**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.

>> Saturday, March 24, 2007


'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.

நீங்கள் மும்முரமாக ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த போன் வரும். குழையும் பெண் குரல்.

''ஹலோ... ஹேப்பி நியூஸ். உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லிமிட் கார்டு சேங்ஷன் ஆயிருக்கு. நீங்க எங்க வேலை பார்க்கறீங்க? கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?'' _ எடுத்த எடுப்பிலேயே உங்களுக்கு இதமான அதிர்ச்சியைத் தந்துவிடுவார்கள். ஏதோ ரொம்ப நாள் பழகிய காதலியைப் போல கொஞ்சும்போதே, 'வீட்டுக்கு வரும் அதிர்ஷ்டமா?' என்று நம் மனசு ஜிவ்வாகிவிடும். பணம் வருகிறதே.... விடுவோமா? தகவல்கள அள்ளிக் கொட்டுவோம்.

நமது பெயர் கூட நாம் சொல்லித்தான் அவர் தெரிந்து கொள்வார். உரையாடலை முடிக்கும்போது கலகலவென்று சிரித்துக் கொண்டே 'பை பை' என்பார். அந்தச் சிரிப்பிற்குப் பின்னே 'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.

மறுநாள் காலை மீண்டும் அதேபோன்... அதே கலகல பெண்... ''சார், எங்க பேங்கிலிருந் இரண்டு பேர் வருவாங்க. இரண்டு போட்டோ, வீட்டு அட்ரஸ் ப்ரூஃப் மட்டும் நீங்க ரெடி பண்ணினா போதும். அப்ளிகேஷன் தருவாங்க. உங்க பெயர், அட்ரஸ், கையெழுத்தை மட்டும் போட்டாப் போதும். மற்றதை நாங்க பார்த்க்கிறோம்'' என்பார், நேற்றைய குழைவு துளியும் மாறாமல்.

வங்கியின் பிரதிநிதிகள் வருவார்கள். ஆங்கிலத்தில் கடுகு கடுகாக எழுதப்பட்ட விண்ணப்பப் படிவம் எட்டுப் பக்கத்திற்குத் தருவார்கள். அவசரமாக உங்களிடம் பல இடங்களில் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, வேண்டிய போட்டோக்களயும் பெற்றுக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுவார்கள்.

பதினந்தாவது நாளில் கிரெடிட் கார்டு அலறிக் கொண்டு உங்கள் வீடு _ அலுவலகம் தேடி வரும்! பையில் பள பள கார்டு! இனி உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அந்த எண்ணமே உங்களை விரைப்பாக நடக்கச் சொல்லும்.

இதுவரை எல்லாம் சுகமே. பித்துப் பிடித்து அலையப்போவது இனி வரும் கதை!

இப்படி தெரியாத்தனமாக பணத்திற்கு ஆசைப்பட்டு பைக்குள் வைதது;க் கொண்ட கடன் பிசாசு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாத அப்பாவிகளை எல்லாம் எப்படி விரட்டியடிக்கிறது என்று அறிந்து கொள்ள, சென்னை நகரில் சிலரைச் சந்தித்தோம்.

கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டபோல பல இளைஞர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாதி ராத்திரியில் கதவு தட்டுவது போன்ற பிரமையில் திடுக்கிட்டுப் போய் எழுபவர்கள் பலர்.

''மயிலாப்பூரில் ஒரு பெண்மணி. கணவர் எதிர்பாராவிதமாக இறந்விட்டார். கணவர் வெளிநாட்டு வங்கியின் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணியிருக்கார். அவர் வாங்கின கடனை அடைச்சு அதற்கான வட்டியயும் கட்டிட்டார். பேங்க்காரர்கள் வழக்கம் போல், இண்டரஸ்ட், பீனல் இண்டரஸ்ட் என்று ஏதேதோ போட்டு பேலன்ஸ் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அவர் இறந்துவிட, மனைவிக்கு இந்த கணக்கு வழக்குகளே தெரியாது. அந்தம்மா புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகலை. நாலைந்து தடியர்கள், கலெக்க்ஷன் ஏஜெண்டுகள் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் வந்து அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது'' சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வேண்டிய வழக்கறிஞர் சுதன் கொதித்துப் போய்ச் சொன்னார்.

கலெக்க்ஷன் தடியர்களின் டார்ச்சர் டெக்னிக் ரொம்ப சிம்பிள். விடியற்காலை ஆறு மணிக்கே கதவைத் தட்டி வீட்டுக்குள் வந்து விடுவார்கள். அந்தப் பெண்மணி பயந்து போய் பெட்ரூமுக்குள் ஒளிந்து கொள்வாராம். ஹாலிலுள்ள பேன், லைட், டி.வி. எல்லாவற்றையும் 'ஆன்' செய்துவிட்டு விட்டு, டி.வி. வால்யூமையும் பெரிதாக வைத்துவிடுவார்கள்.

''டி.வி.யில அம்மாடி, ஆத்தாடி... என்று பாடும்போது, இவர்களும் சத்தமா பாடிக் கிட்டே நடுஹாலில் குத்தாட்டம் போடுவார்கள். சிலர் குடி போதையில் இருப்பார்கள். ரொம்ப கொடுமை சார்...'' என்று மயிலாப்பூர் பெண்மணியின் வீட்டுப் பக்கத்து போர்ஷன்காரர் வேதனையுடன் சொன்னார்.

இறுதியாக வழக்கறிஞர் சுதன், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக வந்து புகார் தந்த பின்னரே கலெக்ஷன் ரவுடிகளை காவல் நிலையத்திற்குக் கொண்டு போய் கேஸ் பதிவு செய்தார்களாம். மயிலைப் பெண் இப்போதும் டி.வி.யில் டி.ஆரின் 'அம்மாடி, ஆத்தாடி' பாடலை சாதாரணமாக கேட்டாலே படபடக்கிறாராம்!

இப்படித்தான் கட்ட வேண்டிய வட்டி கன்னா பின்னாவென்று குட்டி போட்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது, அண்ணா நகரைச் சேர்ந்த சாமுவேலுக்கு. இதில் சோகமான தமாஷ். இவரே ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

''நாலு வருஷமா மாசம் மாசம் 4500 ரூபாய் கட்டறேன். ஆனால் கடன் என்னவோ 92 ஆயிரத்திலிருந்து இறங்க மாட்டேங்குது. அவங்க பாட்டுல ஏழெட்டு சார்ஜஸ் போட்டு மாசாமாசம் 5,200 ரூபாய் சேர்த்துடறாங்க 'செட்டில் மெண்டுக்கு வா' என்றால் 'முதலில் எழுபதாயிரம் கட்டு அப்புறம் பேசலாம்' என்கிறார்கள். வீட்டுக்குப் போகவே பிடிக்கலை சார்.'' என்று கண்கலங்கினார்.

வீட்டில் இவரது வயதான தாயார் மட்டுமாம். சாமுவேல் இல்லாதபோது, வீட்டில் வசூல் குண்டர்கள் பண்ணும் அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மில்லையாம். நிஜம். அவர் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவரது தாயாரிடமிருந்து போன்.. ''பால் பாக்கெட் வாங்க வெளியே வந்தேன்டா... ரெண்டு மூணு ஆளுங்க பைக்ல உட்கார்ந்கிட்டு, 'கிழவி உன் பிள்ளை எங்க'ன்னு கத்தினான்க. உள்ள ஓடிவந்துட்டேன்'' நடுக்கத்துடன் அந்த வயதான தாய் பேசியதைக் கேட்டபோது நமக்கு மனது பாரமானது!

''ரிஸர்வ் வங்கியின் மாஸ்டர் சர்க்குலர், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் எந்த வங்கியும் அவற்றை பின்பற்றுவதில்ல. சில தேசிய வங்கிகளைத் தவிர'' என்று ஆரம்பித்தார் பி.சுந்தரராஜன். 'சமூக பொருளாதார நீதிக்கான மையம்' என்கிற இவரது அமைப்பு மூலம் கிரெடிட் கார்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவி வழங்கி வருகிறாராம்.

''பாதிக்கப்பட்டவர்கள் குறைகளைக் கேட்க தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் யாருமே கிடையாது. போலீஸ், கலெக்ஷன் ஏஜெண்ட்களோடு கைகோர்த்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 'ஆம்பட்ஸ்மேன்' அமைப்பு இது தொடர்பாக எந்த நடவடிககையும் எடுப்பதில்லை!

அடாவடி பேங்குகளை கவனிக்க வேண்டிய மத்திய நிதியமைச்சகம் என்ன செய்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். மிரட்டல் பேங்குகளப் பொறுத்தவரை நாலு சதவிகிதம் சேவை வரியை அரசுக்கு கட்டிவிட்டால் போதும். இந்த நிலை மாறாத வரை பல அப்பாவிகளின் குரல்வளை நெறிக்கப்படும். இதனால் வாழ்க்கையை வெறுத்துப் போனவர்கள் பலர்'' என்று ஆவேசமாகச் சொன்னார் சுந்தரராஜன்.

அப்படி வெறுத்துப் போய் பாதிக்கப்பட்ட அசோக்குமாரின் கதையைக் கேட்க உங்களுக்கு நெஞ்சில் உரம் வேண்டும். பதை பதைக்கும் அவர் கதை...


கிரெடிட் கார்ட சாதுரியமாக பயன்படுத்த ஐந்து வழிகள் :

« கிரெடிட் கார்ட வைத்து பணம் எடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.

« கடன் பெற்றதும், முதலில் குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்பார்கள். அந்தத் தூண்டிலில் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.

« கிரெடிட் கார்டு நிறுவனத்திலிருந்து வலியவந்து லோன் தருவதாக குழைந்து சொல்வார்கள். அப்படியரு போன் உங்களுக்கு வந்தால் ரிஸீவரை ஓசைப்படாமல் வைத்துவிடுங்கள்.

« உங்களுக்கு வரும் பில்களை தவறாமல் ஒப்பிட்டுப்பாருங்கள்!

« கெடு நாளுக்கு முன் முழுப் பணத்தையும் கட்டிவிடுவது புத்திசாலித்தனம்..
SOURCE: KUMUDAM.------- NANDRI TO : KUMUDAM

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP