**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா?

>> Monday, February 25, 2013

நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை.

சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை.

ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன.

இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று.

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா என்ற தலைப்பில் 
சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சி.

சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன.

அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை;

முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை.

அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை.

ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது.

ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர்.

இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே.

'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான்.

காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான்.

இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர்.

இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9821:2010-07-02-10-22-25&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

THANKS TO KEETRU.COM

இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்.

கீற்று இணைய தளத்தின் விடியோவை முழுதுமாக காணுங்கள்.

படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.


குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.

சுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்

 SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்

THANKS TO : செல்லையா முத்துசாமி

http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_21.html

THANKS TO : KEETRU.COM

காவி பயங்கரவாதம்.

21 Jan 2013

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில்,

காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.

சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர்

'' இதில் 100 % நான் ஷிண்டேவுடன் உடன்படுகிறேன்.

இதில் ரகசியம் எதுவும் இல்லை.

எல்லாருக்கும் இது தெரிந்து இருந்தாலும் வெளிப் படையாகச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

அதற்காக நான் ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்

 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா? நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா? சம்மதமா?

 2. இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்

 3. ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான "இந்தியா டுடே" யில் வெளியான “அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்." விடியோக்க‌ள்

 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ

இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதம்

எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.

எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள்.

பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள்.

மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.

ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை.

இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை.

தண்டிக்கப்படவும் இல்லை.

உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய் திறப்பதுமில்லை.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.-

91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது.

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது.

சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும்.

இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன.

ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது.

அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது.

இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

– குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.

குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.

ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை

ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள். - VINAVU.

THANKS TO SOURCE: VINAVU.COM

1 comments:

சிந்திக்க உண்மைகள். February 25, 2013 at 1:21 PM  

நல்ல விவாதம். தமிழர் தலைவர் திரு. கி. வீரமணி அவர்களின் ஆணித்தரமான விவாதம் யாராலும் மறுக்க முடியாதது.


இந்த பதிவையும் படிக்கலாமே !

உண்மையான கடவுளிருந்தால் யார் நரகத்திற்குப் போவார்கள்?


.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP