பக்கவாதம். பாதிப்புகள். அறிகுறிகள்.
>> Wednesday, June 25, 2008
உடலில் ஏதேனும் ஒரு பகுதியே அல்லது கை, கால்களே செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம். மனிதனின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான் பக்கவாதத்திற்கு மூலக் காரணமாக அமைகிறது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது.
அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரேக் என்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரேக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.தற்காலிகமாக உண்டாகும் பக்கவாதத்தை 24 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து குணமாக்காவிடில் அது ஐசெமிக் ஸ்ட்ரேக் ஆகிவிடும்.
பக்கவாதத்திற்கு பல அறிகுறிகள் உள்ளன.
பக்கவாதம் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் இதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும். அப்பேதே அவர்களை மருத்துவமனைக்குக் கெண்டு வந்தால் அவர்களை பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அது என்ன அறிகுறிகள்... நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் நடுக்கம், மரத்துவிடும்தன்மை பேன்றவைதான் அவை என்கின்றனர்.
அதாவது ஒருவருக்கு திடீரென கைகள் மரத்துவிடுவது போன்றே, கால்களில் நடுக்கம் மற்றும் நடக்க முடியாதத் தன்மை, வாய் குழறுதல், பக்கத்தில் நிற்பவர்களை சரியாக அடையாளம் காண முடியாதத் தன்மை, ஞாபக சக்தி குறைதல், கண் பார்வை மங்குதல் போன்ற பல அறிகுறிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து விடும்.
அந்த சமயத்தில் அவர்களை நாமே பரிசோதிக்கலாம். அதாவது அவர்களிடம் சத்தமாக சிரிக்க சொல்லுங்கள், 1 நிமிடம் ஏதாவது பேசச் சொல்லுங்கள், இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்லுங்கள்.
இதில் ஏதாவது ஒன்றில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
தற்போது மற்றொரு அறிகுறியும் இருக்கலாம். அதாவது அவரது நாக்கை நீட்டச் சொன்னால் அது ஏதாவது ஒரு பக்கமாக மட்டுமே நீளும். நேராக நீட்ட முடியாமல் போவதும் உண்டு.
இதுவும் பக்கவாதத்திற்கான அறிகுறி தான். எனவே பக்கவாதம் பற்றிய சந்தேகம் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கெள்வது சிறந்தது. பக்கவாதத்தை குணமாக்க மாத்திரைகளும், அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. செயலிழந்த பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் தொடர் பயிற்சிகளும் பக்கவாதத்தை குணப்படுத்த உதவும்.
>>HEALTH ARTICLE
------------------------------
புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்
0 comments:
Post a Comment