**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

>> Tuesday, January 3, 2012

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்
Filed under: — kizhakkan @ 9:13 மு.பகல்



புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?”
தாய்க்குருவி சிரித்தது……

‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’
என்றது தாய்.

தாய்க்குருவி சொன்னது:-
‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’
-ஈழத்து கவிஞர் காசியானந்தனின் கதை இது-
(புலிகளின் ஆத்மார்த்த கவிஞரும் இவரே ! இவரை கிழக்கின் பிறந்த ஒரு கவிஞராக மட்டுமே பார்க்கிறேன்)





அன்மைய புலம்பெயர் ஈழத்தவர் போராடங்களிலும் இந்திய தமிழர் போராடங்களிலும் கையாளப்படும் ஒரு வாசகம் இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு என்பதாகும் புலிகளின் ஆதரவாளர்கள் பெரிதும் இந்த வாசகத்தை கையாள்வதை பார்க்கும் போது காசி அண்ணாவின் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றன

“வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”

எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..!

அன்மையில் தமிழ் உணர்வாளர் சீமான் தமிழ் நாட்டில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் நாடாத்தும் போராட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தரவில்லை என சாடியதோடு “முஸ்லீம்களை கொலை செய்தவன் கருணா அவனை தலைவர் விசாரைனைக்கு அழைத்தபோது சிங்களனோடுபோய் ஒட்டிக்கொண்டான்.! எங்கள் அண்ணனிடம்(பிரபாகரணிடம்) இம்ரான் பாண்டியன் என படையனியே உண்டுடா” என்று தனது கண்டுபிடிப்பை உணர்ச்சிவசப்படச் சொன்னார்

ஆகவே பாதிக்கப்பட்ட கிழக்கில் பிறந்த இஸ்லாமியர்கள் உலகங்கும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்..!
புலிகளின் தங்களுக்குள் வாழ்ந்த சொந்த இனத்தின் மீதான இனச் சுத்திகரிப்பையும் அது முழுமையாக வெற்றியளித்ததா என்பதை ஆய்வதே எனது நோக்கம்.

அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர் போராட்டம் மிகப் புனிதாமான தமிழ் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஏகபோக உரிமத்தை தனதாக அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

அப்படி வடக்கு-கிழக்குவாழ் சகோதர மக்கள் மீது புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் அதன் பாதிபுகள் என்ன என்பதையும் சுருக்கமாகத் தருகின்றேன்.

1987ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டன


இது குறித்து அண்மையில் யாழ்பாணத்தில் வாழ்ந்த யஹ்யா வாஸித் என்ற சகோதரர் இவ்வாறு எழுதியிருந்தார்.

“இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .

வாப்பா சொல்கின்றார் “மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்”. யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!

“எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்”. “திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி”………………………………………..”

அத்துடன் சாவகச்சேரி, கிளிநோச்சி, மன்னார் முஸ்லீம்கள் என அனைவரும் வட மாகாணத்தை விட்டு முற்றாக 1990 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர்.

இவ்வாறு மொத்தம் 75,000 முஸ்லீம்கள் எந்த நாதியுமற்றவர்களாக எதையும் செய்ய துப்பற்றவர்களாக அமைதியாக வெளியேறினார்கள்

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றிவளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை


• 1985 ம் ஆண்டு மட்டகளப்பில் அமைந்திருந்த உன்னிச்சை என்ற கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளுடன் சேர்ந்த செயற்பட்ட ஆயுத குழுக்களினால் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.

1983 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் சிங்கள காடையர்களால் தமிழ்பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அது எப்படி உலகெங்குமுள்ள தமிழர்களால் கருப்பு ஜுலையென நினைவு கூறப்படுகிறதோ அதேபோல் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் கிழக்குவாழ் முஸ்லீம்களின் கருப்பு ஆகஸ்டாக நினைவுகூறப்படுகிறது.


• 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் கிழக்கின் அக்கரைப்பற்று கிராமத்தில் 40 முஸ்லீம் தொழிலாளிகள் பின்னால் கைகளைக் கட்டி பின்தலையில் புலிகளால் சுடப்பட்டார்கள்.

• இரண்டாம்,மூன்றாம் திகதிகளில் மதவாச்சி மஜீட்புரத்தில் 15 மூஸ்லீம்கள் புலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார்கள்.

• மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பள்ளிவாயலுக்குள் புகுந்த புலிகள் துப்பாக்கிச்சுடு நடத்தி 103 பேரைக் சுட்டுக் கொன்றனர்

• இதில் 25 பேர் சிறுவர்கள் அத்துடன் அதே நேரம் மற்றோரு பள்ளிவாயலான ஹுசைனியா தைக்காவில் இரவுத்தொழுகையில் இருந்த மக்களை கைக் குண்டு வீசிக் கொன்றனர் இதில் 37 முஸ்லீம்கள் தொழுது கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர்.


காத்தான்குடி ஏறாவூர் இனச் சுத்திகரிப்பானது புலிகளின் தலைவரின் ஆலோசனையின் பெயரில் புலிகளின் உளவுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் நெறிப்படுத்தலில் அப்போதைய புலிகளின் கிழக்குப் தளபதிகளான ரஞ்சித், நியூட்டன், கரிகாலன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

கரிகாலன் என்பவர் கிழக்கின் களஞவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என்பதும் இவர் முஸ்லீம்களால் நன்றாக முஸ்லீம்களுக்கு எதிரி என அப்போது அறியப்பட்டவருமாவார்.

இது தோடர்பான விபரங்கள் Philp Reesயின் Dining with the terrorists என்ற நூலின் ஒரு பந்தியின் கானப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக புலிகளின் உறுப்பினர் சீதா என்பவர் கூறுகையில் “தான் பள்ளிவாயலுக்குள் புகுந்து முப்பத்தி மூன்று தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.

இந்த சீதா மட்டகளப்பு கோட்டமுனையைச் சேர்ந்தவர் இவர் அதன் பின் இந்திய அமைதிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஐரோப்பா தப்பிச் சென்றுவிட்டார்.


• ஒன்பதாம் திகதி புலிகளால் சியம்பலாகஸ்கந்தயில் வசித்த முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் புகுந்த போது இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கவே மக்களை விட்டுவிட்டு புலிகள் தப்பிச் சென்றனர்.

• பதினெட்டாம் திகதி கிழக்கில் ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர்

• இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர்.

• இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா?

எந்த சர்வதேச யுத்த விதியில் ஆயுதம் எந்தாத அப்பாவி மக்களை கொல்வது அனுமதிக்கப் பட்டுள்ளதன நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்!

• பதினாலாம் திகதி ஜூலை மாதம் கிழக்கில் உள்ள ஒன்தாச்சிமடம் என்ற இடத்தில் வைத்து புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்.

• பத்தொன்பதாம் திகதி ஜுலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் இருந்து காத்தான்குடிநோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை அம்பலாந்துரை என்ற இடத்தில் வைத்து கடத்தி அதில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் ஆண் பெண்கள் அனைவரையும் தேனீரில் சைனட்டைக் கலந்து குடிக்குமாறு கொடுத்து புலிகள் கொலை செய்தனர்

• இதில் அவ்வருடம் ஹஜ் கடமையை நிறவேற்றித் திரும்பிய ஹாஜிகள், பெண்கள், குழந்தைகள் அடக்கம்


• மற்றும் இதே காலப்பகுதியில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு வேண்டிக் கொண்டதும் அதற்கு மறுத்த மக்கள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் அந்த மக்களுக்கான போக்குவரத்தை தடைசெய்ததன் மூலம் பல நாட்கள் பட்டினியில் வாடவிட்டதுடன் ஊர்களை விட்டு வெளியேசெல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்வதானால் ! 1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கிழக்கிலுள்ள முஸ்லீம்கள் முழுவீச்சில் புலிகளால் தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேற வேண்டும் என்பதற்காக தாக்கப்பட்டார்கள் எனலாம்.

• கிழக்கிலுள்ள சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் உற்கார்ந்திருந்த மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது இதில் 05பேர் கொல்லப்பட்டு 03பேர் காயமந்தனர் இது 23ம் திகதி ஜுன் மாதம்
அதே மாதம் 29ம் திகதி ஓட்டமாவயில் ஆறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் இதில் ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜிதின் தலைமை நம்பிக்கை பொறுப்பாளரும் அடக்கம்

இரண்டாம் திகதி ஜுலை மாதம் அக்கரைப்பற்றில் பதினான்கு இஸ்லாமிய விபசாயிகள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்

12ம் திகதி ஆகஸட் மாதம் நெற்காணிகளில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லீம் விபசாயிகள் நால்வர் சம்மாந்துரையில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஆகஸ்ட் மாதம் இன்னும் எட்டு முஸ்லீம்கள் அக்கரைப்பற்று டவுனில் வைத்து புலிகளால் சுடப்பட்டனர்.

இவ்வாறு புலிகளின் இன சுத்திகரிப்பு பற்றி எழுதிக் கொண்டே போகலாம்….

• ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் வசித்துவந்த 69 மூஸ்லீம் மக்களை கொலை செய்யப்பட்டனர்.

• 15ம் திகதி ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையின் எல்லைக் கிராமங்களான பள்ளியகோடல, அக்பர் புரம், அகமட் புரம், பங்குரான ஆகிய கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளான மூஸ்லீம் மக்கள் 187 பேரைக் கொலைசெய்தனர் இதில் கற்பினித் தாய்மார்கள் உள்ளடக்கம்.

இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அவுஸ்ரேலியாவில் வெளிவரும் முஸ்லீம் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை தனது முதல் பக்கத்தில் 30திகதி ஒக்டோபர் மாதம் 1992 ஆண்டு பிரசுரித்தது.

• மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லீம்களின் பூர்விகச் சொத்தான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டதும் வழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை மற்றும் பல ஊர்களில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டதும்.

இவ்வாறு பல வழிகளில் தன்னுடன் சகோதரர்களாக வாழும் சக மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முனைந்து வடக்கைபோல கிழக்கையும் கைப்பற்ற புலிகள் பிராயத்தனம் எடுத்தனர்

அது தோல்வியை தழுவிக் கொள்ளவே முஸ்லீம்களின் அரசியல் எழுச்சியை தடுக்க தங்களால் ஆன முழுப்பலத்தையும் பிரயோகித்தனர் ஆயுதப்போராட்டத்தில் நம்பிகையில்லாத இலங்கை முஸ்லீம்கள் மீதும் அவர்களின் அரசியல் தலைவர்கள் மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டனர்

இதில் பல தலைவர்களை, சமூக சேவையாளர்களை, சிந்தனை வாதிகளை முஸ்லீம்கள் இழந்தனர் இதில் முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்த்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவரும் இலங்கை முஸ்லீம்களின் தேசிய தலைவருமான மர்ஹும் ஏம்.எச்.எம். அஸ்ரப் அவர்ளின் இழப்பே.

அரசியல்துரை, கல்வித்துரை ரீதியாக முஸ்லீம்களின் வளர்சியையும் அகிம்சை வழியில் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை கௌரவமாக பெற்று முஸ்லீம்கள் முன்னேறுவதை புலிகளின் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தங்களின் ஏக பிரதிநிதி வாதம் சக தமிழ் பேசும் மக்களாள் ஏற்றுக் கொள்ளப் படாததையும் புலிகளின் தந்தோராபாய நகர்வுகள் பயமுறுத்தல்கள் தொடர் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அடிபணிய மறுத்தது புலித் தலைமை பீடத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது

எனவே முஸ்லீம் சமூகத்தின் தலைமையை ஒழிக்க முடிவெடுத்து காய்கள் புலிகளின் தலைமையால் நகர்தப்பட்டு இலங்கை முஸ்லீம்களின் தன்னிகரில்லா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்பாறை மாவட்டத்திற்கு ஹெலிக்கப்டர் மூலம் செல்லும் போது அவருடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் சென்ற தற்கொலையாளி மூலம் நடு வானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது.

இதன் மூலம் கிழக்கில் மிகப் பலமான முஸ்லீம் சமூகத்தை அடக்கி அடிபணிய வைக்க வேண்டும் என்பதுடன் உடற் பிறப்புக்களாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவையும் சீர் குலைத்து ஏக பிரதிநிதியாக மாற பிரபாகரன் பகல் கனவு கண்டார்.

பாரத பிரதமரின் கொலையை புலிகள் நேரடியாக ஏற்காதது போலவே இதையும் அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் அந்த தற்கொலையாளியை மாவீர்ர் அந்தஸ்து வழங்கி பின்னாலில் கௌரவித்ததன் மூலம் அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர்.

இது போல புலிகள் சக இன மக்கள் மீதும் தங்கள் இனத்தில் புலிகளை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் எழுதில் வடிக்க முடியாதவை
விரிவு கருதி அவற்றை நான் தொட வில்லை.

இன்னும் தாயகத்தில் வட கிழக்கு மண்னில் பூர்விகமாக வாழ்ந்த சிங்கள மக்கள் இப்போது எங்கே? அவர்களை புலிகள் ஏற்றுக் கொண்டு சமமாக வாழ சந்தர்பம் அளித்தார்களா? அல்லது இன சுத்திகரிப்பு செய்தார்களா?

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்த கிராமங்களான தாந்தாமலை,வெளிஓயா, பதவியா ஆகிய இடங்களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப் பட்டனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் கோனகல என்ற இடத்தில் வாழ்ந்த 52 சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் இதில் அதிகமாக மிகச் சிறிய வயதான குழந்தைகளும் அடங்குவர்.

கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் மிகவும் மோசமானது இரண்டாம் திகதி ஜுன் மாதம் 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுந்தலாவ எனும் இடத்தில் புத்த பிக்குகளாக பயின்று கொண்டிருந்த 7 முதல் 13 வயதையொத்த புத்த துறவி சிறார்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலாகும் இதில் 33 புத்த துறவி சிறார்கள் மற்றும் அவர்களின் குருவும் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.

1982 ஆண்டு ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த புலிகள் 1990 ஆண்டு காலப்பகுதியை சிறுபான்மையில் மற்தொரு தனிப்பட்ட கலாச்சார விழுமியங்களை கொண்ட இனமான முஸ்லீம் மக்களை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் ஈழ மண்ணிலிருந்து இன அழிப்புச்செய்து ஒழித்துவிடவே பெரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்

அத்துடன் ஈழத்தில் பரம்பரையாக வாழ்ந்துவந்த சிங்கள பாமர மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர் இதில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரளவு வெற்றியளித்தாலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் படுதோல்வியை அளித்தது மட்டுமல்லாது புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்ற புனிதமான இடத்துக்கு கொண்டு சென்றது என்பதே உண்மை.

இதற்குக் காரணம் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான போராட்ங்களை தங்களுக்குள் முன்னெடுத்து தங்கள் நிலையை உலக அரங்கிக்கு அமைதியாய் கொண்டு சென்றதாகும்.

இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?


சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…!
இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?

ஆகவே! புலிகளுக்கு ஆதரவாக் கோசம் போடாமல் யுத்ததிற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்களுக்காக் கோசம் போடுங்கள் நாங்களும் உங்களுடன் இருப்போம்!

புலி ஆதரவுக் கோசங்களை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை!
சீக்கியர்களின் பொற்கோயில் மீதான இந்திய இரானுவத்தின் தாக்குதலை சீக்கியர்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ .!

ஈழத்தில் இந்தியப் படையினரின் தாக்குதலை நீங்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ…!

இந்தியா! பிரதமர் ராஜிவ் காந்தி மீதான புலிகளின் தாக்குதலை எவ்வாறு மன்னிக்கவில்லையோ..!

அதே போன்றே……..! உலக வாழ் முஸ்லீம்களும் புலிகள் இலங்கை வாழ் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை மன்னிக்க மாட்டார்கள்…. என்பதுடன்

புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.


மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப்பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது – ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?” என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

‘மரங்கொத்தியால் அது முடியாது” என்றது கயிறு.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

கயிறு சொன்னது:-
‘நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை”
SOURCE: kizhakkan
வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்

****************************************


சொடுக்கி படிக்கவும்

******* ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 ********

புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.


9 comments:

UNMAIKAL January 3, 2012 at 1:46 PM  

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும்

பேசுவதைத் தடைசெய்பவனும்

தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும்

இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

.

பி.ஏ.ஷேக் தாவூத் January 3, 2012 at 1:48 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் வாஞ்சூர் அப்பா,
புலிகள் தவறுகள் செய்யாதவர்கள் என்று அவர்களுக்கு புனிதர்கள் பட்டம் சுமத்தும் அறிவிலிகள் இந்த தகவல்களை கண்டாவது மனம் திருந்த வேண்டும். கட்டுரையின் ஒவ்வொரு வரியும் சாட்டையடி கேள்விகளாய் நெஞ்சை துளைக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்களை படுகொலை செய்து முஸ்லிம் தலைமையை இல்லாமலாக்க எப்படியெல்லாம் திட்டம் தீட்டியிருக்கின்றனர் இந்த கேடு கெட்ட புலிகள். ஆனால் கடைசியில் இவர்களின் தலைவனே இல்லாமல் போய் விட்டான். மற்றவர்களை படுகொலை செய்து மகிழ்ந்த இந்த பயங்கரவாத புலிக் கூட்டம் கடைசியில் தம்மையே படுகொலைகளுக்கு உள்ளாக்கி கொண்டது. ஆனால் அப்பாவி இலங்கை தமிழ் மக்களையும் தம்மோடு சேர்த்து படுகொலைகளுக்கு உள்ளாக்கியது தான் சோகம். இதை தான் புலித்தலைமை விரும்பியிருக்கும் போல.

பி.ஏ.ஷேக் தாவூத் January 3, 2012 at 1:48 PM  

//உலக வாழ் முஸ்லீம்களும் புலிகள் இலங்கை வாழ் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை மன்னிக்க மாட்டார்கள்…. என்பதுடன்
புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.//
சாட்டையடி வரிகள். ஆம் ஒருக்காலும் புலிகளை மன்னிக்க முஸ்லிம் சமூகம் தயாரில்லை. தமது தவறுகளை விமர்சிக்க கூட விரும்பாத பாசிச வெறிப்பிடித்த பயங்கரவாதிகள் தான் இந்த விடுதலைப் புலிகள். அவற்றின் ஆதரவாளர்களும் இதே வகையை சேர்ந்தவர்களே.

Anonymous January 3, 2012 at 1:56 PM  

Jan
03

புலிச்சின்னம் கொண்ட தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை!-தயான் ஜயதிலக்க.

புலிகளினால் வெளியிடப்பட்டள்ள தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு தபால் திணைக்களமோ புலிகளின் சின்னங்கள் அடங்கிய தபால் முத்திரைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உருவம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்படவில்லை என பிரான்ஸ் தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசாங்க தபால் அலுவலகங்களில் குறித்த தபால் முத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பிரான்ஸ் நாட்டில் தனிப்பட்ட நபர்கள் சுய விருப்பின் அடிப்படையில் தாங்களாகவே தபால் முத்திரைகளை வடிவமைத்து வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறே பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் முத்திரை வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக, தூதுவர் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளினால் தபால் முத்திரை பிரசூரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் உண்மையென்றால் பிரான்ஸ் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ka.
http://www.thedipaar.com/news/news.php?id=39232

Anonymous January 3, 2012 at 2:11 PM  

Jan
03

தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருக்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்!-டக்ளஸ்.

கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?

பதில்: பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற உண்மையை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

தலைவர் வருவார் என்று மக்களை ஏமாற்றும் போலியான பேர்வழிகள் கூட பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற உண்மையை உள்ளூர உணர்ந்துள்ளனர்.

கேள்வி: கருணா காட்டிக் கொடுத்ததால்தான் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதா?

பதில்: கருணா பிரிந்து போயிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை அழிந்து போயிருக்கும்.

ஏன் என்றால், புலிகள் நடத்திய வன்முறைகள் எல்லையில்லாத அளவில் கொடூரமாகவும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவும் ஆகிவிட்டது.

ஆகவே அதன் முடிவு பலரும் எதிர்பார்த்தது போலவே முடிந்துள்ளது.

காலத்தின் சூழலை அனுசரித்து பலம் இருந்த போதே நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இந்த முடிவு அவர்களுக்கு வந்திருக்காது.

எமது தமிழ் இளைஞர் யுவதிகளை புலிகள் தமது தவறான வழிநடத்தல்கள் மூலமாகவும், பலாத்காரமாகவும் தம்மோடு இணைத்து அவர்களையும் பலிக்களத்திற்கு அநியாயமாக இரையாக்கி விட்டார்கள்.

http://www.thedipaar.com/news/news.php?id=39229

கச்சி சிக்கந்தர் January 4, 2012 at 1:55 AM  

அளவற்ற அருளாளன் அன்பாளன் அல்லாஹுவின் நல்லருள் நம் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ஆமின்...பெரியவர் உங்களின் பதிவுகளை பார்க்கும் போது விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை மிகவும் துன்புரித்தியது கண்டு ரத்தம் கொதிக்கின்றது மறக்கவும் மன்னிக்கவும் முடியாத நிகழ்வுகள் இனியும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் அதற்க்கான பதிலடியை கொடுக்கணும் இல்லை நம்மை கொட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.... வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டுமாக ஆமின் ...கச்சி சிக்கந்தர்

யாழ் முஸ்லிம் January 6, 2012 at 5:34 AM  

இதுவோர் அருமையான பதிவு. இந்தியாவிலுள்ள முஸ்லிம் சகோதர உறவுகள் இலங்கையில் புலிகள் உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கெதிரான கொடூரங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பை அறிந்துகொள்ள இதுபோன்ற கட்டுரைகள் உதவுமென்பது எமது அதீத நம்பிக்கை. உங்களின் பணி எதிர்காலத்திலும் தொடர எமது வாழ்த்துக்கள்.

www.yarlmuslim.blogspot.com (இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் குரல்)

Sulthan Allaudeen April 5, 2012 at 3:59 AM  

Allah is seeing all of us !!

Mohamed Shimran February 25, 2014 at 10:09 PM  

Enakku Intha Vidayam Theriyathu

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP