வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.
>> Thursday, November 20, 2008
பாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, அந்த வார துக்ளக் இதழின் அட்டைபடத்தை கருப்பாக போட்டு 'இந்த நாள் இந்தியாவின் கறுப்புநாள் என்று குறிப்பிட்டிருந்தார் திரு.சோ .
அதற்காக ,தீவிர இந்துத்துவா சிந்தனையாளரான இவரை நடுநிலை எழுத்தாளர் என்று கூறிடமுடியுமா..?
இதுபோலத்தான் சில எழுத்தாளர்கள் நடுநிலையாகவும்,முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் எழுவது போல் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும் .
கவனமாகப் பார்க்கும்போதுதான் ,ரோஜாவில் மறைந்திருக்கும் முள்போல முஸ்லிம் விரோத கருத்து பளிச்சிடும் .
இப்போது குமுதத்தில் வெளியான அரசு பதில்களை படியுங்கள்.
ஆர். சுதர்ஸனன், நங்கநல்லூர்.
இஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா?"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே!".
அரசு : தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும்,
இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும்,
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் ,
குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.
அன்பர்களே, எல்லா மதத்து தீவிரவாதிகளையும் சாடுவதுபோல் பாவ்லா காட்டிய அரசு, இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்கச்செய்து மக்களை கொள்ளும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்புகளும். என்று எழுதி இந்தியாவில் தினமும் குண்டு வைப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இயங்குவது போல் காட்டியுள்ளார். சரி .
ஆனால் 'கொல்லன் பட்டறைத் தெருவில் ஊசி விற்ற அறிவாளிபோல்' நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்
உணர்வு; நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..?
ஞானி; இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.
உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்றபெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.
இங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.
அரசும்,ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் அரசும், ஞானியும் புரிந்துள்ளார்கள்.
விளக்கிச் சொல்லவேன்டியது நமது கடமை. அதோடு,முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக படிக்காமல் கவனமாக படித்து கருத்தை புரியுங்கள். THANKS :mugavai-abbas.blogspot.com
----------------------------------
READ
குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.
3 comments:
முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும். என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது. தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும். ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை. நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன். வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ ? அன்புடன் ஞாநி
A very serious and interesting post. Nobody thinks of a Hindu and a Muslim living together as a family, and how their sentiment affects.
VANJOOR AIYYA,
ஞாநியின் வார்த்தையை நீங்கள் தான் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று பதிவைப் படித்ததும் உணர்ந்தேன். தொடர்ந்த ஞாநியின் பின்னூட்டமும் அதைத் தெளிவுபடுத்திவிட்டது.
எல்லாவற்றிலும் குற்றம் காணும் மனநிலையை விட்டுவிடலாமே.
அதற்கென்று அவாள்கள் 'சங்'கம் தான் வைத்திருக்கிறார்களே.
நீங்களும் தெளிவுபடுத்துங்கள் சார்.
Post a Comment