கருணாநிதிபேரன் கொழும்பில் கட்டும் பிரமாண்டமான காம்ப்ளெக்ஸ்!
>> Thursday, March 14, 2013
இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது. போர் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அப்போது அவரது குரல் கம்மியது. அவரது பேச்சுக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் போருக்கு பின்பு தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வாரம் 4 முறை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகின்றதாம்.
இலங்கையில் மிக பிரமாண்ட அளவில் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஸ்பைஸ்ஜெட் நடைமுறைகள் கொழும்புவில் வொக்ஸ்ஹால் வீதியில் உள்ள ஜெட்விங் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதிய அலுவலக காம்ப்ளெக்ஸ் தயாரானதும், ஸ்பைஸ்ஜெட் சேல்ஸ் அன்டு மார்க்கெட்டிங் நடைமுறைகள் அங்கிருந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கை கொழும்புவில் இருந்து 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸூக்காக விண்ணப்பம் செய்துள்ளது. அதன் அர்த்தம், கொழும்புவில் இருந்து பயணிகளை இந்தியாவுக்கு கொண்டுவராமல், மூன்றாவது நாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முடியும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், இந்தியாவில் உள்ளது. ஒரு பைலாட்ரல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே லேன்டிங் ரைட்ஸை தமக்கும் கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளது கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம். இலங்கை அரசு, கலாநிதி மாறனுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்பதே தற்போதுள்ள நிலை.
ஸ்பைஸ் ஜெட், கொழும்புவில் இந்த ரைட்ஸை பெற்றால், அதன் மிடில்-ஈஸ்ட் (சார்ஜா) ஆபரேஷன் தூள் கிளப்பும்.
சிங்கள வியாபாரிகள் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு வந்து போக ஸ்பைஸ்ஜெட் விமானம் தங்களுக்கு ஏதுவாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்களாம்.
ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் செயல்பட கொழும்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதற்கு மேல் உண்மைகளை மக்கள் முன்பு விளக்க வேண்டியது தயாநிதி மாறனின் கடமையாகும்.
0 comments:
Post a Comment