அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகளில் தானாம்? 'நிர்வாண' உண்மை.
>> Tuesday, February 5, 2013
பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் என அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகளிலா?
நரேந்திர மோடிக்கு சாதுக்கள் நிச்சயமாக ஆதரிப்பார்கள்! என்ன காரணம்? இதைப் படிங்க..
ஜூனாகத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற குரல் பாஜகவில் மட்டுமே வலுத்து வந்த நிலையில் இந்துத்துவா பேசும் இயக்கங்களுக்குள்ளும் நீட்சி அடைந்திருக்கிறது.
இதன் உச்சமாகத்தான் சாதுக்களும் மோடிக்கு ஆதரவு என்ற செய்தி வெளியாகி உள்ளது.
நரேந்திர மோடியை நல்ல நிர்வாகி என்று முன்னிறுத்துகின்றன பாரதிய ஜனதாவும் அதன் தோழமை சக்திகளும். பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கங்கள் மோடியை தாங்கள் சார்ந்திருக்கும் ‘இந்துத்துவா தத்துவார்த்த அரசியல் காரணமாக ஆதரிப்பதில் முன்னிறுத்துவதில் வியப்பில்லை.
ஆனால் சாதுக்கள் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்?
சாதுக்களுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு என்பது அவர் ஒரு இந்துத்துவா முகம் என்பது மட்டும்தானா?
இல்லை என்கிறது குஜராத்தின் ஜூனாகத் மற்றும் இன்ன பிற மலை பிரதேசங்கள்!!
ஆம் நீங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் படித்த அதே ஜூனாகத் தான் நாம் குறிப்பிடுவது! நாடு விடுதலை அடைந்த போது இருந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் இந்த ஜூனாகத்தும் ஒன்று!
பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக, ஆனால் ஆட்சிப் பொறுப்போ இஸ்லாமியர் வசம் இருந்து வந்தது. அதனால் அவர் பாகிஸ்தானுடன் இணையப் போவதாக கூறினார். இந்த மாவட்டத்தின் கடல்வழியே பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றெல்லாம் கூறினார். ஆனால் இந்து மக்களோ கிளர்ந்தனர்.
இதனால் ஜூனாகத் மன்னர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட பின்னர் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோடு இணைந்த அந்த ஜூனாகத் பிரதேசம் தன்னுள் சில விஷயங்களை அதிகம் வெளிப்படுத்தாமலேயே இருந்து வந்துள்ளது.
இதில் மிகவும் முக்கியமானது ஜூனாகத்துக்கும் சாதுக்களுக்குமான உறவுகள் என்பதுதான்!
உங்களுக்கு சாதுக்கள், நிர்வாணசாமிகளாக நாகா சாதுக்கள் என்றால் நினைவுக்கு வருவது எது?
காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ், அலாகாபாத் போன்ற புண்ணிய தலங்கள்தான்.
ஆனால் இந்த வரிசையில் ஜூனாகத்துக்கும் ஏன் குஜராத் மாநிலத்துக்கே நிகரான இடம் இருக்கிறது என்பதுதான் 'நிர்வாண' உண்மை.
ஆனால் இது அதிகம் பேசப்படாத ஒரு விஷயமும் கூட! தற்போது நடைபெற்று வரும் அலகாபாத் கும்பமேளாவை நடத்துகிற நிர்வாகிகள் குஜராத் மாநில ‘அகாடாக்களும்" முக்கிய பங்கு இருக்கிறது என்பது அந்த மாநிலத்தின் 'இந்துத்துவா' ஆழத்தை சொல்லும்!!
அகாடாக்கள் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்டவை. மொத்தம் 13 அகாடாக்கள் உள்ளன. ஒவ்வொரு அகாடாவும் பல படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. அகாடாக்கள்தான் சாதுக்களை உருவாக்குகின்றன. இந்த சாதுக்கள்தான் ஒவ்வொரு கும்பமேளாவிலும் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றனர். கும்பமேளாவில்தான் அகாடாக்களின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அகாடாக்கள் ஜூனாகத்திலும் இருக்கின்றன. ஏன் குஜராத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இருக்கின்றன.
நாகா சாதுக்களும் சாதுக்களும் சாமானியர்கள் அல்ல.. கடுங்குளிரில் இமயமலை அடிவாரங்களிலேயே கொட்டும் உறைபனியிலேயே வெறும் சாம்பலைப் பூசிக் கொண்டு நிர்வாணிகளாக உலா வருகின்ற அளவுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வலிமை பெற்றவர்கள்.
இந்த அகாடாக்களின் சாதுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அகாடாக்களை ஒடுக்கவோ எந்த ஒரு சட்டமும் இல்லை!
எந்த ஒரு ராணுவமும் இல்லை! போலீஸும் இல்லை!
இவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள்! இறைவனுக்கு சமமானவர்கள் என்கிறது ஹிந்து மதம்!
அதுவும் நிர்வாண சாதுக்களிடம் ஆசி பெறுவதற்கு அலைமோதுகிற பக்த கோடிகளை கும்பமேளா கூட்டங்களில் காணலாம்!
இன்னும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமும் இருக்கிறது.
நிர்வாண சாதுக்கள், சாதுக்களின் சங்கமம் கும்பமேளா காலங்கள் மட்டுமல்ல..
அவர்கள் ஆண்டுதோறும் கூடுகிற இன்னொரு இடமும் இருக்கிறது!
அதுதான் குஜராத்தின் ஜூனாகத்!
ஜூனாகாத்தில் அகாடாக்கள் வரிசை கட்டி நிற்கிற கிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறு கிணறு போல் ஒரு இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி 'நிர்வாண' கோலத்தில் இந்த கிணற்றில் புனித நீராடுவதும் சாதுக்களின் கடமைகளில் ஒன்றாக வகுக்கப்பட்டிருக்கிறது.
உண்மைதான் சாதுக்களின் புனித தேசங்கள் ரிஷிகேஷ், ஹரித்துவார், காசிகளோடு மட்டும் நிற்கவில்லை..
குஜராத்தும் அதன் ஜூனாகத் உள்ளிட்ட பிரதேசங்களும்தான் அவர்களுக்கு புனித தேசங்கள்! புண்ணிய பூமிகள்!!.
அப்ப இந்துத்துவா பேசுகிற அதுவும் தங்கள் புனித தேசமான குஜராத்தின் முதல்வரான மோடியை ஆதரிக்காமலா போய்விடுவார்கள் சாதுக்கள்!
சாதுக்களின் அகாடாக்கள் ஒன்று கூடி மோடியைத்தான் பிரதமர் ஆக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் என அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் வாய்மூடி ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறை.
இதனால்தான் சாதுக்களின் சங்கமமான கும்பமேளாவுக்கு பயணப்படுகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!
அப்புறம் என்ன சாதுக்கள் ஆதரிக்காமலா போய்விடுவார்கள் மோடியை?
Posted by: Mathi Published: Tuesday, February 5, 2013, 9:53 [IST]
கட்டுரை ஆக்கம்.: Mathi
Oneindia Tamil Correspondent
Info Mathi is Correspondent in our Oneindia Tamil (THATSTAMIL)
கட்டுரை இங்கு வெளியானது: http://tamil.oneindia.in/news/2013/02/05/india-sadhus-warm-modi-169171.html
THANKS TO SOURCE: : http://tamil.oneindia.in/news/2013/02/05/india-sadhus-warm-modi-169171.html
4 comments:
என்னது.. நாட்டின் பிரதமர் வேட்பாளரை சாதுக்கள் தீர்மானிப்பதா?: கொந்தளிக்கும் ஐ.ஜனதா தளம்
Posted by: Mathi Published: Tuesday, February 5, 2013, 10:22 [IST]
வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன்தான் அக்கட்சி ஆலோசிக்க வேண்டுமே தவிர சாது சன்னியாசிகளின் அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவற்றுடன் ஆலோசிப்பதா? என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதில் என்ன தயக்கம் என்று வி.ஹெச்.பி. மூத்த தலைவர் அசோக்சிங்கால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை கடும் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷிவானந்த் திவாரி, நாட்டின் பிரதமர் வேட்பாளரை சாதுக்களா தீர்மானிப்பது?
அரசியல் கட்சிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்?
நாட்டின் அரசியலை எங்கே கொண்டு சென்று கொண்டிருக்கிறீர்கள் ? என்று கொந்தளித்தார்.
மேலும் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசித்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்தக் கட்சிகள்தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதுதான் நிலைப்பாடு.
மதச்சார்பற்ற முகம் கொண்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றே அக்கட்சி கூறிவரும் நிலையில் இந்துத்துவா சக்திகள் பகிரங்கமாகவே மோடியை ஆதரிப்பதாக அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/05/india-jd-u-mocks-vhp-on-backing-modi-sadhus-169175.html
இந்துத்வாக்களின் பிறப்பிடமே காட்டுமிராண்டித்தனம் என்பது உறுதியாகிறது..
கோயில்களும் சாமிகளும் எதற்கு?
சாஸ்திரங்களும் புராணங்களும் எதற்கு?
இவை ஜாதியை நிலைநாட்டத்தானே இருக்கின்றன?
எனவே, இவர்கள் எல்லாம் உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்புவார்களானால்,
கோயில்களை இடிக்கவும்,
கடவுள்களைப் போட்டு உடைக்கவும், சாஸ்திர புராணங்களைப் போட்டுக் கொளுத்தவும் இவர்கள் முற்படவேண்டும்.
ஆனால், இவற்றையும் வைத்துக் கொண்டு கூறுகின்ற வார்த்தைகள் ஏமாற்றும் வித்தை தானேயன்றி வேறில்லை.
(8.1.1956 இல் மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை, 17.1.1956.)
ஒன்றரை வயது சிறுமியை சீரழித்த கார் டிரைவர்... அவமானத்தில் டிரைவரின் தாயார் தற்கொலை
சென்னை: சென்னையில் ஒன்றரை வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு கார் டிரைவர்.
இந்த செய்தி அறிந்ததும் டிரைவரின் தாயார் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்து தனது மகனின் செயலுக்காக வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சுசிலா. தனியார் வங்கியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதிலும், ஒன்றரை வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டு முன்பு ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
சுசீலா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் குமரன் என்பவர் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார்.
திடீரென அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று இருப்பார் என்று சுசிலா கருதினார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சுசிலா குழந்தையை தேடினார். அப்போது பக்கத்து தெருவில் குழந்தை அழுதபடி கிடந்தது. குமரன் குழந்தையை ரோட்டில் போட்டு விட்டு ஓடியது தெரிய வந்தது.
குழந்தையின் உடல் முழுவதும் காயத்துடன் வீக்கம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசிலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அலறியடித்தபடி அங்கு வந்து குழந்தையை பார்த்து கதறினார்.
குமரன் குழந்தையை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.
இந்தநிலையில், டிரைவரின் தாய் கஸ்தூரியை பொதுமக்கள் அழைத்து வந்து சிறுமியை டிரைவர் சித்ரவதை செய்தது பற்றி தெரிவித்தனர்.
உடனே அவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். குழந்தையின் சிகிச்சை செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார்.
ஆனால் சுசிலா இதை ஏற்கவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினார்கள்.
குமரன் எங்கு இருக்கிறார் என்று அவரிடம் துருவி துருவி விசாரித்தார்கள். அதற்கு அவர், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். டிரைவர் பற்றி தகவல் தெரிந்தால் போலீசுக்கு சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.
அவரது 2 மகன்கள் சதீஷ், ஆனந்தனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அவமானமடைந்த கஸ்தூரி மன வேதனை அடைந்தார். இதையடுத்து இன்று காலை தனது வீட்டில்தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கஸ்தூரியின் கணவர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறாராம். இவர் தனது மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கஸ்தூரி தனியாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்தார்.
அப்பகுதியினர் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் அவரது மகனின் செயலால் இப்போது பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.
http://tamil.oneindia.in/news/2013/02/05/tamilnadu-car-driver-s-mother-commits-suicide-169215.html
பிரதமரைத் தேடும் இடம்!
பாரதிய ஜனதா கட்சி, பிரதமருக்கான வேட்பாளரை எங்கே தேடுகிறது என்ற தகவலை அறிந்தால் நாம் இந்த 2013இல் தான் வாழ்கிறோமா என்ற வினா கண்டிப்பாக எழத்தான் செய்யும்.
அலகாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது அல்லவா?
அங்கு வரும் சாமியார்களின் கருத்துக்களைக் கேட்டு, பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்று பிஜேபியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புண்ணியமுழுக்குப் போடும் கும்பமேளா என்பதுதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அறிவில் பூத்த முக்கியமான நிகழ்வாகும்.
முக்கியமான முடிவுகளை எல்லாம் இங்குதான் எடுப்பார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள் அல்லவா!
அந்த முடிவைக்கூட இந்தக் கும்பமேளாவின் போதுதான் சாமியார்களின் கருத்தைக் கேட்டுத் தான் எடுத்தார்கள்.
விசுவ ஹிந்து பரிஷத் என்னும் இந்து சாமியார்களின் அமைப்புக் கூட்டம் வரும் 7ஆம்தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் நடைபெற உள்ளது.
அப்பொழுது இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுமாம்.
பாபர் மசூதியை இடிப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியவர்கள் - பல்லாயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவித்த ஆட்சிக்குச் சொந்தக்காரரான நரவேட்டை நரேந்திர மோடியைத்தானே தேர்வு செய்வார்கள்.
குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை இந்திய அளவில் நிறைவேற்றிட பொருத்தமான ஆசாமி கிடைக்க வேண்டாமா?
அந்தக் கண்ணோட்டத்தில் மோடியைத் தவிர வேறுயார் தான் கிடைக்க முடியும்?
பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல வகை தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஆட்சி என்பது மதச் சார்பற்ற தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அது உறுதி செய்யவும் பட்டுள்ளது.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியம் செய்து பதவியும் ஏற்கிறார்கள்.
ஆனால் நடைமுறையில் இதற்கு எதிரான சிந்தனையும் தத்துவமும் கொண்ட மூர்க்கத்தனம் கொண்ட மதவெறிக் கும்பல் ஆட்சி பீடத்தில் ஏற அனுமதிப்பதைவிட தற்கொலை ஒப்பந்தம் ஒன்று இருக்க முடியுமா?
இதற்கு முன்வந்ததே கடைந்தெடுத்த தலைக் குனிவு!
இன்னொரு முறை இந்தியா உலக நாடுகளின் முன் தலைகுனிய வேண்டுமா?
குஜராத் வன்முறையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார் - நினைவு இருக்கிறதா?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்?
என்று புலம்பினாரா - இல்லையா?
இப்பொழுது அந்த மோடியையே பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது இந்தியாவின் முகத்தையே தொங்கச் செய்வதாகும்; ஒவ்வொரு குடிமகனையும் அவமானப்படுத்துவதும் ஆகும்.
பி.ஜே.பி., தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ்.காரர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அளிக்கப்படத்தான் செய்கின்றன.
இராமனை இழிவுபடுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் என்று வெறித்தன நஞ்சைக் கக்கிய ராம்விலாஸ் வேதாந்தி வி.எச்.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால் சங்பரிவார் அமைப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே.
பி.ஜே.பி. சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ். எசைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை விதியாகவே வைத்துக் கொண்டுள்ளனர்.
கும்பமேளாவில் பிரதமரைத் தேடும் அளவுக்கு நெறி கெட்டுப் போன அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டாமா?
வாக்காளர்கள் சிந்திப்பார்களாக!
SOURCE:http://www.viduthalai.in/page-2/54156.html
Post a Comment