**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பாஜக எம்பி.....!!

>> Thursday, December 10, 2015

பாஜகவுக்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பாஜக எம்.பி.....!!

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல் பாஜகவுக்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை என்று தெரிவித்துள்ளார்.. அதேப்போல் இதேகாரணத்திற்காக பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி தமிழகத்திற்கு எவ்வித நிதியும் மத்திய அரசு ஒத்துக்கக்கூடாது கூறினார்.உலகின் எந்த மூலையில் யார் பாதிக்கப்பட்டாலும் உடனே கண்ணீர் சிந்துவதும், துடிதுடிப்பதும் தமிழர்களே...
 ஆனால் தமிழகத்தில் இயற்கை சீற்றத்தினால் எண்ணற்ற மக்கள் உயிரிழந்து லட்சோபலட்ச மக்கள் வீடு வாசல் இழந்து தவித்த தவிப்பை ஆளுகின்ற பாஜகவின் எம்பியே இவ்வாறு கொச்சைப்படுத்துவது வேதனையில் இருக்கும் தமிழக மக்களின் இதயத்தில் ஈட்டியையும், சூலாயுதத்தையும் ஒரே நேரத்தில் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

பாஜகவுக்கு தமிழக மக்கள் ஓட்டு போடவில்லை என்பதற்காக எங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மரண ஓலங்களிலும், எங்கள் குழந்தையின் பசியின் தவிப்புகளிலும், எங்கள் பெண்களின் கதரல்களிலும் மகிழ்ச்சியை காணாதீர்கள்,

உங்கள் கையை பிடித்து கேட்கிறோம், தயவுசெய்து வேதனையில் துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் எங்கள் மக்களை வார்த்தைகளால் கொல்லாதீர்கள்.

தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தர இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினரை கொச்சைப்படுத்தி பா ஜ க மாநில நிர்வாகி கல்யாண் ராமன் எழுதியுள்ளதை இந்து மக்களே பாருங்கள்.
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மனமில்லாத பா ஜ க வினர் இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.

படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.


2 comments:

Unknown December 11, 2015 at 1:29 AM  

நாய்களைப்பற்றியும்,நரிகளைப்பற்றியும்அவர்களோடு சேர்ந்து கூத்தாடும் பேய்களைப்பற்றியும் வரலாறு எழுதுவதில்லை!மாறாக உம் போன்ற மாமனிதர்களின் செயல்களைப் பற்றியே அது எழுதுகிறது.மனிதர்களே! மானுடத்தின் பிள்ளைகளே! நீங்கள் இருக்கும் திசைநோக்கி கைகள் குவிக்கின்றோம்.

Unknown December 11, 2015 at 1:56 AM  


கால்களைத்தும் நடந்தீர்கள்!
கருணையோடு சென்றீர்கள்!
இதயத்தை களைந்தெடுத்து
இல்லாதவருக்கு கொடுத்தீர்கள்!

தோழர்களே!
பெயர் துறந்தீர்! முகம் துறந்தீர்!
உம்செயலால்,
மனிதர் என்னும் பெயர் பெற்றீர்!
வாழ்க நீர்!
வாழ்வீர்!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP