**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புருடா சாமியார்.

>> Wednesday, October 23, 2013

சாமியார் ஒருவர் கிளப்பிய புருடாவை நம்பி 1,000 டன் தங்கம் கிடைக்கும் என்று பூமியைத் தோண்டும் வேலையில் அரசே ஈடுபடுவதா? இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா?
Thanks to சுவனப்பிரியன்
சாமியார் கிளப்பிய புருடா. மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா?
சில நாட்களுக்கு முன் சோபன் சர்க்கார் என்ற சாமியார் கனவில் தோன்றிய மன்னர் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாகவும் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி - நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும் எனவே அதை தேட வேண்டும் என்று மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச்சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் கூறினாராம்.

உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல் பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே ஏற்ற உபி அரசு தங்க புதையல் தேட பூமி தோண்டும் பணி துவங்கியுள்ளது.

அரசே இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா?

புதையல் புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல் பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக் கேடான மூடநம்பிக்கை அல்லவா?

இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தை உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல் பொருள் துறையினரும்) இதில் இறங்கலாமா?

இதுபற்றி உச்சநீதிமன்ற வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!

மின்னணுவியல் - அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை) செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?

இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது அண்மைக்கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!

உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது?

மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையை பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

வெட்கம்! வேதனை- தேசிய அவமானம்! - கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்
விடுதலை” 22.10.2013தேடுவது தங்கம்! கிடைத்தது சுவர்!

இதற்கிடையே, உ.பி.யின் உன்னாவில் சிதிலமடைந்த கோட்டையில் நான்காவது நாளாக தங்கப் புதையல் வேட்டை தொடர்ந்தது. சுமார் 100 செ.மீ. ஆழத்தில் கெட்டியாக ஏதோ தட்டுப்பட கடைசியில் அது கோட்டைச் சுவர் என்று தெரிய வந்தது.

பதேபூரிலும் தங்க வேட்டை

உன்னாவ் மாவட்டம் பதேபூர் அருகேயுள்ள ஆதம்பூரிலும் 2500 டன் எடையுள்ள தங்கம் கிடைப்பதாக சாது கனவு கண்டிருக்கிறார். அங்கும் அரசு அகழ்வாய்வை தொடங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP