முஸ்லீம் என்றால் தீவிரவாதியா? (DIRECTOR) இயக்குனர் அமீர்.
>> Saturday, December 27, 2008
இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.
முஸ்லிம்களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது.
இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொகலாயர்கள் எப்படிப் படையெடுத்தார்கள் என்று சொன்னோமோ அதே போல் தீவிரவாதிகளான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற்பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது.
இதை உடைக்க ஆசை.
இதேபோல் உண்மையான ஈழப் பிரச்னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னையையும் படமெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''
ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு.
அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள்,
நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன.
ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை.
இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை?
இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை?
அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியானார்கள்?
இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லையென்றால் வாழ்வது எதற்கு?
மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.'' --இயக்குனர் அமீர்.
31.12.08 குமுதத்திலிருந்து.
***************************************************
அரசு பதில்
பொன்விழி, அன்னூர்.
**போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?
அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. 31.12.08 குமுதத்திலிருந்து
READ:- பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ்- திக்விஜய்சிங் கேள்வி
2 comments:
யார் சொன்னது யாரும் போரடவில்லை என்று குஜராத்தில் கலவரம் நடந்த போது.எத்தனை கண்டன அறிக்கைகள் வந்தது. எத்தனை கண்டன பொது கூட்டங்கள் நடைப்பெற்றது.
அதுவெல்லாம் தெறிமால் பேசுகிறார் அமீர்.
அமீர் சொல்வதைப் பார்த்தால் முஸ்லீம்களை எல்லாரும் புறக்கணிக்கிறார்கள் என்பதைப் போல சொல்கிறார்.முஸ்லீம்களுக்காக எத்தனை இந்துக்கள் குரல் கொடுத்துவருகிறார்கள் என்று அவருக்குத் தெறியுமா?
ஏன் மற்றவர்களை சொல்ல வேண்டும் என்னுடைய பதிவுகளை படித்துப்பாருங்கள். இந்துத்வா வெறியர்களை எவ்வளவு சாடியிருக்கிறேன் என்று, அதெல்லாம் முஸ்லீம்களுக்காத்தான் என்று புரியாதா.
மனதை புண்படுத்துவதைப் போல உள்ளது என்ன பிரச்சனை என்றாலும் என்னை அழையுங்கள் உங்களுடன் சேர்ந்து போராடவும் சிறைச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்.
GOOD ARTICLE SIR
SURYA MOHAN
Post a Comment