**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மெட்ராஸ்_ஐ வந்தால்

>> Saturday, January 13, 2007

‘"மெட்ராஸ்ஐ என்பது ஓர் தொற்று நோய். கண்ஜெங்ட்டிவ்வட் டிஷ்யூவில், அதாவது கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளைப் படலத்தின் மீது மெல்லியதாக படிந்திருக்கும் (கண்ணுக்குத் தெரியாத) நுண்ணிய பகுதியில் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால்தான் கண்கள் சிவக்கின்றன. கண் அரிப்பு ஏற்பட்டு, எரிச்சல் உருவாகிறது கண்ணில் அழுக்கு வந்துசேருகிறது.

மெட்ராஸ்_ஐக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என்பதே சுவாரஸ்யமான விஷயம். எழும்பூர் கண் மருத்துவமன 150 ஆண்டு காலப் பழம வாய்ந்த. உலகத்திலேயே இரண்டாவது கண் மருத்துவமன சென்னயில்தான் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட எழும்பூர் கண் மருத்துவமணையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அடினோ என்கிற வைரஸ் கிருமிகளால்தான் இந்தக் கண் நோய் வருகிறது என்று கண்டுபிடித்தார்கள். அதனாலேதான் இந்த நோய்க்கு மெட்ராஸ்_ஐ என்று பெயர் வைத்தார்கள்.

பொதுவாக, தட்பவெப்ப நிலை மாறும்போது, இந்த நோய் அதிகம் வரும். உதாரணமாக, மழைக் காலத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் மெட்ராஸ்_ஐ நிறைய பேருக்கு வரலாம். அல்லது வெயில் காலத்தில் (வெயில் காலம் மாம்பழ சீஸன் என்பதால் ஈக்கள் மூலம் இந்த நோய் எளிதாகப் பரவும்) பலருக்கும் வரலாம்.

ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மிகுந்த அளவில் மாசுபடுவதால் வருஷம் பூராவும் யாரோ ஒருவருக்கு மெட்ராஸ்_ஐ சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.

அடினோ கிருமிகள் தண்ணீர் மூலம் வெகுவேகமாகப் பரவும். இந்தக் கிருமியால் காற்றின் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்றாலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மிக அருகில் சென்றால் அவர்கள் தும்மும்போது, அவர்களுடய மூக்கிலிருந்து புறப்படும் வைரஸ் கிருமி காற்றின் மூலம் நம்மையும் வந்து தாக்க வாய்ப்புண்டு.

மெட்ராஸ்_ஐ வந்தவர்களப் பார்த்தாலே நமக்கும் அந்த நோய் வந்விடாது. மெட்ராஸ்_ஐ வந்தவர்களுடய கண்ணத் தொட்டு, அதே கையால் உங்கள் கண்ணையும் நேரடியாகத் தொட்டால் நிச்சயம் மெட்ராஸ்_ஐ வரும்.

அல்லது மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் பயன்படுத்திய கர்ச்சீப், தலயணை போன்ற பொருட்களை நாமும் பயன்படுத்தினால் நமக்கும் அந்த நோய் வரும்.

ஏர்கண்டிஷன் ரூமில், லிப்ட்டில், காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இந்தக் கிருமிகள் வேகமாகப் பரவும்.

மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் யாராக இருந்தாலும், ஒரு மூன்று நாளைக்கு எங்கும் போகாமல், வீட்டில் தனியாக இருப்பது நல்லது.

மெட்ராஸ்_ஐ வந்தால் கண்ணில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதனால் கண் வீக்கம், எரிச்சல் போன்ற வேறு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மெட்ராஸ்_ஐ வந்தால் மெடிக்கல் ஷாப்பில் ஏதாவது ஒரு மருந்தை நீங்களே வாங்கிப் போடாமல், ஒரு நல்ல கண் டாக்டரை அணுகி, மருத்துவம் செய்துகொள்ளுங்கள்.

மெட்ராஸ் ஐ வந்தால், கண்ணுக்குள் ஒரு சொட்டு எலுமிச்சை சாறுவிட்டால், கொஞ்ச நேரம் எரிச்சல் இருந்தாலும் உடனே மெட்ராஸ் ஐ போய்விடும். தாய்ப்பால் ஒன்றிரண்டு சொட்டு விட்டாலும் குணமாகிவிடும் என்று வைத்தியம் சொல்கிறார்களே... செய்து பார்க்கலாமா?’’

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. எனவே அதை கண்ணில் விட்டால் நோய் தீரும் என்று நம பெரியவர்கள் சொன்னது ஓரளவுக்கு உண்மதான். ஆனால் இப்போது சக்திவாய்ந்த மருந்துகள் வந்துவிட்டதால், கண்ணில் தாய்ப்பால் ஊற்ற வேண்டிய அவசியம் இல்ல.

இதே போல எலுமிச்சம் பழச்சாறு ஒரு சொட்டு கண்ணில் ஊற்றினால், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் நோய் குறைய வாய்ப்புண்டு.

ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் கண்கள் வீங்கிவிடும். மெட்ராஸ்_ஐ குறைவதற்குப் பதிலாக கண் பார்வை போய்விடும் அளவுக்கு பல பிரச்னகள் வந்து சேர்ந்துவிடும்.

இப்படி செய்வதற்குப் பதிலாக, சுடுதண்ணீரால் மூன்று முறை கண்ணைக் கழுவினால் போதும். சோப்பு போட்டும் கழுவலாம்’’

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP