**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வாடகை வீடுகளில் நூதன மோசடி.

>> Friday, January 9, 2009

16.12.08 மற்றவை

ன்புள்ள குமுதம் சிநேகிதிக்கு,

என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டின் போர்ஷனில் குடியிருக்கிறோம். ஒரே ஒரு பையன், அவனையும் சேலத்தில் என் அம்மாதான் வளர்த்து வருகிறார்கள். போர்ஷன் வாடகை வீடுகளில் ஏற்படும் ஒரு மிகப் பெரிய பிரச்னை பல வருடங்களாக என் மனதை வருத்திக் கொண்டிருக்கிறது. என் பட்ஜெட்டையும் தான்!

சிங்கிள் பெட்ரூம் கொண்ட எங்கள் வீட்டுக்கு வாடகை ரூ.2500. கரண்ட் பில் ரூ.2500/-. பின்னே? வீட்டுச் சொந்தக்காரர் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 என வசூலிக்கிறார். மின்சார வாரியம் வசூலிக்கும் கட்டணம் 1 யூனிட்டுக்கு ரூ.1.50... ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 அடித்தால் அப்புறம் ஏன் அவர் இன்னொரு புதுவீடு கட்டமாட்டார்? ஹவுஸ் ஓனர்+ நான்கு ஒண்டுக் குடித்தனங்கள் என குடியிருக்கிறோம். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மெயின் மீட்டர், எங்களுக்குநான்கு சப் மீட்டர்கள்.

அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கென வசூலிக்கும் பணமும் எனக்குத் தெரியும். 100 யூனிட்களுக்கு மேல் போனால் இவ்வளவு... 200 யூனிட்களுக்கு மேல் போனால் இவ்வளவு என்பதும் எனக்குத் தெரியும்.

``நான் இன்னிக்கு ஃப்ரீதான். வேண்டுமானால் நான் ஈ.பி-யில் கட்டணம் கட்டிவிடவா?'' என்றால் வீட்டு உரிமையாளர் பதறிவிடுவார்!

வாடகைக்கு ஈக்வலாக எனக்கு கரண்ட் சார்ஜும் வந்துவிடுகிறது. சென்னையில் எந்த இடத்தில் விசாரித்தாலும் ஹவுஸ் ஓனர்ஸ் இருக்கும் வீட்டில் ஒண்டுக் குடித்தனங்கள் இருந்தாலே இப்படித்தான் யூனிட்டுக்கு ரூ.4 அல்லது ரூ.5 என வசூலிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். தனி வீடாக இருந்தால் அல்லது ஓனர் அருகே இல்லாத ஃபிளாட்டாக இருந்தால் தப்பிக்கலாம். தனி வீடு எங்கே எனத் தேடிச் செல்வது? அபார்ட்மெண்டில் வீடு தேடவெல்லாம் எங்களுக்கு வசதியில்லை. எங்களைப் போன்றவர்களுக்கு தீர்வே கிடைக்காதா?

-பெயர் குறிப்பிட முடியாத நிலையுள்ள வாசகி.

நமது குமுதம் சிநேகிதிக்கு வந்த ஒரு வாசகியின் கடிதம் இது.

இப்படியொரு நூதன மோசடி நடப்பது உண்மைதானா என்பதை விசாரிக்கக் களமிறங்கினோம்.

``காலம் காலமா இப்படித்தான் நடந்து வருது. சென்னையில் ரெண்டு மூணு வீடு கட்டிவிட்டுட்டால் போதும்ங்க, வாடகையிலயும் கரண்ட்பில்லிலயும் கால் மேல் கால் போட்டுகிட்டு உட்கார்ந்தே ஜோரா காலம் தள்ளிடலாம். எங்க வீட்ல நானும் என் பொண்ணும்தான். நான் ஆஃபீஸ் வந்துடுவேன். என் பொண்ணு காலேஜ் போயிடுவா. ஏ.ஸி. கிடையாது, கிரைண்டர் போட மாட்டேன். ஆனா நான் கட்டுகிற கரண்ட் பில் இருக்கே. வயிறு எரியுது'' பெயர் கூற விரும்பாத முகப்பேர் வாசகி இப்படிச் சொன்னார்.

``அதையேன் கேட்கறீங்க?... வாசலே இருக்காது. முறைவாசல் பைசான்னு மாசம் 150 ரூபா கட்றேங்க... மோட்டாரே போடமாட்டாங்க. வெறும் கார்ப்பரேஷன் தண்ணிதான் அடிச்சு எடுக்கணும். ஆனா மோட் டார் பைசான்னு மாசா மாசம் தரேங்க. இந்தக் கொடுமையை எங்கபோய் சொல்றது?'' என்று குளத்தூர் பெண்மணி வெடிக்கிறார்.

``சென்னையில் சொந்த வீடு இல்லேன்னா கஷ்டம். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துல அடிக்கடி ஏரி ஸ்கீம் வீட்டுமனைகள் குலுக்கல் அறிவிக்கறாங்க. நாங்களும் ஃபார்ம் ஃபில்லப் பண்ணித்தான் போடறோம். ஆனால் ஏற்கெனவே எம்.எம்.டி.ஏ.-வில் ரெண்டு மூணு வீடு இருக்கறவங்களுக்குத்தான் இப்போதும் விழுந்திருக்கு. என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை. அனைவருக்கும் சொந்த வீடுன்னுதான் கவர்ன்மெண்ட் மெனக்கிடறது. ஆனால் கவர்ன்மெண்டோட நோக்கம் நிறைவேறுவதில்லை' புலம்புகிறார் வேளச்சேரிக்காரர்.

``வீட்டின் சொந்தக்காரர், வாடகைக்கும், கரண்ட்பில் மற்ற இத்யாதிகளுக்கெல்லாம் சரி, ப்ராப்பரான பில் தரதேயில்லை. சும்மா ஒரு துண்டுச் சீட்ல எழுதிக் கொடுக்கறாங்க. இந்தத் துண்டுச் சீட்டினால் எந்த ப்ராப்ளத்துக்கும் சொல்யூஷன் கிடையாது. `அந்நியன்' படத்தில் ஷங்கர் காண்பிச்ச மாதிரிதான் வாடகைக்கு குடியிருப்போர் நிலைமை'' - இவர் குளத்தூர் பெண்.

``சில வீட்டு ஓனர்களுக்கு வீட்டுக்குள்ளேயே மீட்டர் இருக்கும். இவங்க பண்ற கொடுமை தாளாதுங்க. அவங்க மீட்டரில் ஏதாவது கோல்மால் செய்து 15 நாள் ஓடவிடாமல் செய்துடுவாங்க. ஆனால் குடித்தனக்காரர்களுக்கு சப் மீட்டர் ஓடும். சப்மீட்டர் பைசா வசூலிச்சுடுவாங்க. இவங்க கவர்ன்மெண்டுக்கு ரொம்ப கம்மியா கரண்ட் பில் கட்டுவாங்க. இதெல்லாம் எங்க போய் சொல்றது?'' பொங்கி வரும் கோபத்துடன் சலித்துக்கொள்கிறார் நங்கநல்லூர் மாமி. யாருமே தங்கள் முகத்தை போட்டோவுக்குக் காட்ட மட்டும் மறுத்துவிட்டார்கள். `வீடு கிடைக்கிறதே கஷ்டம்கிறப்போ, இருக்கிற வீட்டையும் காலி பண்ணச் சொல்லிட்டா என்ன பண்றது?'' என்ற பயம்தான்! இந்த பயம்தான் வீட்டு உரிமையாளர்களுக்கு பலம் போலும்!

சப் மீட்டர் போடாத, எம்.ஈ.எஸ். கார்டு உள்ள போர்ஷன் வீடுகள் வாடகைக்கு வந்தால் அதை ஒரு பெரிய புதையல் கிடைத்தது போல், ரகசியமாய்ப் பேசி உடனே முடித்து விடுகிறார்கள். ஆனால் அப்படி வீடு கிடைப்பதுதான் குதிரைக் கொம்பு.

``எங்க பகுதியில் மிளகாய்த்தூள், அரிசி, கோதுமை, அரைக்கற அரவை மெஷின் இருக்கு. ஊருக்கெல்லாம் கரண்ட் போனாலும் அவங்களுக்கு மட்டும் கரண்ட் போகாது. இ.பி.க்கும், சில அரவை மெஷின்காரர்களுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல கதை ஓடிக்கிட்டிருக்கு போல! ஆனால் ஒண்ணு.. என்னதான் கவர்ன்மெண்டே பார்த்து இத்தனை மணி நேரம் கரண்ட்டை கட் செய்தாலும், எங்க பில் மட்டும் குறையவே மாட்டேங்குது-'' என்று அங்கலாய்க்கிறார் பெரம்பூர் பெண்.

தமிழ்நாடு மின்சாரத் துறையைச் சேர்ந்த ஒரு டீன் ஏஜ் பெண் சொன்னார். அம்மா இ.பி. பில்லால் அவதிப்படுவதைக் கண்டு பொறுக்காமல், வீட்டில் கிரைண்டர் போடறது கிடையாது. வாஷிங்மெஷின் கிடையாது. ஆனால் எலக்ட்ரிக் பில் மட்டும் ஒரு மாச வாடகை. நான் பயந்துகிட்டு சிலசமயம் என் டிரஸ்ஸை அயர்ன் பண்ணக் கூட மாட்டேன். சென்னையில் பெரும்பாலான போர்ஷன் வீடுகள் காற்றும் வராமல், வெளிச்சமும் வராதபடி அடைப்பாக கட்டப்பட்டிருப்பதால், பல வீடுகளில் பகலிலேயே லைட்டும் ஃபேனும் கட்டாயம் போடவேண்டும், இதுவும் கரண்ட் சார்ஜை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது. ரேஷன் கார்டு இருக்கற ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனியாக எம்.ஈ.எஸ்.கார்ட் வேணும். இதுதான் இந்த சிக்கல்களுக்குத் தீர்வு'' என்று படபடவென வெடிக்கிறார்.

மொத்தத்தில் வீட்டின் உரிமையாளர் மனது வைத்தால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் போலிருக்கிறது.

படங்கள்: எஸ்.சுரேஷ்


thanhs to : kumudam

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP