**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லீ்ம்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் - மார்க்கண்டேய கட்ஜூ .

>> Thursday, March 7, 2013

நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின்போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டும். யார் மீதும் எந்த துவேஷ உணர்வும் ஏற்படாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.

யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை.

ஆனால் அதற்குள் பல மீடியாக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியி்ட்டு வருகின்றன. அது தவறானதாகும்.

முஸ்லீம்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு இமேஜை சிலர் உருவாக்கி வைத்து விட்டனர்.

இதனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களை சந்தேகப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மேலும் எந்த ஒரு வழக்கிலும் முஸ்லீம் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.

அவர் அப்பாவியாகவே இருந்தாலும் தன்னை நிரூபிக்க அவர் கடுமையாக போராடும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் வருத்ததிற்குரியதாகும்.

ஒருவரை காரணமே இல்லாமல் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது.

நமது நாட்டில் தவறான, பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிவி சேனல்கள் ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைச் சொல்லி இதுதான் நடத்தியது என்று செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது பொறுப்பற்ற போக்காகும்.

இப்படிச் செய்வதன் மூலம் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது முஸ்லீம்களின் செயல்தான் என்று மக்கள் தவறாக கருத ஆரம்பிக்கும் நிலை ஏற்படும்.

மேலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு போடுபவர்கள் என்ற தவறான கருத்தும் மக்கள் மனதில் பதிவாகிவிடும்.

எனவே மீடியாக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

Posted by: Sudha Published: Thursday, March 7, 2013, 13:18 [IST] Ref:http://tamil.oneindia.in/news/2013/03/07/india-stop-targeting-muslims-blasts-katj-171096.html

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு


7.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது

“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.

இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,

இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,

கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்

பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.

தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.

************


சொடுக்கி >>> நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!! <<< படிக்கவும்.

2 comments:

VANJOOR March 7, 2013 at 7:02 PM  

Dear Mr. Gurunathan,

Thank you for your note.

Removed the unintentional label.

Regards.
Vanjoor

suvanappiriyan April 4, 2013 at 9:22 PM  

சலாம்!

அருமையான பகிர்வு பாய்!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP