**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!) மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?

>> Thursday, March 1, 2007

அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!) மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?

மாறுகண் பார்வை அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பது கிராமப் புறங்களில் பரவிக்கிடக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது கண்ணில் உள்ள ஒருவகை குறைபாடு என்பதையும், அதற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் மேற்கொள்ளாவிட்டால் அது குழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிடும் என்பதையும் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.

அப்துல் ஐந்து வயது சிறுவன். அவன் வீட்டிற்கு அவன் தந்தையின் நண்பர் வந்திருந்தார். சற்று நேரம் அவனோடு பேசிக் கொண்டிருந்தார். நண்பர் அப்துல் இடம் ஒரு சாக்லெட் பாக்கெட்டை கொடுத்தார். அப்துல் சாக்லெட் டப்பாவை நேராகப் பார்க்காமல் தலையை சாய்த்து, ஒரு கண்ணால் மட்டுமே பார்த்தவாறு வாங்கினான்.

அதனை கவனித்த நண்பர்; அப்துலின் தந்தையிடம் அப்துலுக்கு மாறுகண் பார்வை பிரச்சினை இருக்கும்போல் தெரிகிறது. உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய ஆலோசன பெறுவது நல்லது என்று அறிவுறுத்தினார்.

அதற்கு அவன் தந்தையோ அப்துலுக்கு மாறுகண் பார்வை என்பது அவன் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே தெரியும். அவன் பாட்டி இது அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொன்னதால் அப்படியே விட்டுவிட்டோம். இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லையே! என்று சொல்ல, நண்பரோ மிகவும் வேதனயுடன் நீங்கள் செய்வது தவறு. மாறுகண்ணுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது மாறுகண் உள்ள எல்லோருமே அதிர்ஷ்டசாலிகளா? கிடையாது.

உண்மையில், மாறுகண் ஒரு கண் நோய் ஆகும். குழந்தைப் பருவத்திலேயே கவனிக்காவிடில் பின்னர் பல பிரச்சினகள் வரலாம்.

குழந்தைப் பருவத்திலேயே கண் மருத்துவரின் ஆலோசனப்படி பயிற்சிகளோ அல்லது ஆபரேஷனோ மேற்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏதுமின்றி நல்ல பார்வையுடன் திகழலாம் என்று ஆலோசனை கூறினார். நண்பரின் ஆலோசனப்படி அப்துலை குழந்தைகள் கண் சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வந்தார் அவர் தந்த. முழுமையான பரிசோதனக்குப்பின் மாறுகண் சரிசெய்தல் (Squint Correction) எனப்படும் எளிமையான ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது அப்துல் பொருட்களை நேராக தெளிவாகப் பார்க்கிறான்.

ஆக, மாறுகண் பார்வை என்பது சிறு வயதிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

மாறுகண் என்றால் என்ன?

பொதுவாக இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் ஒரே பொருளை தெளிவாகப் பார்க்கவேண்டும். அதுவே சிறப்பான பார்வை எனப்படுகிறது. நம் ஒவ்வொரு கண்ணையும் ஆறு தசை நார்கள் தாங்குகின்றன. இரண்டு கண்களுமே நேரான பார்வையப் பெறுவதற்கு வசதியாக, ஒரே இலக்கினை நோக்கிப் பார்ப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது.

ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது, பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள் இரண்டு கண்களிலும் உள்ள கார்னியாவில் குவியவேண்டும். கார்னியாவில் குவிந்த ஒளிக்கதிர்கள் கண்ணின் உள்ளே பின்புறச் சுவரான விழித்திரையில் குவிந்து பிம்பம் உருவாக வேண்டும்.

அப்போதுதான் நாம் தெளிவான பார்வையப் பெறமுடியும். இரண்டு கண்களும் தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளயில் உள்ள பார்வை மண்டலத்திற்குச் சற்றே வித்தியாசமான கோணங்களில் அனுப்புகின்றது. பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாண படமாக, பார்வை என்ற தீர்க்கமான புலனாக நமக்கு வெளிப்படுகிறது.

அதற்கு இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக அமந்திருப்பதால் தெளிவான பார்வைய நாம் பெறும்படியாக நம் கண்கள் செயல்படுகின்றன.
ஒரு வேளை இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக இல்லையெனில், அவற்றின் இயக்கமும் ஒரே சீராக இருக்காது.

இந்நிலையில், ஒரு கண் மட்டுமே பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாகும்படி சிறப்பாகச் செயல்படுகிறது. தசை நார்கள் சரியாக அமையாத கண், பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாவதை சரிவர செய்வதில்லை. இந்நிலயே ஒன்றரைக்கண் பார்வை அல்லது மாறுகண் எனப்படுகிறது..
ஆங்கிலத்தில் ஸ்ட்ராபிஸ்ம்யுஸ் (Strabismus) என்கிறார்கள்.

மாறுகண் பிரச்சினைக்குக் காரணங்கள் என்ன?

பொதுவாக, இந்தப் பிரச்சினை குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது. சிலருக்கு இளமைப் பருவத்திலும் வரலாம். மாறுகண் பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடிவதில்லை
.
- பரம்பரை மூலக்கூறியல் காரணங்கள்.
- பிரசவத்தின்போது குழந்தையின் கண்ணில் காயம் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
- நம் கண்ணின் அசைவுக்குக் காரணமாக இருக்கக்கூடிய ஆறு தசை நார்களும் நமது மற்றொரு கண்ணின் ஆறு தசைநார்களோடு ஒருங்கிணந்து ஒரே நேர்கோட்டில் செயல்பட முடியாத சூழ்நிலை இந்த பிரச்சினக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. சில நேரங்களில் நரம்புத்தளர்ச்சியும் ;(Nerve Palsy) இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகிறது.
- சில நேரங்களில் தூரப் பார்வைக் குறைபாடு போன்ற பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு ஒளிக்கதிர்கள் செல்லும் பாதை உள்நோக்கி மாறும்போது மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- கண் புரை போன்ற குறைபாடுகள் இருந்தாலும் மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- வேறு உடல் நலக்குறை காரணமாகக்கூட மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.

எனவே உங்கள் குழந்தைக்கு மாறுகண் குறைபாடு இருக்குமேயானால் முழுமையான கண் பரிசோதனை அவசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பைனாகுலர் (Binocular Vision) பார்வை என்றால் என்ன?
பொதுவாக, இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து நல்ல பார்வைத் திறனுடன் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரு பொருளை பார்க்கும்பொழுது, நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள் இரண்டு கண்களின் விழித்திரையிலும் குவிந்து பிம்பம் உருவாகிறது.

ஆக இரண்டு கண்களும் தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளையில் உள்ள பார்வை மண்டலத்திற்கு சற்றே வித்தியாசமான கோணங்களில் அனுப்புகின்றது. பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாண படமாக தீர்க்கமான புலனாக நமக்கு வெளிப்படுகிறது. இதனையே சிறப்பான பார்வை அல்லது பைனாகுலர் பார்வை என்கிறோம்.

மாறுகண் குறைபாட்டினால் வரக்கூடிய பிரச்சினைகள் யாவை?
இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படாதபொழுது ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது இரண்டு கண்களும் இரு வேறு பொருள்களைப் பார்தது அவற்றிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவிந்து மூளையில் உள்ள பார்வை மண்டலத்திற்கு செய்திகளை அனுப்புகிறது. அங்கே இரண்டு விதமான பிம்பங்களின் பிரதிகள் தெரிவதால் குழப்பம் ஏற்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணந்து செயல்படாத குறைபாடுடைய கண்ணிலிருந்து பெறப்பட்ட பிம்பம் தவிர்க்கப்பட்டு சரியாக செயல்படக்கூடிய கண்ணிலிருந்து வரக்கூடிய பிம்பத்தை மட்டுமே பார்வை மண்டலம் பெற்றுக்கொண்டு செயல்படுககிறது.

