விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
>> Saturday, February 2, 2013
மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் கொதித்தெழுந்ததேன். ?
கருத்து சுதந்திரம் பற்றி பேச யோக்கியதைகள் என்ன?
நடிகை புவனேஸ்வரி: இவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் மேலும் பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சொல்லி லிஸ்டை கொடுத்தார் என தினமலர் படத்தோடு செய்தி வெளியிட்டது.
இதை எதிர்த்து நடிகைகளும், நடிகர் சங்கமும் என்று மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
Kollywood: Tamil actors vs Journalists
*******************************
நெலமை புரிஞ்சதா...
இந்த ஊர் சரியில்லாவிட்டால் நாட்டை விட்டே போறேன் என்று நேற்று கமல்ஹாசன் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்படியெல்லாம் போகக் கூடாது, இருந்து போராட வேண்டும் என்று அவருக்கு சன் டிவி இன்று காலை அட்வைஸ் கொடுத்தது
அவர் தயாரிப்பில் உருவான தேவர் மகன் பட வசனம் மூலமாக. தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் பேசும் ஒரு வசனம் ரொம்பப் பாப்புலரானது.
- -
நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து சிவாஜி கணேசன் உயிருடன் வந்து, இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பு என்று கமலுக்கு அட்வைஸ் செய்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது அந்த வசனத்தைக் கேட்டபோது.. அந்த வசனத்தைப் பாருங்களேன்...
-
கமல்: நல்லாவே புரியுது. நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாம்னு இருக்கேன்
சிவாஜி: ஊர விட்டுப் போறேன்னு சொல்றது கோழைத்தனம் இல்லை..?
ஊர...ஊர விட்டு போறீகளா??..நடந்ததுக்கு பரிகாரம் தேடாம..ஊர விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை??
கமல் :அதுக்காக....
சிவாஜி: அதுக்காக?
கமல்:மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!
சிவாஜி: போ...செத்துப்போ.. நான் தடுக்க முடியுமா?...
எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் .. இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை.
SOURCE: http://tamil.oneindia.in/movies/television/2013/01/sun-tv-s-timely-advice-kamal-168919.html#slide63248
3 comments:
சலாம் சகோ.வாஞ்சூர் அய்யா !
சரியான நேரத்தில் வரவேண்டிய பதிவு..! அதிலும் தேவர்மகன் வசனங்கள் அவருக்கே இப்போது எதிராக இருக்கிறது என்பது வேடிக்கையிலும் வேடிக்கை..! கமல் பன்முக கலைஞன் என்பது தற்போது அவர் வெளியிட்டு வரும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒவ்வொரு மாதிரி பேசுவதை தான் முன்பே சொல்லிவிட்டார்கள் போலும்..!!
அப்பறம் வீடியோவில் பார்க்க சிரமப்படுவோருக்காக அதை நம் முன்னோர்கள் எழுத்து வடிவிலும் தந்துள்ளனர்.. !! ஒவ்வொருவரும் என்ன பேசினார்கள் என்பதை படிக்க ....
நடிகர்-நடிகைகள் Vs. பத்திரிகையாளர்கள் - அமர்க்களமான சண்டைக் காட்சிகள்..!
http://truetamilans.blogspot.com/2009/10/vs.html
யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!
http://www.vinavu.com/2009/10/13/pimp-prostitute/
குறிப்பு : இதை விருப்பம் இல்லாமல் தான் தருகிறோம்..அத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாக்கி விட்டனர்..!!
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.
விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.
அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.
என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.
தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.
விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.
நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.
அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?
அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?
இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?
அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.
ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?
கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?
ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான்.
கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.
பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.
அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.
ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.
நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.
அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.
அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.
வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.
சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.
ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.
ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.
ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.
அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்?
நினைத்துப் பாருங்கள்.
ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.
விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.
ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன்,
நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.
மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது - சாரு நிவேதிதா
SOURCE: http://charuonline.com/blog/?p=167
“நீங்கள் குடியேறப்போகும் ஊர் மக்களுக்காவது குரல் கொடுப்பீர்களா கமல்?”
அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....
1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது !
இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ..
ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக ,கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது .
இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே ,
இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ?
அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?
ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ?
உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ ,மதன் ,s .v .சேகர் ,உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ?
இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?
எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே
கமல் ,ஹேராம் ,உன்னைப் போல் ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதைப்பேசின?
மதம் பேசாமல் எதை பேசின ?
ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?
அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ?
காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் !
தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர் ..நடிகர் !
இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து ,உலகில் எங்காவது நடக்குமா கமல்?
உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை ..
ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ?
உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் !
நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ?
நீங்கள் சிறந்த நடிகர்தான் ..
ஆனால் தமிழகத்திற்கு நன்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப் பாருங்கள்
இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்குக் கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ?
தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள் ...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ?
எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் !
போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !
அடுத்தப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல.
எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான்.
தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் !
நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!
என்றும் அன்புடன்,
தாகம் செங்குட்டுவன்
மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் .
SOURCE: http://www.tamilleader.in/Content.aspx?ArticleId=3303&CategoryId=3#.UQ9FTnydiSo
Post a Comment