**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தெருவோர ஆதரவற்றவர்களின் பசியைப் போக்கும் நா.கிருஷ்ணன். வாழ்த்துவோம். உதவுவோம்.

>> Monday, February 4, 2013

தனது தொழிலை கைவிட்டு, பூணூலை கழற்றி விட்டு ஆதரவற்ற, தெருவோர மனிதர்களுக்கு அவர்களின் தோற்றத்தையே மாற்றியதோடு மூன்று வேளை உணவு, உடை , இருப்பிடம் வழங்குவதை முழுநேரப்பணியாகக் கொண்டவர்.

பசி என்பது ஒரு பிணி. அதனால்தான் ‘கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார்.

மனிதர்களின் பசியைப் போக்க மதுரையில் ஒரு மகத்தான மனிதர் இருக்கிறார். அவருக்கு அதிகம் வயதாகவில்லை. 32 வயதுதான் ஆகிறது.

சொந்த பந்தங்களுக்கு ஒரு வேளை உணவு போடவே யோசிக்கும் இந்த காலத்தில் தெருவில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்து இப்போது இருக்க இடமும் அளித்திருக்கிறார்.

உற்றார் உறவினர் யாருமின்றி தெருவில் மரணமடைந்தவர்களின் சடலத்தை எடுத்து அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்திருக்கிறார்.

யாருமில்லாதவர்களுக்கு ஈமக்கிரியை செய்வதனால் ஜாதி சார்ந்த கொள்ளைகளுக்கு இழுக்கு ஏற்படுவதாக அவர்களின் சமூகத்தினர் கிருஷ்ணனிடம் முறையிட்டுருக்கின்றனர்.

நா.கிருஷ்ணன் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவராதலால் நா.கிருஷ்ணன் இவர்களை தொட , சுத்தம், தழுவ, உணவூட்ட , ஈமக்கிரியை செய்யக்கூடாது என்று பிராமிண சமூகத்தாரிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தது.

அடுத்த நிமிடமே நான் இந்த ஜாதியை சேர்ந்தவன் இல்லை.

இனிமேல் மனித ஜாதியை சேர்ந்தவனாக இருந்து விட்டுப்போகிறேன் என்று கூறி தான் அணிந்திருந்த பூணுலை கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து விட்டிருக்கிறார்.

நா.கிருஷ்ணன் 1981 ல் மதுரையில் பிறந்தவர்.

உணவகத்தில் பயின்ற விருதுகள் பெற்று ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் நட்சத்திர சமையற்காரராக விளங்கியவர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில்.

இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார்.

பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திரும்பினார்.

வெளிநாடு செல்லுமுன் குடும்பத்தினரைக் காண மதுரை வந்தவர், வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது.

சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.

இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.

முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்.

அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன்.

அன்று தொடங்கியது எனது இந்த பணி.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு இலாபநோக்கற்ற அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன்.

டிரஸ்ட் மூலம் தொடரும் சேவை.

தனியாக தொடங்கிய இந்த பயணம் அட்சயா ட்ரஸ்ட் என்னும் ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது.

உதவியற்றவருக்கு உதவும் (helping the helpless) இவருடைய நிறுவனம் மதுரை டோக் நகரில் செயல்பட்டு வருகிறது.

இவரின் முயற்சியால் மதுரை சோழவந்தான் அருகே பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொதுமக்களிடம் பணம் திரட்டி ‘அட்சயா ஹோம்' ஒன்றை கட்டி வருகிறார்.

அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்ஸ் வாங்கவேண்டும் என்பது இவரது லட்சியம்.

ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ரூ.50 செலவாகிறது.

425 பேர் இவரது இல்லத்தில் தங்கி வயிறார சாப்பிட்டு வருகின்றனர்.

நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர்.

தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.

2003 முதல் இது வரை 1.2 மில்லியன் சாப்பாடுகளை வழங்கியுள்ளார்.

இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை.சாப்பாடு கொடுக்கிறார்.

அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர்.

குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார்.

அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.

பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார்.

அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.

நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன்.

" பசித்தவர்களுக்கு உணவிடுவது சக்தி தருகிறது நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது.

அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன்.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தினமும் காலையில் எழுந்து பசித்தவர்களுக்கு உணவு சமைக்கும் போது எனக்கு சக்தி கிடைக்கிறது.

இதை நான் உளப்பூர்வமாக சமைக்கிறேன்.

அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் ஆத்மா மகிழ்ச்சியளிக்கிறது.

மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் " என்கிறார் நாராயணன் கிருஷ்ணன்.

"எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன்" என்றார் கண்களில் நீர் துளிர்க்க.

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது. சிஎன்என் தொலைக்காட்சி.

2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.

இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது.

இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்.

. http://www.akshayatrust.org/

நாராயணன் கிருஷ்ணனின் உதவும் உள்ளத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள்

Akshaya's Helping in H.E.L.P Trust

ICICI Bank LTD,

KOCHADAI Branch,

Madurai - 16

S.B. A/C 601 701 013 912 IFSC ICIC 0006017 MICR 625229007


டொனேசன் வழங்குபவர்களுக்கு 80(G) படி வருமான வரி விலக்கு உண்டு.

THANKS TO SOURCE: http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-narayanan-krishnan-serves-over-2-milion-meals-to-india-168784.html#

2 comments:

suvanappiriyan February 4, 2013 at 6:00 PM  

மனதை நெகிழ வைத்த பதிவு. இப்படி பட்டவர்களுக்கு வசதியுடையவர்கள் கணக்கினறி உதவ முன் வர வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் February 5, 2013 at 8:25 AM  

Masha Allah

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP