**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வசூல் டாக்டர்கள் ராஜாங்கம். பண மோகத்தில் திளைக்கும் மருத்துவத்துறை.

>> Wednesday, February 13, 2013

பல் பிடுங்க 2 ஏக்கர் நிலம் . தோல் நோய்க்கு ரூ. 50 லட்சம் . கிட்னி நோய்க்காக ஒன்றரை கோடி செலவு…. கன்சல்டிங் பீஸ் கண்ணைக் கட்டுதே.

டாக்டர்களும், தனியார் மருத்துவ துறையினரும் மருத்துவ நெறிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

சாதாரண வயிற்று வலிக்குச் சென்றால் கூட ரத்தப் பரிசோதனையில் தொடங்கி, சி.டி.ஸ்கேன் வரை பரிந்துரைக்கும் டாக்டர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

பரிசோதனை மையங்களில் இருந்து கிடைக்கும் கமிஷனுக்காக டாக்டர்கள், தேவையில்லாமல் பல்வேறு பரிசோதனைகளை, நோயாளியிடம் திணிக்கின்றனர் என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

பரிசோதனைக் கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷனாக டாக்டர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுதவிர, குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்துகளைப் பரிந்துரைக்கவும் டாக்டர்கள் பல்வேறு வழிகளில் 'கவனிக்கப்படுகின்றனர்" என்று கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள எல்லா பரிசோதனை நிலையங்களிலும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்காதீர் என போர்ட் வைத்திருக்கிறார்கள். ஆக எல்லா மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் சம்பளத்துக்கு மேல லஞ்சம் வாங்காமல் பணிவிடை செய்வதில்லை.

டாக்டர்கள் மறைமுகமாக லஞ்சம் கொடுக்க சொல்கிறார்களோ என நினைக்க தோணுகிறது. இந்த லஞ்சம் பத்தி யாருக்கு கம்ப்ளைன்ட் பண்ண வேண்டும் என தெரியவில்லை. அவலத்தின் உச்ச கட்டம் நோயாளிகளிடம் காசு பிரிப்பது அதுவும் தனியார் மருத்துவமனைகளில்.

அரசு மருத்துவ மனைகளில் வசதிகளும் கிடைப்பதில்லை மரியாதையும் கிடைப்பதில்லை.

மருத்துவ தொழில் (சேவை அல்ல) இன்று மிகவும் தரம் தாழ்ந்துள்ளது .அரசு மருத்தவமனைக்கு சென்றால் டாக்டர் முதல் வார்ட்பாய் வரை நோயாளிகளிடம் எதோ அடிமைகளை நடத்துவது போல் மரியாதை இன்றி பேசுவது நடப்பது ,எந்த மருந்தும் ஸ்டாக் இருக்காது, பரிசோதனை கருவிகள் எப்பொதும் வேலைசெய்யாமல் இருப்பது .

அரசிடம் இருந்து வரும் பணம் என்னவாகிறது இதை யார் கேட்பது அரசு ஆஸ்பத்திரியில் இந்த தொல்லை ,தனியார் ஆஸ்பத்திரியில் கொள்ளை நோய் இல்லாதவருக்கு கூட நோய் இருப்பதாக பயமுறுத்தி மனசாட்சி இன்றி கொள்ளை அடிப்பது. இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் அரசும், அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு இது தெரியாதா ?

மருந்து விற்கும் மெடிக்கல் விற்பனை பிரதிநிதிகள் அவர்களின் மருந்துகளை பிரஸ்கிரிப்சன் எழுதி கொடுக்க எல்லா மருத்துவர்களுக்கும் கமிஷன் குடுப்பதும் தொடர்கதை தான். மருத்துவம் இன்று மகத்தான வியாபாரம்.

மருத்துவத்தில் கள்ளத்தனம் உண்டாகியுள்ளது என்றால்... அதற்கு காரணமான மருத்துவ படிப்புக்கான அநியாய கட்டணம், கல்லூரிகளின் அராஜக டொனேஷன், மருத்துவ கல்வி மற்றும் அதன் வேலைக்கான லஞ்சம், மருந்துகளில் ஊழல், மருத்துவமனை கட்ட-நடத்த-லஞ்சம், வருமானவரியில் நீக்கு போக்கு, அதற்கு லஞ்சம், இதற்கு எல்லாம் பின்புலமாக இருக்கும் அரசியல், அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனை உயிர்பெற அரசு மருத்துவமனையை கோமாவில் கிடத்துவது இதற்கும் லஞ்சம் என்று எவ்வளவோ உள்ளதே..!?

தீமைக்கு ஆணிவேரான இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் .

எல்லாத்துக்கும் காரணம் தகுதி உள்ளவரை படிக்க விடாமல், பணம் உள்ளவரை படிக்க வைக்கும் நமது அரசியல் சட்டங்கள்தான் .என்றைக்கு நல்ல அரசியல் வாதிகள் தோன்றுகிறார்களோ அன்றைக்குத்தான் நம் நாடு இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து மீளும்.

நம்நாடு மாற வேண்டுமெனில் மக்களின் கூட்டுமுயற்சியுடன் மற்ற அணைத்து பத்திரிகைகளும் போர்குரல் எழுப்பி அரசு சட்டம்மியற்றி நடைமுறைபடுத்த செய்ய வேண்டும்.

அம்பலப்படுத்திய 'என் தேசம் என் மக்கள்'

என் கணவருக்கு புற்றுநோய்.... 35 லட்சம் செலவு செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நோயினால் ஏற்பட்ட வலி ஒரு பக்கம், மருத்துவ செலவுகளினால் கடன் ஒரு பக்கம் என கணவர் தடுமாறிப் போனார். ஒட்டு மொத்த குடும்பமும் போராடியும் என் கணவரை கடைசியில் காப்பாற்ற முடியவில்லை.... இது வயதான ஒரு மனைவியின் ஆதங்கம்.

அம்மாவின் நோயை குணப்படுத்த லட்சக்கணக்கில் பணம் செலவு செய்த மகளின் வேதனைக்குரலும் இவ்வாறுதான் ஒலித்தது.

மகளின் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் பட்டு ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

அதில் தப்பிப் பிழைத்த ஒரு சிறுவன் தன் குடும்பத்தில் நேர்ந்த அவலத்தை தடுமாற்றத்தோடு பகிர்ந்து கொண்டான். விஜய் டிவியில் ஞாயிறு காலை பத்துமணிக்கு ஒளிபரப்பான என்தேசம் என்மக்கள் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் நடைபெறும் உண்மை நிகழ்வுகளை அம்பலப்படுத்தினார் கோபிநாத்.

நாடு முழுவதும் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொண்டதில் பல விசயங்கள் தெரியவந்ததாக கூறிய கோபிநாத், முதலாவதாக மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்களை பாதிக்கப்பட்டவர்களின் மூலமாக வெளிக்கொண்டுவந்தார்.

கன்சல்டிங் பீஸ் கண்ணைக் கட்டுதே…. சாதாரண காய்ச்சல், தலைவலி என்று போனாலே இன்றைக்கு 500 ரூபாய்க்கு மருத்து மாத்திரை எழுதி தாளித்து விடுகின்றனர் சில மருத்துவர்கள். காரணம் அவர்கள் எழுதும் மருந்துகளுக்கு ஏற்ப கமிஷன் கிடைப்பதுதான். இதில் கன்சல்டிங்பீஸ் வேறு 200க்கு அழவேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன மருத்துவ செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

பல் பிடுங்க 2 ஏக்கர் நிலம்…. இந்தியாவில் அரசு மருத்துவ மனைக்கு செல்பவர்கள் 32 சதவிகிதம், தனியார் மருத்துவ மனைக்குச் செல்பவர்கள் 68 சதவிகிதம் என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளி விபரம். பல் பிடுங்க 2 ஏக்கர் நிலத்தை விற்றேன் என்று கூறி அதிரவைத்தார் ஒருவர். ஆஸ்துமான்னு போனேன் 7 லட்சம் செலவு செய்துவிட்டேன் என்று அழுதார் ஒருபெண்.

ஒன்றரை கோடி செலவு…. கிட்னி நோய்க்காக ஒன்றரை கோடி ரூபாய் மருத்துவ செலவு செய்தேன் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார் தியாகராய நகரைச் சேர்ந்த ஜெயந்தி. திருமணமாகி மூன்று மாதத்தில் கணவரின் சிறுநீரக கோளாறு தெரியவரவே சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.

150 முறை டயாலிசிஸ் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 2500 ரூபாய், செலவானது. 2004ல் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் 25000 ரூபாய்க்கு மருந்துகள்.

இதுவரை 80 லட்ச ரூபாய் மருந்துக்காக செலவு செய்துவிட்டதாக கூறினார். சொத்துக்களை விற்றுதான் செலவு செய்தோம் என்றார் அவர்.

தோல் நோய்க்கு ரூ. 50 லட்சம் ….மொத்த சொத்தையும் விற்றும் தாயை காப்பாற்ற முடியாத மகள், தீராத தோல் நோயால் அவதிப்படும் மோகனரங்கன், 50 லட்சம் செலவு செய்துள்ளார்

பணக்காரர்கள் சொத்தை விற்கலாம். ஆனால் ஏழைகளுக்கு அரசு குறைந்த செலவில் மருந்துகளை கொடுக்கலாம் என்பது பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களின் கோரிக்கை.

கேஸ் போடலாம்… ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தால் கண்டிப்பாக கேஸ் போடலாம் என்றார் நுகர்வோர் குறைதீர்ப்பு மைய ஆலோசகர் புஷ்பவனம். டாக்டர்கள் நோயாளிக்கு புரியும் வகையில் நோயை தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் வழக்குத் தொடுக்கலாம். மருத்துவ செலவு பற்றி ஆய்வு செய்து நிரூபிக்க வேண்டும் என்றார்.

எங்கெல்லாம் ஏமாற்றப்படுகிறோம்…. மாத்திரையில் தொடங்கி லேப், ஸ்கேன் என ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்று விளக்கினார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

மருந்து ஒன்றுதான் ஆனால் விலைதான் வேறுபடுகிறது. மெடிக்கல் ரெப்பரசென்டேவிவ்கள் டாக்டர்களுக்கு கமிசன் தருகின்றனர். இன்றைக்கு பெரும்பாலான டாக்டர்கள் கமிஷன் வாங்குகின்றனர் என்றனர் பார்மா துறையில் பணிபுரிந்த வெங்கடேஸ், அஜீத்.

வெளிநாட்டு மருந்துகள் டாக்டர்களுக்கு தேவையான பரிசுகளைக் கொடுத்து அவர்களின் விலை உயர்ந்த மருந்துகளை எழுதவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர்.

மருத்துவர்களும் கமிசனுக்கு ஆசைப்பட்டு ஏழை மக்கள் என்றும் பார்க்கமால் விலை உயர்ந்த மருந்துகளை எழுதுகின்றனர்.

கோடி கோடியாய் செலவு…. 75 லட்சம், ஒரு கோடி என்று செலவு செய்து படித்துவிட்டு அதை வசூல் செய்யும் வசூல் ராஜாக்களாக மாறிவிடுகின்றனர் மருத்துவர்கள்.

கன்சல்டிங் பீஸ், மாத்திரையில் கமிஷன், லேப், ஸ்கேன்சென்டரில் கமிஷன் என மொத்தமாக வசூல் செய்துவிடுகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் அழகாகுமா? தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளை விடுத்து தனியார் மருத்துவமனைகளை நாடுவதற்கு காரணம் அதன் பிரம்மாண்டமும், அழகும்தான்.

அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாமல் இருப்பதும், ஒருவித அறுவெருக்கத்தக்க வாசனையோடும் இருப்பதும் மக்களை தனியார் மருத்துவமனைகளை நாடவைக்கிறது.

இதனாலேயே காசுகளை கறந்துவிடுகின்றன தனியார் மருத்துவமனைகள்.

எனவே உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டாலும் அந்த மருத்துவமனைகளை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்பதும் பெரும்பாலோனோரின் கோரிக்கை.

இந்த நிகழ்ச்சியில் பேசியது ஒரு சதவிகிதம்தான்... ஆனால் தனியார் மருத்துவமனைகளை நாடும் 100 சதவிகித மக்கள் சொத்துக்களை விற்றும், பணத்தை இழந்தும் கடைசிவரை உயிரோடு மீட்க முடியாமல் போவதுதான் சோகம்....

நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார்.

கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உடல் நலம் பேணுவோம். உடற்பயிற்ச்ச்சி செய்வோம். சுகாதாரம் காப்போம். ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.

போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து,விபசாரம் போன்றவற்றை முற்றாகத் தவிர்ப்போம்

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர்.

தொகுப்புக்கு உதவியவை “ THATSTAMIL – ENNAVINOTHAM- INTERNET.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP