**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை …….

>> Sunday, April 1, 2012

சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத்

ஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.

உடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது.

அங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

அழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.

இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது.

இதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து முடிக்கபப்ட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் உடலை அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.

பின்பு கடந்த 19/03/2012 அன்று மறைந்த அழகர்சாமி சடலத்தை இந்தியா அனுப்பி வைத்தனர்.

இந்த சடலத்தை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே இறந்தவரின் முதலாளியை சந்தி்தத தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு கேட்டனர்.

ஆனால் அவரோ தானே ஒரு ஆளை வைத்து லாரி வாடகைக்கு விடுவதால் பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது என்றார். இறுதியில் இறந்தவரின் 10 நாட்கள் சம்பளத்தை ஒரு மாத சம்பளமாகத் தருவதாகக் கூறி 1000 சவூதி ரியால் கொடுத்தார்.

அந்த தொகையும், அவரது பொருட்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கடையநல்லூர் முஜாஹிதீன் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

http://tamil.oneindia.in/news/2012/03/30/world-azhagarsamy-family-thanks-saudi-tnt-aid0128.html

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

10 comments:

அருணாசலம். April 1, 2012 at 4:16 PM  

புண்ணியவான்கள் மத வேறுபாடு காட்டாமல் நல்ல காரியம் செய்திருக்கிறார்கள்.

இந்திய தூதரகமும் வழக்கம்போல் வாயசப்பை தவிர ஒரு விரலைக்கூட அசைத்திருக்காது.

சுனாமியின் போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் புதைந்து அழுகி நாற்றமடைந்த நூற்றுக்கணக்கான் இந்துக்களின் சடலங்களை இந்து சமூகம் புறக்கணித்த போது இந்த மனுசனுங்க தான் மனித பண்போடு தொட்டு எடுத்து தூக்கி நல்லடக்கம் செய்தது மட்டுமின்றி அவதியுடன் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஓடி ஓடி தாங்களுடைய சொந்த பணத்தில் பல நாள் உணளித்தார்கள்.

இதை யாரும் மறுக்கவோ மறக்கவோ பாராட்டாமல் இருக்க முடியாது.


அருணாசலம்.
பட்டுக்கோட்டை.

Anonymous April 1, 2012 at 4:43 PM  

பாராட்டும் நன்றிகளும்.ஆகச் சிறந்த செயலைச் செய்தீர்கள்.
அல்லா உங்களுக்கு அருள் புரியட்டும்...

Anonymous April 1, 2012 at 5:01 PM  

தமிழன் என்ற உணர்வுடன் மனிதநேயத்துடன் கைம்மாறு எதிர்பாராது சிரமம் நோக்காது செய்த காரியம் பலரை தன்னைத்தானே காரித்துப்பிக்கொள்ள செய்திருக்கும்.

suvanappiriyan April 1, 2012 at 5:48 PM  

சிறந்த சேவை! பாராட்டுக்கள்.

Anonymous April 1, 2012 at 7:37 PM  

மனித நேயம் மிக்கவர்களை குறை சொல்லாதே! எந்த மதமாக இருந்தாலும் !
VJAI

Anonymous April 1, 2012 at 9:39 PM  

மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்.

சிராஜ் April 2, 2012 at 8:43 AM  

சலாம் சகோ வாஞ்சூர்,

தன்னுடை வேலைகளுக்கு மத்தியிலும், இது போன்ற பொது சேவைகள் செய்யும் சகோதரர்கள் உண்மையிலே மதிப்பிர்க்குரியவர்கள்.
பகிர்விற்கு நன்றி.

Barari April 3, 2012 at 2:56 PM  

வளைகுடா பகுதியில் ஒரு நாள் விடுப்பு எடுப்பதினால் ஏற்ப்படும் சிரமங்களும் கஷ்டங்களும் நஷ்டங்களை பற்றி இங்குள்ளவர்கள் நன்றாக அறிவார்கள் .இந்நிலையில் அந்த ஜமாஅத் சகோதரர்கள் பல நாள் இதற்காக விடுப்பு எடுத்து சிரமபட்டிருப்பார்கள் .மனித நேய மிக்க இவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

Anonymous April 4, 2012 at 11:25 AM  

VERY VERY THANKS FOR YOU.

Anonymous April 15, 2012 at 1:57 AM  

வெளிநாடுகளில் இது போன்ற செயல்புரிவது மிகவும் கடினம்,
மனிதநேய செயல்புரிந்த அவர்களுக்கு நன்றி. - Nijam

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP