**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மஞ்சள் நோய்த் தடுப்பு மூலிகை.

>> Wednesday, February 25, 2009

மனிதன் நீடு வாழ்ந்து காயசித்தி பெற்று உய்ய வழி தேடியவர்கள் சித்தர்கள். மனிதன் உடலிலுள்ள உயிரணுக்கள் அழுகி விடுவதால் பலவித நோய்கள் சம்பவித்து உயிர் போய்விடுகிறது என்று எல்லா மருத்துவ முறைகளும் சொல்கின்றன.

அணுக்கள் அழுகா வண்ணமும், உடலின் புறத்திலுள்ள தீய அணுக்கள் உள்ளே புகுந்து நாசத்தை விளைவிக்காமலிருக்கக்கூடிய பொருள்களில் தலைசிறந்த மூலிகை மஞ்சளே.

இதற்கு ஆதாரம், நாம் வெகு தூரம் போய் தேடவேண்டியதில்லை. நம் வீட்டு ஊறுகாய் பானையுள் உற்று நோக்கினால் போதும். உப்பும், மஞ்சளும் சேர்த்தாலொழிய எந்த ஊறுகாயும் பூர்ணம் பூக்காமல் இராது.

பூசணம் பிடிக்கிறதென்பது வெளியிலுள்ள žவ அணுக்கள் அதனுள் புகுந்து மனிதன் உணவுப் பொருள்களை உணவாகக் கொள்கிறது. ஆகவே, எந்த பொருளாயினும் சரி, அது அழுகலில்லாமலிருக்க மஞ்சளையும் உப்பையும் சேர்க்க வேண்டும்.

மஞ்சள் ஓர் கற்ப மூலிகையென்பது தெரியாமலே நாம் பரம்பரையாய் நம் வீட்டு சமையலில் உபயோகித்து வருகிறோம். ஆயினும் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டால் நாம் இன்னும் வேண்டிய அளவில் உட்கொள்ள வாய்ப்பு இருக்குமல்லவா?

மஞ்சள் வகையில் கப்பு மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என நான்கு வகைகள். அவைகளுள் முதல் இரண்டும் ஒரு இனத்தைச் சேர்ந்ததே. இவைகளில் நாம் எடுத்துக் கொண்ட பொருள் முதல் இரண்டும். கப்பு மஞ்சள் என்பதை பூசுமஞ்சள் என்று சொல்வர்.

இதை பெண்கள் குளிக்கும்போது கல்லில் உரைத்து உடம்பில் பூசிக்கொள்வர். சோப்பு பூசிக்கொள்ளும் பழக்கம் வந்த பின் இந்த மஞ்சளின் உபயோகம் குறைந்துவிட்டது. ஆயினும் இப்பொழுதும் கூட சோப் உபயோகம் முடிந்த பிறகு, மஞ்சளை உபயோகப்படுத்தலாம்.

இதை உள்ளும் புறமும் உபயோகப்படுத்துவதினால் உடல் பொன்மேனியாகுமென்று சித்தர் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு மஞ்சள் ஓர் முக்கியமான பொருளாகும். புருஷர்களை வசியப்படுத்தும் மூலிகையாம்.

உடலில் அதன் வாசனையிருக்கும்படி செய்து கொள்வது நன்று. அந்த வாசனையை நுகரும் ஆணுக்கு அப்பெண்ணின் ஞாபகமே இருக்குமாம்.

மற்றொரு உபயோகம்: இந்த பூசுமஞ்சளை சில துளிகள் தேங்காயெண்ணெயில் உரைத்து மேனியில் பூசிக்கொண்டால் தீய கிருமிகள் அவ்விடத்தில் அண்டாமலிருப்பதுமன்றி அவ்வுறுப்பு வலிவு பெறும். புணர்ச்சி செய்யுங் காலத்தில் ஆண்களுக்கு இன்பம் பல மடங்குகள் உயருகிறது. இதை உபயோகித்து வர அனுபவ வாயிலாக அளவை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வித உபயோகம் செய்பவர்களுக்கு மேனிக்குள் புற்று வியாதிகள் உண்டாகாது. இதன் பெருமையை கீழே காணும் செய்யுட்களால் நன்கு அறிந்து கொள்ளலாம்.

பொன்னிறமாம் மேனி புலானாற்றமும் போகும்
மன்னு புருஷன் வசியமாம் - பின்னியெழும்
வாந்தி பித்ததோஷம் ஐயம் வாதம்போம் தீப்னமாம்
கூர்ந்த நறுமஞ்சள் தனக்கு
தலைவலி நீரேற்றம் சளையாத மேகம்
உளைவு தருபீனசத்தின் ஊடே - வலிசுரப்பு
விஞ்சு கடிவிஷமும் வீறுவிரணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்

கற்ப பிரயோகம்

கப்பு மஞ்சள் என்பது பெரிதாகவும் உருண்டை வடிவத்திலுமிருக்கும். கரி மஞ்சள் குச்சியாயிருக்கும். இவை இருவகையின் பேரிலும் மஞ்சள் நிறத்தை கொடுப்பதற்காக ஈய செந்தூரத்தை ஒருவித மருந்தில் கலந்து அதில் மஞ்சளை பிறட்டி, உலர்த்துவர். இந்த ஈய செந்தூரம் உடலுக்கு உபாதையைத் தரும். ஆகவே, நம் வீட்டில் உபயோகிக்கும் மஞ்சளை முதலில் தண்­ரில் ஊறவைத்து எடுத்து 7,8 முறைகள் தண்ணீரில் அலம்பி சுத்தம் செய்து உலர்த்தி பிறகு இடித்து சமையலுக்கோ மருந்துக்கோ உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த முறையில் சுத்தம் செய்த கப்பு மஞ்சள் தூளை சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலையில் ஒரு சிட்டிகை வாயிலிட்டு ஒரு முழுங்கு தண்ணீர் சாப்பிடவேண்டும். இவ்விதம் சாப்பிட்டு வருவதால் உடலில் புண்கள், படை, குஷ்டம் முதலிய பிணிகள் தாக்காது. கருப்பு தேகம் பெற்ற பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே உண்டு வர பருவமடையும் காலத்தில் கருப்பு நிறம் மாறி மாநிறச் சாயல் பெறுவர்.

மேற்பூச்சுகள்

குழந்தைகள், பெரியோர்களுக்கு உடலில் அரிப்பு, சொரி, சிரங்குகளுக்குக் கீழ்க்கண்ட எண்ணெயை தயாரித்துக் கொண்டு தேய்த்து காலையில் குளிப்பதோ, அல்லது தலையில் பூசி ஒரு மணி நேரம் இருக்கச் செய்து குளித்து விட்டு தொழிலுக்குச் செல்வதோ செய்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயினால் பலவித சருமநோய்கள் குணமானது அனுபவ முறை.

1. தேங்காயெண்ணெய் 1 லிட்டர்.
2. குப்பைமேனி இலைச்சாறு 1 லிட்டர்
3. கரி மஞ்சள் தூள் 100 கிராம்

முதல் இரண்டு திரவங்களையும் சிறு நெருப்பில் காய்ச்சி சிடு சிடுப்பு அடங்கும் சமயம் மஞ்சள் பொடியை அதில் போட்டு கிளறி இறக்கி ஆறவைத்து எண்ணெயை வடித்து புட்டியிலடைத்துக் கொள்ளவும். இதை மேற்கூறிய முறைகளில் உபயோகிக்கவும் வெட்டுக் காயங்களுக்கு எண்ணெயில் சீலையை முக்கிப் போடவும்.

இருமல், தடுமம், பீனசத்திற்கு

உஷ்ணம் அதிகரிப்பினால் சிலர் (கக்... கக்...) என்று ஓயாது இருமி கஷ்டப்படுவார்கள், இரவில் தூக்கமே வராது. இதற்கு கரி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டியளவு, அப்பொழுது கரந்த பசும்பாலில் (காய்ச்சாமல்) கலக்கி உள்ளுக்கு காலை மாலை மூன்று நாட்களுக்கு சாப்பிட எந்த வைத்தியரிடமும் போகவேண்டிய அவசியமில்லாமல் குணமாகும்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP