விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி
>> Wednesday, November 12, 2008
வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்! |
செவ்வாய், 11 நவம்பர் 2008 | |
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர். இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது. அப்டேட்ஸ்: சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1092&Itemid=51 |
0 comments:
Post a Comment