**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வாழ்க இஸ்லாமிய மதம்! --கவிதை--ஏ. சந்திரசேகர்

>> Thursday, April 19, 2007

வாழ்க இஸ்லாமிய மதம்! --கவிதை--ஏ. சந்திரசேகர்
சுனாமி தாக்கி முடிந்த நிலையில் முஸ்லிம்களின் சேவைகளை நினைவு கூர்ந்து நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பஞ்சாயத்தார்கள் இயற்றியுள்ள நன்றிக் கவிதை மடல்.


மனிதன் பிறந்து குறை எல்லாம் களைந்து
குறை இல்லா வாழ்க்கை வாழ்ந்து
ராக்கெட் செய்து பறந்து ராப்பகலாய் விண்ணில் திரிந்து
ரகரகமாய் வாழ்ந்தாலும் ராவுகாலம் வரும் என்று யார்சொன்னார்

சாவு காலம் வந்தது பார் ரகளை பண்ண
கடலோரமாய் காலையில் 9.20க்கு கடலுக்குச் சென்ற பின்னே
கடல் அலை ரூபத்திலே காத்து இருந்தது மரணம்
கணை தொடுத்த அம்பைப்போல் கடல் அலையோடு கலந்ததம்மா மனிதஉயிர்


கடல்அலைஓய்ந்தாலும் கதறலும் கண்ணீரும் ஓயவில்லை
டிசம்பர்26 2004 ல்தொடரான கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து அணையவில்லை அழுகுரல்தான்


ஓடி ஓடி ஒளிந்தாலும் ஒருநாள் உயிர்பிரியும்
உண்ண உணவில்லை பசிமயக்கம்
உறங்க இடமில்லை உயிர்மயக்கம்
உடுத்த துணி இல்லை வழிமயக்கம்
உற்றாரைத் தேடவில்லை உறவும் வந்து நாடவில்லை
உயிர் பிழைத்தது அறிதென்று உபத்திரத்தோடு ஓடிவந்தோம்


ஊரை விட்டு ஓய்வு இடத்தை நாடி ஒரு பாக்கெட் சோறு கிடைக்காதா என்று உபத்திரப் பசியோடு மூன்றுநாள் பட்டினி
உறுத்தியது மனிதஉயிர் மீனவமக்களுக்கு மக்களின் மனித நேயம் பாக்கெட் சோறு கொண்டு பத்திரமாய்த் தந்தாலும் சோறு நொந்து போய்தூக்கி எறிந்தவரும் வுண்டு


சோற்றுக்குத் தவிக்கும் மக்களை உற்று நோக்கி சோதனையா வேதனையா என்று சிந்தித்து சேர்ந்து வந்தனர் இஸ்லாமிய இளைஞர்கள்

நாளை முதல் நாள் கணக்கில் நாங்கள் தருவோம் சமையல் செய்து சமபந்தி இலை போட்டு சத்தான உணவு தந்து
அன்பு அல்லாவின் செயல் வடிவே
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்


மீனவருக்குத்தந்தை,தாய்,அண்ணன்அல்ல
மனிதருக்கு மனித நேய பொறுப்போடு
மனிதனுக்கு உதவி செய்ய கீச்சாங்குப்பம்
மண்ணில் நின்று செய்த தொண்டுகள் மறக்கவில்லை


உயிர் உள்ள மக்கள் மாண்டவரை தொட்டு தூக்கி மண்ணிலே அடக்கம் செய்த மறக்காத சேவைகளை பாராட்டும் மீனவர்கள்

மாண்டஉயிர் 8நாள் ஆகி மடிந்து போன உடல் அழுகி
மறக்காத ஊன் நாற்றம் மறைக்க வாயில் துணிகட்டி
மண்டி இட்டு பிணம் தூக்கி மகத்துவமாய் சேவைசெய்தார்
இஸ்லாமிய நாகை இளைஞர்கள்


இறைவனின் அருளோடு எந்நாளும் இணை பிரியா மீனவர்கள் இனம் எல்லாம் சேர்ந்து இன்புற்று வாழ்த்துகிறோம்
வாழ்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் சேவைகள்
வளர்க நாகை இஸ்லாமிய மக்கள் சேவைகள்
சாதி மதம் தேவை இல்லை சாதித்த இஸ்லாமிய இனமக்கள் சந்திப்போம் கைகொடுப்போம்


சவக்குழியை அடையும் வரை சவம் தூக்கி உணவு தந்த
சலாம், அல்லாவின் அடியார்களை சகோதரனாய் அன்பு கொண்டு சந்திப்போம் சேர்ந்து நின்று சாதிப்போம் வாழ்க்கையை
என்றும் வாழ்க இஸ்லாமிய மதம் வளர்க மீனவர் நட்பு .


இப்படிக்கு-பஞ்சாயத்தார்கள்-கீச்சாங்குப்பம் மீனவர்கள்.
கவிதை இயற்றியவர் ஏ. சந்திரசேகர் -கீச்சாங்குப்பம்
---------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP