மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி!
>> Friday, February 22, 2013
இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.
நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.
“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:
அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .
அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி.
அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.
இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .
ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் .
முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார்.
அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .
ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .
இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்காக இதை ஏற்பதில்லை )
சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .
இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது .
இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் ,
ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .
குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே .
2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.
2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது .
ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.
இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் .
ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும். வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் ,
இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.
இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.
இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு. ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை .
இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .
இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை . அனைவரும் முதல் தர குடிமக்களே !
.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது .
இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .
திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை.
ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .
குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .
இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ? என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.
இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .
பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் .
இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர். இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம்.
முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் .
சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).
10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .
இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.
மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.
என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .
கேள்விக்கிடமான முன்னேற்றம்: இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.
திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .
குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?
உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .
நன்றி : “தி ஹிந்து” நாளிதழ். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 21, 2013, 20:24 THANKS TO: http://www.tntj.net/132923.html
சொடுக்கி : நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! நீதிபதி மார்கண்டேய கட்ஜு !!!படியுங்கள்
5 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா,
இதனை பதிந்து மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ்.
மீண்டும் ஒருமுறை உண்மையை உரக்க கூறியிருக்கின்றார் திரு.கட்ஜு அவர்கள். பதிலடி கொடுக்க மோடி விசுவாசிகள் வரப்போவதில்லை. அவர்கள் தங்கள் மனசாட்சிகளுக்கு பதில் சொன்னால் கூட போதுமானது.
ராஜபக்சேவை சிலர் ஆதரிப்பதற்கும், மோடியை சிலர் ஆதரிப்பதற்கும் வித்தியாசமில்லை.
வஸ்ஸலாம்...
மோடியைப்பற்றி கட்ஜு விமர்சித்ததற்கு பதவி விலகச் சொல்லும் அருண்ஜெட்லிகள்
மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னபோது எங்கே போயிருந்தனர்?
ராஜ தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி சொன்னதற்கு என்ன பொருள்?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண்டும் என்று கூறும் அருண்ஜெட்லிகள், குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த நிலையில் வாஜ்பேயி சொன்னாரே, அதற்குப் பொருள் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும்.
ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!
பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்துக்கு இந்துத்துவா பொருந்துமா?
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன?
என் மதம் - ஹிந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்
என் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்
என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது?
எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது?
பிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா?
பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!
அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!
இப்படி யார் கூறுகிறார்? மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா?
பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா?
அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிட வில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா?
வாஜ்பேயி மோடியின் ராஜ தர்மம்பற்றி சுட்டிக் காட்டவில்லையா?
குஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்?
கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்?
வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா?
மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா? வாழ்வா?
அதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது?
சிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா?
மோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
21.2.2013
SOURCE:http://www.viduthalai.in/e-paper/55230.html
குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் நரேந்திர மோடியை தண்டிக்க வேண்டும் ஜம்இய்யத் உலமா அறிக்கை .
வியாழன், 21 பிப்ரவரி 2013 14:58
சென்னை, பிப்.21- முஸ்லிம்கள் மத்தியில் மனமாற்றம்; நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஜம்இய்யத் உலமா இயக் கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மவுலானா மெகமூத் மதனி கூறியதாக பத்திரிகையில் செய்தி வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து,
ஜம்இய்யத் உலமா (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் எம்.முகமது மன்சூர் காஷிபி, துணை தலைவர் எம்.முகமது சிக்கந்தர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனியார் ஆங்கில தொலைக் காட்சி ஒன்றுக்கு எங்களது இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மவுலானா மெகமூத் மதனி அளித்த பேட்டியில்,
எந்த ஒரு இடத்திலும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு ஆதரவாகவோ, முஸ்லிம்கள் மோடியை ஏற்றுக்கொள்வார்கள் என்றோ கூறவில்லை.
மாறாக 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரங்களுக்காக மோடியும், அக் குற்றத்தில் ஈடுபட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
அதுவே இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் என்பதுதான் ஜம்இய்யத்தின் நிலைப் பாடாகும்.
எனவே, மவுலானா மெகமூத் மதனியோ, ஜம்இய்யத் இயக்கமோ நரேந்திர மோடியை எந்த வகையிலும் ஏற்கவில்லை.
அதுபோன்ற செய்திகளை ஜம் இய்யத் இயக்கம் முற்றிலும் மறுக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
SOURCE: http://www.viduthalai.in/e-paper/55229.html
அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா,
இதனை பதிந்து மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வாஞ்சூர் அப்பா,
தி ஹிந்து இதழில் வந்தமையை மிக அருமையாக மொழிபெயர்த்து தமிழில் பதிந்து அது மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ் க்ஹைர். தங்கள் முயற்சிக்கு ஈருலக பலன் அளிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.
Post a Comment