இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது விஸ்வரூபம் படம்!
>> Saturday, February 2, 2013
விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்...
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.
இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.
மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/02/tamilnadu-kamal-attends-the-talks-with-islamic-leaders-169055.html
3 comments:
விஸ்வரூபத்திற்கு தமிழக அரசின் தடை மீட்கப்படும்.
இஸ்லாமியர்களின் போராட்டம் கைவிடப்படும்.
விஸ்வரூபம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
சர்ச்சைகுரிய சில வசனங்களின் ஒலி நீக்கவும் கமல் சம்மதம்.
கமலஹாசனுக்கும் எங்களுக்கும் தனிப்பட விரோதமில்லை என இஸ்லாமிய கூட்டணி கூறினார்கள்.
இது வரும் காலன்கலில் தொடர குடாது
சர்ச்சைக்குரிய இப்படத்திலிருந்து 15 காட்சிகளை நீக்கவேண்டும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையின் போது முன்வைத்தனர்.
ஆனால் சில தொழில்நுட்ப கோளாறால் அனைத்தையும் நீக்க முடியாது என்று கூறிய கமலஹாசன் 7 காட்சிகளை நீக்கவும்,
சில இடங்களில் வசனங்களின் ஒலியை நீக்கவும் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உள்துறைச்செயலர் முன்னிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் கமலஹாசனிடையே எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறும்போது;
“விஸ்வரூபம் படத்தின் துவக்கக் காட்சியில் ‘இது உண்மைத் தொகுப்பு’ என்று இருந்தது.
அதை மாற்றக் கோரினோம்.
அதன்படி ‘இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே’ என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
படத்தில் 15 காட்சிகளை நீக்கக் கோரினோம்;
அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டோம்.” என்றனர்.
http://www.thoothuonline.com
Post a Comment