**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32)

>> Thursday, June 26, 2008

திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டமா?
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியின் கருத்துக்கு அனைத்து கட்சிகள் கண்டனம்
திருப்பதி, ஜுன்.21- திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிர்ச்சி தகவல்

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில், இந்துக்களின் உலகப் பிரசித்த பெற்ற புனிதக் கோவிலாக திகழ்கிறது. இந்தியாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், திருமலையில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு இயக்குனர் ஆர்.வி.சந்திரவதன் வெளியிட்ட தகவல் பக்தர்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி சந்திரவதன் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

25 செக்ஸ் மையங்கள்

திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேற்கண்டவாறு சந்திரவதன் கூறினார்.

திருப்பதி நகரில் மட்டும் 3 ஆயிரத்து 500 அழகிகள் விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலைபார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

அதிகாரிகள் விளக்கம்

எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும் அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் நேற்று பரபரப்புச் செய்தியாக ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். மனம் குமுறிய அவர்களது கேள்விக் கணைகள் திருப்பதி தேவஸ்தானத்தை நோக்கி பாய்ந்தன.
News by thinathanthi.
------------------------------------------------------விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32)
________________________________________

ஒரு காலத்தில் ஊரின் ஒதுங்குப் புறத்தில் மையிருளில் நடந்து வந்த விபச்சாரம் இன்று உலகின் மையப்பகுதிகளுக்கு சுடர் விடும் சூரிய ஒளியில் பகிரங்கமாக நடக்கும் காலம் வந்து விட்டது, இது மேலும் பல்கிப் பெருகி பிரசித்திப் பெற்ற தேவஸ்தானங்களின் அருகிலும் நெருங்கி விட்டது.

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம் என்று மேல்படி தகவலை ஊடகச் செய்தியின் வாயிலாக அறிந்தோம்.

மேற்கானும் தகவலை அறிந்த பக்த கோடிகள் புள்ளி விபரங்களுடன் தகவல் அளித்த எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து தகவலை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் மையப்பகுதிகளில் போர்டு வைத்து விபச்சாரம் நடத்தும் செய்தி அறிந்து கொதித்தெழாத பக்தகோடிகள் ஏழுமலையான் கோயில் அருகே மட்டும் விபச்சார அழகிகள் நடமாடும் செய்தி அறிந்து கொதித்தெழுந்தது ஏன் ?

ஏழுமலையான் ஆலயம் இருக்கும் இடம் மட்டும் தான் புனித இடமா ? ஏழுமலையான் ஆலயத்தி;றகு வெளியில் உள்ள இடங்கள் புனிதத்துவம் வாய்ந்ததில்லையா ?

அவ்வாறெனில் இந்திய மண்ணை வணங்குகிறோம் எனும் வந்தே மாதரம் கோஷம் ஏன் ?

இந்திய மண்ணை வணங்குவதாக கூறுவது உண்மை என்றால் மண்ணின் எந்த மூளையில் விபச்சாரம் நடந்தாலும் பக்த கோடிகள் கொதித்தெழ வேண்டும் !

மண்ணை வணங்குவதாக கூறும் 'வந்தே மாதரம் கோஷம்" மாற்று மதத்தவர்களிடம் திணிப்பதற்காக மட்டும் தான் என்பதை மேல்படி சம்பவம் பட்டவர்த்தனமாக பறைசாற்றுகின்றது.

தாய் மண்ணிலிருந்து விபச்சாரம் முற்றிலுமாக துடைத்தெறியப் படவேண்டுமென்றால் ?

புரட்டுங்கள் பெருமானாரின் வாழ்க்கைப் பக்கங்களை !

அகிலம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏக இறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முன் மக்கமா நகரம் விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகளால் சூழப்பட்டிருந்து.

ஆண்கள், பெண்கள் நிர்வாணமாக இரண்டரக் கலந்து புனித ஆலயத்தை வலம் வந்தார்கள். இன்று சகோதரத்துவத்தையும், ஏகத்துவத்தையும் பறைசாற்றக்கூடிய புனித கஃபா அமைந்துள்ள மக்கா நகரம். அன்று தீமையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது

அண்ணலார் அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் தீமையில் மூழ்கித் திளைத்திருந்த மக்களை சென்றடைந்தப் பின் அவர்களை தலைகீழாகப் புரட்டி எடுத்து மக்காவும், மதீனாவும் அறிவின் ஊற்றுக் கண்களாக மாறிக் கொண்டது.

நகரத்தில் புறையோடிப் போயிருந்த தீமைகளை களைவதற்கு பெருமானார் அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு இறைநம்பிக்கையை ஊட்டி மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் அதனால் அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற்;றப்பட்டார்கள் !

அண்ணலார் அவர்கள் அந்த மக்களிடத்தில் இறைநம்பிக்கையை ஊட்டுவதற்கு முன் அவர்களிடமும் இறைநம்பிக்கை இருந்தது, அவர்கள் நாஸ்திகர்களாக இருக்கவில்லை அது எவ்வாறான இறைநம்பிக்கை என்றால் ? இன்றை இந்திய பக்தகோடிகளிடம் இருப்பது போன்ற (பலதெய்வ ) இறை நம்பிக்கையாக இருந்தது.

இவர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்
அவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்திற்காக இறைவனிடத்தில் சிபாரிசு செய்து மன்னிப்பை பெற்றுத்தருவதற்கு மறைந்து சென்ற நல்லடியார்களும், இறைத்தூதர்களும் பொறுப்பேற்பார்கள் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்தை மறுபிறவியில் அனுபவித்து கழுவி தூய்மைபடுத்திக்கொள்ளலாம் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இறைநம்பிக்கை இருந்தது, தீமைகள் மாறவில்லை.
இறைநம்பிக்கையாளரிடத்தில் தீமை இருக்கக் கூடாது
தீமை இருந்தால் அவரிடத்தில் இறைநம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.


பெருமானார் அவர்கள் அந்த மக்களிடத்தில் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் தீமைகள் பலதை சுட்டிக்காட்டி இன்னவற்றை செய்யக் கூடாது என்று முடிக்கையில் மீறினால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக்கூறி முடிப்பார்கள். அதேப்போன்று நன்மையானவற்றை செய்யத் தூண்டும் காரியத்தைக் கூறி முடிக்கையில் செயல்படுத்த வில்லை என்றால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக் கூறி முடிப்பார்கள்.

ஏகஇறைவன் ஒருவனே, அவரவர் குற்றத்திற்கு அவரவரே பொறுப்பாவார்; என்று சிந்திக்கத் தூண்டும் அறவுரைகளை அவர்களுடைய மனங்களில் ஆழமாக விதைத்தால் அது நற்செயல்களை வளரச் செய்து தீமைகளை வேறோடு சாய்த்தது.

எந்தளவுக்கென்றால் ?

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

மக்கள் அணி அணியாக வந்து இறைத்தூதர் அவர்களிடத்தில் இனிவரும் காலங்களில் தீமைகளை செய்;ய மாட்டோம் என்று மேற்கானும் விதம் பட்டியலிட்டுக் கூறி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அமைந்தது.

'புதியதோர் உலகம் படைப்போம்" என்றுக் கூறி அதை ஏட்டளவில் எழுதி வைத்திருப்பவர்களை பார்த்து வருகிறோம். அதை செயலளவில் கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர்கள் உலகில் பெருமானார்(ஸல்) அவர்களைத் தவிற வேரெவரும் இல்லை என்று அடித்துக் கூறமுடியும்.

எந்தளவுக்கு என்று சொன்னால் ? அவர்களில் ஒருசிலர் மேல்படி தீமைகளில் எதையாவது செய்து விட்டால் கூட அதைத் தாமே முன்வந்துக் கூறி இஸ்லாமிய குற்றவியல் தண்டனையைப் பெற்றுக் கொண்டு உலகில் தங்களை தூய்மை படுத்திக் கொண்ட வரலாறு அவர்களுக்கு உண்டு.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை இதுபோன்று மக்களுடைய மனங்களை தலைகீழாகப் புரட்டி அவர்களைக் கொண்டு புதியதோர் உலகு படைத்த சாதனை பெருமானாரைத் தவிற வேறு எந்த சரித்திர நாயகனுக்கும் இன்றுவரை கிடையாது.

இந்திய தந்தை அண்ணல் காந்தி அடிகள் சரித்திர நாயகர் முஹம்மது நபி பற்றிக் கூறுகிறார்.

இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான், அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல.
- Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi

சரித்திர நாயகர் முஹம்மது நபி பற்றி வரலாற்று ஆசிரியர் லாமர்டின் கூறுகிறார்:
சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை, மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்னவென்று உரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையால் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.
தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒருகொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையின் பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள்.
- Lamartine, Historie de la Turquie, Paris 1854, vol II, pp. 2760277

தேவஸ்தானம் மற்றுமல்லாமல் இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் விபச்சாரம் தலை தூக்காமல் இருக்க வேண்டுமெனில் பலதெய்வ நம்பிக்கையை துடைத்துதெறிந்து விட்டு ஓறிரை நம்பிக்கையை விதையுங்கள். மண்ணின் மைந்தர்களுடைய மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை மண்ணில் புரையோடிப் போயுள்ள தீமைகளை களையவே முடியாது .

இன்றும் இந்திய பாடப் புத்தகங்களில் பாரதியார் எழுதிய '' புதியதோர் உலகம் படைப்போம் கெட்டப் போரிடும் உலகத்தை வேறோடு சாய்ப்போம் "' என்றுக் கூறிய தத்துவத்தை பாடுவதோடு நிருத்திடாமல் புதியதோர் உலகு படைக்க புரட்சி மிக்க சமுதாயத்தை ஏகஇறைவன் ஒருவனே! என்ற அடிப்படையில் உருவாக்குங்கள்.

ஏகஇறைவன் ஒருவனை மட்டும் ஏற்றுக்கொண்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், அநியாயமாக எவருடைய உயிரையும் கொலை செய்ய மாட்டோம் என்று மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளாதவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் எந்த மூளையிலும் விபச்சாரம் கடவுள் ஆலயம் வரை நெருங்குவைதை எவராலும் தடுக்க முடியாது.

60:12. நபியே!(முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம் எங்கள் குழந்தைகளை கொல்ல மாட்டோம் நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூறமாட்டோம் நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 60:12

> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<

1 comments:

anbarasan June 26, 2008 at 4:15 PM  

READ

""உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான் ! . ""

http://idhuthanunmai.blogspot.com/2008/02/blog-post_17.html

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP