தீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பயிற்சி.
>> Friday, December 5, 2008
டெல்லி: நரேந்திர மோடி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோரின் வீடியோ படங்களைக் காட்டி தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை போலீஸ் பிடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் இந்தத் தகவல்களை அளித்துள்ளான்.அஜ்மலிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள மேலும் சில விவரங்கள்..
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதை எங்களுக்குக் காட்டி உத்வேகமூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், குஜராத் கலவரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த வீடியோ படங்களும் எங்களுக்குக் காட்டப்பட்டன. இதன் மூலம் எங்களுக்கு வெறியூட்டப்பட்டது.
பிதாயீன் தாக்குதல்களுக்குத் தேவையான கடுமையான பயிற்சிகள் எனக்குத் தரப்பட்டன. நானும் மற்றவர்களும் கலந்து கொண்ட பயிற்சி முகாம்களில், எங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள், எங்களை கடுமையாக அடிப்பார்கள்.
இதன் மூலம் எதிரிகளிடம் சிக்கி விசாரணைக்கு உட்படும்போது வலியைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பதற்காக இந்த பயிற்சி.
எங்களுக்கு பல்வேறு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாகியூர் ரஹ்மான் என்கிற சச்சு என்பவர்தான் எங்களுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். பஹாதுல்லா, முப்தி சயீத், உஸ்தாத் அப்துல் ரஹ்மான், அபு ஆனுஸ் ஆகியோரும் எங்களுக்குப் பயிற்சி அளித்தனர் என்று கூறியுள்ளான் அஜ்மல்.இவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்றும், ஐஎஸ்ஐயுடன் இணைந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 16:43
http://thatstamil.oneindia.in/news/2008/12/04/india-terrorists-were-shown-footage-of-modi.html
பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.
மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) நன்றி : விடுதலை
0 comments:
Post a Comment