எனவே இக்குறைபாடுடய குழந்தை தீர்க்கமான பார்வை எனும் புலனை பெற இயலாமல் போகிறது. இந்நிலையில், குறைபாடுடைய கண்ணை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். எனவே அந்த கண் சிறப்பாக செயல்பட முடியாமல் நாளடைவில் சோம்பேறியாகிறது. இதனை ஆம்பிளியோப்பியா என்கிறோம்.

ஓரளவு வளர்ச்சியடைந்தவர்கள் இரண்டு கண்களிலிருந்தும் பெறப்படுகின்ற பிம்பத்தை தவிர்க்கமுடியாமல் பொருட்கள் இரண்டிரண்டாக தெரியும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். இதுவே இரட்டைப் பார்வை அல்ல ஆங்கிலத்தில் Double Vision எனப்படுகிறது.

மாறுகண் குறைபாட்டின் அறிகுறிகள் எவை?
குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களே இரண்டு கண்களும் இணநது; செயல்படாமல் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதை கவனிக்க முடியும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், பிறந்த குழந்தைகளின் கண்கள் எப்போதாவதான் ஒருங்கிணந்து ஒரே கோணத்தில் செயல்படாமல் இருக்கும்.

எனவே சில நேரங்களில் குழந்தைக்கு மாறுகண் இருப்பதுபோல தெரியும். ஆனால் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பின்னர், முழுமையாக தீர்க்கமான பார்வையைப் பெறும் வண்ணம் இரண்டு கண்களும் ஒரே கோணத்தில் இணந்து செயல்படும்.

ஒரு வேளை அவ்வாறு இணந்து செயல்படாமல் இருந்தால் அந்தக் குழந்தக்கு, ஒரு கண் மருத்துவரின் முழுமையான ஆலோசனை தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்கள் இரட்டைப் பார்வைக் குறைபாடுகளோ அல்லது இரண்டு கண்களும் ஒரே கோணத்தில் செயல்படாமல் சிரமப்படுவதை அறிகுறியாக உணரமுடியும்.

மாறுகண் நோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
மாறுகண் குறைபாட்டின ஒரு கண் மருத்துவரே குறிப்பிட்டு கண்டறிய முடியும். கண் மருத்துவர் சில குறிப்பிட்ட பரிசோதனகளை செய்து மாறுகண் குறைபாட்டினை உறுதி செய்கிறார்.

முதலில் மாறுகண் குறைபாட்டிற்குப் பார்வைத்திறன் (Refractive Error) காரணமாக இருக்கிறதா என்பதை அறிய பார்வைத்திறன் குறைபாட்டை அறியும் பரிசோதனை செய்யப்படுகிறது. சிலருக்குப் பார்வைக் குறைபாட்டின் காரணமாக, மாறுகண் பிரச்சினை வரலாம்.

எனவே அதற்கு முதலில் சிகிச்சையளிக்கப்படுகிறது. சில வகை மாறுகண் பிரச்சினைக்குப் பார்வைக் குறைபாட்டை சரிசெய்தாலே போதுமானதாக அமைகிறது.

மாறுகண் குறைபாடு காரணமாக ஆம்பிளியோப்ரியா எனப்படும் சோம்பேறிக் கண் பிரச்சினை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கு முதலில் சிகிச்சையளிக்கப்படுகிறது அதன்பின்னரே ஆபரேஷன் தேவைப்படுமேயானால் ஆபரேஷன் செய்யப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளப் பொருத்தமட்டில் பெற்றோர்களுக்குச் சிகிச்சையின் முக்கியத்துவம் தீவிரமாக எடுத்துரைக்கப்படுகிறது. ஏனெனில் பெற்றோர், குழந்தை அனைவருடய ஒத்துழைப்பே சிசிச்சையின் வெற்றி விகிதத்தை நிர்ணயிக்கிறது.

மாறுகண் பிரச்சினைக்கான ஆபரேஷன் ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ தேவைப்படுமானால் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது இரு கண்களும் ஒருங்கிணந்து செயல்படுவதை தடுக்கும் தசையானது ஆபரேஷனின்போது வலுவடைவதோ அல்லது வலுக் குறைவதோ, தசை நார்கள் சமமாகச் செயல்படுவதற்கேற்ப அமைக்கப்படுகிறது. சிலருக்கு இரட்டைப் பார்வை இருக்கும்பட்சத்தில் முப்பட்டக (Prism) கண்ணாடி வழங்கப்படுகிறது.

மேலும், இக்குறைபாட்டிற்கான காரணத்தை அறியவும் முயற்சி செய்து எந்த அளவிற்கு குறைபாடுடைய கண் நல்ல கண்ணோடு இணைந்து செயல்பட முடியாமல் மாறுபடுகிறது என்பதனை கண்டறிகிறார். சிலருக்கு நாசித்துவாரங்களின் அமைப்பு மாறுகண் உள்ள போன்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கலாம். ஒரு கண் மருத்துவர் மட்டுமே மாறுகண் போன்ற பொய்த் தோற்றத்திற்கும் False Squint) உண்மையாகவே பாதிக்கப்பட்ட மாறுகண் True Squint) பிரச்சினக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியும்.

மாறுகண் பிரச்சினைக்குச் எப்போது சிகிச்சை தேவை?
- குழந்தைகளைப் பொருத்தமட்டில் மாறுகண் பிரச்சினக்கும் அது சார்ந்த ஆம்பிளியோப்பியா பிரச்சினக்கும் எவ்வளவு விரைவாக சிகிச்சையளிக்கப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்ததாகும்.

- பொதுவாக ஆம்பிளியோப்பியா மற்றும் மாறுகண் பிரச்சினைக்கான சிகிச்சை, குழந்தைப் பருவத்திலேயே வழங்கப்படும் பட்சத்தில் மட்டுமே பார்வையைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

- நினவிருக்கட்டும். மாறுகண் நாளடைவில் குழந்தை வளரும்போது சரியாகிவிடும் என்பது தவறு.
- சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், பார்வையை மீட்கவும் இரண்டு கண்களும் மிக சீராக இணந்து செயல்படும் வாய்ப்பும் குறையலாம்.

மாறுகண் பிரச்சினக்குச் சிகிச்சையளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
- நமது அல்லது நம் குழந்தைகளின் பார்வையப் பாதுகாப்பதற்கும் அல்லது இழந்த பார்வையை மீட்டுத்தருவதற்கும் மாறு கண் பிரச்சினக்குச் சிகிச்சை அவசியம்.

- இரண்டு கண்களையும் ஒருங்கிணந்து செயல்பட வைப்பதற்கு சிகிச்சை அவசியம்.
- பைனாக்குலர் பார்வை எனப்படும் தீர்க்கமான பார்வையை மீட்டுத் தருவதற்கு சிகிச்சை அவசியம்.
சிகிச்சைக்குப் பின்னர் கண்ணாடி அணிவது அவசியமா?
அவசியமே. ஏனெனில் ஆபரேஷன் கண்ணாடி அணிவதற்கு மாற்றாக முடியாது. ஒரு வேளை குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க பார்வைக் குறை இருக்கும் பட்சத்தில் கண்ணாடி அணிவது மிகவும் அவசியமே.

சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மாறுகண் பிரச்சினை சரியாவது உண்டு. சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மட்டுமே பொருள்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும். இந்தத் தெளிவான பார்வை மட்டுமே ஆம்பிளியோப்பியா எனப்படும் பிரச்சினைக்குச் சிகிச்சையளிப்பதற்கும் இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படுவதற்கும் ஆபரேஷனுக்கு பின்னர் உதவி செய்யும். நினவிருக்கட்டும்.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அடையாளம் அல்ல. அது குழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்யக்கூடிய கண் நோய். மாறு கண் குழந்தைகளுக்கு, அடிப்படைத்தேவை குழந்தைகள் கண் நல நிபுணரின் ஆலோசனை.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP