**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

>> Monday, February 25, 2013

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது.

பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5 க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர்.

இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ்.


மிகவும் எச்சரிக்கையுடனே விசாரணை நடந்துவருவதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் குறிவைத்து விசாரணை நடக்கவில்லை என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியிருந்தபோதிலும் அதற்கு மாற்றமாகவே போலீசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சந்திரயான் குட்டாவுக்கு அருகில் உள்ள பந்த்லகுடாவில் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முஹம்மது ரயீசுத்தீன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்தது. இவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீஸ் 6 மாதங்களுக்கும் அதிகமாக கஸ்டடியில் வைத்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்னால் அரசு இவருக்கு நிரபாரதி என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி விடுவித்தது.

4 வருடங்களுக்கு முன்னால் திருமணம் முடித்த ரயீஸின் வாழ்க்கை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சீர்குலைந்தது. விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த வீட்டை விற்று மனைவி, 3 பிஞ்சுக்குழந்தைகள் மற்றும் தனது வயோதிக தாயாருடன் மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பெயரால் இவரை மீண்டும் போலீஸ் வேட்டையாடியுள்ளது.

போலீஸ் பிடித்துச் சென்ற பிறகு ரயீஸ் எங்கிருக்கிறார் என்று தகவல் எதுவும் இல்லை.

காசிகுடா துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

பல மாதங்கள் போலீஸ் கொடுமைகளுக்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய தனது மகனை போலீஸ் வாழ அனுமதிக்கவில்லை என்று ரயீஸின் தாயார் குல்சும் பீவி கூறுகிறார். - 25 Feb 2013 ஹைதராபாத்.

-----------
இதுதான் இந்தியா.

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...

விதிமுறை இதுதான், அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு

"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"

"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"

நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

2 comments:

VANJOOR February 25, 2013 at 4:40 PM  

இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம்

இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையா கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் –

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் அதிரடி அறிவிப்பு………!!

இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் குண்டுவெடிப்பிற்கு காரணம் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் என்று உளவுத்துறையும், ஊடகத்துறையும் கூறிவந்தது,

ஒவ்வொரு முறையும் நாமும், நம்முடைய தளத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் என்பது கற்பனையாக உருவாக்கப்பட்டது என்று பலமுறை கூறியுள்ளோம்,

இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டே கட்ஜு அவர்களிடம் கேட்கப்பட்ட போது இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும்

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் 99 சதவீதம் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ February 26, 2013 at 12:15 AM  

சலாம் சகோ.வாஞ்ஜூர்,
மாநாடு கணக்கிறது.
கடைசி ஜோக்கை படிக்கும் போது, ஒரு முஸ்லிமை கட்டி வைத்து "ஒழுங்கா ஒத்துக்கோ, நீ தானே குண்டு வச்சே..." இப்படித்தான் தலையில் ஓடுகிறது. அழுகை முட்டிக்கொண்டு வருகிறது..!

ஆரியர்கள் சாவி போட்டு இயக்க... திராவிடர்கள் அதற்கொப்ப ஆடுகிறார்கள்..!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP