**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )

>> Monday, October 27, 2008

திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.
(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)

செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித்தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடாசாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ரமலான் மாதத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.
இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன.
செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலேகானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது.
சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.
(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)
இதில் நேர்மையான வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக்கங்களின் சதி பின்னணியில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருவது நாடறிந்த ஒன்று.

இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.

இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.

விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.

உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.

நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணியில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.-- ஸப்ரன் ஹபீப்
http://www.tmmk.info/news/999611.htm
******************************************
படிக்கவும்:

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP