இந்தியா-இஸ்ரேல்.. உறவும் வரலாறும்...
>> Wednesday, June 18, 2008
இஸ்ரேல், சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நாடு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
ஐரோப்பா முழுவதும் நாடற்ற நாடோடிகளாக திரிந்த யூதர்கள், 'தாய்நாடு' என்று புழுகிக் கொண்டு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர்.
ஆதியில் யாகூப் நபியின் வழித் தோன்றல்களாக, மிகுந்த பாலஸ்தீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளில் இறைநம்பிக்கை, வேதகோட்பாடு, இறைவிசுவாசம், சமய நெறிமுறைகளில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்தவர்கள்.
மூசா நபியின் காலத்திற்குப் பின்னர் தௌராத் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும், ஈஸா நபியின் காலத்தில் இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு சத்தியமார்க்கமான இஸ்லாத்தை நேசித்து பின்பற்றி விசுவாசிகளாக தொடர்ந்து வந்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்களின் முன்னோர்கள் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தான் வந்தனர்.
பாலஸ்தீனத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த பூர்வீக இஸ்ரேலியர்களை விரட்டி விட்டு, பாலஸ்தீனத்தை கைப்பற்ற ரோமில் இருந்து போப்கள் தொடர்ந்து சதி செய்து வந்தனர்.
யூதர்களை அழைத்து பாலஸ்தீனம் உங்கள் 'தந்தை யர் தேசம்' முஸ்லிம்களை விரட்டி விட்டு குடியேறுங்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இதற்கு பலமுறை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. சலாஹுத்தீன் அய்யூபி என்ற முஸ்லிம் ஆட்சியாளர் காலத்தில் கி.பி 10ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் வீரர்கள் விரட்டப்பட்டு பாலஸ்தீன பூமி முஸ்லிம்களால் மீட்கப்பட்டது.
தொடர்ந்து ஏறத்தாழ 1000 ஆண்டுகள் முஸ்லிம்களின் பூமியாகவே பாலஸ்தீனம் நீடித்து வந்துள்ளது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களின் சதியோசனை மட்டும் முற்றுப்பெறவில்லை. முதல் உலகப் போரில் மிகப்பெரிய முஸ்லிம் சாம்ராஜ்யமான உதுமானிய பேரரசு தோல்வி கண்டது.
துருக்கியை தலைமையகமாக கொண்டது உதுமானிய பேரரசு. அந்த பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளை ரஷ்யா உள்பட ஐரோப்பிய சக்திகள் பங்கிட்டுக் கொண்டன. பாலஸ்தீனம் பிரிட்டனிடம் சிக்கியது. பாலஸ்தீனத்தில் ஆட்சி அதிகாரத்தை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் மாறியது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர்களை கொன்று வந்தனர். இந்தச் சம்பவம் யூதர்களுக்கு உலகளவில் இரக்கமனத்தை ஈட்டிக் கொடுத்தது.
நாடற்ற யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, முடிவில் அதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என்று தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு அந்தரங்க சதி பாலஸ்தீனத்தை தேர்வு செய்ய தூண்டியது.
1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.
ரஷ்யாவின் கண்டிப்பு போலியானது.
அதேநேரம், காந்தி, நேரு போன்றோர் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு அதை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டனர்.
ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் காந்தியம் மறைந்து மக்கிப்போன வரலாறு அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இஸ்ரேல் மீதான இந்தியாவின் நேசமும்.
அரபு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவையும், வர்த்தக உறவையும் நீட்டித்து வரும் இந்திய அரசாங்கங்கள் அவ்வப்போது, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறவும் தயங்கியதில்லை. ஆனால் 1950ம் ஆண்டே இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள தகவலை இந்திய வெளியுறவுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இந்த ஆண்டு 60ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. இதனையொட்டி இந்திய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
மே 8ம் தேதி வெளியான டெக்கான் க்ரோனிக்கல் என்ற நாளேட்டின் 8ம் பக்கத்தில் அது குறித்த ஒரு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான தூதரகம் தில்லியில் திறக்கப்பட்டது.
1992ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி டெல்அவிவில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம் மராவ் அதற்கு காரணமாக இருந்தார்.
இச்சம்பவத்தினால் இஸ்ரேலோடு இந்தியா உறவு கொள்ள நரசிம்மராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் இந்தியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன், காந்தியை உயர்வாக மதித்தார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த கையோடு, யூத நிறுவனம், மும்பையில், குடியேற்ற அலுவலகத்தை திறந்தது.
தொடர்ந்தது, உடனடியாக அந்த குடியேற்ற அலுவலகம் வர்த்தக அலுவல கமாகவும், பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1950க்கும்-1960க்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்று மாக அரசு ஒப்பந்தங்கள் இந்திய - இஸ்ரேலுக்கிடையே தொடர்ந்தன.
இதனிடையே, இந்திய முன்னாள் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் இஸ்ரேல் விஜயம் செய்துள்ளார். அதேபோல் இஸ்ரேலிய அமைச்சர் ஈகல் அலோன், மாஷி ஷாரேட் மற்றும் கிடியோன் ரஃபேல் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
அரசியல் ரீதியான உறவுகளை இஸ்ரேலோடு, இந்தியா தொடர முடிவெடுத்தபோது 1992 பிப்ரவரியில் புதுதில்லியில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்தது. 1992 மே 15ல் இந்தியா இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் தூதரகத்தை திறந்தது, அதிலிருந்து இருநாடுகளுக்கிடையிலான உறவு பரந்தளவில் தீவிர வளர்ச்சி கண்டு வருகிறது''.
(தகவல்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசாங்கம்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
1950ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேரா கொள்கைகளின் பிதாமகன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நேரு, மிகப்பெரிய சோஸலிச கொள்கை வாதியாகவும் உலக நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்பட்டார்.
அவரது காலத்திலேயே இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.
அரபு நாடுகளுடனான உறவு சிதைவுறாமலிருக்க இந்தியா இந்த ரகசியத்தை இத்தனை காலம் மறைத்து வந்துள்ளது போலும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியல-இஸ்ரேல் உறவு குறித்து, இது ஒரு பழமையான உறவு என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அந்த உண்மை இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.
ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை. இஸ்ரேலை ஒரு இனவெறி தேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அதேநேரம் அமெரிக்க சக்தி, தனது பல்வேறு சதிவேலைகளால், இஸ்ரேலை அங்கீகரிக்கும் திசைக்கு அரபு நாடுகளை தள்ளிச் செல்கிறது.
சர்வதேச வர்த்தக கழகத்தில் சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைந்த போது, அமெரிக்கா ஒரு நெருக்கடி கொடுத்தது. அதே வர்த்தகக்கழகத்தில் இஸ்ரேலும் உறுப்பு நாடு. சர்வதேச வர்த்தகக் கழகத்தில் இணையும் எந்த ஒரு நாடும், இஸ்ரேலோடு வர்த்தக உறவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது. சவூதி அரசாங்கம் அதற்கும் பணிந்தது. ஆயுத வல்லரசுகள் இப்போது உலக அளவில் பொருளாதார வல்லரசுகளாக வளர்ந்து வருகின்றன.
சர்வதேச வர்த்தகக் கழகம் போன்ற உலக நிறுவனங்களை புறக்கணித்து விட்டு பொருளாதாரப் போட்டியை தொடர முடியாது. இதன் காரணமாக அரபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலோடு புன்முறுவல் காட்டத் தொடங்குகின்றன.
ஜோர்டான், எகிப்து நாடுகள் ஏற்கெனவே இஸ்ரேலோடு அரசியல் பூர்வமான உறவுகளை கடைப் பிடிக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலோடு உள்ள வீராப்பை குறைத்துக் கொள்ள முன்வந்த போது, இந்தியா இதுவரை கனத்த சுமையோடு மூடிமறைத்த, கமுக்கமாக இஸ்ரேலோடு கொண்டிருந்த உறவை தடார் என்று போட்டுடைத்துள்ளது.
மட்டுமல்ல, இந்திய பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய மாண்புகளுக் கும் எதிராக மேற்கொள்ளும் சதி வேலைகளுக்கு, இதன் அப்பனான இஸ்ரேலின் யோசனையை ஏற்க முன் வந்துள்ளது.
சென்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸிஸ் கொய்த்தியர் என்ற யூதர் ஒளரங்கசீப் குறித்து போலியான ஓவியக் கண்காட்சி நடத்தியதும் இதன் ஒரு பகுதிதான்.
உலகளாவிய அளவில் இஸ்லாமிய நெறியை ஒழித்துக்கட்ட விரிக்கப்பட்ட சர்வதேச வலையை இந்திய எல்லை வரை விரித்து கட்ட ஒரு புதிய அல்ல மிகப் பழைய ஒரு பாதையைத் தான் திறந்துவிட்டிருக்கிறது.
இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமோஃபோபியா போன்ற சாத்தியமற்ற திரிபு வாதங்களை, கற்பிதங்களாக இந்திய ஊடகங்கள் வார்த்துக் கொடுத்ததும் இந்த இந்தோ - இஸ்ரேல் உறவுதான்.
இதே நாடுகள் இடையிலான வர்த்தக உறவு இதுவரை 3.3 பில்லியன் டாலர் களை தொட்டுள்ளது. தாராள வர்த்தகத்தினை இருநாடுகளும் துவங்க இருக்கின்றன. சொத்து வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவில் இஸ்ரேல் முதலீடு செய்துள்ளது.
அதே போல் இந்தியாவும் இஸ்ரேலில் முதலீடு செய்திருக்கிறது. இரு நாட்டு முதலீடுகளும் நிலையாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக, இந்தியாவுக்கு, ஒன்பது லட்சம் ஆலிவ் மரக் கன்றுகளை இஸ்ரேல் கொடுத்துள்ளது.
சொட்டுநீர்ப் பாசனத்திலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சமீபமாக, இஸ்ரேல் உலகின் வேறெந்த பாகத்தையும்விட மிக அதிக அளவில் இந்தியாவில் விவசாய வளர்ச்சியை தொடங்கியுள்ளது.
கழிவு நீர் மேலாண்மை, தோட்டக்கலை ஆகியவற் றில் கூட்டுறவு திட்டங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் பல துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் விரிவடைகிறது. உயர் தொழில் நுட்பம், பாதுகாப்புதுறை ஆகிய வற்றிலும் இருநாட்டு உறவுகள் வளர்ச்சிய டைந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆசியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் மிகப் பெரியது. உலகின் பெரிய தூதரகங்களில் ஒன்று.
இஸ்ரேல், பொருளாதார வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளில் 5 சதவீதத்தை தாண்டியுள் ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை 70 லட்சத்து 30 ஆயிரம். தனிமனித வருமானம் ஆண்டுக்கு 22,000 டாலர். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சராசரியை விடவும் கூடுதலாகும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மார்க் ஸாபர் மே-8 டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த யாசிர் அரஃபாத்துக்கு (பாலஸ்தீன விடுதலை வீரர்) பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
பாலஸ்தீன விடுதலைக்கு இந்தியா தனது ஆதரவை தருவதாக பல்வேறு காலகட்டங்களில் உறுதி அளித்திருக்கிறது.
பாலுக்கு பூனை காவல் இருப்பதுபோல் இந்தியா பாலஸ்தீன விடுலைக்கு ஆதரவு தந்து வருவது சத்தியமாக பொய் சத்தியமே.
அரஃபாத்துக்கு விருதுடன் அல்வாவும் கொடுத்ததை அரஃபாத் அறிந்தார். நாளைய வரலாறும் அறியும். -> இறைநேசன் > tmmkonline.
******************************************
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம்
1 comments:
//1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.//
1947-ல் பாலஸ்தீனத்தை பிரிக்கும் தீர்மானத்தின் வோட்டெடுப்பில் பிரிட்டன் நடுநிலைமை வகித்தது. சோவியத் யூனியனும் அதன் சார்பு நாடுகளும் ஆதரித்து வோட்டு போட்டன. உளறுவதை நிறுத்தி சரித்திரத்தை பார்க்கவும்.
//ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை.//
இன்னொரு உளறல். ஐ.நா. உறுப்பினர்கள் லிஸ்டை சரிபார்க்கவும்.
டோண்டு ராகவன்
Post a Comment