கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.
>> Tuesday, June 24, 2008
கெடுதல் செய்யும் குண்டு பல்புகள். குளிர்ச்சியான ஒளியை வீசும் சி.எப்.எல் பல்பே மின் சிக்கனம்.. லாபம்
ஒரே நேரத்தில் உலகத்துக்கு உங்களுக்கும் கெடுதல் செய்யும் வேலையை ஒரு பொருள் செய்கிறது என்றால்.. நிச்சயம் அது நம்மூரின் குண்டு பல்பாகத்தான் இருக்கும்.
ஆம்.
ஆம்.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஒளியைப் பரப்பியபடி, அருகே நிற்பவரை வியர்வையில் நனைய வைக்கும் வெப்பத்தை உமிழும் குண்டு பல்பை இனியும் பயன்படுத்த வேண்டுமா?
இந்தக் கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசே இப்போது கேட்கத் தொடங்கி விட்டது. இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் சி.எப்.எல். பல்ப். காம்பாக்ட் ப்ளோரோ சென்ட் லைட் என்பது அதன் விரிவாக்கம். சுருக்கமாகச் சொன்னால் 10 குண்டு பல்புக்கு ஒரு சிஎப்எல் சமம் எதில்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், உலக வெப்பமயமாதலை தடுப்பதில்.நம் நாட்டில் சிஎப்எல் பல்புகள் 1995-க்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்தன.
அது வரை சுவிட்சைப் போட்டு விட்டுக் காத்திருந்தால் மினுக் மினுக் என்று ஒரு வழியாக `கொய்ங் என்ற ரீங்கார சத்தத்துடன் எரியத் தொடங்கும் குழல் விளக்குதான் (டியூப் லைட்) குண்டு பல்புக்கு ஒரே போட்டியாளர். அதே புளோ ரோசென்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டு கையடக்க அளவில், விரும்பும் டிசைன்களில் வந்து விட்டது.
குண்டு பல்ப் மங்கலான மஞ்சள் நிற உடலுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வெளிச்சத்தைத் தரும். அதற்கு ஆகும் மின் செலவு அதிகம். அதாவது 60 வாட் அதே அளவு வெளிச்சத்தை வெண்மை நிறத்தில், குளிர்ச்சியாக வெறும் 24 வாட் மின்சக்தியில் சிஎப்எல் தரும்.
நாலடி, இரண்டடி நீள டியூப் லைட்டுக்கு பிரேம், பிட்டிங், சோக், ஸ்டார்ட்டர் என்று பட்டாளமே தேவை. ஆனால் சிஎப்எல் பல்பை சாதாரண குண்டு பல்புக்கான ஹோல்டரில் மாட்டி சுவிட்சைப் போட்டால் போதும்.
மின் சிக்கனத்தைப் பொறுத்தவரை குண்டு பல்பை விட சிஎப்எல், பல்ப் 66 சதவிகித சிக்கனம் தரும்.
மின் சிக்கனத்தைப் பொறுத்தவரை குண்டு பல்பை விட சிஎப்எல், பல்ப் 66 சதவிகித சிக்கனம் தரும்.
குண்டு பல்ப் எரியும்போது வெளியிடும் வெப்பத்துடன் ஒப்பிட்டால், சிஎப்எல் பல்ப் 90 சதவிகிதம் குறைவாக வெளியிடும்.
குண்டு பல்பை மாற்றும் போது தொட்டால் சுடுவதில் 10-ல் ஒரு பங்கு தான் சிஎப்எல் பல்ப் சுடும். நீடித்த உழைப்பிலும் சிஎப்எல் பல்புக்கு கிட்டே நெருங்க குண்டு பல்பால் முடியாது.
6 மாதம் முதல் அதிகபட்சம் ஓராண்டு வரை மட்டுமே குண்டு பல்பின் டங்ஸ்டன் உங்களுக்காக உருகி எரியும். பிறகு, கண்ணை மூடி விடும்.
சிஎப்.எல் பல்ப் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை குளிர்ச்சியான ஒளியை வீசும்.
இவ்வளவு நன்மைகள் இருந்தும் சிஎப்எல் பல்புகள் வீடுகளை இன்னும் வெகுவாக அலங்கரிக்கவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் அவற்றின் விலைதான். குண்டு பல்ப் ரூ.15 முதல் கிடைக்கிறது.
தரமான, கம்பெனி தயாரிப்பு சி.எப்எல். பல்பின் குறைந்தபட்ச விலை ரூ.150.
எனினும் வாடிக்கையாளருக்கும் ஒரு கணக்கைத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் தவறவில்லை. அது, ரூ.15-க்கு குண்டு பல்ப் வாங்கினால் 6 மாதத்துக்கு ஒன்று என 5 ஆண்டுகளில் ரூ.150 செலவாகும்.
எனினும் வாடிக்கையாளருக்கும் ஒரு கணக்கைத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் தவறவில்லை. அது, ரூ.15-க்கு குண்டு பல்ப் வாங்கினால் 6 மாதத்துக்கு ஒன்று என 5 ஆண்டுகளில் ரூ.150 செலவாகும்.
அதுவே, ஒரு முறை ரூ.150-க்கு சிஎப்எல் பல்ப் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பதுடன், மின்சார செலவை குண்டு பல்பைவிட 66 சதவிகிதம் குறைக்கும்.
எனவே, உடனடி செலவைப் பார்க்காமல் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டால் சிஎப்எல் பல்பே லாபம் என்கின்றனர் அவர்கள்.
இத்தனை சிறப்பான சிஎப்எல் பல்பில் ஒரே ஒரு சிறிய குறையும் இருக்கிறது. பல்பில் இருக்கும் பாதரசம், மனித உடலுக்கு தீங்கானது. அது பல்பில் குறைந்த அளவே இருந்தாலும், பல்பின் வாழ் நாள் முடிந்ததும் அது உடைந்து பாதரசம் வெளியேறாமல் பத்திரமாக அப்புறப்படுத்துவது நல்லது.
******************************
இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!
****************************************
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்
****************************************
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்
0 comments:
Post a Comment