**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு

>> Saturday, March 3, 2007

அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு
- பவானந்தி
மென்டோஸ் - கோக் ராக்கெட்! குடிச்சா, மவனே நாக்அவுட்!!
“கொஞ்ச நாளாவே கோகோ கோலாவைப் பத்தி எல்லாரும் சந்தேகம் கிளப்புறாங்க. அது உண்மையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? ஏன்னா என் குடும்ப ஆரோக்கியமும் எனக்கு முக்கியமாச்சே” என்று கோகோ கோலா தயாரிப்பு நிறுவனத்துக்குள்ளாற புகுந்து தலையில ‘சயின்டிஸ்ட்’ குல்லா, கோட் எல்லாம் போட்டுக்கிட்டு ‘கோகோ-கோலா’வால எந்தப் பாதிப்பும் இல்லைனு கமிஷன் ரிப்போர்ட் குடுக்கிறாங்க வேதியியல் ஆராய்ச்சியாளர் ராதிகா. ‘குடும்பத்தோட குடிங்க; குஜாலா இருங்க’ன்னு அட்வைஸ் வேற!

என்னாங்கடா, இதுவரைய பொண்ணுகளக் கவுக்கிறதுக்கு, மலையில் இருந்து தலைகீழ தொங்கி சாகசம் பண்றதுக்கு இப்படித்தானே ‘கோக்’ விளம்பரம் வரும், இப்ப என்னடான்னா “ஆரோக்கியமானது; சுகாதாரமானது” என்று ஆராய்ச்சி முடிவெல்லாம் தர்றானுங்களேன்னு பாத்தேன்.

அங்கங்க நடந்த போராட்டங்கள்ல மக்கள் தெளிவடைஞ்சிட்டாங்கன்னு ஆட்டம் கண்டு போயிருக்கிறது ‘கோக்’ கம்பெனி. ‘இங்க தடை பண்ணா, அமெரிக்காவில போய் குடிப்பேன்’னு ஷாரூக்கான் சொன்னாலும், அமெரிக்காவில் போய்க் குடிக்க எத்தனை பேரைத்தான் தேடும் கோக் கம்பெனி! சரி, இந்தப் பயப் புள்ளைகளைக் கவுக்க என்னாடா வழின்னு பாத்து ‘சித்தி’யைப் புடிச்சு அமுக்கிட்டானுக. ஆனா ‘உங்க பப்பு வேகலைப்பு’ குடும்ப ஆரோக்கியத்தை விட, குடும்ப பொருளாதாரம் முக்கியம்னு லட்சக் கணக்கில வாங்கிக்கிட்ட விளம்பரம் குடுக்கிறாங்கன்ன இருக்கிற பேரும் ரிப்பேரு ஆயிடுச்சு.

இருக்கிற தலைவலி பத்தாதுன்னு, இன்னொரு பக்கம் காதுல கேட்டுச்சு ஒரு தகவல். இந்த பூச்சி மருந்துக் கம்பெனிக் காரவுகள்லாம் சேந்து, “பெப்சி, கோக்னால எங்க யாவாரம் படுத்துக்கிச்சு, எல்லாரும் பொட்டாசியம் சல்பேட்டுக்கு பதிலா பெப்சியையும், நைட்ரேட்டுக்குப் பதிலா கோக்கையும் போட ஆரம்பிச்சிட்டாங்க,

அதனால அதைத் தடை பண்ணணும்”னு கேட்டு கேஸ் குடுத்திருக்காகன்னு நம்ம பயக பூச்சி கிளப்புறானுக.‘ஹார்பிக், ஸ்பார்கிள்’னு கக்கூசு கழுவுற திரவத்துக்கு பதிலா, ‘கோக்’ நல்லாருக்குன்னு துப்புரவுத் தொழிலாளர்களெல்லாம் அதுகளைக் கையில புடிச்சுகிட்டு போயிடறாங்களாம்.

இப்படி எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்கிற நேரத்தில், இண்டர்-நெட்டில் வேற புதுசா ஒரு ஈமெயிலோ எறும்பு மெயிலோ வந்து கிலி கௌப்பிக்கிட்டிருக்காம்.

“மென்டாஸ் மிட்டாயைத் தின்றுவிட்டு, கோகோகோலா குடித்த பிரேசில் நாட்டு சிறுவன் உயிரிழந்தான். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு விபத்து பிரேசிலில் நடந்திருக்கிறது. எச்சரிக்கை”னு போட்டு, அதுக்குக் கீழே சில படங்களும் வந்தது.

“ஒன்றரை லிட்டர் கோக் பாட்டில், நாலஞ்சு மென்டா ஸ் மிட்டாய் எடுத்துக்கிட்டான். கோக் புட்டியைத் திறந்து, ஒரு குழாயில வரிசையா அடுக்கின மென்டாஸ் மிட்டாயை உள்ள போட்டான். பொங்குச்சு கோக் ஆறடி உசரத்துக்கு” ஆகா மிரட்டிப்புட்டாங்களே!

இது உண்மையா, என்னான்னு பார்க்கிறதுக்காக, நாங்களும் வாங்குனோம், கோக்கும் மெண்டாஸும்.
நம்ம மக்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு, செஞ்சு பார்த்தோம். ராதிகா மட்டும்தான் ஆராய்ச்சியாளரா என்ன, நம்மாளுகளும் ரெடி. ஒரு குழாயை எடுத்தோம். 4, 5 மென்டாஸ் மிட்டாயை உள்ள போட்டு அடியில அடைச்சுகிட்டோம். கோக் புட்டியைத் திறந்தோம். ‘புஸ்’ஸுனு கேஸ் வெளிய போச்சு. குழாயை புட்டி வாய்க்கு நேரா வச்சு, அடைச்சிருந்த கையை எடுத்தோம். மெண்டாஸ் உள்ள போன நொடி, ஆறடி உசரத்துக்கும் மேல பொங்கி வந்து முக்கால் பாட்டில் காலியாயிடுச்சு. ஆகா, இது வவுத்துக்குள்ள போனா ஏன் ராசா வினை இருக்காது.

மென்டாஸ், கோக் ரெண்டுமே சாப்பிடுற விசயம். அதுலயும், சாப்பாட்டுக்கு அப்புறம் நம்மாளுக வாயில போடுற விசயம். இது ஆபத்திலயும் ஆபத்தாச்சே!

சரி, இதப்பத்தி வேறென்னடா போட்டிருக்காங்கன்னு இண்டர்நெட்டில் பார்த்தோம். அடேங்கப்பா,PSLV ராக்கெட் பார்த்திருக்கோம், சிவகாசி ராக்கெட் பார்த்திருக்கோம். நம்ம ஆந்திரா ‘ரகு’ செஞ்ச ராக்கெட்டையும் பார்த்திருக்-கோம். ‘கோக்’ பாட்டில் ராக்கெட் பார்த்திருக்கோமா? விட்டானய்யா வெளிநாட்டில!

அதே மென்டாஸ், அதே கோக் பாட்டில் (செய்முறை தனியா இருக்குப்பா!) செல்லோ டேப்பில வரிசையா 4 மென்டாஸ் வச்சு ஒட்டி, உள்ள செருகி, மூடியப் போட்டு, தலைகீழ்க் கவுத்து 2 குலுக்கு குலுக்கி, மூடி தெறிக்கிற மாதிரி தலைகீழ் வச்சு ஒரு அடி அடிச்சான், பாருங்க, பறந்தது பாட்டில் பல அடி தூரத்துக்கு. சரின்னு அதையும் செஞ்சு பார்த்தோம். பாத்தப்பு... பக்கத்தில போஸ்ட் கம்பில உள்ள ட்யூப்லைட்டை காலி பண்ணிடப் போகுது.
(மொதல் தடவ செஞ்சி போட்டோ எடுக்கக் கூட முடியல, அந்த அளவுக்கு வேகமா பறந்துடுச்சு. இரண்டாவது தடவ போனத போட்டோ புடுச்சுட்டோம்ல)

ஏற்கெனவே பாட்டிலுக்குள்ள கேஸ் அடைச்சுத்தான் அனுப்புறாங்க. அந்த வாயு, கோக்கில கரைஞ்சு சேர்ந்துக்குது. மென்டோஸைப் போட்ட மறு நொடி, இரண்டுக்கும் ஏற்படுற வேதி வினையில வாயு பெருகி, வெளியேற வழி தேடுது. மூடி உடைஞ்சு வழி கிடைச்ச உடனே பிச்சுக்கிட்டு புறப்பட்டுடுது. ராக்கெட் பறக்கிற அதே நியூட்டன் விதி.

இது வெறும் சாதாரண ஆய்வுதான். குளிர்பான புட்டியில் நிரப்பப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாவதனாலும், அது அடைக்கப்பட்டு வெளியேற வழியில்லாததனாலும் ஏற்படும் விளைவுதான்’னு அறி-வாளிப் பயக சில பேரு பதிவு போட்டிருக்கானுக இணையத்தில! இங்கேயும்தான் கோக்கில `பூச்சி மருந்து இல்லை’னு கோக் காசு குடுத்து சர்டிபிகேட் வாங்குது.

சரிப்பா, நம்ம வவுத்துக்குள்ள போனா என்னாகும்? குடிச்சுப் பாருங்க. வெளியேற வழி இரண்டுதான். மேல ஒன்னு, கீழ ஒன்னு. சின்னப் பையன் குடிச்சான். தாங்க முடியல. அடைச்சுக்கிச்சு. ஆக்ஸிஜன் நிரம்ப வேண்டிய இடங்கள்ல கார்பன்-டை-ஆக்ஸைடு நிரம்பினா என்னப்பா ஆகும்? உசுரு நின்னுதான் போகும். அந்த ஆராய்ச்சி செய்ய நாங்க தயாரில்லை. குடும்ப ஆரோக்கியத்துக்காக, நம்ம நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களை வேணும்னா செய்யச் சொல்லிப் பார்ப்போம். என்ன நான் சொல்றது நெசந்தானுங்களே...

கோக் ராக்கெட் (Coke Rocket)
செய்முறை:
தேவை: ஒன்றரை லிட்டர் கோக் புட்டி, 4 மென்டாஸ் மிட்டாய், ஒரு செல்லோ டேப், கொஞ்சம் எச்சரிக்கை.
1. 4 மென்டாஸை வரிசையா அடுக்கி ஒரு செல்லோ டேப்புல ஒட்டி கொஞ்சம் டேப்பை வெளியில விட்டுக்குங்க.
2. கோக் புட்டியத் திறந்து, கோகோ கோலாவுக் குள்ள பட்டுடாம, பவிசா 4 மென்டாஸ் ஒட்டினதையும் உள்ளவிட்டு, மூடியைவச்சு மூடிடுங்க.
3. அதுக்கப்புறம் தலைகீழா கவுத்து புடிங்க, ரெண்டே ரெண்டு தபா குலுக்குங்க. மூடி தெறிக்கிற மாதிரி தலைகீழா வச்சு ரோட்டில அடிங்க. பறக்கும் பாருங்க நூறு அடிக்கு! இதத்தானப்பா குடிக்கி றோம்கிறாங்க.

கோக் பவுன்டெய்ன்
(Coke Fountain)
செய்முறை:
தேவை: ஒன்றரை லிட்டர் கோக் புட்டி, 5 மென்டாஸ் மிட்டாய்
1. குழயில மெண்டாஸைப் போட்டு அடியில அடைச்சுக்குங்க.
2. கோக் புட்டியைத் திறந்து வைச்சுருங்க.
3. குழாயை, கோக் வாய்க்கு நேரா வச்சு அடைச்சு இருக்கிற கையை எடுத்துடுங்க.
“கோக் கொப்புளிக்கும் கொண்டாட்டமாம்! கொண்டாட்டம்!

பெப்சி சளைத்ததல்ல!
தொடர் சர்ச்சைகளெல்லாம் கோகோ கோலாவுக்கு இணையாக பெப்சியையும் குறி வைத்தாலும், கோக்-தான் முனைப்பாக நின்று எதிர்பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி என்ற பார்ப்பனப் பெண்மணியை தனது நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கும் பெப்சி, ‘இந்தியரின் தலைமையில் பெப்சி’ என்று தேச பக்திப் பானமாகக் காட்டும் மறைமுக முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கோக்கின் தீமைகள் சர்வ சுத்தமாக பெப்சிக்கும் பொருந்தும்.

“கோக் ஒரு திறந்த புத்தகம். யாரு விரும்பினாலும் எங்க தயாரிப்பை வந்து பாருங்க”ன்னு விளம்பரம் தர்ற கோக் நிறுவனம், தன்னுடைய தயாரிப்பு ரகசியத்தை வெளியிட மாட்டேங்குது. அந்த பார்முலா தெரிஞ்சவங்க உலகத்தில வெகு சிலர்தானாம். அவங்க ஒரே நேரத்தில விமானத்தில பறக்க விடாதாம் கோக் நிறுவனம். எல்லாரும் செத்துப் போயிட்டா. அதனால பாதுகாப்பா வச்சிருப்பாங்களாம் ரகசியத்தை. அதையும் கொஞ்சம் திறந்து காட்டுங்க.
COURTSEY: "UNMAI"

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP