**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்...

>> Saturday, January 13, 2007

கேள்வி: அன்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்; இன்றோ அய்யா சிலையை உடைத்த காலிகள் உடலில் `கருப்புச் சட்டை’. இது எதைக் காட்டுகிறது?

பதில்: ஆர்.எஸ்எஸ் பார்ப்பன புத்தி மோசடியைக் காட்டுகிறது!

கேள்வி: பத்து வயது, பன்னிரெண்டு வயது மாணவர்கள்கூட கொலையாளிகளாக ஆவது எப்படி?

பதில்: சின்னத் திரை, பெரிய திரையின் அலங்கோல, ஆபாச அருவருக்கத் தக்க காட்சிகளின் தூண்டுதலான வக்கிரச் செயல்கள்!

கேள்வி: வறுமை தாண்டவமாடும் நாட்டில் கோயில் உண்டியலில் கோடி கோடியாக பணம் நிரம்புவது எப்படி? பதில்: அதனால்தான் வறுமை! பணத்தில் மட்டுமல்ல; புத்தியிலும் தான்! வறுமையை ஒழிக்க இயலாத வளமை! - viduthalai.
=======================
காந்தியாரை ஒரு MUSLIM கொன்று விட்டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள்

தமிழர் தலைவர் தர்க்கரீதியான பேச்சு

சிறீரங்கம் டிச. 20- பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் முன் புத்தியில்லை. சிறீரங்கநாதரிடம் மனு கொடுக்காமல் ஏன் ராமனிடம் கொடுத்தீர்கள்? ஏன் உச்சநீதி மன்றத்திற்கு ஓடி மனு போட்டீர்கள். உங்களுக்கு கொஞ்சம்கூட புத்தி இல்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவார்ந்த முறையிலே கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.
காந்தியார் கொல்லப்பட்டார். நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான். என்ன நடந்தது? மிகப் பெரிய விஷம பிரச்சாரத்தை அன்றைக்குத் தொடங்கினார்கள். 1948 ஜனவரி 3010ஆம் தேதி காந்தியார் கொல்லப்பட்ட சம்பவ செய்தி வெளியே வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே திரளுகிறார்கள். அந்த நேரத்திலே சொல்லுகின்றார்கள். காந்தியாரை ஒரு MUSLIM கொன்று விட்-டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள். காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் R.S.S.காரன். அவன் கையிலே ISLAMIYAR என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல இசுலாமியர்களின்மீது பழிபோட சுன்னத் செய்திருந்தான் அவன். பிறகுதான் தந்தை பெரியார் அவர்-ள் வானொலி மூலமாக மக்களுக்கு தெளிவு படுத்தினார். காந்தியை சுட்டுக் கொன்றவன் இசுலாமியர் அல்ல. தயவு செய்து எங்கேயும் மதக் கலவரங்கள் வரக்கூடாது என்று சொன்னார்.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வானொலியில் பேச வைத்ததன் மூலமாக மக்களிடத்திலே மதக் கலவரம் ஏற்படாமல் தடுத்தார். அந்த காலத்திலே எங்களுடைய தலைவர்களை வானொலி அழைக்காது. பெரியார்தான் அமைதி காக்கவேண்-டும் என்று மக்களுக்கு வேண்-டுகோள் விடுத்தார். காந்தியாரை சுட்டது யார் என்று உறுதியாக இன்னும் தெரியாத நிலையில் நீங்கள் பதற்றப்படக்கூடாது' என்று சொன்னார்.

இசுலாமியர்கள் வாழக்கூடிய வாணியம்பாடியிலே ஈரோட்டிலே கலவரம் நடந்தபோது மதக் கலவரங்களில் ஈடுபடக் கூடாது. மக்கள் ஒவ்வொரு வரும் கைகோத்து வாழவேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். அதற்குப் பிறகு காந்தியாரைச் சுட்டுக்கொன்றது கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் என்ற தகவல் வெளியானது. தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள் துப்பாக்கிப் பிடித்த கைக்குப் பின்னாலே என்ன சதி என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர வன்முறை கூடாது. எந்த பார்ப்பனர்க்கும் யாரும் தீங்கு செய்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் வேண்டுகோள் விடுத்து அமைதி காத்தார்.
இந்த பொறுப்புணர்ச்சி வேறு எந்த தலைவருக்காவது உண்டா? வேறு இயக்கத்திற்கு உண்டா? அதே பொறுப்புணர்ச்சி இன்றைக்கும் பெரியாருடைய தொண்டர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது (பலத்த கைதட்டல்).

மொரார்ஜி எழுதியிருக்கிறாரே அதன் காரணமாகத்தான் நாங்கள் கட்டுண்டோம் என்ற நிலையிலே இருக்கின்றோம். அன்றைய காலக்கட்டத்திலே உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் அவர்கள். அவர் தன்னுடைய சுய சரிதையிலே எழுதியிருக்கின்றார். காந்தியார் அவர்கள் சுடப்பட்ட செய்தி கேட்டவுடன் அன்றைய பம்பாய் மாநிலத்தில் பல பகுதிகளில் அக்ரகாரங்கள் சூறையாடப்பட்டன. மராத்திய பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எழுதியிருந்தார்கள்.ஆனால் தமிழ்நாட்டிலே அதுபோன்ற கலவரங்கள் நடைபெற்றதா? கிடையாது. எதற்காக இதை சொல்லுகின்றோம். நாங்கள் மனித நேயத்தை மறக்காதவர்கள்.
========================
கொள்ளை அடித்துக் கட்டிய கோவில்கள்

இந்த சிறீரங்கத்தில் புனிதம் கெட்டுவிட்டது புனிதம் கெட்டுவிட்டது என்று சொல்லுகிறார்களே அந்த செய்திக்கு நான் வருகிறேன். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் "பௌத்தமும் தமிழும்'' என்ற நூலிலே ஒரு செய்தி சொல்லுகின்றார். கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகப்பட்டினத்துப் பவுத்த விகார் ஒன்றில்முழுவதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச் சிலையைக் கவர்ந்து கொண்டு போய் அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரைப் பிரபாவம்' முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகிறது'' என்று சொல்லியிருக்கின்றார்திருமங்கை ஆழ்வார் என்பது ஒரு கொள்ளையன் ஆகும். நாகப்பட்டினத்தில் இருந்த பொன் புத்த விகாரத்தை எடுத்துவந்து அதை உருக்கி அந்த பணத்தில் கட்-டப்பட்டதுதான் திருவரங்கத்து கோயில் மதிற் சுவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதை எழுதியவர்கள் யார் நாத்திகர்களா? என்ன இந்த நகரத்தில் புனிதம் கெட்டுவிட்டது இது என்ன இந்து ராஷ்டிரமா? அதைத்தான் நீதிமன்றத்திலே நீதிபதிகள் கேட்டார்கள்.

சிறீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கக்கூடாது என்று சொல்லுகின்றாயே அந்த சிறீரங்கம் இந்து மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றா? என்று நீதிபதிகள் நீதிமன்றத்திலே கேட்டார்களே. உலகத்திலேயே இந்து நாடு என்ற ஒரேஒரு நாடு தான் இருந்தது. அதுதான் நேப்பாளம். ஆனால்அந்த இந்து நாடும் மாறிவிட்டது. இப்பொழுது அதற்கும் இடம் கிடையாது.நீதிமன்றத்தில் பல செய்திகளை வெளியே கொண்டு வருவோம் நீதிமன்றத்திலே இதுபற்றி வழக்கு வந்தால் பல்வேறு விளக்கங்களை நாங்கள் ஆதாரப்பூர்வமாக அளிக்க இருக்கின்றோம். எனவே இன்னும் வழக்கு இருக்கின்றது என்றெல்லாம் நீங்கள் கனவு காண வேண்டாம்.

சரித்திரத்தில் முழுவதுமாகத் தெரிந்தவர்கள் நாங்கள். இந்த திருவரங்கத்திலே பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்கள் வசிப்பவர்கள் 65 சதவிகிதம் பேர். நான் யாரையும் புண்படுத்துவதற்காக சங்கடப்படுத்துவதற்காக சொல்லவில்லை. உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லுகின்றேன். இது புனிதமான நகரமா?இதுதான் மிகவும் முக்கிய-மான கேள்வி. சிறீரங்கம் புனிதமான நகரம் என்று கமிட்டிப் போட்டு முடிவு செய்திருக்கி-றீர்களா? இவர்கள்தான் ரொ-பவும் புனிதத்தைக் காக்கக்-கூடியவர்கள். இந்த ஊரில் எல்லோருக்கும் உரிமை உண்டா இல்லையா? நான் ஒரு கணக்கெடுத்து சொல்லுகின்றேன். இந்த ஊரில் கறிக்கடை எத்தனை இருக்கின்றது என்று தெரியுமா? மட்டன் STALL 20 கடைகளுக்கு மேல் இருக்கின்றன.இதைப் பார்த்து யாராவது மனம் புண்படுகிறது என்று சொல்வார்களா? மீன் கடைகள் 12. கோழி வறுவல் செய்கின்ற கடைகள் 9. மாட்டுக் கறி கடைகள் 5. அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய உணவை வாங்கிச் சாப்பிடுகின்றார்கள். சைவ உணவு சாப்பிடுகின்ற-வர்கள் இவைகளை எல்லாம் வாங்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?வைஷ்ண சம்பிரதாயத்திலே ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் வெங்காயம் சாப்பிட-மாட்டார்கள். வெங்காயத்தைக் கண்டாலே ஒதுக்கிவைத்து விடுவார்கள். புராணத்தினுடைய தாத்திரியம் வெங்காயத்தை குறுக்கே வெட்டினால் அது விஷ்ணுவினுடைய சங்கு சக்கரத்தைப்போல இருக்-கிறதாம். எதற்காக வெங்காயத்தை ஒதுக்குகிறார்களோ அது அவர்களுடைய உரிமை. அது சாப்பிடுபவர்களின் உரிமை. இன்று மாலை பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ராமர் படத்தை எடுத்து ஊர்வலமாக போக முயற்சித்தோம். காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. ராமரை ஒரு மண்டபத்திற்குள் கொண்டு வைத்து அவர்களுடைய கோரிக்கை மனுவை ராமரே உங்களிடத்-திலே வைக்கின்றோம் என்று சொல்லி வைத்துவிட்டார்கள். விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்களும் மற்றவர்-களும். அப்புறம் ஏன் உச்சநீதி-மன்றத்திற்கு சென்று மனு போடுகின்றீர்கள்? அங்கே என்ன JUSTICE ராமன் இருக்கின்றார்களா? JUSTICE விபீஷணன் இருக்கிறாரா?இந்த ஒன்றைத்தானய்யா அவர்கள் புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார்கள். ஏன் ராமனிடம் கோரிக்கை மனுவை வைத்தார்கள்? ரெங்கநாதரை எழுப்பிப் பார்த்தார்கள். அவர் எழுந்திருக்கவில்லை. அதனால் மனுவை கொண்டுபோய் ராமரிடம் கொடுத்தார்கள். இந்த செய்தி பத்திரிகையிலே வந்திருக்கிறது. எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்.

நீங்கள் பெரியார் சிலையை மசூதிக்கு முன்னாலே கொண்டு போய் வைப்பீர்களா? சர்சுக்கு முன்னாலே கொண்டு போய் வைப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இது ஒரு மடத்தமான கேள்வி. தஞ்சாவூரில் மசூதிக்குப் பக்கத்தில்தான் பெரியார் சிலை இருக்கிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லமுடியும்.
VIDUTHALAI 21.12.06
====================
பாபர் மசூதியை இடித்த வன்முறையாளர்கள் நீங்கள்தானே!

மனம் புண்படுகிறது என்று பேசுகிறீர்களே, நீங்கள் பாபர் மசூதியை இடித்தீர்களே, அப்பொழுது எவ்வளவு பேருடைய மனம் புண்பட்டி-ருக்கிறது தெரியுமா உங்களுக்கு? மனம் புண்படுகிறது என்று பேசினால் என்ன அர்த்தம். மனம் என்பது உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? என்று பார்ப்பனர்களையும், அவர்களது கூலிகளையும் பார்த்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் காட்டமாக சாட்டையடி கேள்வி எழுப்பினார்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP