தெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.
>> Friday, March 22, 2013
இதை துரோகத்தின் வெற்றி என்பீரா? அல்லது தியாகத்தின் தோல்வி என்பீரா? ஒரு மாவீரனின் வாரிசுகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு வறுமையின் கோரபிடியில் அநாதைகளாக விடப்பட்டிருக்கிறார்கள்.
அதற்காக இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலும் தெற்குப் பகுதிகளிலும் ஆட்சி புரிந்துகொண்டிருந்த மன்னர்களையும் பாளையக்காரர்களையும் புரட்சியாளர்களையும் ஒருங்கிணைக்கப் பெரும் முயற்சி எடுத்தார். பிரெஞ்சுக்காரர்களோடும் கூட்டணி அமைத்தார். அனால் பெரும்பாலான மன்னர்களும் சில பாளையக்காரர்களும் திப்புவுடன் இருந்த சிலரும் துரோகமிழைத்துக் காட்டிக் கொடுத்ததால் வரலாறு எதிர்த்திசையில் சுழன்றது. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையிலும் அஞ்சாது நின்று எதிரியை நேருக்கு நேராய்ப் போர்க்களத்தில் சந்தித்து வீரமரணம் அடைந்தார்.
அவரது மரணத்துக்குப் பின் 1799அம் ஆண்டில் அவரது 12 ஆண் மக்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் கைது செய்யப்பட்டு வேலுர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து ஆரவாரமில்லாமல் புலம் பெயர்ந்து வேலுரைச் சுற்றி முகாமிட்டனர்.
சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரெனப் புரட்சி செய்வது என்று முடிவு செய்தனர். அனால் அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலுர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இறுதியாக திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 1806அம் அண்டில் அந்தக் குறிப்பிட்ட நாளில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினார்கள். சில ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்றொழித்து கோட்டையின்மேல் திப்புசுல்தானின் கொடியையும் பறக்கவிட்டார்கள். ஆனாலும் ஆங்கிலேயர்கள் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கி ரவைகளாலும் பீரங்கிக் குண்டுகளாலும் புரட்சியை நசுக்கினார்கள். அதில் திப்புவின் வாரிசுகளில் சிலரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். ஆந்தப் புரட்சியைச் சிப்பாய் கலகம் என்று அங்கிலேயர்கள் திரித்து பழித்து கூறினாலும் இதுதான் இந்திய விடுதலைப் போரின் முதல் தீப்பொறி உண்டான நாள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் புரட்சிக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று அங்கிலேய அரசு அறிவித்தது. ஆனால் அது நம்ம ஊர் அரசியல்வாதிகளின் வாக்குறுதியைப்போலவே காற்றில் கரைந்து போனது.
அதன் காரணமாக வறுமையின் கோரபிடியில் சிக்கிய அந்த மாவீரனின் வாரிசுகள் அனைவராலும் கைவிடப்பட்டுத் தெருவில் நிற்கிறார்கள் கூலித் தொழிலாளர்களாக!
திப்புவின் பேரக் குழந்தைகளில் ஒருவரான அன்வர்ஷாவின் வாரிசுகளான சன்வர், அன்வர், திலாவர், ஹஸன் ஆகிய நால்வரும் அவர்களின் குடும்பத்தினரும் இன்று கல்கத்தாவிலுள்ள இளவரசர் அன்வர்ஷா தெரு இன்று திப்புவின் பேரக்குழந்தையின் பெயராலேயே அழைக்கப்படும் தெருவில் உள்ள ஒரு சிறிய குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இதில் சன்வரும், அன்வரும் சைக்கிள் ரிக்சா இழுத்துப் பிழைக்கிறார்கள். திலாவரும் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தி வருகிறார், ஹஸன் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோரிக்சாக்களுக்கு சீட் கவர் தைத்து கொண்டும் பிழைத்துக் நடத்திப் கொண்டிருக்கிறார்கள்.
திப்புவின் காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் ஆங்கிலேயருக்கு ஆள் காட்டிகளாகவும் நாட்டை வெள்ளையரிடம் அடகுவைத்த கோழைகளாகவும் விடுதலைப் போரின் காலைவாரிய துரோகிகளாகவும் எனக்கும் விடுதலைப் போருக்கும் சம்பந்தமில்லை என்று வெள்ளையரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கடைந்தெடுத்த சுயநலப் பேர்வழிகளாகவும் எராளமானோர் இருந்தார்கள். இன்று அவர்களின் வாரிசுகள் ராஜ மரியாதையோடு நடத்தப்படுகிறார்கள். கொடியேற்றும் விழாவிலிருந்து கொடியிறக்கும் விழாவரை அனைத்துக்கும் தலைமையேற்றுத் துவக்கி வைக்க முறையாக அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும்
அமைச்சர்களாகவும் மேயர்களாகவும் பெரும் சொத்துக்களைக் கொண்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாகவும் பவனி வருகிறார்கள். அவர்களுக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மானியமாக வழங்குகிறது அரசு. மேலும் இவர்களின் முன்னோர்களான நாட்டைக் காட்டிக்கொடுத்த தேசத் துரோகிகளை மாவீரர்களாகச் சித்தரித்தும் அவர்களைப் பாடப் புத்தகங்களில் ஏற்றியும் வரலாற்றையே புரட்டும் கொடுமையும் நடக்கிறது. அந்தத் துரோகிகளில் சிலர் பல்லிளித்துக் கொண்டிருக்கும் படங்களை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைக்கும் கேலிக்கூத்துகளும் நடைபெறுகின்றன.
இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் ஆங்கிலேயரின் காலத்திலேயே அனைவராலும் கைவிடப்பட்ட திப்புவின் வாரிசுகள் மீது பரிதாபப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வசதி படைத்த முஸ்லிம்களில் சிலர் மரியாதை நிமித்தமாகவும் கடமை என்று உணர்ந்தும் தங்களுக்குச் சொந்தமான இன்றைய மதிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை வக்ஃபு செய்தனர். மேற்குவங்க வக்ஃபு வாரியத்தின் பராமரிப்பில் இருந்த அந்தச் சொத்துக்களில் பெரும்பகுதி இன்று மேற்குவங்க அரசாலும் சமூக விரோதிகளாலும் சில தனியார் நிறுவனங்களாலும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கல்கத்தா நகரின் இதயப் பகுதி என்று அழைக்கப்படும் இளவரசர் அன்வர்ஷா தெருவில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இது திப்புவின் வாரிசுகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்த சொத்து. அது முழுவதும் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சூதாட்டக் கிளப்புகளும் விபச்சார விடுதிகளும் நடக்கும் இடமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
கல்கத்தாவில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள திப்புவின் வாரிசுகளுக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை ஷாவாலஸ் என்ற மதுபானம் தயாரிக்கும் நிறுவனமும் கல்கத்தா கோல்ஃப் கிளப்பும் ஆக்கிரமித்துள்ளன. இதற்காக மேற்குவங்க வக்ஃபு வாரிய அதிகாரிகளுக்கு பல லட்சம் இலஞ்சம் கொடுத்து சரிசெய்துள்ளனர்.
இது தவிர பல நுறு எக்கர் நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனவான்களும் மேற்குவங்க அரசும் ஆக்கிரமித்துள்ளன. அதை எதிர்த்து அன்வர்அலம்கான் என்ற சமூக சிந்தனையுள்ள வழக்கறிஞர் நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். மேற்குவங்க அரசின் ஒத்துழைப்பில்லாத காரணத்தால் வழக்குகளும் தீர்க்கப்படாமல் பலஅண்டுகளாக தொடர்கிறது.
இத்தனைக்குப் பிறகும் திப்புவின் வாரிசுகளுக்கு யார் மீதும் கோபமில்லை; தங்களை அரச பரம்பரையாக நடத்த வேண்டும் என்றோ, தங்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர் பதவிகள் தரப்படவேண்டும் என்றோ அவர்கள் கோரிக்கை எழுப்பிடவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் திருப்பித் தரப்பட வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. ஒரேயொரு கோரிக்கைதான்! ஒவ்வொரு சராசரி மனிதனும் விரும்புகிற, எதிர்பார்க்கிற ஒரேயொரு எதிர்பார்ப்புதான்! ஆம்! அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் குடும்பத்தோடு வாழ்வதற்கு குடியிருக்க வீடு வாழ்வாதாரத்திற்கு ஒரு சிறு தொழில்! அவ்வளவுதான் அவர்களின் எதிர்பார்ப்பு கோரிக்கை எல்லாம். ஆனால் அதற்குக் கூட வழியில்லை.
சர்வதேச அளவில் ஒரு கூட்டணியை அமைத்து வெள்ளையரின் அதிக்கத்தை அடியோடு அறுத்து வீசவேண்டும் என்று ஆவேசமாய்க் களத்தில் இறங்கிய மாவீரன் திப்புவின் திட்டத்திற்கு முதல் இசைந்து, அவருக்கு உதவுவதாக நடித்துப் பிறகு காலை வாரிய துரோகிகளின் வாரிசுகள் அரசின் செல்லப்பிள்ளைகளாக சைரன் வைத்த காரில் உலா வருகிறார்கள்.
ஒருபுறம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னையும் தனது நாட்டையும் தனது குடும்பத்தையும் தனது ஆற்றல்கள் அனைத்தையும் களத்தில் இறக்கிப் போராடி மாண்ட ஒரு மாவீரனின் வாரிசுகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு அனாதையாக விடப்பட்டிருக்கிறார்கள் மறுபுறம் இதை துரோகத்தின் வெற்றி என்பீரா? அல்லது தியாகத்தின் தோல்வி என்பீரா?
நன்றி : CMN சலீம்
18ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் பகுதியை மன்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தார். அவரின் நேரடி வாரிசான நூர் இனயத்கான் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டனுக்காக பிரான்சில் இருந்து உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். உளவு இளவரசி என்று அழைக்கப்பட்ட 30 வயதான நூர் இனயத்கான் ஜெர்மனியின் நாசிப் படையினரால் அப்போது பிடிக்கப்பட்டார்.
பின்னர் 1944ஆம் ஆண்டு அவர் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். உளவு இளவரசி நூரின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக லண்டனில் உள்ள கோர்டன் ஸ்குயர் கார்டன் பகுதியில் அவருக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அவரின் தைரியத்தையும் தியாகத்தையும் புகழ்ந்து, பாராட்டி ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி அன்னே இந்த சிலையை திறந்து வைத்தார்.
பிரிட்டனில் திறக்கப்பட்ட முதல் முஸ்லிம் சிலை இதுவாகும். மேலும் ஆசியாவின் முதல் பெண் சிலையும் இதுவே என்றும் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கவுரவம் பத்துமாதம் கொடுமைபடுத்தப்பட்ட அவரின் தியாகத்திற்கு இணையானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
She was only 30. She was posthumously awarded the George Cross by Britain and the Croix du Guerre by France, the highest civilian honours of both countries.
In September 2006, Indian Finance Minister Pranab Mukherjee visited her family house in Suresnes in Paris and honoured her memory.
In France, Noor is known as the 'Resistance heroine'. In Paris a featy square has been named after Noor. There is a plaque outside her house in Paris and every year a military band plays outside it on Bastile Day to honour her memory.
மேலும் தகவல்கள்.
Princess Spy Noor Inayat Khan. http://www.youtube.com/embed/vA_abOR57xg?rel=0
Noor Inayat Khan -- A Life of Bravery http://www.youtube.com/embed/6Kx0yNu-aa8?rel=0
Noor Inayat Khan Biography. http://www.spartacus.schoolnet.co.uk/SOEnoor.htm
2 comments:
கொடுமை ....
முஸ்லீம்கள் இன்று இருந்தால் அவருக்கு உதவியிருப்பார்கள் இதைப் பற்றி சொல்லவும் போராடவும் முஸ்லீம்கள் இல்லையே. அதற்காக நான் வருந்துகின்றேன் நீங்கள் சொன்ன பகுதிக்கு எனது கொல்கத்தா நண்பரை சென்று பார்க்க சொல்லி இருக்கின்றேன் என்னால் ஏதாவது செய்யமுடியும் என்று நினைக்கின்றேன் அவர்களது தொடர்பு என் இருந்தால் பரவா இல்லை என்று என் நண்பன் சொல்கிறான் இருப்பினும் இந்த வார விடுமுறையில் கண்டிப்பாக செல்வான் உங்கள் தகவலுக்கு நன்றி தோழரே
உங்களுக்கு தெரிந்திருக்கும்...
திண்டுக்கல் கோட்டையில் ஹைதர் அலியும் வசித்தார்; அவரது மகன் திப்புவும் வசித்தார். ஐந்த வருடம் இந்த கோட்டை திப்புவின் ஆட்சியில் இருந்தது...திண்டுக்கல்லில் பார்க்கவேண்டிய ஒரே இடம்! கட்டாயம் பார்க்க வேண்டிய கோட்டை!
Post a Comment