**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.

>> Friday, November 14, 2008

ஹிந்துத்துவ இராணுவ உயர் அதிகாரி புரோகித்

இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோகித் ஒப்புதல்

இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோகித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.மாலேகோன் குண்டு வெடிப்பை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு, புரோகிதுதான் 'அபிநவ் பாரத்' என்ற இந்து பயங்கவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோகித், ஹிந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவராவார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

37 வயதான பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித், கடந்த செப்டம்பர் 29இல் CLICK....மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து உபகரணங்களை ஏற்பாடு செய்து அதற்கான முழுமையான திட்டத்தையும் தானே வகுத்து நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

புரோகித்தை விசாரித்துள்ள மும்பையின் பயங்கரவாத தடுப்புத் துறைப் படையினரின் (Anti-Terrorism Squad) பார்வை, மேற்கொண்டு அடுத்தடுத்த இராணுவ உயர் அதிகாரிகளின் மீது விழுந்துள்ளது. புரோகித் மீது போலிசாருக்கு சந்தேகம் விழ ஆரம்பித்த கணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட அவரது தொலைபேசி உரையாடல்கள் அவருக்கும் அவருக்கு முன்னர் விசாரணை வட்டத்திற்குள் வந்து விட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிருவியுள்ளன.

மேஜர் ரமேஷ் சந்த் உபாத்யாயாவைப் பற்றிக் கடந்த 28.10.2008 அன்று சத்தியமார்க்கம் தளம் செய்தி CLICK.... வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹிந்துத்துவ புரோகித் - யார் இவர்?

ATS யின் மூத்த அதிகாரி அளித்த தகவலின்படி புனேயில் ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்த புரோகித், மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் நாட்டுப்பற்று மிக்கவராகவும் உள்ளவர் என்று பரவலாக அறியப்படுகிறார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இவர் கடந்த அக்டோபர் 1993யில் இராணுவத்தில் இரண்டாவது லெப்டினெண்ட் ஆகச் சேர்ந்து பணியாற்றினார். இராணுவ அதிகாரியாகக் கடந்த அக்டோபர் 94இல் அஸ்ஸாமில் இவர் தனது முதல் பணியினைத் துவக்கினார். பின்பு மணிப்பூருக்கு மாற்றலாகி 95வரை பணியாற்றினார். அதன் பின் நாகாலாந்தில் பணியாற்றிய இவருக்கு 1996இல் கேப்டன் ஆகப் பதவி உயர்வு கிடைத்தது.

புனே, ராஜஸ்தான் மீண்டும் புனே என்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய புரோகித், மேஜர் ஆகப் பதவி உயர்வு பெற்று இந்திய இராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவில் (intelligence wing) பொறுப்பு மிக்கப் பதவியில் அமர்ந்தார். கடந்த 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் அமர்நாத் பகுதிகளில் பணியாற்றினார்.

பொறுப்பான பதவியில் இருக்கும் போதுகூட தனது பயங்கரவாத இயக்கமான அபிநவ் பாரத் பற்றிய பல உரைகளை இவர் ஆற்றியது, அதற்கான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தல், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் ஆகிவற்றை புரோகித் செய்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. அபிநவ் பாரத் பயங்கரவாத இயக்கத்திற்கு 5000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் நாடு முழுதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

"மாலேகோனில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்குத் தேவையான வெடிமருந்துகளையும் திட்ட வடிவத்தையும் முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், அது அபிநவ் பாரத் உறுப்பினர்களுக்குக் கைமாறிய விதம் குறித்து எனக்குத் தெரியாது" என்று துவக்கத்தில் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் புரோகித்.

ஆனால், தொடர்ந்த போலிசாரின் புலன் விசாரணையில் இராணுவ உயர் அதிகாரியான புரோகித், அபிநவ் பாரத் இந்து பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் நிறுவன உறுப்பினர் (Founder Member) என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ATS அளித்துள்ள தகவலின்படி இராணுவ உயர் அதிகாரி புரோகித், தனது இயக்கத்தில் பணிக்கு அமர்த்தி உள்ள இளைஞர்களுக்கு வெடிமருந்துகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுப் பாகங்களை இணைப்பது ஆகிய பயிற்சிகளை முன் நின்று அளித்ததாகத் தெரிவித்துள்ளது.

இதற்கான தகவல்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

அபிநவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத இயக்கம், பிற ஹிந்துத்துவா இயக்கங்களுடன் பரஸ்பர தொடர்பில் இருத்தல், இயன்றவரையிலான மத வெறியினை ஊட்டி அவர்களைத் தயார் செய்தல், தயார் ஆனவர்களை உறுப்பினர்களாக ஆக்குதல் போன்ற பணிகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 2007 இல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள Army Education Corps Training College & Centreக்குப் பொறுப்பு வகித்த புரோகித், அங்கு அரபி பயின்று தேர்ச்சி பெற்றிருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். பின் லெப்டினெண்ட் கலோனிலாகக் கடந்த ஏப்ரல் 2008 இல் பதவி உயர்வு பெற்றார்.

இந்திய இராணுவத்தின் ஒரு பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான புரோகித் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்த ஏராளமானவர்களுக்குப் பண உதவி செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவை ஹவாலா மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1096&Itemid=51

**************

ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍....விடியோ--. பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

**********************

விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP