இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!
>> Thursday, June 19, 2008
இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!
பால்தாக்கரே சொல்கிறார்
மும்பை, ஜூன் 19- தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க இந்து மத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டும் என்று பால்தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரி கையில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இந்துத்துவா ஆதரவாளர்கள் குண்டு வைத்திருப்பது, இதயத்தை தொடுவதாக உள்ளது. ஆனால் இந்துக்களை காயப்படுத்த குண்டு வைக்கப் பட்டிருப்பதால் கவலையாக உள்ளது.
இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.நாடக அரங்கத்தில் குண்டு வைப்பதற்கு பதிலாக, வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் தளம் அமைத்துச் செயல்படும் பகுதிகளில் குண்டு வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்து அமைப்புகள் புரட்சி ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்படி தேவையின்றி, நாடக அரங்கங்களில் குண்டு வைத்தால், புரட்சியை உருவாக்க முடியாது.
இந்தியாவில் முகலாயர்கள் புகுந்தபோது, அவர்களுக்கு எதிராக வாளை உயர்த்தும் துணிச்சல், மராட்டிய மன்னர் சிவாஜிக்கு இருந்தது. அதனால் தான் அப்போது இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.இந்து தீவிரவாதம் மூலம் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்து மதம் நீடிக்க வேண்டுமானால், நாட்டை பாதுகாக்க வேண்டுமானால், இந்து மத தற்கொலை படை உருவாக்கப்பட வேண்டும் என பால்தாக்கரே கூறியுள்ளார்.
காங்கிரசு கண்டனம்- யாராக இருந்தாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; சட்டத்தைக்கையில் எடுத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைக் குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரசுக் கட்சி கூறியுள்ளது.
சிவசேனாக் கட்சித் தலைவரின் கருத்தைக் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராசன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதே மாதிரியான கண்டனத்தை பா.ஜ. கட்சித் தலைவர் வெங்கய்ய நாயுடும் தெரிவித்துள்ளார்.பத்திரிகை அறிக்கை
--------------------------------
பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!மத்திய அரசுக்கு தமுமுக வலியுறுத்தல்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:
இந்து தற்கொலைப்படை அமைக்க வேண்டுமென்றும், இந்துத்துவாவினர் வெடிகுண்டு வைப்பதும், வெடிகுண்டு செய்வதும், நெஞ்சை தொடுகிறது என்று பயங்கரவாத கருத்துகளை வெளியிட்டுள்ள பால்தாக்கரேவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது இந்த தேசத்திற்கு இழிவாகும்.
எங்கெல்லாம் குண்டுகள் வைக்க வேண்டுமென்று தனது பயங்கரவாத படைக்கு பால்தாக்கரே வெளிப்படையாகவே ஆணையிட்டுள்ளார்.
இதற்கு பிறகும் அவர் மீது எந்த சட்டமும் பாயாமல் இருப்பது அரசின் கையாளாகத் தனத்தைக் காட்டுகிறது.
பால் தாக்கரே உடனடியாக கைது செய்து மும்பை கலவர வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத பேச்சுக்களை அனுமதிப்பது ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும்.
மகராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிவசேனாவினர் வெடிக்குண்டுகள் தயாரித்த போது அவை வெடித்து சிலர் இறந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்பதை ஜோடிக்கும் வகையில் அவ்விடத்தில் முஸ்லிம்கள் அணியும் உடைகள், தொப்பி, ஒட்டு தாடி, ஆகியற்றையும் சிவசேனாவினர் விட்டுச் சென்றனர்.
தற்போது பால்தாக்கரேவின் இந்தப் பேச்சைப் பார்க்கும் பொழுது மகராஷ்டிர மாநிலம் மாலேகான், ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித், மற்றும் ஜெய்பூர் குண்டுவெடிப்புகளுக்கும் சிவசேனாவிற்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
விரும்பத்தகாத விளைவுகளுக்கு பால்தாக்கரே தன் பேச்சின் மூலம் விதை போட்டுள்ளார். பால்தாக்கரேயின் இந்த கண்டனத்திற்குரிய பேச்சிற்காக அவர் உடனே கைது செய்யப்பட வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.
இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என அரசை தமுமுக எச்சரிக்கிறது >>tmmkonline.
0 comments:
Post a Comment