மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .
>> Saturday, October 25, 2008
இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தமுமுக கோரிக்கை.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.
கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முஸ்லிம்களின் ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகைக்கு முந்தைய நாள் மாலை நோன்பு திறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மகராஷ்ரா மாநிலம் மாலேகானிலும், குஜராத்தின் மொடாசாவிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் பலியாகினர். மக்கள் கூடும் நெருக்கமான பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்கள்.
இந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும் அரசும் புலனாய்வுத்துறையும் வழக்கம்போல சிமி, இந்தியன் முஜாஹிதீன் எனக் கூறி சில அப்பாவி முஸ்லிம்களை வளைத்து பிடித்து விசாரிக்கும் வழக்கமான அவலமும் நடந்தது.
ஆனால் தற்போது அகில இந்திய அளவில் பரந்த பாசிஷ ஹிந்துத்துவ வலைப்பின்னல் இதன் பின்ணணியில் பின்னப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலை மகராஷ்ட்ரா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பின் பின்னனியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) நெருங்கிய தொடர்புடைய ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக மகராஷ்ர மாநில நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன்குலே தெரிவித்துள்ளதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி அந்த குண்டுகளை வைத்து நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்க்கவாஹினி அமைப்பைச் சேர்ந்த இளம் பெண் பிரக்யாசிங் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்று தற்போது மாலேகான், மொடாசா குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவ பாசிஷ இயக்கங்களின் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் புலனாய்வு அமைப்புகள் உள்நோக்கமில்லாமல் நடுநிலைமையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஹிந்துத்துவ பாசிஷ இயக்கங்கள் பயங்கரவாத சதிகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்களுக்கு பின்னரும் சிமி என்ற அமைப்பின் பெயரையும் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயரையும் கூறி பயங்கரவாத சதிகளில் இந்த இயக்கங்களே தொடர்புடையதாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு முறையும் அவர் அறிவிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
இது புலனாய்வுத்துறை எந்த கோணத்தில் தங்கள் விசாரணையை நடத்த வேண்டும் என மறைமுகமான உத்தரவையே அதில் காண முடியும்.
புலனாய்வுத்துறையினரை தவறாக வழிநடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய முனையாமல் அப்பாவிகள் பாதிக்கப்பட காரணமாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tmmk.info/news/999614.htm
***********************************************
மலேகான் குண்டு வெடிப்பும் மாட்டிக் கொண்ட சங்பரிவாரமும்!
9/11 உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பின்லேடனின் - தாலிபான் அமைப்பினர் நடத்திய இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத பயங்கரவாத சம்பவம். உலகமே இதற்கு கண்டனக் குரல் எழுப்பியது.
பின்னர் இதை வைத்தே அமெரிக்கா பல நாடுகளை கபளிகரம் செய்து வருகிறது. இது ஏகாதிபத்திய பயங்கரவாத அரசியல்.
9/8 இது இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. மகாராஷ்டிரர்களை நடுங்க வைத்த சம்பவம்.
மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் இசுலாமயர்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்... இசுலாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது. சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் இது வெளிநாட்டு இசுலாமிய பயங்கரவாதிகளின் சதி என்று கதை கட்டி விடப்பட்டது. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். லஷ்கர் - ஈ - தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்பினர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தே வந்தது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணை ATS - Anti-Terrorist Squad பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவினர் மலேகன் குண்டு தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டு பிடித்து அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளனர்.
அதாவது, இந்தக் குண்டுப் வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் என்ற பயங்கரவாத அமைப்புதான் இந்த பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாத்வீ புரூனா என்ற பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இவர் யார் என்றால், தற்போது சன்னியாசியாக வேடம் தரித்துக் கொண்டுள்ள இந்துத்துவ பயங்கரவாதி.
இந்த சாத்வீ புரூனா இவர் ஏற்கனவே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் இந்து ஜாக்ரன் மன்ச்சில் சன்னியாசியாக பணிபுரிந்து வருகிறார்.
அதாவது இவர் சன்னியாசி என்றால் ஏதோ அமைதியை விரும்பும் சன்னியாசியல்ல. மக்களின் அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதியாக காவியுடையில் வேடம் தரித்துள்ளார்.
அதாவது, இந்த இந்துத்துவவாதிகளின் மதவாத அரசியல் இந்தியாவில் காலாவதியாகிக் கொண்டிருப்பதால் தங்களது இசுலாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிரான குரூரக் குரலை சாதாரண இந்து மக்கள் மத்தியில் விதைப்பதற்காக இதுபோன்ற வெடிகுண்டுகளை இவர்களே வெடித்துக் கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைவதுதான்.
இது ஏதோ மலேகனில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டு அவர்களது பயங்கரவாத தீச் செயல் கிழிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் இந்து முன்னனியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள்.
தேசப் பிதா மகாத்மாவை கொலை செய்த கோட்சே தனது பெயர் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டதோடு, சுன்னத்தும் செய்துக் கொண்டுதான் மகாத்மாவை சுட்டுக் கொன்றான்.
இதன் மூலம் இசுலாமிய மக்கள்தான் காந்தியைக் கொன்றாலர்கள் என்று பழியை சுமத்தி இசுலாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக கொலை வெறித் தாக்குதல் தொடுக்க திட்டமிட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எனவே இந்த முகாமிலிருந்து வெளிவரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?
அவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்கக் முடியுமா? அவர்கள் விதைப்பது உள் மனதில் இம்சைதானே.
குறிப்பாக கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் ஈடுபடும் கொலை வெறிச் செயல்களை உலகம் அறியம்.
இருப்பினும் அந்த மண்ணில் இவர்களால் கால் வைக்க முடியவில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி இந்திய மக்களின் அழிவு என்று அர்த்தம். எனவே இந்த இந்துத்துவா என்பது மக்களின் - மதச்சார்பின்மையின் - சகிப்புத்தன்மையின் எதிரி என்பதை நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.
இதன் தத்துவம் மனிதத்திற்கு விரோதமானது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஹீட்லரின் தத்துவத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்து அதனை இந்தியாவில் செயலாக்க துடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை உலகம் அறிந்துக் கொண்டது.
இதற்கு எதிராக பன்முகப்பட்ட மக்களை திரட்ட வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம்.
மேற்கண்ட பயங்கரவாத செயல்களைத்தான் மனிதாபிமானத்தின் உயர்ந்த தத்துவம் இந்துத்துவா என்று இல. கணேசன் கூறியுள்ளார் நேற்றைய தினமணியில். இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்களை மனிதாபிமானிகளாக வேடம் தரித்துக் கொண்டு தங்களது மதவெறியை விற்பனை செய்ய முனைகிறார்கள்.
எனவே இவர்களின் முகமூடியை மக்களிடம் காண்பிக்க வேண்டியது முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.
THANKS TO : http://santhipu.blogspot.com/2008/10/blog-post_25.html
--***********************************************
படிக்கவும்:
குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு - மஹாராஷ்டிரக் காவல்துறை!
மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.
குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.
சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!
******************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment