**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?

>> Tuesday, June 24, 2008

உலகம் முடியும் காலம்வரை புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

"வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம், அதை பூமிக்கடியில் தங்கவைத்தோம், அதைப்போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையோன். " திருக்குர்ஆன் 23:18.

பூமியின் மேல்பரப்பில் சில இடங்களில் மாத்திரம் விதிவிலக்காக நீர் நின்று கொள்ளும் அவ்வாறு நின்று கொள்வதையே நாம் கன்மாய்களாக, குளங்களாக பாவித்துக் கொள்கிறோம். இதுவும் மனித சமுதாய தேவையை முன்னிருத்தியே இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான்.

புனித இறைவசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்l

நிலத்துக்கடியில் தேங்கி நிற்கும் நீர் எதன் வழியாக நிலத்துக்கடியில் செலுத்தப் படுகிறது என்பதை கண்டறிய நீண்டகாலம் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு நிலத்தடி நீரின் தன்மைகளை கீழ்கானுமாறு உலகுக்கு அறிவித்தார்கள் .

• மழையிலிருந்து விழக்கூடிய நீரே நிலத்துக்கடியில் தேங்கி நிற்கிறது என்ற அறிய தகவலை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் 1580ல் Bernard Palyssi (பெர்னார்ட் பாலிஸ்ஸி) என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் உலகுக்கு அறிவித்தார்.

• அதற்கடுத்து 17வது நூற்றாண்டில் ( E.Mariotte , P.Perrault ) என்ற அறிஞர்கள் இணைந்து நிலத்தடி நீர் பற்றி மீண்டும்; ஓர் ஆய்வை மேற்கொண்டு இறுதியில் அவர்களும் பெர்னார்ட் பாலிஸியுடைய கருத்தையே கூறினார்கள்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லாத உம்மி முஹம்மது நபியால் (ஸல்) நிலத்தடி நீர் பற்றின துல்லியமான தகவலை எவ்வாறு தரமுடிந்தது ?

இறைவன் அருளியதை பெற்று உலகுக்கு அறிவித்தார்கள் என்பதை தவிர வேறென்ன கூறமுடியும் !

திட்டவட்டமாக குர்ஆன் இறைவேதம் தான் என்பதை அலசுவதற்கு இது ஒருப் பெரிய ஆதாரமாகும்.

காரணம் மேற்கானும் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீரின் தன்மைகளைக் கூறுவதற்கு முன் கடல் நீரே சுழல் காற்றின் மூலம் கடலின் அடியிலிருந்து பூமிக்கு செலுத்தப்படுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பி வந்தனர் இது கிருஸ்துடைய பிறப்புக்கு முன் தோன்றி கிருஸ்துக்குப் பின் 15 நூற்றாண்டுகள் இதே நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது.

இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.

புனித குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் சுயமாக இயற்றப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த கருத்தையே பிரதிபலித்திருந்திருப்பார்கள்.

குர்ஆன் ஏகப் பரம்பொருள் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்பதால் தான் மொத்த மக்களுடைய கருத்தும் கடல் நீர் தான் நிலத்தடி நீர் என்று கூறுகையில் குர்ஆனுடைய கூற்று மாத்திரம் நிலத்தடி நீர், மழையிலிருந்து பெறப்பட்டவை என்று வித்தியாசமான கருத்தை முழங்கியது.

அறிவியல் வளர்ச்சி அடைந்து அறிவியல் கூறும் தகவல்களை மக்கள் முற்றும் முழுதுமாக ஏற்றுக்கொண்ட காலத்தில் குர்ஆனுடைய கூற்றை 15ம், 17ம் நூற்றாண்டு புவிவியியல் ஆராய்ச்சியாளர்கள் மெய்ப் படுத்தினார்கள் என்பதுடன் இன்றுவரையிலும் அதே கருத்து உலகின் மொத்த மக்களுடைய கருத்தாகவும் இருந்து வருவதுடன் உலகம் முடியும் காலம்வரை அதே கருத்து நீடிக்கும் புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

இதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை பரிசுத்து குர்ஆன் கூறும் கூற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள முன்வருவார்களா? >> அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<<
******************************
கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

4 comments:

கோவி.கண்ணன் June 24, 2008 at 4:18 PM  

//• மழையிலிருந்து விழக்கூடிய நீரே நிலத்துக்கடியில் தேங்கி நிற்கிறது என்ற அறிய தகவலை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் 1580ல் Bernard Palyssi (பெர்னார்ட் பாலிஸ்ஸி) என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் உலகுக்கு அறிவித்தார்.//

வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் நீர்பற்றி 10 குறள்கள் எழுதி இருக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் சான்றுகளைவிட்டு எதோ 1580ல் உள்ளதைக் காட்டுகிறீர்கள்
*******
1.1.2 வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13

ரொம்ப நாள் மழை வராம ஏமாத்திடுச்சுன்னா, அப்புறம் உலகமே பசியால வாட வேண்டியது தான்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14

மழை இல்லாமப் போச்சுன்னா, அப்புறம் விவசாயம் செய்ய முடியாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

சில சமயம் பெய்யாம இருக்கிறதால மக்களுக்கு கேடு் செய்யுறதும் மழை தான். அதே வேளை, நல்லா பெய்யும் போது மக்களுக்கு நன்மை செய்யுறதும் அதே மழை தான்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

மழை பெய்யாட்டி ஒரு பசுமையான புல்லைக் கூடப் பார்க்க முடியாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17

மழை பெய்யாட்டி கடலே கூட வத்திப் போயிடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

வானத்தில் இருந்து வர்ற மழையே பெய்யாட்டி, அப்புறம் அந்த வானத்துல இருக்கிறதா சொல்லபடுற சாமிகளுக்குப் நாளும் கோயில்ல பூசையும் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவும் நடக்காது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யாட்டி, இந்த உலகத்தில தானம், தவம் போன்ற நல்ல விசயம் எல்லாம் தொடராது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீரில்லாம உலகம் செயல்பட முடியாது. அது போல, மழை இல்லாம யாரும் தன் கடமையை ஒழுங்கா செய்ய முடியாது. மனிதர்களிடம் ஒழுக்கமும் நிலைக்காது.

VANJOOR June 24, 2008 at 4:56 PM  

திரு கோவி கண்ணண் ஐயா,

மழையின் சிறப்புகளுக்கும் , மழை இன்றி வளம் ஏதுமில்லை என்ற திருவள்ளுவரின் குற‌ள்களுக்கும் எந்த‌ கருத்து வேறுபாடும் நம்மிடையே அறவே இல்லை.

//ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீரின் தன்மைகளைக் கூறுவதற்கு முன் கடல் நீரே சுழல் காற்றின் மூலம் கடலின் அடியிலிருந்து பூமிக்கு செலுத்தப்படுகிறது

என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பி வந்தனர்

இது கிருஸ்துடைய பிறப்புக்கு முன் தோன்றி கிருஸ்துக்குப் பின் 15 நூற்றாண்டுகள் இதே நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது.

இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.//

//இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.

புனித குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் சுயமாக இயற்றப்பட்டிருந்தால்

உலகம் முழுவதும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த கருத்தையே பிரதிபலித்திருந்திருப்பார்கள்.

குர்ஆன் ஏகப் பரம்பொருள் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்பதால் தான்

மொத்த மக்களுடைய கருத்தும் கடல் நீர் தான் நிலத்தடி நீர் என்று கூறுகையில்

குர்ஆனுடைய கூற்று மாத்திரம் நிலத்தடி நீர்,

மழையிலிருந்து பெறப்பட்டவை என்று வித்தியாசமான கருத்தை முழங்கியது.//

THANK YOU FOR YOUR COMMENTS.

AND REGARDS
அன்புட‌ன் வாஞ்ஜூர்

Unknown June 25, 2008 at 3:12 PM  

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

ஏகஇறைவனின் சாந்தியும், சமாதானமும் ஐயா! கோபி கண்ண்ன் அவர்களின் மீது உண்டாகட்டுமாக !

ஐயா அவர்கள் திருக்குறளில் பொதுவாக மழைப் பெய்தால் அது என்ன மாதிரியான நன்மையை பயக்கும், பெய்யாவிடில் என்ன மாதிரியான தீமையை பயக்கும் என்று கூறப்பட்ட கருத்தை பதிந்திருந்தார்கள் மேலபடி கருத்தை திருவள்ளுவர் கூறித் தான் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை சாதாரண பாமரனும் கூறக் கூடிய கருத்தேயாகும்.

கிருஸ்துக்கு முன் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (வுhநடள) என்ற அறிஞன் நிலத்தடி நீர் பற்றின தகவலை அவருடைய ஆய்வுக்குப் பின் கடலின் சுழல் காறறின் அழுத்தத்தினால் கடல் நீர் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது என்று அறிவித்தார் அவருடைய கூற்று சுமார் மக்களிடத்தில் சுமார் 22 நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது அதை தகர்த்தவர்கள் மேல்படி 15.17ம் நூற்றாண்டுகளில் ஆய்வை மேற்கொண்டு புவியியல வல்லுனர்கள் ஆவார்கள் .

மேலும் பூமிக்கடியில் எஅனைத்து பாகங்களிலும் அல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை நீர் தங்குவதற்கு நாமே இடத்தையும் அமைத்தோம் என்று திருமறை கூறுவதை கவனிக்க வேண்டும். ஃபஸ்கன்னாஹூ ஃபில் அர்ள் ( சக்கன் ) என்று அரபியில் கூறினால் தங்குமிடம் என்று பொருள் . நீரை பூமி தொடர்ந்து உறிஞ்சி விடாமல் வைகள் நின்று கொள்வதற்கான அமைவிடத்தை இறைவன் அமைத்திருக்கின்றான். இல்லை என்றால் நிலத்துக்கடியில் தாறுமாறாக ஓடி ஒன்றுமில்லாமல் போய்விடும் .

நிலத்துக்கடியில் நீர் தேங்கி நிற்கின்றது என்ற அறிவியல் தகவலை நீங்கள் எற்றுக் கொள்ளும் பட்சத்தில் நிலத்துக்கடியில் நீர் தங்கிக் கொள்வதற்கான இடத்தை நாமே அதைத்துக் கொ:த்தோம் என்ற துல்லியமான தகவலை குர்ஆனை தவிர்த்து எந்த ஒரு வேதமும் கூறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறளில் நிலத்தடி நீர் பற்றின தகவல் இருந்தால் கூறுங்கள் மழை பற்றின பொதுவான தகவலை நாம் கூறவில்லை.

மழை எங்கிருந்த எவ்வாறு பூமியை நோக்கிப் பொழிகின்றது என்ற தகவலை குர்ஆனிலிருந்து நீங்கள் அறிந்தால் இன்னும் ஆச்சரியத்தின் விளிம்பிற்கேப் போய் விடுவீர்கள்..

அதைப்பற்றி முடிந்தால் இனிவரும் காலங்களில் எழுதுவோம்

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

K.M.Sharaaf November 18, 2008 at 5:57 PM  

Nice........!!!!!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP