**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சாரி

>> Friday, March 16, 2007

ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சாரி

கவர்ன்மெண்ட் ஆபிஸில் பைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் பைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்க்கிறான்.

கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.

ப்ளாக் வந்ததும் வந்திச்சி சாஃப்ட்வெர் கம்பெனிகளில் புரொடக்டிவிட்டி (Productivity) குறைஞ்சாச்சி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் (Extra curricular activities) ஜாஸ்தியாகிருச்சின்னு சொல்றாங்க. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ்ன கதை எழுதுறது கவிதை எழுதுறது கட்டுரை வரையிறது விவாதம் பண்றது. வாழ்க இணைய இலக்கிய மறுமலர்ச்சி.

ப்ளாக்குல திங்கள் முதல் வெள்ளி வரை போடும் பதிவுகளுக்கு ஹிட்டு ஜாஸ்தி. அதுவும் வெள்ளிக்கிழமை நிறைய ப்ளாக்குகள் சூப்பர் டூப்பர் ஹிட். ஏன்னா வார கடைசி மூட் எல்லாருக்கும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும். எப்போதுமே அதிகம் ஹிட் கொடுப்பவர்கள் அமெரிக்கா தோழர்களும் தோழிகளும் தான். அமெரிக்காவில் எப்படி வேலை வாங்கி வாட்டுகிறார்கள் என்பது இந்த ஹிட் மூலமே நன்றாக தெரிந்துக் கொள்ளலாம்.

சனி ஞாயிறுகளில் ஆரம்ப ஆர்வக் கோளாறால் வலைபதிவுகள் வந்து பார்க்கிறவர்கள் தான் ஜாஸ்தி. இல்லென்னா சன் டிவியில் சொத்தைபடம் போட்டால் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்குகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாரயிறுதியை சுபிட்சமாக கழிக்கின்றனர்.

சாஃப்ட்வேர்காரன் வேலை எப்படின்ன வேலையிறுந்தால் நாக்கு தொங்க இரவும் பகலும் தெரியாமல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இண்டர்நெட்டிலேயே தன் முழுநாளையும் பொது அறிவு வளர்க்க பயன்படுத்தலாம். 450-க்கு மேல தமிழர்கள் ப்ளாக் எழுதி தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க முடியாவிட்டாலும் குமுதம் ஆனந்தவிகடன் படிக்கிற மாதிரி சில வலைப்பதிவுகளை தொடர்ந்து படிப்பது எப்படி? இதுக்கு விடை கடைசியில் தருகிறேன்.

'எவ்வளவு வேலை செய்தாலும் க்ளையண்ட் மதிக்கவே மாட்டங்கிறான் மாப்பிள்ளை' ஒரு நண்பனின் புலம்பல்

'மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ 'மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :

'மச்சி எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ பிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்'

'பிலிம் காண்பிச்ச போதுமா மாப்ளே?' என்று கேட்கும் நண்பனுக்கு ஒரு கதை சொல்வது வழக்கம்.

ஒரு கசாப்புக் கடைக்கு ஒரு நாய் தினமும் வரும். நாயின் கழுத்துப்பட்டையில் தொங்கும் ஒரு சின்ன பையில் கடைக்காரனுக்கு ஒரு லெட்டரும், கொஞ்சம் காசும் கொண்டு வரும். கசாப்பு கடைக்காரன் அந்த லெட்டரை படிக்கும் போது 'அரைக்கிலோ எழும்புக்கறியும், 4 ஆட்டுக்காலையும் கொடுத்து விடவும் என எழுதியிருக்கும்'. கடைக்காரனும் தவறாமல் அதில் சொன்னமாதிரியே பார்சலைக்கட்டி, நாயின் கழுத்துப்பையிலிருந்து பைசாவை எடுத்துக் கொண்டு பார்சலை கழுத்தில் மாட்டி அனுப்புவான்.

நாய் எங்கு தான் போகிறது. யார் அதற்கு எசமானன் என்பதை பார்க்க வேண்டுமென்ற ஆவல் கடைக்காரனுக்கு ஏற்ப்பட்டது.

பார்சலை கட்டிக் கொடுத்துவிட்டு நாயின் பின்னாலேயே கசாப்பு கடைக்காரன் போனான். நாய் மிக புத்திசாலித்தனமாக எலெக்டிரிக் ட்ரெயினில் ஏறியது. வரவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் சரியாக இறங்கியது. பிறகு பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காக காத்திருந்தது. பஸ் வந்ததும் அதில் ஏறியது. கண்டக்டரும் சரியாக பைசாவை அதன் கழுத்துப் பையிலிருந்து எடுத்து, டிக்கெட்டை வைத்தான்.

கசாப்புக்கடைக்காரனும் தொடர்ந்து கண்காணித்து வந்தான். டிரைவர் பக்கத்து ஜன்னலில் பார்த்துக் கொண்டே வந்த நாய் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொண்டது. கசாப்புக்கடைகாரனும் நாயை கவனித்துக் கொண்டே இறங்கினான்.

நாயும் 4 தெருக்களை அழகாக கடந்து ஒரு பெரிய வீட்டின் முன் நின்று கேட்டின் லாக்கை அழகாகத் திறந்தது. தோட்டத்தை தாண்டி உள்ளே ஓடியது. வாசல் கதவை பூட்டியிருந்ததை அறிந்த நாய் பக்கவாட்டில் உள்ள ஜன்னலுக்கு ஓடியது. 'லொள் லொள்' என்று குலைத்தது.
பிறகு கதவு பக்கம் வந்து கால் நகத்தை வைத்து பிராண்டியது. இதையும் பின் தொடர்ந்து வந்த கசாப்புக் கடைக்காரன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

கதவை திறந்த எசமானன் நாயின் கழுத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொண்டு நாயை ஒரு பிரம்பால் அடித்து வெளுக்க ஆரம்பித்தான். கசாப்புக்கடைகாரன் வேகமாக ஓடிவந்து எசமானனை திட்ட ஆரம்பித்தான் 'என்னங்க இது, நாய் எவ்வளவு புத்திசாலித்தனமா கறி வாங்கிட்டு ட்ரெய்ன் ஏறி பஸ் ஏறி தெருவை கடந்து வந்து உங்ககிட்ட பத்திரமா அதை கொண்டு வந்து சேர்த்திருக்கு. இப்படி போட்டு அடிக்கிறீங்களே' என்றான் கசாப்புக் கடைக்காரன்.

'எத்தனை வாட்டி சொல்றது இந்த மடநாய்க்கு வீட்டு வாசல் சாவியை எடுத்து போ போ என்று. சாவி எடுத்துப் போகாம திரும்ப திரும்ப வந்து கதவை பிராண்டுது' என்று நாயை அடிப்பதை தொடர்ந்தார்.

பிறகு அந்த நாயை அடித்து முடித்த எசமானன் துள்ளி துள்ளி அழகாக ஓடிவந்த அழகான டாலி என்ற அவரின் இன்னொரு நாயை வாரி அணைத்து கொஞ்சியப்படி வீட்டிற்குள் சென்றான் எசமானன்.

'மச்சி, இது மாதிரி தான் மேனஜர் எசமானன்னா ப்ரோகிராமர் நாய். ப்ராஜக்ட் மேனஜர் நாய்ன்னா அவருடைய பாஸ் எசமானன்' என்பேன். அந்த நாய் மாதிரி நாம எவ்ளோ நல்லது செய்தாலும் கடைசியில் நம்மிடம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் நம்முடைய மேலாளர்கள் (பாஸ்கள்). நம்மளையும் அந்த நாய் மாதிரி நடத்தக் கூடாதுன்னா டக்குண்ணு டாலி மாதிரி ஒரு சீனை போட்டு நல்ல பிலிம் காண்பிக்கனும்.

பிலிம் பிலிம் சொல்லிக்கிட்டே இருக்கேன். எப்படி தான் பிலிம் காண்பிப்பது....

1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும்.

வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.

2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, அதிரை.காம் படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel> word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.

3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit'என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள்schedule-உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.

5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க.

நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.

6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட்requirement> functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.

7) வலைப்பதிவில் யாரோ இந்த பிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்து கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கான பிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை..
NANDRI: THAMIM ANSARI
==========================
அல்வாசிட்டி.விஜய் has left a new comment on your post "ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சா...": அண்ணாச்சி,இந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.கீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.http://halwacity.com/blogs/?p=163நன்றி தமீம் அண்சாரிக்கு சென்றதை பார்த்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டேன்.ஒன்னும் பிரச்சனையில்லை. மையகருத்து என்னுடைய மெயிலில் வந்த ஒரு குறிப்பை தழுவியது என்றாலும், நான் பட்ட அனுபவங்களை மேலிருக்கும் பாயிண்ட்டுகளில் சொன்னது எனக்கு மட்டுமே சொந்தம்.:-))
NANDRI: HALWACITY VIJAY.

4 comments:

Anonymous March 18, 2007 at 12:26 PM  

அண்ணாச்சி,

இந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.

கீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.

http://halwacity.com/blogs/?p=163

நன்றி தமீம் அண்சாரிக்கு சென்றதை பார்த்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டேன்.ஒன்னும் பிரச்சனையில்லை. மையகருத்து என்னுடைய மெயிலில் வந்த ஒரு குறிப்பை தழுவியது என்றாலும், நான் பட்ட அனுபவங்களை மேலிருக்கும் பாயிண்ட்டுகளில் சொன்னது எனக்கு மட்டுமே சொந்தம்.

:-))

Anonymous March 18, 2007 at 1:54 PM  

புரிந்து கொண்டமைக்கு நன்றி அண்ணாச்சி.

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாமே...

NKS.ஹாஜா மைதீன் January 29, 2012 at 12:17 PM  

இனி எல்லாரும் நல்லா பிலிம் காட்டலாம்...

Rajan February 2, 2012 at 3:45 PM  

Click and read:
அலுவலக நேரத்தில் மாட்டி கொள்ளாமல் உறங்குவது எப்படி?

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP