**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஆழமான அழகிய சினிமா – “ஆதாமின்டே மகன் அபு .” அவசியம் காணுங்கள் யாவரும்.

>> Tuesday, November 8, 2011

மலையாளத்தில் 2011ம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்று ஒரு திரைப்படம் உருவானது.

தேசியவிருதுக்கு நிச்சயம் தகுதியான‌ இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய படம்

ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஹஜ் பயணம் எவ்வளவு முக்கியமானது…. அந்தப் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன…. எப்படிப்பட்ட மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்று அற்புதமாக எடுத்துரைத்த ஒரு படம். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அது.

“ஆதாமின்டே மகன் அபு! “
 
முழு திரைகதை ஆயுஷும்மா மற்றும் அபு ஆகிய இருவரும் மலபார் பகுதியில் வசிக்கும் மாப்ளா முஸ்லீம்கள். எழுபது வயதாகும் அபு ஒரு அத்தர், யுனானி மருந்து வியாபாரி. அவர்களின் ஒரே மகன், அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அவர்களை மறந்து விடுகிறான். எப்படியாவது அந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென முடிவெடுக்கும் அபு, அது வரை அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சேமிப்புகளையும் கணக்கிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது.

ஆயுஷும்மா அவள் ஆசையாக வளர்த்து வந்த கோழிகளையும், மாடுகளையும் விற்கிறார். அப்போதும் பணம் குறைவாக இருக்கிறது. ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒரு பிராமணர், அபுவின் நண்பர். அவர் அபுவுக்காக பணத்தை கடனாக அளிக்கிறார். கடன் பெற்று ஹஜ் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அவர் அந்த உதவியை அன்போடு மறுக்கிறார்.

இறுதியாக வாசலில் இருக்கும் பலா மரத்தை வெட்டி விற்றால் பணம் முழுமையாக வரும் என்று உணர்ந்து பல ஆண்டுகளாக வீட்டு வாசலில் இருக்கும் பலா மரத்தை மர வியாபாரிக்கு விற்கிறார். மரத்தை விற்பனை செய்து விட்டு, ஹஜ் பயணத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அபுவுக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரோடு சிறு சண்டை ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் அபுவை அப்போது அடித்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், அவரைத் தேடி அவர் குடியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, பல மைல்கள் பயணம் செய்து அவரைக் கண்டுபிடிக்கிறார். அந்த பக்கத்து வீட்டுக்காரர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அபு அவரிடம் சென்று, நான் ஹஜ் பயணம் செல்கிறேன். எந்தக் கடனையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னோடு சண்டையிட்டேன்… என்னை மன்னித்து விடு… என்று கேட்பார். அபுவை ஏற்கனவே அடித்திருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், கண்கணில் கண்ணீரோடு, நான் உன்னை அடித்ததற்குத்தான் ஆண்டவன் என்னை பக்கவாதத்தில் படுக்க வைத்துள்ளான் என்று அழுவார். இந்தக் காட்சி அபு என்ற மனிதனின் அற்புதமான குணத்தையும், ஹஜ் பயணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தது.

பயண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்க, ஹஜ் பயணத்துக்கான பொருட்கள், உடைகள் அனைத்தையும் நகரத்துக்கு சென்று வாங்கி விட்டு, விசா பெற்றுக் கொண்டு கிராமத்துக்கு திரும்புவார்.

திரும்புகையில் மரக்கடைக்காரர், அவர் வெட்டிய பலாமரம் உளுத்துப் போயிருந்தது… எதற்கும் பயன்படாதது என்பதைக் கூறுவார். அபு இடிந்து போவார். ஆனால் அந்த மரக்கடைக்காரர், மரம் போனால் போகிறது….. உங்களது ஹஜ் பயணத்துக்கு எனது அன்பளிப்பாக அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கொடுப்பார். அந்த பணத்தை வாங்க மறுத்து, சோகமாக வீடு தீரும்புவார் அபு.

வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம்…. அந்தப் பலா மரமும் ஒரு உயிர்தானே… அதைக் கொன்று நான் பாவமிழைத்து விட்டேன் அல்லவா ? அதனால்தானோ என்னவோ இறைவன் என்னை ஹஜ் பயணத்துக்கு வர விடாமல் தடுத்து விட்டான் என்று கூறி விட்டு, ஒரு பலா மரக்கன்றை நடுவார்.

ஹஜ் பயணம் சென்றிருக்க வேண்டிய மறுநாள், தொழுகைக்குச் செல்லும் காட்சியோடு அத்திரைப்படம் நிறைவடையும்.


*************


எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “

அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
உள்ளத்தை திறக்கும் காட்சிகள்.


சொடுக்கி காணுங்கள்.** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
**************************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்


***இங்கே***

4 comments:

ஆமினா November 8, 2011 at 1:20 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்ல பகிர்வு அப்பா... படம் பெற்றி பெற என் சார்பில் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்....

ADMIN November 8, 2011 at 1:21 PM  

உண்மைதான்.. ! பகிர்தலுக்கு நன்றி..!!

MohamedAli November 8, 2011 at 4:59 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு A.S. முஹம்மது அலி எழுதியது. நலம் நலமே விளைக! நிற்க. தங்களின் ஆதமின் மகன் அபு திரைப்படம் கண்ணுற்றேன். மிகவும் நன்றாக இருந்தது. புனித மக்கா ஹஜ் செல்லுபவர்களின் எண்ணங்கள் நிறைவேற்றங்கள் குறித்து அற்புதமாக பதிவு செய்யபட்டுள்ளது. பதிவேற்றம் செய்த உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். அன்புடன் A.S. முஹம்மது அலி

Anonymous November 18, 2011 at 11:19 PM  

அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! மிக அருமையான ஒரு திரைப்படத்தைக் கான உதவியதற்கு மிக்க நன்றி.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சலீம் குமார், சிறந்த குணச்சித்திர நடிகராக மிக அற்புதமாக நடித்துள்ளார் இல்லை...இல்லை... "அபு" வாக வாழ்ந்துள்ளார்...

மரப்பட்டறையின் உரிமையாளராக வரும், நடிகர் கலாபவன் மணியிடம் "அபு" பேசும் வசனம் ஒரு உண்மையான முஸ்லிம் எப்படி நடக்க வேண்டும் என்பதை மிக அழகாக தெரிவிக்கிறது, இது போன்று பல வசனங்கள் நச் என இருந்தாலும் (டிராவல் ஏஜண்ட்) பயண ஏற்பாட்டாளர் அஸ்ரப் ஆக நடிக்கும், நடிகர் முகேஷுடன் உரையாடும் காட்சியில்தான் படத்தின் மொத்த பரிமாணமும் ஒரு முஸ்லிமின் கொள்கைப் பிடிப்பும் விளங்குகின்றது.

பயண ஏற்பாட்டாளர் நடிகர் முகேஷ், பணம் ஒரு பிரச்சினை அல்ல அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் புறப்பட வேண்டிய ஏற்பாட்டை செய்யுங்கள் என கூறும்போது, நான் கடன் சொல்லிவிட்டு ஹஜ்ஜூக்கு போக விரும்பல என்ற "நறுக்" பதிலாகட்டும்,
அடுத்து,
எனது சின்ன வயதில் அத்தாவும், அம்மாவும் ஹஜ்ஜூ செய்ய மிகவும் ஆசைபட்டார்கள், அப்போது எங்களிடம் வசதியில்லை, இன்று என்னிடம் அதற்கான பணம் இருக்கிறது ஆனால் எனது அத்தாவும், அம்மாவும் உயிருடன் இல்லை, உங்கள் இருவரையும் (அபு & மனைவி) பார்க்கும் போது எனது பெற்றோரை கான்பது போல உள்ளது
உங்களை எனது பெற்றோராக கருதிக்கொள்கிறேன், நீங்கள் ஹஜ்ஜூ செய்துவிட்டு வாருங்கள் என அஸ்ரப் ஆக நடிக்கும், நடிகர் முகேஷ் கூறும் போது.

அதற்கு அபு (வாக நடிக்கும் சலீம் குமார்)நானும், ( மனைவி) அய்சும், ஆசைபட்டதும் ஏற்பாடு செய்ததும்,எங்களுடைய ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்றுவதற்காக, உங்க அத்தா அம்மா ஸ்தானத்திலிருந்து ஹஜ்ஜூக்கு சென்றால், நாங்கள் செய்வது அவர்களுடைய ஹஜ்ஜூ என, மறுத்துவிட்டு பேசும் வசனம் தான்
படத்தின் ஹைலைட் என நினைக்கின்றேன். அவை.....
"பூமியிண்ட மோலில இங்கன சிந்திக்குன்ன ஒரு மோனுண்டாயா
மண்ணின்டடியில் கிடக்குன்ண உப்பாக்கும், உம்மாக்கும் ஒருபாடு ஹஜ்ஜு செய்த புண்ணியயுண்டாகும்"

(பூமியின் மேலே இப்படி சிந்திக்கின்ற மகன் இருந்தால் மண்ணுக்(கப்று)குள் இருக்கின்ற அத்தாவுக்கும், அம்மாவுக்கும் அதிகமான ஹஜ்ஜூ செய்த நன்மை கிடைக்கும்.)
ஹலாலான சொந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்துதான் ஹஜ் செய்யனும் என்ற உயரிய கொள்கையை எடுத்துச் சொன்ன இத் திரைப்படம் மிகவும் பாராட்டிற்குரிது.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP