உங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்..!
>> Friday, March 8, 2013
அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…என்னாது நிக்கோடினா..?!!
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!
அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!!
" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்…
அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும்
வாங்கினேன்..
( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா
எனக்கு மனசு தாங்காதுல்ல… )
சரி மேட்டர்க்கு வருவோம்…
கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு
அது இருக்கா..? இது இருக்கான்னு
கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின்
இருக்குன்னு யாருமே சொல்லலை…
என்னாது நிக்கோடினா..?!!
DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..
( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும்)
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி
24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின்
இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல
அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
பல்லு விளக்கினா… அது 9 சிகரெட்
குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே
வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு
எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட
சேவையை எப்படிதான் பாராட்றது..?
" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்… என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே
சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!
The highest amount of nicotine at 18 milligram/gram (mg/g) was found in Colgate Herbal products while 10 mg/g of nicotine was found in Neem Tulsi brand.
S. No | Brand | Nicotine found in dental care products in 2008 (mg/g) | Nicotine found in dental care products in 2011 (mg/g) | Manufacturer |
1. | Vicco | 0.002 | 0.05 | Vicco laboratories, Goa |
2. | Alka dant manjan |
- | 1.0 | Dev Chemical Works Pvt. Ltd., New Delhi |
3. | Yunadant | nil | 1.7 | Aayam Herbal And Research, Jaipur, Rajasthan |
4. | Dabur Red | 5.75 | 0.01 | Dabur India Limited, Solan, Himachal Pradesh |
5. | Payo kil | nil | 16 | Gurukul Kangri Pharmacy, Haridwar, Uttarakhand |
6. | Colgate Herbal | nil | 18 | Colgate Palmolive India Limited, Mumbai, Maharashtra |
7. | Neem Tulsi | nil | 10 | Ayur Siddha Limited, Kangra, Himachal Pradesh |
8. | Stoline Paste | nil | 0.06 | Group pharmaceuticals limited, Kolar, Karnataka |
9. | Himalaya | nil | 0.029 | Himalaya Drug Company, Bengaluru, Karnataka |
10. | Sensoform | nil | 0.065 | Indoco Remebies Limited, Solan, Himachal Pradesh |
மேலதிகமான விபரங்களுக்கு கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.
Sources :
1. Your toothpaste may cause cancer
2. Toothpastes contain cancer causing nicotine, finds study
3. Nicotine Contents in Some Commonly Used Toothpastes and Toothpowders: A Present Scenario
நன்றி : மண்ணடி காகா.
6 comments:
சலாம் பாய்.
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!
சலாம் பாய்.
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!
அப்போ பழையபடி ஆலம் விழுதே துணை என்று சொல்லுறீங்களா சகோ ?...:)இதையும் தாண்டி இனிப் பல்லு விளக்கமா திரியப் போறவங்க எத்தனை பேரோ :)தகவல் பகிர்வுக்கு நன்றி .
சலாம் அப்பா,
//( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல… ) //
இந்த வயசிலும் நக்கலான்னு கேக்க வந்தேன்...
ஹா..ஹா..ஹா... நல்லவேள கீழ உள்ள லிங்க்கையும் பார்த்துட்டேன் :-)
இப்ப கூட உப்பு இருக்கா , மொளகா பொடி இருக்கான்னு வந்த விளம்பரம்லாம் போய் இப்ப ஆன்டி இருக்கான்னு புதுசா வெளம்பரம் வேற...
உஷார் பதிவின் பகிர்வுக்கு நன்றி
ஜஸக்கல்லாஹ் ஹைர்
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment