**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முந்திரிக் கொட்டை மனிதர்கள்!

>> Thursday, January 25, 2007

விசித்திரமான முந்திரிக் கொட்டை மனிதர்கள்!

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்கள் பலர் உண்டு.
அதுபோலவே, மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும், உலகமும் நம்மை நல்லவர்கள் என்று எண்ணி புகழைத் தங்கள் தலைமீது கொட்டும் என எண்ணி அதற்காக நல்லவர்கள் பாத்திரங்களை சிறப்பாக ஏற்று ந(டி)டப்பவர்களும் உண்டு.

தான் ஒரு உலக அறிவுக்களஞ்சியம்; தனது அனுபவம் எவருக்கும் இல்லை. எனவே, எவருக்கும் எப்போதும் அறிவுரையை இலவசமாக வாரி வழங்கிடும் வள்ளல் ஆகலாம் என்ற எண்ணத்துடன் `அறிவுரைச் சந்தை’ நடத்துவோர் பலருண்டு!

எவர்க்கும் உதவுமுன், அவர்கள் ஏன் நம்மை நாடி வந்தார்கள் என்பதைக் கொஞ்சம் நின்று நிதானித்துத் தெளிவு பெறவேண்டும் நாம்.

தங்களது மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தின் சுமையை இறக்கி வைக்க சுமை தாங்கிகளைத் தேடி சற்று இளைப்பாறி விட்டுச் செல்லும் வழிப் போக்கர்களையும் வாழ்க்கையில் நாம் சந்தித்துக் கொண்டிருப்பவர்களே!

`உலகம் பலவிதம்; அதில் இவர் ஒருவிதம்’ என்று புரிந்துகொள்ளும் பட்டறிவு நமக்கு இருந்தால், தராதரத்தை எடை போட்டுப் பார்த்து, செயதக்க செய்து, செயத்தகாமையை செய்யாமல் விட்டு நன்கு நிம்மதியுடன் வாழலாம்!

ஆனால், நம்மில் பலருக்கும் உள்ள சுபாவம், எவர் எந்தப் பிரச்சினை என்று வந்து சொல்லத் தொடங்கினால், உடனே பிரச்சினைக்குத் தீர்வு காணும் மாமருத்துவராக தம்மை எண்ணிக் கொண்டு அறிவுரைகளை அடை மழைபோல் பொழிய ஆரம்பித்துவிடுவார்கள்.

வந்த அவர் தனது பிரச்சினையை, மனதின் சுமையைக் கொட்டிவிட எண்ணி எந்தக் குப்பைத் தொட்டி அழகானது என்று வண்ணத்தைப் பார்த்து - எண்ணத்தைப் பார்க்காமல் கொட்டிவிட்டுச் செல்ல வந்தாரே தவிர, விடை, விளக்கம், தீர்வு காண வரவில்லை என்பதை ஏனோ பலரும் புரிந்துகொள்ள மறுத்து அறிவுரைகளால், வாட்டி வதைத்து விடுகின்றனர்.

இன்னும் சில மேதாவிகளோ, சொல்ல வந்தவர், என்ன சொல்லுகிறார் என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாது, இவரே இடை விடாமல் பேசிக்கொண்டே இருப்பார்;

`நான் தான் அப்போதே சொன்னேனே’’, ``எனக்கு இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே தெரியுமே’’, ``இப்படி அது நடக்காமல் வேறு எப்படிங்க நடக்கும்?’’ -

பிரச்சினையைக் கூற வந்தவர் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றியே கவலைப்படாது சளசளவென்று பேசி, சொல்ல வந்ததையே சொல்லவிடாமல், முந்திக் கொள்ளும் முந்திரிக் கொட்டை மனிதர்கள் பலர் உண்டு.

நாம் அவர்களில் ஒருவராகிவிடக் கூடாது என்பதை உணரவேண்டும்.

``உலகின் உண்மைப் பிரச்சினைகள் என்னவென்பதை நாம் தெரிந்து வைத்துள்ளவர்களாகவே இருப்பது நல்லது
.
அப்படித் தெரிந்துகொள்வதில் மனதை அழுத்தமாக வைத்து புரிந்துகொண்டால், யாருக்கு எப்படி உதவுவது; யாருக்கு உதவி செய்யவேண்டி யதில்லை என்பதைத்தானே ஒவ்வொருவம் அறிந்துகொள்ள முடியும்’’

`நான் சாப்பிட்ட மருந்து மூலம் குணம் அடைந்துவிட்டேன்; அதனால் நீங்கள் அதையே சாப்பிடுங்கள்’ என்று அவசரப்பட்டு அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லக் கூடாது!

மற்றவர் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு சொல்லாதீர்கள்; உங்கள் பிரச்சினைகளுக்கே உங்களால் எளிதில் விடை காண முடியாத நிலையில், ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம்?

எனவே, காது கொடுத்து கேளுங்கள் பொறுமையாக; தீர்வை தேவைப்பட்டால் மெல்ல ஆய்ந்து தேர்ந்து பல கோணங்களில் எடுத் துரையுங்கள் - அது அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது!

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP