் இல்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்து கல்லடி வாங்க நேரிட்டது.

திருச்சியில் அப்போதே குஷ்புவிடம் ‘கோபாலபுரம் வீட்டுக்கு வரக் கூடாது என்று உங்களை சொல்லியிருக்கிறார்களாமே?" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார். ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார்? அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை?' என்று கேள்விக்குறியோடு வெளியிட்டிருக்கிறது.

பெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.க. கடும் கண்டனம்: குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த கட்டுரைக்கு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலையில் கடும் கண்டனம் தெரிவித்து பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அக்கட்டுரையின் சாரம்சம்: இந்த வார 'குமுதம் ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில், "கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?" என்றும் தலைப்பிட்டுள்ளது.

உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க.- அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும். வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர்- அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.

பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார்- நினைவில் இருக்கட்டும்!

அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை!

அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர்- பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?.

"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார். (விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்?- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி, பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்?

அவர்களின் உயர் பண்பு- பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம்- கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

பெரியார் தொலை நோக்கோடு செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.

தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை- வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தியோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது. அறிவு நாணயம் இருந்தால், பண்பாடு பற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக! என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.

விடாது கருப்பு போல குஷ்பு விவகாரம்..!

 Posted by: Chakra Published: Friday, February 15, 2013, 18:05 [IST]

 THANKS TO SOURCE : http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-kumudam-faces-trouble-kushboo-is-another-maniyammai-169879.html

அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

சென்னை: தன்னைப் பற்றி மோசமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் பதில் கூறி வருகிறார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட கருத்தில் "அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானது. இதன் தொடர்ச்சியாக குஷ்புவின் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார்.

குஷ்புவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வைத்தார் கருணாநிதி. இதன் பின்னர் அந்த செய்தி அமைதியானது.

ஆனாலும் இந்த விசயத்தை பெரிது படுத்தி சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதனால் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் இன்னும் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை பற்றி அமைதிகாத்த குஷ்பு, தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்.

"இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.

"அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்" என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமாக பதிலளித்து வருகிறார்.

"இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று விளாசியிருக்கிறார்.

மிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று டுவிட்டரில் இப்படி போட்டு தாக்கியுள்ளார். எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும் Posted by: Mayura Akilan Published: Friday, February 15, 2013, 12:22 [IST] THANKS TO SOURCE : http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-kushboo-fumes-twitter-169845.html

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP