**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.

>> Friday, February 15, 2013

விஷ்வரூபத்திற்காக கருத்து சுதந்திரத்தை முழங்கிய குஷ்பு. இப்போது முழுங்குவதேன் கருத்து சுதந்திரத்தை ? 

அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம்.


“குஷ்பு இன்னொரு மணியம்மை?- கருணாநிதி பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரை- ஆபீஸுக்கு பாதுகாப்பு!

சென்னை: "குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மணியம்மையார் யார்? தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த்தார். அவரே மணியம்மையார் என அழைக்கப்பட்டார்.

பின்னர் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார். பெரியார்- மணியம்மை திருமணத்தை ஆதரிக்காத பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை' 1949-ம் ஆண்டு தொடங்கினர்.

திமுக தொடங்கும்போது பல மூத்த திமுக தலைவர்களில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையாரே திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் திராவிடர் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அண்மையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் இல்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்து கல்லடி வாங்க நேரிட்டது.

திருச்சியில் அப்போதே குஷ்புவிடம் ‘கோபாலபுரம் வீட்டுக்கு வரக் கூடாது என்று உங்களை சொல்லியிருக்கிறார்களாமே?" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார். ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார்? அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை?' என்று கேள்விக்குறியோடு வெளியிட்டிருக்கிறது.

பெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.க. கடும் கண்டனம்: குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த கட்டுரைக்கு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலையில் கடும் கண்டனம் தெரிவித்து பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அக்கட்டுரையின் சாரம்சம்: இந்த வார 'குமுதம் ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில், "கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?" என்றும் தலைப்பிட்டுள்ளது.

உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க.- அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும். வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர்- அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.

பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார்- நினைவில் இருக்கட்டும்!

அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை!

அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர்- பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?.

"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார். (விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்?- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி, பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்?

அவர்களின் உயர் பண்பு- பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம்- கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

பெரியார் தொலை நோக்கோடு செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.

தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை- வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தியோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது. அறிவு நாணயம் இருந்தால், பண்பாடு பற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக! என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.

விடாது கருப்பு போல குஷ்பு விவகாரம்..!

 Posted by: Chakra Published: Friday, February 15, 2013, 18:05 [IST]

 THANKS TO SOURCE : http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-kumudam-faces-trouble-kushboo-is-another-maniyammai-169879.html

அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

சென்னை: தன்னைப் பற்றி மோசமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் பதில் கூறி வருகிறார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட கருத்தில் "அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானது. இதன் தொடர்ச்சியாக குஷ்புவின் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார்.

குஷ்புவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வைத்தார் கருணாநிதி. இதன் பின்னர் அந்த செய்தி அமைதியானது.

ஆனாலும் இந்த விசயத்தை பெரிது படுத்தி சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதனால் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் இன்னும் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை பற்றி அமைதிகாத்த குஷ்பு, தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்.

"இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.

"அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்" என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமாக பதிலளித்து வருகிறார்.

"இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?" என்று விளாசியிருக்கிறார்.

மிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று டுவிட்டரில் இப்படி போட்டு தாக்கியுள்ளார். எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும் Posted by: Mayura Akilan Published: Friday, February 15, 2013, 12:22 [IST] THANKS TO SOURCE : http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-kushboo-fumes-twitter-169845.html

2 comments:

UNMAIKAL February 15, 2013 at 10:53 PM  

.
.
CLICK TO
>>>>>
யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!
READ
.
.

Barari February 16, 2013 at 10:25 PM  

கருத்து (கடுப்பு ) சுதந்திரம்.எழுத்து சுதந்திரங்கள் கொடிகட்டி பறக்கிறது பூனை குட்டிகள் வெளி வந்து விட்டது.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP