புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
>> Wednesday, January 18, 2012
பாஸிச வெறியர்களினால் இலங்கை முஸ்லிம்கள பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிற இடமே தெரியாத நிலையில் இருக்கும் போது இந்தியா வாழ் தமிழர்களில் பலர் இந்தப்பிரச்சினை பற்றி தெளிவான அறிவின்றி இந்த கொடும் புலிகளை ஆதரிப்பதை நாம் காணும் போது மனம் வேதனையடைகிறது.
இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இனச் சுத்திகரிப்பின் ஈரநினைவுகள்.
இலங்கை;மீலாது ஊர்வலத்தில் தற்கொலைத்தாக்குதல்
இந்தியாவில் இஸ்லாமியர்களின் ரத்தம் இந்துத்துவாக்களுக்கு எப்படி விருப்பமானதோ, அதுபோல் இலங்கையில் இஸ்லாமியர்களின் ரத்தம் காகிதப்புலிகளுக்கு மிக விருப்பமானது. புலிகளின் ஈழ’தாகத்திற்கு’ இஸ்லாமியர்களின் ரத்தமே தாகத்தை தணிக்கும் இளநீராக இருந்தது என்பதை ‘காலச்சுவடு’களாக, காத்தான்குடிகளும், மூதூர்களும் இன்றும் சான்றுபகர்ந்துவருகிறது.
அக்குரசகொட்டப்பிட்டிய எனும் பகுதியில், மீலாதுவிழா ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தில் இரு முஸ்லீம் அமைச்சர்கள் உட்பட ஆறு அமைச்சர்களும், புத்த, கிறிஸ்தவ பிரமுகர்களும், ஏராளமான முஸ்லிம்களும் ஊர்வலமாக சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்ததில் 15.பேர் பலியாகியுள்ளனர்.சாவு எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை புலிகள்தான் நடத்தினர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. இலங்கை அரசின் இந்த கூற்று ஓரளவுக்கு சரியானதாகப்படுகிறது.
ஏனெனில் இந்த ஊர்வலத்தில் வெறுமனே முஸ்லிம்கள் மட்டுமே பங்கெடுத்தனர் என்றால், அவர்களை அரசே தாக்கிவிட்டு புலிகள்மீது பழிபோடுகின்றனர் என்று புலி ஆதரவாளர்கள் புலம்புவதற்கு வழியுண்டு
.
ஆனால் இந்த ஊர்வலத்தில், முஸ்லிமல்லாத அமைச்சர்கள், புத்த பிக்குகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அரசு இந்த தாக்குதலை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே, இது புலிகளின் தாக்குதல் என்று இலங்கை அரசு கூறுவதே சரியானதாகப்படுகிறது.
புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவிகள் பலியாவதை மனிதாபமுள்ள யாரும் ஆதரிக்கமுடியாது.
முஸ்லிம்களும் இதை கண்டிக்கிறோம் அதே நேரத்தில்,புலிகள் மீதான தாக்குதலை அரசியலாக்கும் தமிழக புலி ஆதரவாளர்கள், முழுக்க முழுக்க ஒரு மதம் சார்ந்த ஊர்வலத்தில் பங்கெடுத்த அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய ‘மாவீரர்களை’ கண்டிப்பார்களா? by ஆதம் ஆரிபின்
மார்ச்11, 2009, 11:24 மு.பகல்
THANKS TO SOURCE: http://markaspost.wordpress.com/2009/03/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/
மூதூர்: இனச் சுத்திகரிப்பின் ஈரநினைவுகள் (04.08.2006) .
மூதூர் முஸ்லிம்கள் மூதூரை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறத் தவறினால் இரத்த ஆறு ஓடும் என 29.05.2006 அன்று புலிகள் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களை அச்சுறுத்தியிருந்தனர்.
பின்னர் வழமைபோலவே அப்பிரசுரத்துக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என மறுத்தனர்.
அதேநேரம் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வெளியேற வேண்டாம், நாம் பூரண பாதுகாப்புத் தருவோம் என 01.06.2006 அன்று மூதூர் இராணுவம் ஓர் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட தோடல்லாமல் அதனை ஒலி பெருக்கி மூலமும் அறிவித்தது.
தாம் செய்யும் தவறுகளை உடன் மறுப்பதும் பின்பு அதனை ஏற்பதும் கடந்த 25 வருடங்களாக புலிகள் காட்டிவரும் ஒரு முரண் நடத்தைக் கோலமாகும்.
அதன் பிரகாரம் முஸ்லிம்களை மூதூரை விட்டு வெளியேற்றும் நோக்கோடு 22.02.2002ம் திகதி (Ceasfire Agreement) CFA க்கு முற்றிலும் முரணாக புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசமான மூதூருக்குள் கனரக ஆயுதங்களுடன் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
முஸ்லிம்களை தாக்கும் நோக்கமோ, அவர்களை வெளியேற்றும் நோக்கமோ புலிகளிடம் இல்லையெனின் அவர்கள் நேரடியாக இராணுவ முகாம்களை தாக்கியிருக்க முடியும்.
ஆனால் புலிகளோ மின்சாரத்தை துண்டித்து விட்டு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து குடியிருப்புப் பிரதே சங்களுக்குள் நின்று கொண்டு மக்களையும், அவர்களது சொத்துக்கள், வாழிடங்கள் என்பனவற்றையும் கேடயமாகப் பாவித்து இராணுவத்தை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தினர்.
புலிகள் திட்டமிட்டு எதிர்பார்த்தது போலவே ஷெல் வந்த திசையை நோக்கி இராணுவம் சராமாரியான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது.
தாக்குதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து மக்கள் பாடசாலைகளிலும் சமயத் தலங்களிலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்த ஷெல் தாக்குதல்களினால் பொதுமக்களுக்கு பாரிய உயிர், உடமை இழப்புக்கள் ஏற்பட்டன. தொடர்ந்தேர்ச்சியான ஷெல் தாக்குதல்களினால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபர், நோயாளிகள் வலது குறைந்தோர் உட்பட தஞ்சமடைந்திருந்த மக்கள் பட்டினிச் சாவுக்கு இட்டுச் செல்லப்பட்டனர்.
மேலும் மரணமானோரை உடன் நல்லடக்கம் செய்யவோ காயப்பட்டோருக்கு மருத்துவம் அளிக்க அவகாசமோ, மருந்தோ இல்லாமல் போனமையினால் பலர் மருந்தின்றி இரத்தப் பெருக்கினால் பரிதாபகரமாக இறந்தனர்.
குறுகிய இடத்தில் நிரம்பி வழிந்த மக்கள் பிணங்களுடனும் காயமடைந்தவர்களுடனும் தஞ்சம் புகுந்தவேளை அவ்வடைக்கலத் தலங்களுக்கு அருகில் வந்த புலிகள் அங்கிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்து மேலும் இராணுவத்தைத் தாக்கினர்.
மூதூர் நத்வதுல் உலமா அறபிக் கல்லூரியினுள் சேர்ந்திருந்த மக்களின் நெரிசல் காரணமாக கல்லூரியைச் சூழவுள்ள வீடுகளிலும் மக்கள் தங்கியிருந்தனர். அவ்வேளை மர்க்கஸ் ஜங்ஸனில் நின்ற புலிகள் இராணுவத்தை தாக்கியபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக பல ஷெல்கள் சமகாலத்தில் அறபுக் கல்லூரியை சூழ வந்து விழுந்தன. இதனால் அங்கு தங்கியிருந்த சிவிலியன்கள் ஆங்காங்கு கொல்லப்பட்டனர். இதில் ஒரு வீட்டினுள் தஞ்சம் புகுந்த 15 பேர் பாதிக்கப்பட்டனர்.
இடைவிடாத இருதரப்பு ஷெல் பரிமாற்றங்கள் எம்மை ஊரைவிட்டு வெளியேறச் சொல்கிறதா? என்ற வினா மக்கள் மத்தியில் தோன்றியது. எனவே முற்றாக அழிவதை விட ஊரை விட்டு வெறிவேறுவதே உசிதமானது என முடிவெடுத்த மக்கள் 04.08.2006 காலையில் ஊரை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். மூன்று நாள் கொலைப் பட்டினியுடன் அகப்பட்டதைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட மக்கள் A15 பாதையில் சென்று கொண்டிருக்கையில் ஜபல் நகர் பிரதேசத்தில் வைத்து மக்கள் புலிகளால் மறிக்கப்பட்டனர். நேரே செல்லாமல் தமது பிரதேசமான கிணாந்தி முனைப் பக்கமாக வந்து வெளியேறுமாறு புலிகள் கேட்டனர். ஆனால் புலிகளது பிரதேசத்துக்குச் செல்ல மக்கள் மறுத்தனர். அதேநேரம் நேரே சென்றால் அப்பாதையில் தாம் கண்ணி வெடி புதைத்து வைத்திருப்பதாகவும் மீறிச் சென்றால் முழங்கி விடலாம் என அச்சுறுத்தி, முட்களும் கற்களும் நிறைந்த பாதையினூடாக அழைத்துச் சென்றனர்.
மூன்றாம் கட்டை மலையின் கிழக்குப் புறமாக உள்ள கிணாந்தி முனைப் பிரதேசத்தில் கொதிக்கும் வெயிலில் மக்கள் அனைவரையும் நிற்கவைத்து கனரக ஆயுதம் தரித்த புலிகள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பின்பு ஆண் புலிகளும் பெண் புலிகளும் பொதுமக்களை ஆண்கள் வேறு பெண்கள் வேறாகப் பிரித்து நிறுத்தினர்.
இதனிடையே உயிர்போகும் அளவுக்கு ஏற்பட்ட தாகத்தை தீர்க்க நீர் அருந்த விடவில்லை.
மக்கள் சிறு பள்ளங்களில் தேங்கியிருந்த மிகவும் அசிங்கமான அசுத்த நீரை குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மர நிழலில் ஒதுங்கவோ குழந்தைகளுக்கு பால் கொடுக்கவோ அனுமதிக்கவில்லை. வரிசையில் நிற்கத் தவறியவர்களுக்கு வெல்லங் கம்பினால் அடித்ததுடன் இனத்தை இழித்துரைத்தும் ஏசினர்.
இந்நிலையில் மூதூரில் உள்ள ஆண்களுள் சுமார் 13 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களை வேறுபிரித்து அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்து விடும் திட்டத்தை நடை முறைப்படுத்தத் தொடங்கினர்.
ஆண்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த புலிகள் தமக்குத் தேவையான இளைஞர்களை துப்பாக்கி முனையில் வேறுபிரித்தனர். ஏனைய புலிகள் அவ் இளைஞர்கள் அணிந்திருந்த மேலாடைகளால் கையை பின்னே வைத்து பிணைத்துக் கட்டினர்.
மனைவி, தாய், தந்தை பிள்ளைகள், சகோதரர்கள் ஊரவர், உறவினர்கள் பார்த்திருக்க அவர்களது கண்முன்னே சுமார் 60 மீற்றர் தூரத்தில் வைத்து இளைஞர்களை சுட்டுக் கொல்லத் தொடங்கினர்.
அந்தநேரம் பார்த்து அவ்விடத்தில் பல ஷெல்கள் வந்து முழங்கின. இதனால் பல பொதுமக்களும் புலிகளும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஏனையோர் சிதறியோடினர். அவ்வாறு ஓடியோர் கிழக்கே இருக்கும் சதுப்பு நிலத்திற்கூடாக ஓடியதில் சேற்றில் புதையுண்டனர்.
பின்னர். அவர்களது எலும்புக் கூடுகள் சேற்றிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டன. மேலும் அப்பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும் வாய்ப்பை இழந்தன.
பின் கால்நடையாகவும் வாகனங்களிலும் மக்கள் அதிகளாக கந்தளாய்க்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றனர். அங்கு சென்ற மக்களை கந்தளாயில் தரிக்க விடாமல் கிண்ணியாவுக்கு செல்லுமாறுகேட்கப்பட்டனர்.
எனினும், மக்கள் கந்தளாயிலேயே தங்கினர். அகதிகளாக வந்த மக்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுதல் வேண்டும். ஆனால் அகதிகளுக்கு அரசாங்க அதிபர் சமைத்த உணவு வழங்க எந்த ஏற்பாடும் செய்யாது அகதிகளது உரிமையை மீறினார். ஏற்கனவே தமது சொந்த இடங்களில் வாழும் உரிமையை புலிகள் பறித்திருக்க அரச அதிபரோ அகதிகளது உரிமையை மீறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதென்பது புலிகளது நன்கு திட்டமிட்ட மறைமுக நிகழ்ச்சி நிரலாகும்.
அதன் பிரகாரம் அவர்கள் மூதூருக்குள் அத்துமீறி நுழைந்து முஸ்லிம்களை மனிதக் கேடயங்களாக பாவித்து இராணுவத்தை ஷெல்கள் மூலம் தாக்கி இராணுவத்தின் பதில் தாக்குதல் மூலம் முஸ்லிம்களை அழிக்கும் தந்தி ரோபாயத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர்.
முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள். தொன்று தொட்டு இந்நாட்டுக்கு விசுவாசமாகவும் நாட்டின் ஒருமைப்பாடு, பொருளாதார விருத்தி என்பனவற்றிற்கு உறுதுணையாகவும் வாழ்ந்து வருபவர்கள்.
நாட்டுக்குள் பிரிவினையை விரும்பாத முஸ்லிம்கள் புலிகளது பிரிவினைக் கோரிக்கைக்கு இணங்க மறுத்தமையே புலிகள் முஸ்லிம்களை அழிப்பதற்கு பிரதான காரணம் ஆகும்.
முஸ்லிம்களது இந்நிலைப்பாடுதான் நாடு இன்றளவும் பிளவு பாடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆக பிரிவினையை விரும்பாத, தேசிய ஒருமைப்பாட்டை நேசிக்கும் முஸ்லிம்களுக்கு
இருதரப்பு ஷெல் தாக்குதலில் பின்வரும் இழப்புகள் ஏற்பட்டன.
கொல்லப்பட்டோர் - 54 பேர்
படுகாயப்படுத்தப்பட்டோர்- 196 பேர்
காணாமல் போனோர் - 05 பேர்
மனநிலை பாதிக்கப்பட்டோர்- 24 பேர்
பகுதியளவில் அழிக்கப்பட்ட வீடுகள்- 1425 பேர்
முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகள்- 286
மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பு அவர்களது 99% மான வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கந்தளாய்க்கு அகதிகளாகப்போன மக்களை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தனியாரும் பராமரித்தனர். இப்பராமரிப்பு பணியில் அரசைவிட அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பங்களிப்பே பாரிய அளவினதாகும். மூதூர் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதை புலிகளுக்கு எதிராக பிரச்சாரப்படுத்துவதில் அரசு எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் அளவுக்கு அகதிகளைப் பராமரிப்பதில் எடுக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின்பு மூதூரில் இயல்பு வாழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறி மூதூர் மக்கள் மூதூருக்கு திரும்புமாறு கேட்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் மூதூர் மக்கள் சார்பாக மூதூர் மஜ்லிஸ் அஷ் ஷூறா பின்வரும் வேண்டுகோள்களை அரசாங்கத்திடம் முன்வைத்தது.
- மூதூரின் எல்லைகளில் பலமான பாதுகாப்பு போட வேண்டும்.
- இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் இடமாக மூதூர் இருக்காது என இரு தரப்பும் உறுதிகூற வேண்டும்.
- மூதூரில் உள்ள 99% வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ள படியால், மீளக் குடியேற முன்பு குடும்பம் ஒன்றுக்கு தலா 25,000/- ரூபா வழங்க வேண்டும் .
- விவசாயம், மீன்பிடி, வியாபாரம், காட்டுத்தொழில் என்பன வெளியேற்றத்திற்கு முன்பே தடைப்பட்டிருந்தபடியால், மேற்படி தொழில்களை சுதந்திரமாக அச்சமற்று மேற்கொள்ளும் வரை குறைந்தது 06 மாதங்களுக்கு நிவாரணம் தரவேண்டும்.
- மரணித்தோர் பெயரில் 100,000/- ரூபாவும் காயப்பட் டோருக்கு 75,000/- ரூபா வழங்குவதோடு, அழிந்த வீடுகளை விரைவில் புனரமைப்புச் செய்து தரவேண்டும்.
- முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சமகாலத்தில் மீளக் குடியேற்றப்படல் வேண்டும். - Badhiyussaman
THANKS TO SOURCE: http://www.srilankamuslimsworld.com/muthoor%20cleansing/moothoor.html
புலிகள் இழைத்த கொடுமைகளை யாழ்.மாநகர சபையில் பேசமுடியாத மிக ஆபத்தான நிலை ?
இணைப்பு -2 யாழ் இஷாக்: யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன் முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், ‘சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்’ என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
இதை தொடர்ந்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகளை பற்றி பேசினார்
அந்த உரையையும் இடைமறித்த புலிசார்பு உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டுடன் புலிகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்துள்ளது என்று உரையை இடைமறித்து குழப்பினர் , இந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் கூச்சலிட்டார். எதிர்கட்சி உறுப்பினர் சங்கையா, இது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார்
ஆளும் தரப்பு உறுப்பினர் நிஷாந்தன், ‘இது ஜனநாயகப் பண்புகள் அற்ற ஈ.பி.டி.பி.யின் அறிக்கை மாதிரி இருக்கிறது’ எனக் கூறி இந்த பிரேரணையை சபையில் கிளித்து எறிந்தார். இந்தச் செயற்பாட்டை அடுத்து சபை 30 நிமிடங்கள் குழப்பத்தில் மூழ்கியது அதன் போது மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டது .
புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார். விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.
இதில் தலையிட்ட மாநாகர முதல்வர் ஜனநாயகப் பண்புகயோடு நடந்து கொள்ளும் படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன் ‘இந்த சபையில் உண்மையில் யார் முதல்வர்? யோகேஸ்வரியா, விஜயக்காந்தா? என கேள்வி எழுப்பியவுடன் சபையில் அமர்ந்திருந்நத விஜயக்காந் ஆளும் உறுப்பினர் நிஷந்தனைத் தாக்கத் தொடங்கியதுடன் ஆளும் தரப்பிற்கிடையில் மோதல் வெடித்தது.
புலிகள் முஸ்லிம் சமூகதிற்கும் தமிழ் சமூகதிற்கும் இழைத்துள்ள கொடுமைகள் பற்றி தமிழர்களோ , முஸ்லிம்களோ பேசினால் அதனை இனவாதம் என்று முத்திரை குத்தி புலி தொடர்பாக பேசியவர்களை இனவாதிகளாக காட்டும் செயல் அரங்கேறியுள்ளது.
புலிகள் மேற்கொண்ட அநியாயங்களை சுட்டிக்காட்டி அவர்களின் பயங்கரவாதம் பற்றி பேச முடியாத சபையில் விடுதலை புலி பயங்கரவாதிகளை ”கௌரவமான மனிதர்கள்” என்று கூறுவதை எவராலும் தடுக்க முடியவில்லை என்பது மிக தெளிவான ஆபத்தை உணர்த்துகின்றது ,
புலிகளை கௌரவமான மனிதர்களாக சித்தரிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா ?
யாழ் மாநகர சபை என ஜனநாயக சபையில் புலிப் பயங்கரவாதிகளை ”கௌரவமான மனிதர்கள்” என்று கூற சபை அனுமதிக்கிறது
ஆனால் அந்த ஜனநாயக சபையில் எவரும் புலிகள் இழைந்த மனித குலத்திற்கு எதிரான கொடுமைகளை பேசமுடியவில்லை என்றால் அது மீண்டும் பயங்கரவாதம் ஜனநாயகத்தின் குரல் வலையை நசுக்க தொடங்கியுள்ளது என்பதுதான் பொருள்.
THANKS TO SOURCE: http://lankamuslim.org/2011/12/30/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/
புலிகளின் கொலைக்களம் .....
இந்த பதிவின் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிப்பதர்காகவோ இல்லை அவர்களிடம் காசுவாங்கி அவர்களுக்கு ஒத்து ஊதுவதர்காகவோ எழுதப்படவில்லை,இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புலிகள் செய்த அநீதிகளை மறைபதர்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு அடி கொடுக்கவே இந்தபதிவு.
முக்கியமாக இந்திய தமிழர்களுக்கு தனது நிஜ முகத்தினை மறைத்து வீரம் தீர அமைப்பு என தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு முதுகிற்கு பின்னால் தனது வீர தீர செயல்களை புரிந்த ஒரு தீவிர வாத அமைப்பை இலங்கை அரசின் செயல்களால் உத்தமர்களாக ??? தியாகிகளாக வர்ணிப்பதை பொறுத்துக்கு கொள்ள முடியாத ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக இந்த பதிவினை எழுதுகின்றேன்.
மும்பை தாக்குதல் பற்றி தெரிந்ததும் தீவிரவாதிகள் மீது இந்தியர்களாகிய உங்களுக்கு எவ்வாறு கொலைவெறி கோவம் உண்டாகியது ? அதே போல் தான் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் புலிகள் மீது உண்டாகிய கோவம் இன்றுவரையில் மாறாத வடுவாக எல்லோர் நெஞ்சங்களிலும் உள்ளது .
இதற்கு என்ன காரணம்? என்று தானே கேட்கின்றீர்கள் மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்து ஈவுயரக்கம்ற முறையில் எவ்வாறு மக்களை கொன்று குவிதார்களோ அதைவிட பலநூறு மடங்கு கொடூரமான முறையில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் உட்பட 147 பேரை முதுகிற்கு பின்னால் இருந்து சுற்று கொன்றது. இந்த விடயம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்,????
ஆம் 1990 ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் அழியா துக்கத்தினை ஏற்படுத்திய இலங்கையில் கிழக்கே அமைந்துள்ள காத்தான்குடி நகரத்தில் தான் இந்த கொடூரத்தினை வீர தீர அமைப்பாக தன்னை காட்டிகொண்ட மனித பசிகொண்ட அமைப்பு அரங்கேற்றியது .இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1" 1990ல் அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்களும், 2 திகதி மதவாச்சி ,மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம் ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்தே காத்தான்குடிப் படுகொலை நடந்தது.
இரவு 8.20 மணியளவில் முஸ்லிம்களின் கட்டாய கடமைகளுள் ஒன்றான இரவு நேர இஷாதொழுகையினை (நான்கு பள்ளிகளில் மீர் ஜும்மா ,உசைனியா ,பவ்சீ ,மற்றும் மஸ்ஜித் உல் நூற் ) 300 இற்கு அதிகமான் மக்கள் மேற்கொண்டிருந்த சமயம் 30 பேர் கொண்ட ஆய்தம் தரித்த புலிகளின் காடையர்களின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஈவு இறக்க மற்ற துப்பாக்கி சூட்டின் மூலம் 25 பிஞ்சி குழந்தைகள் உட்பட 147 அப்பாவி மக்கள் படுகொலை செய்தனர் ,இதன் பின்னரே புலிகளை முஸ்லிம்கள் அடியோடு வெறுக்கலாயினர் .
இப்படி பட்ட அமைப்பினையே நீங்கள் தியாகிகள் ,போராளிகள் என்ற பெயர்களில் அழைக்கின்றீர்கள் .
இந்த படுகொலைகளை அரங்கேற்ற ஒரு வாரத்திற்கு முன்னதாக 60000 முஸ்லிம்கள் வசித்த காத்தான்குடி மக்கைளை தமது சொந்த இடங்களை விட்டு ஓடி விடுமாறும் மறுத்தல் உயிரை இழக்க நேரிடும் என்றும் தியாகிகளின் அமைப்பினால் எச்சரிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிட படவேண்டியதாகும்.
குறிப்பு :- நிச்சயமாக இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல புலிகளுக்கு எதிரான பதிவே ..........
மனித நேயம் பற்றி பேசும் புலி பினாமிகள் இதனை பற்றி என்ன சொல்ல போகின்றீர்கள்????
Thanks to source: http://qaruppan.blogspot.com/2011/08/blog-post.html
புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” இழப்பு -2
சமூகம் என்ற வகையில் ஒரு முஸ்லிம் சமூகம் தனது ஈட்டல்களையும் இழப்புகளையும் கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என்பதால் இந்த இழப்பையும் எமது இணைய தளம் பதிவேற்றி கணக்கில் வைத்துகொள்கிறது- www.lankamuslim.org
“புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்“ - எஸ்.எம்.எம்.பஷீர்
-
“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.” (விளம்பி நாகனார்)
எனது “புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு:- ….
மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர் முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன் ஓடை ஆரையம்பதி மட்டக்களப்பு.
வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.
மதம் இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம்.
அதனால் இலங்கைவாழ் இனங்களுக்கிடையில் இஸ்லாமியத் தமிழர்களே அவர்களின் தாய்மொழி அரபு மொழியாக இருந்தாலும் பேச்சு மொழியாக தமிழையே கொண்டவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடையவேண்டும் எனக் குரல் எழுப்பியவர்களில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்களும் அடங்குவர் இருந்தபோதிலும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கைச் சுதந்திரத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மேலும் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் சிங்களவர்களுக்கும் அடிமையாக வாழவேண்டி ஏற்பட்டது.
உலக நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்கள் உரிமைக்காகவும் மொழிக்காகவும் போராடினார்கள். வென்றார்கள் இது வரலாறு சொல்லும் பாடங்கள் ஆனால் இலங்கையில் குறிப்பாக தமிழீழத்தில் வாழ்ந்த இஸ்லாமியர் “விடுதலை உணர்வோடு விடுதலைப் புலிகளில் இணைந்து போராடி மாண்டனர்” என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.
அடி, உதை பட்டு எத்தனை காலம் எவன்தான் வாழுவான் ஆக மானமே பெரிதெனக் கொண்டவன் அடிமையாக வாழ விரும்பமாட்டான் அதற்கு இந்த முகம்மதி அலியார் முகம்மது சலீம் மட்டும் சளைத்தவனாக இருக்கமாட்டான்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியப்படைகளும் இனத்துரோகிகளும் செயற்படுகின்றார்கள். ஒரு லெட்சம் இந்தியத் துருப்புகள் தமிழீழ மண்ணில் வந்து இறங்கிவிட்டது. வீதிக்கு வீதி தெருவுக்குத் தெருவாகவும் படையினர் வருகின்றார்கள். சந்தேகம் கொண்டவர் யாராக இருந்தாலும் இந்தியச் சிப்பாயின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவான். விடுதலைப் புலிவீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.
அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவுவேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலிவீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது.
1988ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதி தமிழர் வாழ்ந்த பகுதி, இடையிடையே முஸ்லிம் குடும்பங்களும் தமிழர்களுடன் ஒட்டி உறவாடி வாழத் தொடங்கினார்கள். அந்த வேலையில்தான் மேஜர் வள்ளுவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், வளர்ச்சி மக்களின் பங்களிப்பு இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பு சம்மந்தமான கருத்துகளை இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களில் விதைத்தார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி மறக்கமுடியாத கிராமம், தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் துருவலும்போல் வாழ்கின்றார்கள். கைத் தொழிலுக்கே முதன்மையான இடம். கல்வியிலும் சழைத்தவர்கள் அல்லர், வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளைத் தொழுகை முடிந்ததும் அந்தக் காத்தான்குடி ஆரையம்பதிப் பிரதான பாதையில் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளோடு பெரியோர்கள் சிறியோர்களும் நின்று கூடிக் கதைத்துப் பேசி அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
இடையிடையே மனக் கசப்புக்கள் வந்து இரு இனங்களுக்கிடையிலான கலவரங்களாக. மாறிவிடுவதும் உண்டு. சூறாவழியடித்து ஓய்ந்ததுபோல் மீண்டும் அன்பைப் பரிமாறுதல் தொடரும்.
இப்படியான பாசப் பிணைப்புகளின் வலையில் பின்னப்பட்டுக் கிடக்கும் வேளையில்தான். மேஜர் வள்ளுவனின் கருத்தில் இணைந்து விடுதலைப்புலிகளின், அவர்களுக்கான செயற்திட்டங்களில் இந்த முகம்மது சலீம் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
எப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான்.
புலிகளின் செயற்திட்டங்களையும் மறைமுகமாகக் செய்துவந்தான்.
இரகசியங்களைக் கையாழுதல் அக்கால வேளைகளில் இந்தியப்படையினதும் இனத்துரோகிகளினதும் நடமாட்டங்களை வேவுப்பணிமூலம் ஊருக்குள் நின்று கண்காணித்து செயற்படுத்துபவன்.
அதுமட்டுமின்றி இவனால் பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் பாசறையில் புகுந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தவன்.
இரவுவேளைகளில் துப்பாக்கியைத் தோளில் சுமந்துகொண்டு இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டவன். அன்று அவை சிறுசிறு தாக்குதல்களாக இருந்தாலும் அது பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததென்றே சொல்லலாம்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தியப்படைகள் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய வேளைகளில் புலிகள் அமைப்பில் இனைந்திருந்து பல முஸ்லிம் புலிவீரர்கள் தாங்களாகவே ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால் இந்த சலீம் மட்டும் புலிகள் இயக்கத்தைவிட்டோ, புலி உறுப்பினர்களைவிட்டோ விலகிச் செல்லாதிருந்தது களமாடுவதற்காகவன்றோ.
புலிகளுக்கும் அரசபடைகளுக்குமிடையில் போர் மூண்டது. தமிழீழ மண்ணில் குண்டு வீச்சு விமானங்களாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் எறிகணை வீச்சுகளினாலும் தாக்கித் தகர்த்தான் தமிழீழ மண் ரணகளமாக மாறியது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. அடுத்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்மீது 10.06.1990 அன்று புலிவீரர்கள் மனோ மாஸ்ரரின் தலைமையில் தாக்குதலைத் தொடுக்கின்றார்கள்.
சங்கரின் திட்டப்படி இந்த வீரவேங்கை கபூரும் தாக்குதலை மேற்கொள்ளுகின்றான்.
சென்றல்கேம்ப் பொலிஸ்நிலையத்திலிருந்து சிங்கள இராணுவத்தினர். வீசும் ஆட்லறி எறிகணைகள் பதுங்கிக்கிடந்து தாக்குதலைத் தொடுக்கும் புலிகள் பக்கம் வீழ்ந்து வெடிக்கின்றது. கப்டன் சங்கரின் அணியில் நின்று இந்த கபூர் மிக வேகமாகச் செயற்படுகின்றான்.
11.06.1990 அன்று களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்டைமீது மிக வேகமான தாக்குதல்கள் புலிவீரர்களினால் தொடுக்கப்படுகின்றது. நேரத்திற்கு உணவு கிடைத்தாலும் உறக்கமின்றி எதிரியை விரட்டத் தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.
அளவான உடலோடு பின்னால் வாரி விடப்பட்ட தலைமுடிக்கு அழகைக் கொடுக்கும் அந்த வட்டமுகம் சிவந்த மேனி கூரிய விழி கொண்ட வேங்கையாக கபூர் தாக்கினான் தாக்கிக் கொண்டே சென்றான் முகாமினுள் இருந்த பகைவனுக்கு மிக அருகில் நின்று தாக்கினான். அது அவனுக்கு மிக இலகுவாக இருந்தது.
இருந்தபோதிலும் அன்று அனைத்தும் மிக வேகமாக செயற்பட்டு முன்னேறி இவன் தாக்குதலைத் தொடுத்தான்.
அந்தவேளை தம்பலவத்தையைச் சேர்ந்த சபேசன், கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நவயுகன, கொத்தியாபுலையைச் சேர்ந்த கீறோ, கோயில் போரதீவைச் சேர்ந்த வசந்தராஜ், மகிழவட்டுவானைச் சேர்ந்த விமலநாதன் ஆகியோர்களுடன் இந்த கபூரும் வீரச்சாவைத் தழுவிக் கொள்ளுகின்றான்.
(மீண்டும் பொழிப்புரை அவசியமில்லை இலத்தீன் மொழியில் Res ipsa loquitur என்று “அதுவேஅதற்கு பேசும்” (the thing speak for itself) என்று சொல்லுவத்போல இதனையும் உங்களின் வாசிப்புக்கு விட்டு விடுவிடுகிறேன் . இனிமேலும் இன்னொரு தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞ்ர்கள் இனமுரன்பாட்டுக்காக அழிவதை நிறுத்துவோம்) Monday, April 26, 2010
Thanks to Source: http://lankamuslim.org/2009/09/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/
இலங்கை வடக்கு முஸ்லிம்களின் பத்தொன்பது ஆண்டுகால அவல வாழ்க்கை எம்.ஏ.ஹபீழ் இலங்கை
.
இலங்கையின் வட புலத்திலிருந்து 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் - தமிழ் பேசும் முஸ்லிம்கள் - ஆயுத முனையில் பலவந்தமாக
24 மணி நேர அவகாசத்தில வெளியேற்றப்பட்டு 2009 அக்டோபர் திங்களுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
ஒரு தாய் வயிற்று மக்களாக தனித்துவமான பாரம்பரியங்களுடன் - ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் - வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு சில மணி நேரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றில் குறிப்பாக தமிழ் மக்களது வரலாற்றில் கழைபடிந்த ஓர் அத்தியாயமாகும்.
முஸ்லிம் கிருத்தவர் இந்து கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் ஆகியோர் எவராயினும் தமிழ் பேசினால் அவர்கள் தமிழர்களே என்பது தமிழ்நாட்டின் நிலை. தமிழ்போசும் முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமே தமிழர்கள் என்ற நிலையைப் புலிப் பயங்கரவாதிகள் இந்து கிறிஸ்தவ உள்ளங்களில் விதைத்து விட்டனர்.
பரம்பரை பரம்பரையாக மாற்றுமத தமிழ் மக்களோடு மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தங்களது வீடுகள் வருமானம் ஈட்டித் தந்த வர்த்தக நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி கற்ற கற்பித்த பாடசாலைகள் ஆன்மீகச் செயற்படுகளை ஆற்றிய பள்ளிவாசல்கள் அரபுப் போதனா பீடங்கள் ஆகிய அனைத்தையும் பறிகொடுத்து எதிரிகளாகத் துரத்தப்பட்டார்கள்.
தாயக மண்ணிலிருந்து நாம் எதற்காக துரத்தப்படுகின்றோமென்பதைக் கூட அறிய முடியாதவர்களாக சகல சொத்துக்களையும் இழந்து அணிந்திருந்த அதே ஆடையுடன் எங்கே போகின்றோமென்பதை கூட தீர்மானிக்க முடியாதவர்களாக பச்சிளம் குழந்தைகள் பாலகர்கள் இளம் பெண்கள் விதவைகள் நோயாளிகள் அங்கவீனர்கள் வயோதிபர்கள் என 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கூட்டங்கூட்டமாக கெடுவிதிக்கப்பட்டு சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டமை எந்தவித மானுட தர்மங்களாலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான - அதை விடக் கீழான கொடுஞ்செயலாகும்.
பல தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மாகாணப்பகுதியில் எல்.டி.டி.ஈ. எனும் தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் கடுமையான இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்
1990 அக்டோபர் இறுதிப்பகுதியில் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களற்ற குறுந்தேசியவாத கனவில் மிதந்த எல்.டி.டி.ஈ இனவெறியர்கள் உண்மையான மண்ணின் மைந்தர்களை அடித்துத் துறத்தினர்.
இதனால் வடமாகாண முஸ்லிம்கள் அனுபவித்த துயரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அனாதைகளும் ஊனமுற்றோரும் விதவைகளும் சிறுவர்களும் ஒற்றையறை ஓலைக் குடில்களில் 19 ஆண்டுகள் அவர்கள் அனுபவித்து வரும் அவஸ்தையான வாழ்க்கை கல் நெஞ்சர்களையும் கரையச்செய்யும். .
1990 அக்டோபர் 23ம் திகதியில் மன்னார் யாழ்ப்பாண வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 85000 முஸ்லிம்களே இவ்விழிநிலைக்குள்ளாக்கப்பட்டனர்.
அவர்களில் அதிகமானவர்கள் இன்றுவரை போதிய அடிப்படை வசதிகள் (உணவு உறையுள் உடை நீர் மின்சாரம்) ஏதுமற்ற ஓலைக்குடில்களிலும் கூடாரங்களிலும் சொல்லொன்னாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக அகதி மக்களிலேயே இருந்து தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்ற அமைச்சர் றிஸாட் பாராட்டத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
1990 அக்டோபர் 21ம் திகதியில் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முஸ்லிம்களைப் புலம்பெயர்ந்த செயற்பாடு அதே மாதம்
30ம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களைப் புலம் பெயர்த்ததுடன் முடித்து வைக்கப்பட்டது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆங்காங்கே பல மாவட்டங்களில் குடியேறினர்.
1990 நவம்பர் 2ம் திகதி வடமாகாணத்தில் முஸ்லிம்களின் தொகை பூஜ்யமாகும். ஆனால் புலிகளினால் பணத்துக்காகவும் வேறு அவர்களின் இலாபங்களுக்காகவும் பிடித்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 55 முஸ்லிம்கள் அங்கிருந்தனர்.
அதில் 22 பேர் ஒன்றரை வருடத்தின் பின்னர் சிலர் 6 மாதத்தின் பின்னர் பல இலட்சம் ரூபா பணம் கப்பமாகக் கட்டப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய 33 பேரின் நிலைமைகள் பற்றியோ அவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்ற விபரங்கள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.
1990 அக்டோபர் 18ம் திகதி சாவகர்ரேரிப்பகுதியில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சொத்துக்களை வைத்துவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய புலிகளின் வேண்டுகோளுக்கு அஞ்சிய முஸ்லிம்கள் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு அணிந்திருந்த ஆடையுடன் வெளியேறினர்.
இவ்வாறு வடக்கின் எல்லாப்பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி அன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே எல்.டி.டி.ஈ பாசிசவாதிகளால் பயன்படுத்ப்பட்டது.
இவ்வாறு தமது வீடுகள் கிராமங்கள் நகரங்களை விட்டு வெளியேறியோர் தமது பெறுமதிமிக்க சொத்துக்களையும் உடைமைகளையும் அந்தந்த இடங்களிலேயே விட்டுச் செல்லுமாறும் மீறுவோர் பகிரங்கமாக சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவர் என்றும் ஆயுத முனையில் மிரட்டப்பட்டனர்.
ஆரம்ப காலத்தில் அரசுப் படைகளுக்கும் தமிழ் போராட்டக் குழுக்களுக்குமிடையிலான போராட்டம் 1983ம் ஆண்டுதான் முதன் முதலாக ஆரம்பித்தது. அப்போது வடகிழக்கு முஸ்லிமிகள் இவ்விரு பகுதியினராலும் சிறிதளவான பாதிப்புக்கு உள்ளானர்கள்.
1985ம் ஆண்டு முதல் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வழிகளிலும் தாக்கப்பட்டனர். அழிவை ஏற்படுத்திய அர்த்தமற்ற இந்த யுத்தத்தினால் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டனர்.
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்கும்பல்களினால் நசுக்கப்பட்டனர். காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளும் தாக்குதல்களும் கொலைகளும் கொள்ளைகளும் பலாத்காரமும் சுதந்திரமின்மையும் முஸ்லிம்களை முற்றாக அழித்துவிட எடுத்த முதல் முயற்சியாகவே இருந்தது. இறுதியில் ஈழப்பகுதியிலிருந்து அடித்துத்துரத்தப்பட்டனர்.
எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயற்பாடு குறித்து ஈழத் தமிழினம் இறுக்கமாக மவ்னம் சாதித்தது கீர்த்தி பெற்ற சில அறிவு ஜீவிகள் (?) இந்நிகழ்வு முற்றிலும் சரியானதென்று நியாயப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை இந்திய - முஸ்லிம்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு முஸ்லிம்களுக்காகக் புலிகளைக் கண்டித்துக் குரல் கொடுத்ததை வடக்கு முஸ்லிம்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.
இன்று வடமாகாணத்தில் 100க்கும் அதிகமான பள்ளிவாயில்கள் அதான் ஒலிபரப்பின்றி பாழ் அடைந்து கிடக்கின்றன. இவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் வெறும் வனாந்தரமாகக்கிடக்கின்றன.
சில வீடுகளில் புலி சார்பான தமிழ்மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
வடக்கில் செல்வச் செழிப்புடன் அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று அகதி முகாம் சூழலில் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி பொருளாதார அடிப்படையிலிருந்து பாதிக்கப்பட்டு தமது உறைவிடம் கல்வி கலாச்சாரம் சுகாதாரம் ஒழுக்கம் ஆகியன பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள்.
பாஸிச வெறியர்களினால் இலங்கை முஸ்லிம்கள பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிற இடமே தெரியாத நிலையில் இருக்கும் போது இந்தியா வாழ் தமிழ்ப்பேசும் முஸ்லிம்களில் பலர் இந்தப்பிரச்சினை பற்றி தெளிவான அறிவின்றி இந்த கொடும் புலிகளை ஆதரிப்பதை நாம் காணும் போது மனம் வேதனையடைகிறது.
புலிகள் இயக்கத்தினர் சமாதனத்திற்கான வழியை நிராகரித்து கொரில்லா முறையில் அரசுப் படைகளையும் மிக முக்கியமான இடங்களையும் முஸ்லிம்களையும் தாக்கி வந்தனர்.
இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
பல சந்தர்ப்பங்களில் எல்.டி.டி.ஈ யை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்த போது அவர்கள் மறுத்து பேச்சுவார்த்தையை பிரயோசனமற்றதாக மாற்றினார்கள்.
அத்தோடு தூங்கிக் கொண்டிருந்த கிழக்குமாகாண ஏறாவூரில் அப்பாவிப் பொதுமக்கள் சிறுவர்கள் யுவதிகள் முதியவர்கள் கண்டதுண்டமாக ஈவிரக்கமின்றி வெட்டிக்கொன்று குவிக்கப்பட்டனரே இவ்வளவு தானா?
காத்தான்குடி பள்ளியில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான வாலிபர்கள் முதியவர்கள் சிறுவர்கள் குண்டு வீசித்தாக்கப்பட்டனரே! பள்ளியே இரத்த வெள்ளத்தில் குளித்தது. இவ்வாறு புலிப் பயங்கரவாத இனவெறியர்கள் செய்த அடாவடித்தனத்தை இலகுவில் இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்..
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? நடந்திருப்பது என்ன என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்.
83ம் ஆண்டு அதாவது வரலாற்றில் கருப்பு ஜுலை என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாளில் சிங்களவர்கள் தமிழர்களின் உடமைகள் மீது அத்துமீறி யாழ் நூல்நிலையத்தை தீயிட்டு சில கொலை கொள்ளைகளை நடத்தி சில தமிழ்ப்பெண்களை கற்பழித்தார்கள்.
இதன் காரணமாக கொதித்தெழுந்த தமிழ் வாலிபர்கள் பல இயக்கங்களாக செயற்பட்டார்கள்.
இவ்வியக்கங்கள் சிங்களவர்களை வெளியுலகிற்கு மிலேச்சர்கள் என்று காட்டினார்கள்.
இவ்வாறு பல இயக்கஙகள் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக என்று ஆரம்பித்து காலம் செல்லச் செல்ல இவ்வியக்கங்கள் தமிழர்களுக்கு எதிரானதாகவே செயற்பட்டது.
தமிழ் வாலிபவர்களை கொன்றுகுவித்தது. கோயில்களில் இரவு வேளையில் புகுந்து கோயில் சொத்துக்களை சூரையாடியது. பணக்காரர்களிடம் பலவந்தமாக அவர்களின் சொத்தைப் பறித்தெடுத்தது.
இப்பயங்கரவாதிகள் சுதந்திரதாகம் கொண்டவர்கள் என்றும் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் என்றும் பலரும் நினைத்தார்கள்.
சில முஸ்லிம் இளைஞர்களும் இவர்களின் போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்தார்கள். இவ்வாறு தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று நினைத்த வடமாகாண முஸ்லிம்களை விரட்டியடித்தது எந்தவகையில் நியாயம்?
கற்பழிப்பும் கொலையும் கொள்ளையும் நிகழ்த்தியவர் சிங்களவன். உதவியும் ஒத்தாசையும் புரிந்து கொண்டிருந்த அப்பாவி நிராயுதபாணி முஸ்லிம்களை தயவு தாட்சண்யமின்றி பிறந்த மண்மை விட்டு விரட்டி விட்டனர். இது புலிகளின் கோழைத்தனத்தை நிரூபிக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தை சட்டவிரோத ஆயுத வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் இன்று நடுச் சந்தியில் நிர்வாணமாகி நிற்கிறது.
வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இவர்கள் செய்த அநியாய வரலாறு இன்று அவர்கள் மீது திரும்பியுள்ளது.வரலாறு என்றும் துரோகிகளை மன்னிப்பதில்லை.
வடமாகாணத்தில் முஸ்லிம்கள் 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்படும் வரை இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் அந்நியோன்யமாகவே காணப்பட்டது.
இன்றும் கூட தமிழ் மக்கள் எமது விரோதிகளல்லர். புலிப் பயங்கரவாதிகள்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து விட்டனர் என்று முஸ்லிம்கள் கூறுவதை எம்மால் செவிமடுக்க முடிகிறது.
ஏன் இவ்வாறு எல்.டி.டி.ஈ பாசிசவாதிகள் முஸ்லிம்களை வெளியேற்றினர் என்றால் அவர்களுக்கு முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்களா? அல்லது காட்டிக்கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. அவர்களுடன் கைகோர்த்து நண்பார்களாக அவர்களுக்கு உதவி செய்துகொண்டு தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இந்த வெளியேற்றம் எந்த வகையிலும் நியாயமற்றது.
வடமாகாண அப்பாவி முஸ்லிம்களின் பெறுமதிக்கத் தக்க பொருள்களும் சொத்துக்களும் அதற்கு மேலாக சிலரின் உயிர்களும் ஆயுத முனையில் பறிக்கப்பட்டன. எந்த வகையிலும் மனித சிந்தனை ஏற்றுக் கொள்ளாத அளவு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் வெளியேறும் படி கூறியது எமக்கு எவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
முஸ்லிம்கள் தம்முடன் எந்த ஒரு பெறுமதி மிக்க பொருளையும் எடுத்து சென்று விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் வெளியேறும் வாயில்களில் முஸ்லிம் பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் ஆயுத முனையில் சோதனையிடப்பட்டனர்.
இலங்கையில் பொதுவாக வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சரியான நிலைகுறித்த தகவல்கள் இந்திய வாழ்தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத தமிழ் பேசும் மக்களுக்கும் தெரிவிப்பது விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்களுக்கு இங்குள்ள உண்மை நிலையைப் புலப்படுத்தலாம்.
இந்தப் பாரிய இனச் சுத்திகரிப்பு புலம்பெயர்த்தலுடன் பல கோடி ரூபாய் பணம் தங்க நகைகள் அசையத்தக்க அசையாச் சொத்துக்கள் கால்நடைகள் வியாபார நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் யாவுமே பகற்கொள்ளையிடப்பட்டன.
இவற்றில் எவற்றையுமே புலம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்த இழப்புக்களை நோக்கும் போது:
128 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
189 அரபுப் போதனா பீடங்கள் செயலிழந்துள்ளன.
65 அரசாங்கப் பாடசாலைகள் புலிகளின் தளங்களாக்கப்பட்டது.
1400 க்கும் மேற்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவனங்கள் மாக்கப்பட்டுள்ளன.தரைமட்ட
15000 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் சுடுகாடாகியுள்ளன.
பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் சூரையாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
இவற்றைப் பேராதனைப் பல்கலைக்கழக முது நிலை விரியுவுரையாளரும் முஸ்லிம் சமூக ஆய்வாளருமான கலாநிதி எஸ்.ஹெச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு புள்ளி விபரத்தில் பின்வருமாறு தருகின்றார்கள்.
விபரமும் தொகையும் பின்வருமாறு:
1. குடும்ப ரீதியான இழப்புகள் 5408 மில்லியன்.
2. நிறுவன ரீதியான இழப்புகள் 2107 மில்லியன்
3. சமய ரீதியான நிறுவன இழப்புகள் 640 மில்லியன்
4. விவசாயக்காணி ரீதியான இழப்புகள் 180 மில்லியன்
மொத்த இழப்புக்கள் 8335 மில்லியன்
வாகனங்கள்இ கால்நடைகள் தனியார் நிறுவனங்கள் போன்ற பலவற்றின் இழப்புக்களையும் உள்ளடக்கி நோக்கும் போது
10,000 மில்லியன் ரூபாய்களையும் விட அதிகமாகும்.
இத்தோடு கல்வி கலாசார பண்பாட்டு ரீதியில் இந்தச் சமுதாயம் பின்னடவை சந்தித்துள்ளது வேதனைக்குரிய விடயமாகும்.
புத்தள மாவட்டத்தில் அகதி முகாம்களிலுள்ள
05-19 வரையிலான 14905 சிறார்களில் 11924 பேர் பாடசாலை சென்று கல்வியைத் தொடர வசதியின்மையாயுள்ளனர்.
உண்மையில் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் போது இருந்த நிலையும் இப்போதுள்ள நிலையும் பாரிய வேறுபாடுடையது.
இவர்கள் வெளியேற்றப்படும் போது இலங்கை நாட்டில் ஒரு தேசிய இராணுவம் ஓர் அரசாங்கள் இருந்தும் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சர்வதேசிய செல்வாக்கும் இராஜ தந்திரமும் இருந்தும் அநாதரவான ஒரு சிறுபான்மை சமூகம் ஒட்டு மொத்தமாக துடைத்தெறியப்பட்டபோது குருட்டுக் கண் பார்வையுடன் இருந்தது.
இங்குள்ள கட்சி அரசியல் சதுரங்கத்தில் வெல்லும் அனைவரும் இதில் ஒரே மாதிரியான போக்கையே கைக்கொள்கின்றனர்.
மனித உரிமைக்காகவும் கொடூர உயிர் கொல்லி வன விலங்குகளுக்காகவும் மாநாடு கூட்டி ஜீவகாருண்யம் பேசக் கூடிய ஐ.நா.வும் அதன் அங்த்தவர்களும் சர்வதேச அமைப்புகளின் கூறுகளான ஐ.சி.ஆர்.சி யு.என்.எச்.சி.ஆர் போன்ற அமைப்புகளும் தொடர்ந்தும் அகதிகள் விடயத்தில் மவ்னம் சாதிக்கின்றன.
இவற்றை நோக்கும்போது இலங்கை வட மாகாண அகதி முஸ்லிம்கள பற்றிய தேசிய – சர்வ தேசிய கண்ணோக்கானது இதுவரை இம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கான சரியான நடவடிக்கையாக இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பது புலனாகிறது.
எனவே இச்சமுதாயத்தின் கடந்த பத்தொன்பது ஆண்டு கால 'அவலமிக்க அகதி முகாம் வாழ்க்கை' அனுபவம் மிகவும் பார தூரமான பாதிப்புக்களைத் தந்த கால கட்டமாக இருக்கின்றமையால் அப்பாதிப்பின் தாத்பரியம் எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்த இருக்கின்ற பல்வகை இழப்புகளை மனசாட்சியின் முன் நிறுத்தி மிக நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து இவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தார்மீகக் கடமையாகும்.
1990 அக்டோபர் மாதம் வட புலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு; மீண்டும் தமது சொந்தத் தாய் மண்ணில் அமைதியாக வாழ்வதாகும்.
வடபுலத்தில் வாழ்ந்த சிறுபான்மையினமாகிய தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்த போது இறுக்கமாக மௌனஞ் சாதித்த ஈழத் தமிழினமும் இந்து அமைப்புகளும் ஏனையவர்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்த வரலாற்றுக் கறையைத் துடைப்பதற்கும் வடக்கு முஸ்லிம்களை மீளகுடியேற்றுவதற்கும் இனியேனும் முயற்சிக்க வேண்டும்.
அத்தோடு தேசிய சர்வ தேசிய சமூகம் குறிப்பாக பலவந்த வெளியேற்றத்தையும் அதனால் ஏற்பட்ட கல்வி கலாச்சார பொருளாதார ஒழுக்கப் பண்பாட்டுப் பின்னடைவுகளையும் இழப்புகளையும் நிச்சியம் மீண்டும் பெற்றுக் கொடுக்க ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும் என்ற தார்மீகக் கடமையை வடக்கு முஸ்லிம்கள ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இலங்கை தாயகத்தில் மீண்டும் குடியமர்த்த அழுத்தம் கொடுக்கவேண்டும் என இம்மக்கள் வேண்டுகின்றனர்.
தற்போது எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையிலும் அவர்களின் மீள்குடியேற்றக் கனவு இதுவரை கனவாகவே தொடர்கிறது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக எம்.பி.க்கள் குழு வன்னிக்குச் சென்று இந்து கிறிஸ்தவ அகதி முகாம்களைப் பார்வையிட்டது.
எனினும் வடமாகாண முஸ்லிம் அகதிகள் வசிக்கும் புத்தளப் பிரதேச முகாம்களுக்கு வருகைதரவில்லை. அவர்களது அறிக்கையிலும் இவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது இவர்களின் பக்கச் சார்பு நிலையைப் புலப்படுத்துகிறது.
இன்றும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழனுக்காக முஸ்லிம்கள் மற்றும் பலர் உதவி செய்கின்றனர்.இவ்வாறுதான் வடக்கில் முஸ்லிம்கள் வாழும் போதும் கோடிக்கணக்கில் உதவி செய்து வந்தனர். ஆனால் இறுதி விளைவு! சொந்த மண்ணில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதுதான் மீதி.
முஸ்லிம்கள் எவ்வளவு உதவி செய்தாலும் பயங்கரவாதிகள் நன்றி கெட்டவர்கள் என்பதை அழிக்கப்படும் வரை புலிகள் நிரூபித்துக்கொண்டே இருந்தனர்.
THANKS TO SOURCE: http://rasminmisc.blogspot.com/2010/04/blog-post_26.html
புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும் . எஸ்.எம்.எம்.பஷீர்.
“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை செய்வாரடி! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.” (சுப்ரமணிய பாரதியார்)
அண்மையில் நான் பிரான்சில் இருந்து இயங்கும் பிரபல வானொலி ஒன்றில் அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டபோது, என்னிடம் விடுக்கப்பட்ட கேள்வி ஐரோப்பாவில் புலிகளினால் முடுக்கிவிடப்பட்டிருக்கும் முஸ்லிம் விரோத விசமப்பிரசாரம் பற்றியது.
கிழக்கிலே இருந்து ஐரோப்பாவிலே குடியேறி புலிகளுக்காக பரப்புரை செய்யும் ஒரு புலியின் ஒலி(ளி)பரப்பாளர் ஒருவர் தமது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிழக்கிலே மீண்டும் பொருளாதார சமூக செயற்பாடு ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் திடமாகவும் தீர்க்கமாகவும் கட்டி எழுப்பப்படும் இன சௌஜன்யத்தை, சீர் குலைக்க, தமிழ் மக்களை முஸ்லிம் மக்களின் மீது பகைமை கொள்ளச்செய்ய பகீரத் பிரயத்தனம் செய்வதாகவும்,
அவர் ஒரு நிகழ்வொன்றில் முஸ்லிம்களின் மீது புலிகள் நடத்திய இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்ப்பிற்கும் காரணம் கண்டுபிடித்து நியாயம் கற்பிக்க முனைவதாக நான் அந்நபர் பற்றி முன்னரே அறிந்திருந்தேன்,
எனவே அத்தகைய விசமப்பிரச்சாரங்களை குறித்து கேள்வி எழுப்பிய நண்பரிடம் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் குறித்து, புலிகளின் வரலாறு எழுதிய புலி உறுப்பினரின் பதிவு ஒன்றினை விரைவில் வெளியிடுவேன் என்று குறிப்பிடிருந்தேன்; அவ்வண்ணம் இங்கு புலிகளின் வரலாற்று ஏட்டில் ஒரு பக்கத்தினை சான்றாக வைக்க விரும்புகிறேன்.
இதன் மூலம் புலிகளின் வலையில் விழுந்து மாண்டு போன ஒரு முஸ்லிம் புலியின் சரிதை மட்டுமல்ல இது; முஸ்லிம்கள் அன்று புலிகளுக்கு வழங்கிய உதவியையும் ஒத்தாசையையும் புலிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதுடன் பின்னர் முஸ்லிம் விரோதகொள்கையை கைக்கொண்டு மிலேச்சதனமாக முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினர் என்ற கேளவிக்கு இன்றைய பின்னணியில் பரிசீலிப்பதறகும் , பதில் சொல்வதற்கும் உதவும்; இது குறித்து கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே இதனை பிரசுரிப்பதன் நோக்கமுமாகும்.
அண்மையில் இலங்கையில் முன்னாள் எம் பியும், பிரபல முஸ்லிம் சட்டத்தரணி தனது ஆங்கில கட்டுரையொன்றில் அக்கரைப்பற்றை சேர்ந்த அட்வொகேட் ஹாசிம் (Advocate Cassim ) என்பவரது மகனை புலிகள் அக்கரைப்பற்று பகுதி தலைவராக (Area leader) நியமித்ததை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் அவர் தன்னை வெறுதததாகவும் அவரால் அதை (தனது மகன் புலிகளில் சேருவதை) தடுப்பதற்கு எதுவும் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.இனி புலிகளின் பதிவேட்டைப் பார்ப்போம்
அக்கரையூர் தந்த அல்லி கப்டன் பாறூக் அகமது லெவ்வை முஹம்மது ஹனிபா, அக்கரைப்பற்று -06 அம்பாறை. வீரஉயிர்ப்பு 06.12.1959. வீரச்சாவு 07.01.1987
தென்னை இளநீரும் தேங்கியோடும் வாய்க்காலின் அருகில் வளர்ந்திருக்கும் நாணல் பற்றைகளில் கூடுகட்டிவாழும் வயலான், தேனோடு பாலும், தெவிட்டாத அழகும; கலையோடு பின்னிப்பிணைந்து மாறாத வீரமும் கானான், கொக்குக் குருவிகள் ஒலிக்கும் ஒலியோடு சேர்ந்து இனியகானமாக தினம் ஒலித்து மெய்சிலிர்க்க வைக்கும் கவிகளும் வயல்களில் இருந்து பாட்டமாய் பறந்துவரும் வயல் குருவிகளை களிமண் உருண்டை கொண்டு கவிக்கு இசை சேர்க்குமாப்போல் கலைக்கும் ஆடவர்களும் அந்த அக்கறைப்பற்று வயலுக்கும், நகருக்கும் தனியழகைத் தரும்.
சுற்றி வளைக்க விரும்பாமல் சுருக்கமாகச் சொல்லப்போனால் விடுதலை வேண்டிப் புறப்பட்டு இருந்த இடம் தெரியாமல் தமிழீழத்திலிருந்து சிதறிப்போன விடுதலை இயக்கங்கள் முப்பத்தெட்டு என்றாலும் அக்கரைப்பற்று மண்ணில் மிக ஆழமாக முளைத்ததில் வியப்பில்லையல்லவா.
நீண்டுயர்ந்து நிற்கும் பெரியதொரு ஆலமரம். அதில் பல விழுதுகள் அங்கே ஒரு விழுதுதான் இந்த முகமது கனிபாவை 06.12.1959 தனில் ஈன்றெடுத்த அகம்மது லெவ்வை எனும் பெரு விருட்சம்.வாணிபத்தால் மட்டுமல்லஇ கமத்தொழிலிலும் சிறந்து விளங்கிய தனிப்பெரும் குடும்பம் இது.
1985ம் ஆண்டு இறுதிமாதப் பகுதியில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்துகளை மக்கள் மனங்களில் விதைப்பதற்காக அம்பாறை மாவட்ட அரசியல் வேலைக்கென்று தேசியத் தலைவர் அவர்களால் யாழ் மண்ணிலிருந்து தென் தமிழீழ மண்ணுக்கு அனுப்பட்டவர்தான் மேஜர் டயஸ்.
“தங்கத் தமிழீழத் தானைத் தலைவனின்” கருத்துகளை மிக உன்னிப்பாக கேட்ட மேஜர் டயஸ் அப்படியே அம்பாறை வாழ் தமிழ் பேசும் இளைஞர்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு பற்றிய கருத்துக்ககளை மிக ஆழமாக விதைத்தான்.
முத்தமிழை மிக முதன்மையாகப் பேசியும் அதற்கு விழாவெடுத்தும், கவி, கதைகள் அடங்கிய நூல்கள் பலதை வெளியிடுவதிலும் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்த அந்த அக்கரைப்பற்று மண்ணிலிருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்ட முஸ்லிம் புலிவீரர்கள் பலர். அதில் முதன்மையானவன்தான் இந்த முகம்மது கனிபா.
ஏனென்றால் இவரது சகோதரன் விடுதலைப் புலிகளில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டதன் பின் தானும் இயக்கத்தில் இனைந்து தனது சகோதரனின் பெயரையே தனக்கு வைக்க வேண்டும் என்று கூறி அதன்படியே செயற்பட்டு வந்தவன் இந்த கனிபா என்னும் பாறுக்
மாண்பில் முஸ்லிம் என்றாலும் மேஜர் டயசின் கனல் கக்கும் கருத்துகளைக் கேட்டு இந்த கதாநாயகன் மேஜர் டயஸ், மேஜர் அன்ரனி, கப்டன் டேவிட் ஐயா, நியூட்டன்,கப்டன் நகுலன் இன்னும் பல விடுதலை வீரர்கள் தனது உம்மா வாப்பா உறவினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து இன்னமுதூட்டிப் பொருளுதவிகளும் தன் வாப்பாவால் உதவச் செய்த இஸ்லாமியத் தமிழனிவன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கொப்ப இந்த கப்டன் பாறுக்கின் குணாதிசையங்களை நன்கு புரி;ந்துகொண்ட விடுதலைப் புலிவீரர்கள் இவன் தம்பியின் பெயரான பாறுக் எனப் பெயரிட்டனர்.
அதுஇ அம்பாறை கஞ்சிகுடிச்சாறு விடுதலைப் புலிவீரர்களின் பயிற்சிமுகாம், இருந்தாலும் சில புலிவீரர்கள் யாழ் மண்ணை நோக்க வேண்டியிருந்தது. பாறுக் படிப்பிலும் மிக கவனம் செலுத்தியவன். அக்கரைப்பற்று முஸ்லிம் மகாவித்தியாலயம் க.பொ.த.சாதாரணதரம் வரை படித்தவன; பரிச்சைக்காலவேளை இருந்தும் இவனது யணம் யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையில் இந்த பாறுக் புகுந்தான். சுருண்டிருக்கும் கொறுக்காய் போன்ற தலைமுடி, பூரண சந்திரனையும் மிஞ்சிவிடுமாப்போன்ற அழகிலும் அழகான வட்டமுகம் கரியவிழிகள், அரும்பு மீசை குறும்புப் பார்வை கம்பீரமான தோற்றம் எத்தனை அழகு எப்படிச் சொல்வது.பயிற்சி என்ன பாராட்டுகள்தான் அதிகம் சோர்வையே காட்டிக் கொள்ளாத சிவந்த மேனி அந்த ஏ.கே 47 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சிங்கநடைபோட்டுவரும் அழகைக் கண்டு லெப். கேணல் ராதா அவர்களே பாராட்டிய பைந்தமிழ் வேங்கையன்றோ.
இவனது வீரச் செய்தி கேட்டு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் தும்பக் கடலில் மூழ்கியது, ஆனாலும் வீரச்சாவுச் செய்தி மட்டக்களப்பு அம்பாறை மண்ணில் குறிப்பாக அக்கரைப்பற்றை எட்டியதும் கப்டன் டேவிட் ஐயாவால் வெளியிட்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று மதிற் சுவர்களை அலங்கரித்ததும் மாவிலைத் தோரணங்களும் வாழை மரங்களும் வீரப்புலிகளின் அரைக்கம்ப கொடிகளும் அக்கரைப்பற்றுவாழ் முஸ்லிம் மக்களின் கண்களைக் குளமாக்கத் தவறவில்லை.
உண்மைதான்! யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையை தன் விடாமுயற்சியினால் சிறப்பாகச் செய்து ஒன்பது மாத காலத்துக்குள் முடித்தவன். அன்று நடந்த சிறுசிறு தாக்குதல்களில் கலந்துகொண்டவன். பாறுக் ஒரு முஸ்லிம் இளைஞன் என்று சொல்லாது தன் குடும்ப உறவினன் என்றே அனைவரும் அழைத்தனர். அதைவிட மேலான அன்பையும், பாசத்தையும் அண்ணன் (தலைவர்) மீது பொழிந்தவன் அதனால் தேசியத் தலைவர் அம்பாறை மண்ணைப்பற்றியும் அங்கு போராட்ட நிகழ்வு பற்றியும் வழிமுறைகளைச் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்;டவன்.
யாழ் மண்ணில் தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்தாலும; மட்டு – அம்பாறையில் இருந்து போராடிய புலிவீரர்கள் இந்த வீரனின் இல்லம் செல்லத் தவறுவதில்லை. அப்படி தவறும் பட்சத்தில் தந்தை அகமது லெவ்வை புலிவீரர்கள் யாரையாவது அக்கரைப்பற்று நகரினுள் கண்டால் உடனே தன் இல்லம் அழைத்துச் சென்று அன்னமிட்டு பல உதவிகளையும் வழங்கி வழியனுப்பத் தவறுவதில்லை. அந்த பாசமழையில் நனைந்த புலிவீரர்கள் யாராக இருந்தாலும் வாப்பா உம்மா தங்கச்சி தம்பி போறன் வாறன் என்று சொல்லிப் புறப்படுவார்கள்
வந்து போய்ப் பழகிச் சென்ற வீரர்களின் வீரச்சாவுச் செய்தி கேட்டாலும் இந்த பைந்தமிழ் உரைக்கும் வாப்பா உம்மாக்களின் கண்களும் குளமாகும். பல களங்களைப் பல முனைகளில் இவன் யாழ் மண்ணில் கண்டாலும் தன் தாய் மண்ணில் காலூன்றி களங்காணப் பல முஸ்லிம் இளைஞர்கள் திரட்ட தங்கத் தலைவனிடம் கேட்டுப் பதில்வரும் நாளையும் பார்த்துக் கிடந்தான்.
07.01.1987ம் ஆண்டு காலை பத்து முப்பது மணிபோல் யாழ் கோட்டையில் குடிகொண்டிருந்த சிங்களக் கூலிப் பட்டாளங்கள் யாழ் மண்ணை அழிக்க படைகொண்டு வந்தனர். விடுதலைப் புலிவீரர்கள் எதிர்கொண்டனர். துப்பாக்கி ரவைகளும் எறிகணைகளும்தான் அன்று பொழிந்தது. புலிவீரர்கள் எதிர்த்தனர். எதிரிகளை அழித்தனர். அவன் போட்டுவந்த திட்டத்தினை முறியடித்தனர். பகைவன் கோட்டையை நோக்கி ஓடினான்.
வீறுகொண்ட வேங்கை கப்டன் பாறுக்கின் விரிந்த நெஞ்சிலிருந்து சுதந்திரம் தேடிய குருதி பெருக்கெடுத்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம” என்று அவனது நாவிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் கப்டன் பாறுக் என்றும் எங்கள் தானைத் தலைவனின் மனங்களில் வாழ்கிறான்.
( இவ்வாக்கத்தின் அம்சங்கள் குறித்து நான் “பொழிப்புரை” எழுத தேவையில்லை. இக்கட்டுரையினை வேறு இணையத்தளத்தில் அல்லது பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்பவர்கள் அல்லது மொழி பெயர்பவர்கள் தயவுசெய்து கட்டுரையின் மூலத்தை குறிப்பிடவும்-எஸ்.எம்.எம்.பஷீர். . )
–thenee - நவம்பர் 6, 2009 kattankudinet–
இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள். எஸ்.எம்.எம்.பஷீர்
1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு சந்தியில் நடைபெற்ற மீலாதுன்னபி விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது " இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்கள்.
சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.
இதே இளம்பருதிதான் யாழ்ப்பான முஸ்லிம்களை 24 மணித்தியால கெடுவில் வெளியேற்றியவர் என்பதையும் மறந்து சமாதான ஒப்பந்த்தததின் பின்னர் அங்கு குடியேறிய பத்து ஐம்பது முஸ்லிம்கள் 2003 மே மாதம் கொண்டாடிய நபி பிறந்த விழாவில் பெருந்தன்மையுடன் தங்களை துரத்தியவனையே சிறப்பு அதிதியாக கெளரவித்தனர்.
” புலி பசித்தாலும் புல்லைதின்னாது”. எனினும் , சாணக்கியனின் சாம பேத , தான, தண்ட அனுகுமுறைகளை கையாண்டேனும் புலியுடன் அனுசரித்து வாழவே முஸ்லிம்கள் எப்பொழுதும் வட கிழக்கிலே முனைப்பு காட்டி வந்திருகிறார்கள்.
ஆனால் என்ன புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.
எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்திஉள்ளர்கள்.
எந்த நபிகளாரை தானும் நேசிப்பதாக கூறி. எந்த “போரளியை” கொண்டு இன்னுமொரு மீலதுன்னபி விழாவில் தெற்கில் கொட்டபிடியவில் முஸ்லிம்களை இந்த மண்ணில்யிருந்து ” விடுதலை” செய்வதற்காக 17 ஆயிரத்தியொண்ணாவது கொலையாளியை அனுப்பீயிருக்கிறாய்.
அந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் உன்னை அழைத்தது போலன்றி, உன்னை சாரா விட்டால் தமது அரசியலை வட கிழ்க்கில் இடயூறின்றி செய்யமுடியாதென்றும், மாற்று முஸ்லிம் அரசியல் இயக்கங்கள், கட்சிகள் உனது அனுசரனையுடன் ஒரங்கட்ட, தனது ஏகபோக அரசியலை முஸ்லிம்களக்கு செய்ய , நோர்வேயின் பின்புலத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உன்னிடம் விருந்துண்டு ஒப்பந்தம் பண்ணி, அந்த மை காயமுன்னமே வாழைச்சேனையிலும் மூதூரிலும் முஸ்லிம்களின் “விடுதலைககாக” எத்தனை “இன்னுயிர்கள் நீத்தவர்கள் நீங்கள். யாழ்ப்பாண மையவாத ” விஞ்ஞானத்தின்” சிருஸ்டியான ” •ப்ரங்கெய்ஸ்டைன்” புலிகள் ” ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து , கடைசியில் மனிதனை கடித்த கதையாய் இப்போது தன்னை போசித்த முல்லைத்தீவு தமிழ் குடிமக்களையே பலிகொள்ள தொடங்கியிருக்கிற்து.
முஸ்லிம்களுக்கும் , சிங்களவர்களுக்கும் மட்டுமல்ல என்று தனது மக்களுக்கும் எதிரியாக புலிகள் உலகுக்கு புலப்பட்டுள்ளது.
இந்த சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் பாணியில் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என பிரகடனப்படுத்திக்கொண்டு தமது இனத்தினை ஏதோ புலிகள்தான் அங்கீகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஹக்கீம் புலிகளுடன் ஒப்பந்தம் செய்த பொழுது முஸ்லிம் தரப்பில் சென்றிருந்த முன்னாள் செனட்டரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான ஜனாப் மசூர் மௌலானா அவர்கள் நன்கு சமைத்த ஹலால் ஆட்டிறைச்சிக் கறியினை உண்டதன் பின்னர் பிரபாகரனிடம் தம்பி உங்களுடைய பிள்ளைகளினுடைய படிப்பு எப்படியென்று கேட்டுவைத்தார். அவரும் பதிலுக்கு தனது பிள்களகனின் சிறந்த பெறுபேறுகளை சொல்லிவைத்தார்.
ஆனால் 1990 ம் ஆண்டு 12 வயதிற்கும் குறைந்த பாலகர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருந்த வேளையிலும் ஏறாவுரில், அழிஞ்சிப்பத்தானையில், படுக்கையிலும், தாயின் முலையைச் சப்பிய மழலையையும், கற்பிணியின் வயிற்றில் ஜனித்திருந்த குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம் நிட்சயமாக கேட்கவேண்டிய கேள்விதான் அது!,
இந்த ஒப்பந்தத்தின் பின்னர்தான் ஹக்கீம் “வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் அதிகாரம் பெற்ற ஒரு தனித்துவ இனம் என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை என்னுடன் எழுத்து வடிவில் உடன்பாட்டைச் செய்திருக்கின்றது.” என்று குதூகலித்ததன் பின்னர்தான் மூதூரிலும், வாழைச்சேனையில் திருமணத்தில் ஆட்டிறைச்சி சமைக்கப்போனவர்களை ரயர்போட்டு எரித்ததும் அந்த தமிழ் மணமகள் லண்டன் வந்தபோது எங்களிடம் கண்ணீர்விட்டு சொன்னதையும் கறுத்தப் பாலத்திற்கு அப்பால் செல்லமுற்பட்ட ஏறாவூர் விவசாயிகளை தடுத்து ஹக்கீமிடம் போய்ப்பாருங்கள் என்று பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் தமது காணிகளை காணச் சென்றோரை தடுத்து நிறுத்தியதுமென இன்னோரன்ன சம்பவங்கள் இடம்பெற்றன.
புலிகள் முஸ்லிம்களின் அரசியல்வாதிகளை மட்டுமல்ல சிவில் சமூகத்தினரையும் தங்களது ஆதிக்க மேலாண்மையை அரசியல் சாணக்கியத்துடனும் கையாள முற்பட்டட பொழுதெல்லாம் முஸ்லிம்கள் துரதிஸ்டவசமாக பலியாகியிருக்கின்றார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் செல்வனை கரடியனாற்றில் ஜம்மியத்துள் உலமாவின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் சந்தித்த பொழுது அவர் “நபிகளாரின் புனிதக் குர் ஆனிலிருந்து உண்மை, நேர்மை, நீதி இறுதியாக வெல்லும் ஆகவே தமிழர் சதந்திரப் போராட்டம் இம்மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறுதியில் வெல்லும் என்று” கூறியதை பறைசாற்றி புலிகளின் சமாதானச் செயலக அறிக்கை புளகாங்கிதம் அடைந்திருந்தது..
இதில் உண்மை நிலையினை அறிவதற்காய் நான் முயன்றபொழுது எனது விசாரணைகள் அதனை உறுதிப்படுத்தின. எனது விசனமும் அதிகரித்தது.
இன்னுமொரு சம்பவமாக மௌலவி சுஹைர் என்பவர் யாழ்ப்பாணத்திலே புலிகளின் பொங்கு தமிழ் மேடைகளை அலங்கரித்திருந்தார்.. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிமாயிருப்பினும் புலிகளினையும் அவர்களது (போராட்டங்களையும்) போற்றிப் புகழ்ந்ததுடன் புலிகனின் புனிதப் போராளிகளின் கல்லறைகளில் முஸ்லிம் புனிதப் போராளிகள் அடக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இஸ்லாமிய மதத்தின் புனிதப் போராளி கருத்தியலினையும் சிந்தை இழந்து சிதைக்கமுற்பட்டார்.
துரதிஸ்டவசமாக புலிகளின் இராணுவ பலம் முஸ்லிம்களின் அரசியல், சிவில் சமூகத்தின் வீரியத்தினை சிதைவடையச் செய்தது. ஒருபுறம் இது விசனத்திற்குரியது மட்டுமல்ல சிலவேளை இஸ்லாமிய அடிப்படை மத நம்பிக்கைக்கும் குந்தகமாக அமைந்துள்ளது.
அத்தகைய நிலைப்பாடுகள் இறந்தகால நிகழ்வுகளாகவே இருக்கட்டும் என்பதுவே வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடாக இருக்கவேண்டும்
பள்ளிவாசல்மீதான புலிகளின் தாக்குதலுக்கு மே மாதம் 14 ந் திகதி 1998 ம் ஆண்டு அக்கரைப்பற்று மஸ்ஸிதுல் ஹதா பள்ளிவாசலில் பதுருதீன் என்னும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பள்ளிவாசலில் வைத்த சுட்டதும் மேலும் மூவரை கைக்குண்டு எறிந்து காயப்படுத்தியதும் புலிகள் பள்ளிவாசல்கள் ஏனைய வணக்கஸ்தலங்கள்மீதான தாக்குதல்களை நடாத்தி எத்தகைய விளைவுகளை திட்டமிட்டு செயற்ப்டுத்தி;டிருக்கின்றார்கள் என்பதனை அடுத்த கட்டுரையில் தொடரவுள்ளோம். - Thenee, mahavali (March 2009)
THANKS TO SOURCE: http://www.bazeerlanka.com/2011/05/blog-post_25.html http://www.bazeerlanka.com/2011/04/blog-post_19.html
===========================
பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.
பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
0 comments:
Post a Comment