போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம்.
>> Monday, March 25, 2013
சிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம்!
தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம்.
சிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம்!
குண்டுவெடிப்புகளின் பெயரால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு வாழ்க்கை சித்திரவதையாக மாறும் வேளையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடுகின்றன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ கண்டுபிடித்த ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் செல்லும் அவலம் இந்நாட்டில் தொடருகிறது.
புனேயில் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்துள்ளார். புரோகித்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
புரோகித்தை கஸ்டடியில் பெற்று விசாரணைச் செய்யவேண்டும் என்று என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து எதுவும் தெரியாது என்று கண்ட்ரோலர் பதில் அளித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு புரோகித் கைதானதைத் தொடர்ந்து ஆயுதப்படை தீர்ப்பாயத்தின்(எ.எஃப்.டி) விசாரணை கமிஷன் இவரை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், தனது முன்னிலையில் முக்கிய சாட்சிகளை விசாரிக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனவும் புரோகித் கோரியதைத் தொடர்ந்து புதிய விசாரணை தேவை என்று எ.எஃப்.டி ராணுவத்திடம் அறிவுறுத்தியது. இவ்விசாரணை முடிவுற்று விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் புரோகித்தை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவில்லை. இதன் காரணமாக புரோகித் சம்பளம் மற்றும் இதர படிகளை பெற தகுதியுள்ளவர் என்று உயர் ராணுவ அதிகாரியொருவர் கூறுகிறார்.
அதேவேளையில், மூத்த ஹிந்துத்துவா தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனில்(டி.ஆர்.டி.ஓ) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றிய அஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் நீக்கிவிட்டனர் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது ஜாமீனில் விடுதலையான மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க கூட தேசிய புலனாய்வு ஏஜன்சியால் இயலவில்லை. இவ்வழக்கில் இதர இரண்டு நபர்கள் மீது ஆதாரங்களை சமர்ப்பிக்க கூட முடியவில்லை.
முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!
25 Mar 2013 புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், குற்றவாளிகளாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஷிண்டே கூறியது: நிரபராதிகளை காவலில் வைப்பது கடுமையான குற்றம். இத்தகைய சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இழப்பீடு வழங்க ஒவ்வொரு வழக்கையும் தனியாகபரிசோதிக்கவேண்டும். புலனாய்வு ஏஜன்சிகளின் திறமை குறைவும், ஆதாரங்கள் இல்லாமையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாக காரணமாகிறது. நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடலாம்.
குற்றவாளிகளான அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 211-வது பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள்கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிரபராதிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.
முன்னர் அமைச்சர் ரஹ்மான் கான் எழுதிய கடிதத்தில், 10 மற்றும் 14 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக கண்டறிந்து நீதிமன்றங்கள் விடுவித்த சம்பவங்களை கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் வழக்குகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், சிறப்பு நீதிமன்றங்கள் எப்பொழுது அமலுக்கு வரும் என்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் தலையிடமுடியாது என்று ஊடகங்களிடம் கூறிய ரஹ்மான் கான், பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றார்.
தீவிரவாதம் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் தனியாக ஆராயவேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பதிவுச் செய்த 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட அப்பாவிகள் 10 வருடங்களுக்கும் அதிகமாக அநியாயமாக சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.அண்மையில் பெங்களூர் தீவிரவாத வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி இஜாஸ் செய்யத் மிர்ஸா மற்றும் டெக்கான் ஹெரால்டில் பத்திரிகையாளரான முதீவுற்றஹ்மான் சித்தீகி ஆகியோரை நீதிமன்றம் விடுவித்திருந்தது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைதுச் செய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் குற்றவாளிகள் என்பது பின்னர் நிரூபணமானது.
மேற்கண்ட சம்பவங்களைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது அநியாயமாக தொடுக்கப்படும் தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த மாதம் 2-ஆம் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ரஹ்மான் கானை சந்தித்தனர்.
முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!
தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார். இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.
இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்பாவிகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில்பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை. நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது
பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன்விடுதலையாகியுள்ளார்.
நேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன்.
போலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது. சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.
பத்திரிகை துறையில் தொடருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.
லஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.
THANKS TO : http://www.thoothuonline.com
3 comments:
சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.
1.யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா? - வினவு
2. 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா?
நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?
3.
இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்
4.
ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான
“அம்பலமாகும் காவிப்படையின் இருட்டு ரகசியங்கள்." விடியோக்கள்
5 5. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ
6.டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....!!!
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!
புதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.
1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.
ஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
ஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது.
மேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.
லியாகத்தின் கைது:என்.ஐ.ஏ விசாரணை நடத்தும்!
25 Mar 2013 NIA may be asked to probe militant liyagath arrest
புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீர் அரசிடம் சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி லியாகத்தை டெல்லியில் நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்தவேண்டும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அப்ஸல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிவாங்கவே லியாகத்தும் குழுவினரும் டெல்லி வந்தனர் என்ற பொய்யை தொடர்ந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு கூறி வருகிறது.
டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்த ஹிஸ்ப் கமாண்டரை கோரக்பூரில் வைத்து கைது செய்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.
ஆனால், லியாகத் தங்களின் அனுமதியுடன் சரணடைய பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஜம்மு-கஷ்மீர் போலீஸ் கூறுகிறது.
லியாகத்தின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களும், கஷ்மீர் அரசு வசமுள்ள ஆவணங்களும் கஷ்மீர் போலீசின் கூற்றை உறுதிச் செய்கிறது.
இச்சம்பவம் குறித்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
டெல்லி போலீஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் சுதந்திரமான விசாரணை நடத்துவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.
லியாகத்திற்காக பழைய டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏ.கே.56 துப்பாக்கியும், க்ரேனேடுகளும் கொண்டுவைத்த நபர் என்று குற்றம் சாட்டிஒருவரது உருவப் படத்தையும் டெல்லி ஸ்பெஷல் பிரிவு தயார் செய்து வைத்துள்ளது.
.
Post a Comment